Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இன்று உலக புற்று தினம்

Posted: 04 Feb 2014 10:01 AM PST

இன்று உலக புற்று தினம் மண்ணில் தோன்றினாலும் மனிதனில் தோன்றினாலும் புற்றேன என அறிந்தால் பால் வார்க்கத்தான் வேண்டும் கூறியது  வாலிப கவி என்றாலும் ஆறாது என்றும், அவர் வரிகள். கவனிக்கவேண்டிய அரசே கண் மூடி இருந்தால் , கண் மூடும் நாளும் தூரமில்லை, கண் மூடும் நாளும் தூரமில்லை, கைவிரல்கள் கூறிவிடும். ரமணியன்

கொள்ளை போகும் தண்ணீர்- கட்டுரை

Posted: 04 Feb 2014 09:58 AM PST

நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் ...

மூன்று நிமிடங்களில், இரண்டு கிலோ இறைச்சி!

Posted: 04 Feb 2014 09:53 AM PST

சாப்பாட்டு ராமர்களுக்கு போட்டியாக, இப்போது, சாப்பாட்டு ராமிகளும் கிளம்பி விட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த, மாலி ஸ்குயிலர் என்ற இளம் பெண், சமீபத்தில், மூன்றே நிமிடங்களில், இரண்டு கிலோ மாட்டிறைச்சியை சாப்பிட்டு, சாதனை நிகழ்த்தியுள்ளார். மாட்டிறைச்சியை சாப்பிடும் காட்சியை, இணையதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, இவர், இதற்கு முன், இரண்டு கிலோ இறைச்சியை, ஆறு நிமிடங்களில் சாப்பிட்டது தான், உலக சாதனையாக இருந்ததாம். தான் நிகழ்த்திய அந்த சாதனையை, தானே முறியடித்துள்ளார் இந்த இளம் பெண். — ...

மின் பற்றாக்குறையை முற்றிலும் ஒழித்த மன்னர்

Posted: 04 Feb 2014 09:45 AM PST

ஒரு ஊரில் கடும் மின் வெட்டு பிரச்சனை, உற்பத்தியை விட பயன் பாடும், கட்டுபடுத்த இயலாத மின் விரயமும் ஒரு பக்கம் இருக்க, மன்னர் சபையை கூட்டினார், ஆலோசனை நடந்தது, பிறகு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மக்களுக்கு மின் சாதனங்களின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனாலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, பிறகு ராஜா அவர்கள் ஒவ்வொரு மின் உபகரணங்களின் பயன்பாடு மற்றும் செலவு பட்டியலை தயாரித்து பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியை அதில் சேர்த்தார், இந்த ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 04 Feb 2014 09:44 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

ரோமிங் கட்டணம் இல்லை !

Posted: 04 Feb 2014 09:31 AM PST

நாட்டில் படிப்படியாக ரோமிங் கட்டணம் இல்லாத நிலை உருவாகும் போல் தெரிகிறது. பொதுத்துறை நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள், ரோமிங் கட்டணங்களை ரத்து செய்ய இருக்கின்றன என்ற அறிவிப்பு வெளியாகியது. நாம் நம் மொபைல் போனில் பெறும் அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், குறிப்பிட்ட தொலை தொடர்பு மண்டலத்திலிருந்து வேறு ஒரு மண்டலத்திற்கு ஒருவரின் மொபைல் போனுக்கு அழைப்பு வந்து பேசினால், அதற்கென விதிக்கப்படும் கட்டணமே ரோமிங் கட்டணமாகும். முதன் முதலில் வீடியோகான் ...

மவுனமே காதலாய்.....

Posted: 04 Feb 2014 08:57 AM PST

"அமெரிக்காலருந்து, சுஜா நம் வீட்டுக்கு இன்னக்கி வரப் போறா..." அம்மா ஆர்வமும், மகிழ்ச்சியுமாய் அறிவித்தபோது, நான் வியப்புடன் அவளை பார்த்தேன். 'எப்படி அம்மாவால் இந்த விஷயத்தை இயல்பாய் எடுத்துக் கொள்ள முடிகிறது!' என்று நினைத்து, அம்மாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்..."அம்மா... இந்த சுஜா தானே, அப்பாவ கல்யாணம் செய்துகிறதா இருந்தது?" "ஆமாம்... அவளேதான். ஆனா... உம் பாட்டிக்கு, அதுல துளிக்கூட இஷ்டமில்ல. பிராமண குடும்பத்துல பிறந்துட்டு, கிறிஸ்டியன கல்யாணம் செய்துகிறதான்னு தடை போட்டுட்டா," என்றாள். அப்பா, ...

தாங்க இயலாததை இறைவன் தருவதில்லை!

Posted: 04 Feb 2014 07:38 AM PST

ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளை இரண்டு கைகளிலும் வைத்து, மாறி மாறிப் பார்த்த தொந்தி டாக்டர், கொஞ்சம் யோசனையாய், நிமிர்ந்து பார்த்தார் ஷீலாவை.கறுப்பாய் இருந்தாலும், களையாய் இருந்த ஷீலாவிற்கு, 50 வயதிருக்கும். அருகில், கல்லூரியில் படிக்கும் அவளுடைய மகள் அமர்ந்திருந்தாள். ''சொல்லுங்க மேடம், உங்க ஒர்க்கிங் ஸ்டைல் எப்படிப்பட்டது?'' சாய்வாய் அமர்ந்தபடி கேட்டார் தொந்தி டாக்டர், சிவகடாட்சம். சொன்னாள். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில், ஷீலாவிற்கு பொறுப்பான பதவி. ஆரம்பத்தில் லெட்ஜரோடு போராடியவள், ...

பிப்ரவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .

Posted: 04 Feb 2014 07:34 AM PST

3-2-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ezb0qp2nfbbiczl/Kungumam+03-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-2-2014-தினமலர் கம்ப்யூட்டர் மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/d8nxjemra8wyaw3/Computer+Malar+03-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2-2-2014-தினமலர்வாரமலர்இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/dy06wbi62b5951h/VaaraMalar+02-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-2-2014-முத்தாரம் ...

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Posted: 04 Feb 2014 07:10 AM PST

மாண்புமிகு அம்மா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மேலும் அம்மா அவர்கள் நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்...அம்மா அவர்களுக்கு இக்கவிதையை உரித்தாக்குகிறோம் உரிமையை விட்டுகொடுக்காத அம்மா, கடமையை கண் இமை போல் காத்து நிறைவேற்றும் அம்மா,பகலின் ஒளி வெள்ளம் அம்மா, இரவின் நிலவு வெளிச்சம் அம்மா,தைரியத்தின் முன் உதாரணம் அம்மா,ஏழை மக்களின் இதய துடிப்பு அம்மா,ஏழை மக்களின் அன்றாட பசியை போக்க அம்மா உணவகம் திட்டம் தந்து ஈன்ற தாயின் பாசத்திற்கு நிகரானவர் அம்மா,அண்டம் காக்க நிகரற்ற தலைவி அம்மா,அகிலம் ...

பிப்.06 - ரதசப்தமி !

Posted: 04 Feb 2014 07:09 AM PST

பிப்.06 - ரதசப்தமி ! சிலருக்கு கொடுக்கும் மனம் இருக்கும்; ஆனால், பணமிருக்காது. அப்போது, 'உதவ முடியாமல் போயிற்றே...' என்ற, ஆதங்கம் ஏற்படும்.கூடவே, 'தர்மம் செய்ய வழி இல்லாமல் போனதே... இதனால், நமக்கு சொர்க்கம் கிடைக்காதோ...' என்ற, சந்தேகமும் எழும். இப்படி ஏங்குபவர்களுக்கென்றே ஏற்பட்ட விரதம் தான் ரத சப்தமி; இது சூரியனுக்குரிய விரதம். சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில், பவனி வருகிறான். இந்த ஏழு குதிரைகள் என்பது, வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கும். ரதம் என்பது காலச்சக்கரம்; காலையையும், ...

தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு !

Posted: 04 Feb 2014 06:54 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்? - திரு. வி. க !

Posted: 04 Feb 2014 06:53 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும்

Posted: 04 Feb 2014 06:40 AM PST

பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள் பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருகுலத்தில் குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த ...

வாரிசு!

Posted: 04 Feb 2014 06:40 AM PST

''அப்பா... திருவல்லிக்கேணி வீட்டை வித்துட்டியாமே,'' என்று, மகாதேவன் கேட்க, போனை காதில் வைத்த நிலையிலேயே, சிறிது நேரம் மவுனமாக இருந்த சாம்பசிவம், பின், ''ஆமா...'' என்றார்.''என்கிட்ட, ஒரு வார்த்தைகூட சொல்லலயே.'' ''நான் பலமுறை சொல்ல வந்தேன்; உனக்குத் தான் கேட்க நேரம் இல்லாமப் போச்சு.'' ''என்னப்பா சொல்ற... வீடு விக்கிறதுங்கிறது எத்தனை பெரிய விஷயம். பெத்த பிள்ளைங்களுக்குக் கூட சொல்லாம... ஏம்ப்பா இப்படி செய்த?'' ''நீ இதே சென்னையில, அயனாவரத்துலதான இருக்கே... கடைசியா என்னை எப்போ வந்து பார்த்த? ...

உங்களுக்கு தெரியுமா?

Posted: 04 Feb 2014 06:37 AM PST

www. rtoaifmvd.com இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. www. consumer.tn.gov.in தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (210)

Posted: 04 Feb 2014 06:26 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

படித்ததில் பிடித்தது :) - சந்தேகம்... சந்தோஷ கேடு!

Posted: 04 Feb 2014 06:25 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

படித்ததில் பிடித்தது :முயற்சிக்க மறக்காதே

Posted: 04 Feb 2014 06:25 AM PST

படித்ததில் பிடித்தது : ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான்.ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருக்கிறது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான். அருகில் இருந்த பாகனிடம் இந்த யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான். இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம். அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை ...

புராணக்கதைகள் எதற்கு

Posted: 04 Feb 2014 06:09 AM PST

"புராணக்கதைகள் எதற்கு? நேரடியாகப் புராணம் கூறும் தத்துவத்தை சொன்னால் என்ன?' என்று நமக்கு சந்தேகம் வரலாம். அப்படி தத்துவங்களை சொன்னால் நம்மால் ஜீரணிக்க முடியாது. அம்மா சப்பாத்தி செய்ய மாவு பிசைகிறாள். குழந்தை அருகில் இருந்து பார்க்கிறது. மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து, வட்டமாகத் தேய்க்கிறாள். பின் அடுப்பில் ஏற்றி சூடாக் கினால் பதமான ரொட்டி கிடைத்து விடுகிறது. குழந்தை தனது அம்மாவிடம், ""அம்மா! எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்? என் வயிற்றில் போக வேண்டியது இந்த மாவு தானே! ரொட்டிக்கு மூலம் இந்த ...

பாரத ரத்னா பெற்றார் சச்சின்

Posted: 04 Feb 2014 06:03 AM PST

நாட்டின் மிக உயர்ந்த 'பாரத ரத்னா' விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார். இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின். இந்திய அணியின் 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் 'சதத்தில்' சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார். இவருக்கு 'பாரத ரத்னா' விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு வீரர்களும் இவ்விருதை பெறும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ...

சின்மயானந்தர் அருளுரை

Posted: 04 Feb 2014 06:00 AM PST

* சுயகட்டுப்பாடு, ஒருமுகப்படுத்தும் திறன், அர்ப்பணிப்பு உணர்வு இவை மூன்றும் இருந்தால் தான் எந்தப் பணியிலும் சிறந்து விளங்க முடியும். * பிறருக்கு அன்பை வழங்க முயலுங்கள். வாழ்வை ர்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் வளமான சிந்தனைகளைப் பரப்புங்கள். * நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடும் கடவுளை அன்பின் மூலமாக நம்மால் அடைய முடியும். * நேர்மையற்ற மனிதர்களை சமூகத்தில் மலிந்திருக்கும் கொள்ளைநோய்களுக்கு ஒப்பிடலாம். இவர்களின் கீழான நடத்தையால் மக்கள் துன்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். * ...

ஏ சர்வதேச சமூகமே!

Posted: 04 Feb 2014 05:35 AM PST

சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ...

முயன்றால் முடியாதது இல்லை

Posted: 04 Feb 2014 05:00 AM PST

வாழ்க்கையில் உயரத் துடிக்கும் உள்ளங்களே! நீங்களும் குறிக் கோளில் உறுதி உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஒரு செயலில் முயற்சியுடன் ஈடுபடும் போது, நீங்கள் சோர்வடையாமல் உற்சாகத் துடன் செயலாற்றவேண்டும். 'பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன' என்கிறார் தத்துவஞானி பேக்கன். நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்' என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர். 'லட்சியத்தை ...

