ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்
- தெய்வத்தமிழுக்காக பெய்த மழை!
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- பிப்ரவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .
- குறட்கூ எனும் புது வடிவக் கவி
- முடியும் உன்னால் முயற்சியெடு...
- தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் –
- நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
- வெண்ணெய் கேக்
- திருநீறு இட்டு யார் கெட்டார்?
- கண்ணதாசனின் அனுபவம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (217)
- நாளும் ஒரு அழகின் அலை
- சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்..
| முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார் Posted: 16 Feb 2014 10:47 AM PST முழுக்க முழுக்க கற்பனை தாங்க! அவள் வருவாளா, அவள் வருவாளா''..: அங்கே ரிஷப்சனில் உள்ள டிவியில், ''அவள் வருவாளா, அவள் வருவாளா.. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம்...''- என்று சன் மியூசிக்கில் இந்தப் பாடலுக்கு சூர்யா உருகிக் கொண்டிருக்க.. அருகே உள்ள கான்பரன்ஸ் ரூமில் தமிழக பாஜக தலைவர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பிஸி. முழுக்க முழுக்க கற்பனை தாங்க!: அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்.. இல.கணேசன்: இந்த விஜய்காந்த் என்ன தான் சொல்றார்? எச்.ராஜா: அவர் உளுந்தூர்பேட்டையில ... |
| Posted: 16 Feb 2014 10:09 AM PST பெருமை உடையவர்கள் ஆற்றக்கூடிய செயல் அருமை உடையதாகவே அமையும். அவ்வகையில் நம் மண்ணில் பல மகான்கள் வாழ்ந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். தருமபுர ஆதினத்தில் 14-ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் ஸ்ரீலஸ்ரீ கந்தப்ப தேசிக சுவாமிகள் ஆவார். அம்மகா சந்நிதானம், ஒரு சமயம் தென்னாட்டுத் திருத்தலப் பயணம் மேற்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றார். அப்போது மழை பெய்யாது பொய்க்கவே, குடிமக்கள் மிகவும் வருந்தினர். அரசியல் வரி அலுவலர்கள் வரி வேண்டிக் குடிமக்களை ஒறுத்து வருத்தினர். வரி செலுத்த முடியாது ... |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 16 Feb 2014 09:23 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| பிப்ரவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய . Posted: 16 Feb 2014 08:46 AM PST 4-2-2014-தினத்தந்தி அருள்தரும் ஆன்மிகம் . http://www.mediafire.com/download/hpak4w7bz0g337o/DTAM+4.2.14%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 2-2-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1ibgfkk9qyjlq9n/Vasandam+02-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2-2-2014-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/4436fg3075z4l1o/Kathir+02-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-2-2014-குங்குமம் ... |
| Posted: 16 Feb 2014 06:39 AM PST குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும். முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும் சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம். இக்கவிக்கு வித்திட்டவர் *****கவிஞர் தனிகைச் செல்வன் ****** ஆவார் . கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி திருத்தங்களைத் தந்துதவுங்கள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முடிசூட்டு நடக்கிறது வாக்களிப்பு முடியவில்லை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஜனனாயகம் வென்றதாம் மக்களைக் காணவில்லை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ... |
| முடியும் உன்னால் முயற்சியெடு... Posted: 16 Feb 2014 06:19 AM PST அச்சம் கொண்டு அடங்காதே +++அவலம் கண்டு ஒதுங்காதே! துச்சம் கண்டு துவளாதே +++துணிந்து நிற்கத் தவறாதே! நரிகள் நட்பை நாடாதே +++நன்றி மறக்கக் கூடாதே! நரகர் உறவை போற்றாதே +++நஞ்சை சொல்லாய் ஊற்றாதே! கள்ளத் தனங்கள் செய்யாதே +++கற்பு ஒழுக்கம் பொய்யாதே! காமக் கணைகள் தொடுக்காதே +++கன்னியம் கெட்டு நடக்காதே! ஊரை ஏய்த்து வாழாதே +++உன்மையைக் கொன்று போடாதே! ஊழல் ஆக்க இசையாதே +++உரிமை மீட்க தவறாதே! வேம்பாய் விடமாய் இருக்காதே +++வேற்றுமை வளர்க்க நினைக்காதே! வீணாய் அலைந்தே திரியாதே +++வீரம் ... |
| தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் – Posted: 16 Feb 2014 05:48 AM PST தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் – 1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு ... |
| நகைச்சுவை கவிதை - காதலர் தினம் Posted: 16 Feb 2014 05:31 AM PST நகைச்சுவை கவிதை - காதலர் தினம் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் பருக தேநீர் ... |
| Posted: 16 Feb 2014 05:27 AM PST மைதா -500கிராம் வெண்ணெய் -500 கிராம் சர்க்கரை - 500 கிராம் முட்டை -10 பால் -1/2 கப் வெனிலா எஸன்ஸ் -3 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் -21/2 தேக்கரண்டி மைதா பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரையை கலந்தபின் இரண்டிரண்டு முட்டைகளாக ஐந்து முறை கலக்கவும். பிறகு பால் மற்றும் வெனிலா எஸன்ஸ் கலக்கவும். இறுதியாக மைதாவை கரண்டியால் கலக்கவும். பீட்டரால்(beater) அல்ல. கலவையை வெதுப்பகத்தட்டில்(baking tray ) ஊற்றி வேக வைத்து எடுக்கவும். |
| Posted: 16 Feb 2014 01:38 AM PST திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர். ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம். எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் ... |
| Posted: 15 Feb 2014 10:52 PM PST வாழ்க்கையின் சுகதுக்கங்கள் அனுபவிக்கப் படும்போதே அனுபவமாகத் தோன்றுவதில்லை. ரத்தம் வற்ற வற்ற அவற்றை நினைவி கூறும்போது அவை,பயனுள்ள அனுபவங்களாகின்றன. ஆசை உச்சத்தில் நிற்கும் போது, அறிவு மழுங்கிப் போகிறது. அடி விழுந்து அனுபவம் வந்ததும் அது வேலை செய்யத் தொடங்குகிறது . காதலுக்கு சாதி இல்லை. உண்மை தன்,ஆனால் நீதிஉண்டு. -ஆதாரம்:-கண்ணதாசனின் "தோட்டத்துப் பூக்கள்"-என்ற புத்தகம்.. |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (217) Posted: 15 Feb 2014 09:24 PM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 15 Feb 2014 08:53 PM PST ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Posted: 15 Feb 2014 08:45 PM PST சிவகாமியின் சபதம் – நாடகம் போகிறேன் என்று முகநூலில் சொன்னவுடன் தொலைபேசித்து வீடு வரை வந்து பாஸ் கொடுத்த நண்பருக்கு மிக நன்றி.. அவருக்குப் பழனி வேலரின் அருள் என்றும் கிடைக்கும்..! ம்ம் ஆகக் கூடி இன்று பதினைந்தாம் திகதி சுபயோக சுப தினத்தில்மாலை வேளை ஆறு மணிக்கு அல்புஸ்தான் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் சி.ச பார்த்து விட்டேன்./டோம்.. ஐநூறு பேர் அமரக் கூடிய ஆடிட்ட்டோரியத்தில் குறைந்தபட்சம் நூற்றைம்பது பேர் இருந்திருப்போம்..உள்ளே நுழைந்தவுடனே மனக் கன்று எண்ணங்களைப்பின்னோக்கி ஓட வைத்தது.. நாக நந்தி, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |