Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தினமலர் ‘உரத்த சிந்தனை’ பகுதியில் என் கட்டுரை - ஆதிரா

Posted: 25 Feb 2014 11:20 AM PST

[justify] ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் பெரிதாக வேற்றுமை ஒன்றும் இல்லை. இரண்டும் முட்டாள்கள் தினம்தான். காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பாகக் கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? என்று காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் காதலனை அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் ...

"ஏமாற்றத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொடுப்போம் " !

Posted: 25 Feb 2014 11:10 AM PST

அந்தச் சிறுவனுக்குப் பதினோரு வயது. முகத்தில் மீசை அரும்புவதன் அறிகுறிகூடத் தெரியவில்லை. அவன் விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான். நல்லவேளையாகக் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மனநல ஆலோசனைக்காக என் முன் அமர்ந்திருந்தான். "ஏம்ப்பா மருந்தைக் குடிச்சே?" "டீச்சர் திட்டிட்டார் சார்." "திட்டினதுக்கா சாக நினைச்சே?'' "ஃப்ரெண்ட்ஸ் எல்லார் முன்னாலயும் திட்டிட்டார் சார்." அந்த வாரத்தில் அவன் மூன்றாவது சிறுவன். இன்னொரு நிகழ்ச்சி. அவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். "தூக்கமே ...

எதிர்பாராதது - 1954

Posted: 25 Feb 2014 10:42 AM PST

அன்பு  ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -  இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்  இருந்த நான் , பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை  பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது . நான்  அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் - திருவாளர்  வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள்  -  அதே ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 25 Feb 2014 09:58 AM PST

கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....

Posted: 25 Feb 2014 08:51 AM PST

கோவை அருகே பூண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தியும், உயிர்பலி ஏற்படுத்தியும் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது. அதிகாலை ...

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Posted: 25 Feb 2014 08:44 AM PST

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் வேண்டும். எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்? கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை  அன்பு மலர் 

பிறந்த தேதியும், வாழ்க்கை ரகசியமும்

Posted: 25 Feb 2014 08:27 AM PST

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற  எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய  தேதிகளில் பிறந்தவர்கள்  ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ...

மன அழுத்தம் - குழந்தைகள்

Posted: 25 Feb 2014 07:50 AM PST

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே.   தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சுழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.   அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.   குழந்தைகள் ...

ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்?

Posted: 25 Feb 2014 07:29 AM PST

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம். அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், ...

உடம்பின் கால அட்டவணை ........

Posted: 25 Feb 2014 07:23 AM PST

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை:  விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.  காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.  காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.  காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் ...

ஹரியும் அறனும் ஒன்றே - இது ஒரு நல்ல உதாரணம்

Posted: 25 Feb 2014 07:16 AM PST

1.        கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்! நண்பர் ஒருவர் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் கேட்டார்…. "நீங்கள் சிவ பக்தரா அல்லது விஷ்ணு பக்தரா? புரிந்துகொள்ள முடியவில்லையே… இருவரை பற்றியும் எழுதுகிறீர்களே…" என்று. நான் சொன்னேன்… "எனக்கு  ஹரியும் ஒன்று தான். ஹரனும் ஒன்று தான். இருவரையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. பரமேஸ்வரன் மீது எந்தளவு பக்தி வைத்திருக்கிறேனோ அதே அளவு பரந்தாமன் மீதும் பக்தி உண்டு. ஹரியும் ஹரனும் வேறு வேறு என்ற எண்ணம் எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. சிறு ...

துரோகிகளுக்காய்

Posted: 25 Feb 2014 05:26 AM PST

என் திறமை என்னவென்று தெரிந்தால் நீ நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய் ! என் குணம் என்னவென்று தெரிந்தால் நீ நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்!! என் ஜாதி என்னவென்று தெரிந்தால் நீ நிச்சயம் நான் தோற்கவேண்டுமென ஆசைப்படுவாய்.!!! பொதுமை பேசும் பசுத்தோல் போர்த்திய எருமைகளே ! கொஞ்சம் கவனியுங்கள் உங்கள் மனதை., பொறாமையெனும் விஷச்செடி பூத்துக்குலுங்கி நாற்றம் கண்களிலிருந்து வெளிவர துவங்கிவிட்டது. செடியை வேருடன் நீக்குவது உன் விருப்பம் , ஆனால், பூக்களையாவது அறுவடை செய்துவிடு., காரணம், நாற்றம் ...

பழங்கள் பற்றி அறியலாமா? - ‌‌அன்னாசிப்பழம் !

Posted: 25 Feb 2014 05:05 AM PST

பப்பாளி பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. பச்சையும், மஞ்சளும் கலந்த பப்பாளிப் பழங்களில் "என்ஸைம்" எனப்படும் நொதிகள் அடங்கியுள்ளன. இவை தோலிலுள்ள செல்களை மிருதுவாக்கி, அழுக்குகளையும் இறந்த செல்களையும் போக்கக் கூடியவை. பழத்தின் மஞ்சள் நிற சதைப்பகுதியை எல்லாவித சருமத்தினரும், முகத்திற்கு மாஸ்க்காகப் போடலாம். மற்றைய பழங்களை விட பப்பாளியில் கரோட்டின், வைட்டமின் 'ஏ', 'சி' சத்துகள் ...

கோடையை குளுமையாக்க 'ஜில்' டிப்ஸ்...

Posted: 25 Feb 2014 04:43 AM PST

உஷ்.. அஷ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. வீடுகளில் குளிர்சாதன வசதி செய்யலாம் என வசதி படைத்தோரும், வீட்டிற்கு முன்னால் தென்னை ஓலை வெய்யலாம் என சாதாரண மக்களும் தமது சக்திக்கு ஏற்ப கோடையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ மலை வாஸஸ்தலங்களுக்கு செல்லலாம் என திட்டமிட்டிருப்பார்கள். இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் சற்று ...

மீன்

Posted: 25 Feb 2014 04:33 AM PST

கர்ப்பக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் மிகவும் புத்திசாலியாக இருப்பார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப் பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது. இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு ...

பேப்பர் சோதனை மூலம் கேன்சரை எளிதில் கண்டறியலாம்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை ........

Posted: 25 Feb 2014 04:29 AM PST

வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் உலகளாவிய கேன்சர் நோயாளிகளின் இறப்பும் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது இந்நோயின் பெரும் தாக்கத்தையே குறிப்பதாக உள்ளது. ஆராம்பகாலத்தில் கண்டறியப்படும்போது இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்றபோதிலும், குறைந்த அளவிலான மருத்துவ கட்டமைப்பு கொண்ட பல நாடுகளிலும் இதற்கான 'மாமோகிராம்' போன்ற சோதனைமுறைகள் மிகுந்த பொருட்செலவைக் கொடுப்பதாக இருக்கின்றன. இந்தநிலையில், தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக ...

தேவர் மகனும் 'ஸ்டேட்டஸ் சன்'னும்!

Posted: 25 Feb 2014 03:38 AM PST

இந்த Facebook-ல பொண்ணுங்க ஒரு Good Morning சொன்னாக்கூட 100, 200-ன்னு LIKE-ம் COMMENT-ம் விழுது. ஆனா, பசங்க என்னதான் Status போட்டாலும் 5, 10 Like-க்கு மேல தாண்டமாட்டேங்குது அப்படின்னு ஒரு பெருங்கூட்டம் புலம்பிகிட்டு இருக்கு. இதனால வெறுத்துப்போன FB User ஒருத்தர் தன்னோட Account-ஐ Deactivate செய்துடலாம்னு முடிவெடுக்கிறார். இதைப்பத்தி Facebook Owner Mark-ம், FB User-ம் பேசிகிட்டா எப்படி இருக்கும்? 'தேவர் மகன்' படத்தில வர்ற Famous Dialouge-ஐ Use பண்ணி ஒரு Sentimental கற்பனை CHAT. Mark: தம்பி!!! ...

மார்ச் 8–ந்தேதி பெண்கள் தினத்தில் தாவணி தினம்: கோ–ஆப்டெக்சில் விற்பனைக்கு வருகிறது தாவணி

Posted: 25 Feb 2014 02:42 AM PST

பாரம்பரிய உடைகளுக்கு பெருமை சேர்ப்பதுடன் நலிந்த நெசவாளர்களுக்கு உதவும் வகையில் அரசின் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம் வேட்டி தினத்தை கொண்டாடியது. இதில் தமிழ்நாடு முழுவதும் வேட்டி விற்பனையும் அமோகமாக நடந்தது. அதே நேரத்தில் ஆண்கள் குறிப்பாக இளைஞர்களிடம் வேட்டி கட்டும் எண்ணமும் உருவானது. இதே போல் இளம்பெண்களின் பாரம்பரிய உடையான தாவணியும் இப்போது மறைந்து வருகிறது. சுடிதார், ஜீன்ஸ்–டி.சர்ட், போன்ற வேற்று கலாச்சார மோகம் இளம்பெண்களிடம் அதிகமாக உள்ளது. தாவணி என்பது கனவாக மட்டுமே உள்ளது. இளம் பெண்களின் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (222)

Posted: 25 Feb 2014 01:32 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கலிகால மனைவி

Posted: 25 Feb 2014 12:49 AM PST

கனியே அமுதே என கட்டிக்கொஞ்சவுமில்லை கடைக்கண்ணில் காதலோடு கதைகள்பேசிடவில்லை கனிந்துருகி காதல்பேச கன்னம் சிவக்கவில்லை கடமையாற்ற பிரிவதற்காக கண்ணீர்விடவுமில்லை கணவனாகிலும் தவறுகண்டு கண்மூடிக்கொள்ளவில்லை கண்டபடி சண்டையிட்டாலும் கண்காணாதிருக்கவில்லை கண்டிக்கும்நேரம் கண்டிப்பு கனிவுகாட்டும்நேரம் கனிவு கலிகாலக் காதல்மனைவி கடமை தவறவுமில்லை இவள்! கனவான் ஆகிய கணவனுக்கு கடுப்பாய் சொல்லும் வார்த்தையும் கரும்பாய் மட்டும் இனிக்குமே கட்டிய மனைவி சொன்னால் கண்ணே மணியே என்றாலும் கருத்திலிராத ...

நெகிழி மயம்

Posted: 25 Feb 2014 12:21 AM PST

நெகிழி இல்லாத வாழ்க்கை நெனைச்சு பார்க்க இல்லை நெதமும் நம்மூச்சு போல் நெறைஞ்சி இருக்கு வாழ்வோட நெடுந்தூர பயணம் போகவும் நெல்சோறு எடுத்து வைக்கவும் நெகிழிக் குப்பி நீரெடுக்கவும் நெருங்கிய தோழமை நெகிழிப்பை நெளிந்து ஓடும் ஆறு கடல் நெரம்பி நிற்குது நெகிழியால் நெகிழ்ந்து போகும் மனமே நெகிழிக் கழிவுகளை உண்டு நெறிகட்டிசாகும் பறவை கண்டு! நெறிமுறை இன்றி உபயோகித்து நெலமை இப்படி போனால் நெருங்கி வரும் அழிவை நெனைச்சாலும் தடுப்பதரிது. கிருஷ்ணா

எங்கள் சிவாஜி

Posted: 25 Feb 2014 12:06 AM PST

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ...

அறிவியலோடு மார்கழி அன்றும் இன்றும்

Posted: 24 Feb 2014 11:57 PM PST

மார்கழி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு மாதங்கள் பண்ணிரெண்டிலும் மிகவும் கலைகட்டும் மாதம் இந்த மார்கழி . மாதம் முப்பது நாட்களும் குழந்தைகள், கன்னிப்பெண்கள் ,மகளிர், ஆடவர் என அனைவரும் பக்தி ,கோலம் , கலை ,தூய்மையான நீராடல் என சுறுசுறுப்போடு இருக்கவைக்கும் மார்கழி பற்றிய சில விவரம் நாமும் அறிவோம். மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து நீராடி கோலமிட்டு கடவுளை வணங்குவதன் உண்மை காரணம் . அன்றைய நாட்களில் மார்கழி :- கோலமிட்டு அதன் நடுவில் பூசணி பூ வைப்பதன் உண்மை காரணம் நம்மில் பலருக்கும் ...

பெண் என்ஜினீயரை கொன்ற கொலையாளி அடையாளம் தெரிந்தது: எஸ்.எம்.எஸ். காட்டி கொடுத்தது

Posted: 24 Feb 2014 11:43 PM PST

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை ...

ஷெர்லாக் ஹோம்ஸ்-ஒரு மோதிரம் இரு கொலைகள்

Posted: 24 Feb 2014 11:39 PM PST



பதிவிறக்க:
ஷெர்லாக் ஹோம்ஸ்-ஒரு மோதிரம் இரு கொலைகள்

ந.க.துறைவனின் கஜல் கவிதைகள்

Posted: 24 Feb 2014 11:33 PM PST

உனக்காகக் காத்திருந்துக் கண்ணு ரெண்டும் பூத்தேனே காத்து மழை அடிச்சப் பொழுது ஓதுங்கி நின்னுப் பார்த் தேனே . மழைத் தூறல் நின்றப் பின்னே மேகம் போல நடந்தாயே-என் மனசு கடந்துப் போனாயே மனசு கடந்துப் போனாயே. எஸ்எம்எஸ் அனுப்பி வைச்சேன் பதில் அனுப்ப மறந்தாயோ? மிஸ்டு கால் போட்டுப் பார்த்தேன் திறந்து நீ பார்க்கலையோ்? லாப்டாப்பத் திறந்துப் பாரு ஈமெயிலைப் படிச்சிப் பாரு. காதல் வரிப் புடிச்சிருந்தால் சம்மதிச்சிப் பதிலைப் போடு செல்லுக் குள்ளே எம் படத்தையே பதிவு செஞ்சி வைச்சிக்கோ ...

நாளும் ஒரு அழகின் அலை

Posted: 24 Feb 2014 08:34 PM PST

ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்..

கவிதையில் யாப்பு

Posted: 24 Feb 2014 08:05 PM PST

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

திருநீறு இட்டு யார் கெட்டார்?

Posted: 24 Feb 2014 05:15 PM PST

திருநீறு என்பதை திரு+நீறு என்று பிரிக்கலாம். திரு என்பது 'தெய்வத்தன்மை வாய்ந்தது' என்று பொருள். "பாவங்களை நீற்றுவதால்" நீறு என்று பெயர்.  ஆக திருநீறு என்பது 'பாவங்களை நீக்கும் தெய்வத்தன்மையுடைய பொருள்' என்று அறியலாம். இந்த திரியில் திருநீற்றின் பெருமைகளைப் பற்றிச் சிறிது சிந்திக்கலாம். முதலில் ஒரு வரலாறைப் பார்ப்போம். எயினனூர் என்பது சோழவள நாட்டிலுள்ள பல்வளம் நிறைந்த சிற்றூர். இத்தலத்தில் ஈழவர்குலச் சான்றோர் மரபில் தோன்றிய உத்தமரே ஏனாதிநாதர் என்பவர். இவர் மிகுந்த சான்றாண்மை உள்ளவர். திருவெண்ணீற்றுப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™