உறக்கம்

Posted: 04 Feb 2014 04:56 AM PST

உடல் நலத்தையும், உடலையும் இணைக்கும் ஒரு தங்கச் சங்கிலிதான் உறக்கம். -தாமஸ் டெக்கர் (கி.பி. 1577 1632) உறக்கம் ஒரு சுகமே. இது ஒரு மருந்தும் கூட. பலவித உடல் நோய்கள் மற்றும் மனச்சோர்வுகள் ஒரு நல்ல உறக்கத்தில் மறைந்து விடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல தூக்கத்திற்குப் பிறகு ஒற்றைத் தலைவலி (Migrine Headache) இல்லாமல் போய்விடுகிறது. பலருக்கு மனக்கவலை நிமித்தம் தூக்கம் வருவதில்லை. தூக்கம் இல்லை என்றநிலையை விட பெரிய அவதி ஏதுமில்லை. மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கம் என்றநிலை சிலருக்கு. ஆனால் ...

இரத்த தானம் செய்வீர்! நலம் பெறுவீர்

Posted: 04 Feb 2014 04:55 AM PST

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக் களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினா லேயோ அல்லது வேறு ஏதாவது நோயினா லேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ, சிறப்பினையோ விளக்குவதற்கு ...

கத்தரிக்காய்

Posted: 04 Feb 2014 04:49 AM PST

கத்தரிக்காய் சாப்பிட்டால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியும் கத்தரிக்காய் பச்சை மற்றும் ஊதா நிறங்களில் கிடைத்து வருகிறது. இதில் ஹைபிரிட் வெரைட்டியும் தற்போது உள்ளது. பொதுவாகவே கத்தரிக்காயை குழந்தைகளும், பெரியவர்களும் விரும்புவதில்லை. ஆனால் அதன் நன்மைகளோ ஏராளம். மேலும் கத்தரிக்காய் குறித்த ஆய்வு ஒன்றின் படி, அதில் நிக்கோட்டின் என்ற நச்சுப் பொருள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இது உடலை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இல்லை. அப்படியிருந்தும் ஏன் இது நன்மை தரும் உணவு என்று கூறுகிறோம் என்று தெரிந்து ...

சாம்சுங் s duos 2 s7582..............

Posted: 04 Feb 2014 04:43 AM PST

நண்பர்களே .....,
சாம்சுங் s duos 2 s7582..............எப்படி இருக்கு புதிய போன் வாங்கலாம் என்று உள்ளேன்..

உங்கள் கருத்துகளை சொல்லவும் ....

நகைச் சுவை

Posted: 04 Feb 2014 04:15 AM PST

டீ சாப்பிடுவதில்லை கலைவாணர்,தன் நண்பர்களான கலைஞர்களிடம் எப்பொழும் அன்பும் அக்கறையும் கொண்டவராகவே இருந்து வந்தார். ஓரு நாள் திடிரென்று என்.எஸ்.கே பிரண்ட் ராமசாமியின் வீட்டிற்குச் சென்றார். தரையில் ஓரு மலையாளத்துப் பாயை விரித்துப் படுத்துக் கொண்டிருந்த பிரண்ட் ராமசாமி விருட்டென்று வியப்போடு எழுந்து வணங்கனார். "எவ்வளவு துôரத்திலிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியுமா?"-என்று கலைவாணர் கேட்டுக் கொண்டே கட்டிலின் மீது உட்கார்ந்தார். "அண்ணா, டீ சாப்பிடுங்கள்"-என்று மிகப் பணிவோடு ராமசாமி ...

டோனிக்கு சில யோசனைகள்.........

Posted: 04 Feb 2014 03:19 AM PST

தொடர் தோல்விகளில் சிக்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு நம் அரசியல்வாதிகள் சிலரின் யோசனைகள் ஜெயலலிதா: டீமை மாத்தாம அப்படியே வச்சிட்டிருந்தா இப்படித்தான் தோத்துப் போவீங்க. 4 ஆட்டங்களுக்கு ஒரு முறையாவது வீரர்களை மாத்துங்க. ஓவர் சரியா போட லைன்னா நாலாவது பந்திலேயே அந்த பவுலரை தூக்கிட்டு இன்னொருத்தரை போடுங்க. முடிஞ்சா கார் தர்றோம்னு சொல்லி எதிர் டீம்ல இருந்து ஆட்களை எடுங்க. அணியின் இப்போதைய நிலைக்கு முன்னாள் கேப்டன்தான் காரணம்னு சளைக்காம அறிக்கை விடுங்க. முக்கியமா அணிக்கு ...

தோட்ட நகரங்கள்

Posted: 04 Feb 2014 03:17 AM PST


*உலகளவில் "சிகாகோ" தோட்டநகரம் என்று
அழைக்கப்படுகிறது
.
*இந்தியாவில் பெங்களுரை தோட்ட நகரம்
என்று அழைக்கின்றனர்

*இந்தியாவின் முதல் பொட்டானிக்கல் தோட்டம்
1786-ல் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது
.
ஆதாரம்:- "உலக அதிசயத் துணுக்குகள்" என்ற
நுôலிலிருந்து.

உடலுக்கு பாதிப்பு வராமல் இப்பிடித்தான் கணினி முன் இருக்கானும்.

Posted: 04 Feb 2014 03:04 AM PST

உடலுக்கு பாதிப்பு வராமல் இப்பிடித்தான் கணினி முன் இருக்கானும்.





நன்றி
4 தமிழ்.காம்

(தனி பதிவாக பதிவதற்கு மன்னிக்கவும் )

போதுமென்ற மனமே போதும்

Posted: 04 Feb 2014 02:55 AM PST

கண்களும் விரல்களும்
அகராதியை தேடுகின்றன
தெரிந்த சொற்களை விட்டு விட்டு
புதிய சொல் ஒன்றுக்காக !

தெரிந்த சொற்களும்
இப்போது மறந்து விடுகிறது
நாளை எழுதப்பட வேண்டிய கவிக்காக .

மாற்றம்

Posted: 04 Feb 2014 02:55 AM PST

மாற்றங்கள் ஏமாற்றமின்றி
மாற்றி ஏற்கப்படின்
மாற்றமே மாற்றம்தரும்
மாறாத மாற்றத்தை
மாற்றி என்னபயன்
மாற்றமே ஏற்றம்தரும் !

கிருஷ்ணா

ஈழச் சு-தந்திரம்- 1948 02 04

Posted: 04 Feb 2014 02:08 AM PST

ஏதிலியாய்ப் இப்பாரினில் வந்துதித்த மனிதன் அனைத்தையும் நீண்ட பொறிமுதல் பெற்றவனாய் இப்பாரினில் சங்கரித்துப் போகும் பொருட்களை வாரிக் கட்டிக் கொள்கிறான் இப்பைத்தியகாரன் சுதந்திரம் அற்றவனாய். அழகு-யாக்கை நிலையாமை உணராதவனாய் நீண்ட காலம் நிலைபேறு எண்ணி கிடைக்கவே ஒன்னாத சஞ்சீவியைத் தேடியலைகின்றான் சிரஞ்சீவியாய் வாழ்க்கை பெற சுதந்திரம் அற்றவனாய். மனிதன் சுயம்பாய் வந்துதித்தவன் போல் ஈசனின் விசும்பில் ஏறி நின்று இறைவன் ஆற்றலில் கயமை கொள்கின்றான் மடமையறியா மனிதன் சுதந்திரம் அற்றவனாய். 'தான்' ...

2013/2014 -ஆங்கிலவார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 04 Feb 2014 01:51 AM PST

16-2-2014-Business Today India Magazine PDF இலவசமாக http://www69.zippyshare.com/v/3680287/file.html 1-2-2014-FHM India Hot Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய http://www64.zippyshare.com/v/62980779/file.html January/February 2014-India Today Travel Plus Magazine PDF இலவசமாக. http://www76.zippyshare.com/v/62918210/file.html 1-1-2014-Filmfare India Magazine PDF இலவசமாக டவுன்லோட் செய்ய. http://www18.zippyshare.com/v/61236791/file.html 29-1-2014-Filmfare India Magazine ...

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 04 Feb 2014 01:48 AM PST

30-11-2013-குமுதம் ஹெல்த் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7gl961bgz0uh3xx/Kumudam+Health+30-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-11-2013-பசுமை விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/qdhh49t95n0k4l8/Pasumai+Vikatan+25-11-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 27-11-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1lrm62m6uiimgvt/IndiaToday+Tamil+27-11-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 30-11-2013-டைம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™