மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உ.பி.யில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த சிறுத்தையால் நோயாளிகள் பீதி
- டெல்லியில் கடும் பனி மூட்டம்: விமான போக்குவரத்து பாதிப்பு
- பஞ்சாப் அருகே ரூ.50 கோடி ஹெராயின் பறிமுதல்
- தெலுங்கானா மாநிலத்துக்கு சந்திரசேகரராவ் முதல்–மந்திரி ஆகிறார்
- ராஜீவ் கொலை கைதிகள் 4 பேரை விடுவிக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
- காங்கிரசுடன் இணைய வேண்டாம்: சந்திரசேகர ராவுக்கு டி.ஆர்.எஸ். தலைவர்கள் யோசனை
- 5 வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்
- எமிரேட்ஸ் நிறுவனத்தின் பறக்கும் உரிமைகளை அதிகரிக்க உள்ள இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
- முதல் பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது வாக்காளர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்
- இந்தியாவில் ராணுவ புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது: ஏ.கே.அந்தோணி பேட்டி
- ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைமருந்து பொருளுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள கிரீஸ் நாட்டவர்
- ராகுல்காந்தி பிரசாரத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு
- இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவை அணு ஆயுதத்தால் அழித்தது: குஜராத் பாடபுத்தகத்தில் சர்ச்சை
- டெல்லியில் அசாம் பெண் கற்பழிப்பு: இருவர் கைது
- சிறையில் தருண் தேஜ்பாலிடமிருந்து செல்போன்கள் பறிமுதல்
- கிருஷ்ணா நதியில் மூழ்கி இரண்டு அனல்மின் நிலைய இன்ஜினியர்கள் மாயம்
- டெல்லி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது
- தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசிய கொடியை பயன்படுத்தக்கூடாது: ஆம்ஆத்மி கட்சி தலைவருக்கு எச்சரிக்கை
- மேற்கு வங்காளத்தில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் பலி - 35 பேர் படுகாயம்
- தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
| உ.பி.யில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த சிறுத்தையால் நோயாளிகள் பீதி Posted: 23 Feb 2014 11:07 PM PST உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்த சிறுத்தை அங்கு தங்கியுள்ள நோயாளிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மீரட் கண்டோண்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் இருந்து நேற்று காலை வெளியே வந்த கவுரவ் என்பவர் தனக்கு எதிரே உறுமியபடி நின்ற சிறுத்தையை கண்டு திகைத்துப் போனார். |
| டெல்லியில் கடும் பனி மூட்டம்: விமான போக்குவரத்து பாதிப்பு Posted: 23 Feb 2014 10:25 PM PST டெல்லியில் பருவ நிலை காரணமாக ஏற்பட்டிருந்த பனி மூட்டம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. கடந்த சில தினங்களாக டெல்லியில் காலையில் பனிபொழிவு முற்றிலுமாக விலகி இருந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை டெல்லியில் திடீரென அதிக பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகளில் வெண்புகை மூட்டமாக இருந்தது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் பகுதியில் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி வரை கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானப் போக்குவர |
| பஞ்சாப் அருகே ரூ.50 கோடி ஹெராயின் பறிமுதல் Posted: 23 Feb 2014 10:16 PM PST பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ரஜடல் கிராமம் வழியாக நேற்றிரவு சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதனை கண்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் |
| தெலுங்கானா மாநிலத்துக்கு சந்திரசேகரராவ் முதல்–மந்திரி ஆகிறார் Posted: 23 Feb 2014 10:01 PM PST தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் விஷயத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி முக்கிய பங்கு வகித்தது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் காங்கிரசுடன், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை இணைக்க தயார் என்று அக்கட்சி தலைவர் சந்திர சேகரராவ் கூறி இருந்தார். நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் வீட்டில் சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார். தெலுங்கானா மாநிலம் |
| ராஜீவ் கொலை கைதிகள் 4 பேரை விடுவிக்கக் கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு Posted: 23 Feb 2014 09:53 PM PST ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 4 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் 11 ஆண்டுகள் தாமதம் ஏற்படுத் தப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டு, சமீபத்தில் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்தது. |
| காங்கிரசுடன் இணைய வேண்டாம்: சந்திரசேகர ராவுக்கு டி.ஆர்.எஸ். தலைவர்கள் யோசனை Posted: 23 Feb 2014 09:44 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும்என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நீண்ட காலமாக போராடி வந்தார். தெலுங்கானா மாநிலம் உருவானால் தனது கட்சியை காங்கிரசுன் இணைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இப்போது நாட்டின் 29–வது மாநிலமாக தெலுங்கானா உதயமாகி உள்ளது. |
| 5 வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் Posted: 23 Feb 2014 09:25 PM PST இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் உள்ள பகுதியானது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு |
| எமிரேட்ஸ் நிறுவனத்தின் பறக்கும் உரிமைகளை அதிகரிக்க உள்ள இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் Posted: 23 Feb 2014 08:45 PM PST அரபு நாடுகளில் ஒன்றான துபாயிலிருந்து இயங்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கான பறக்கும் உரிமைகளை அதிகரிக்க இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதைய 55,000 சீட்டுகள் கொண்ட இந்நிறுவனத்தின் உரிமையை வாரத்திற்கு மேலும் 10,000 சீட்டுகள் அதிகரிப்பதன் மூலம் இந்நிறுவனத்தின் இந்திய வான்வழிப் பறக்கும் உரிமை 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. சர்வதேசப் போக்குவரத்தில் இந்திய வான்வழி வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட பங்குகள் அதிகம் உள்ள காரணத்தால் இந்திய நடைமுறை தேசிய விமானம் என்றே இது அழைக்கப்படுகின்றது. கடந்த 2008 ஆ |
| முதல் பாராளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது வாக்காளர் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம் Posted: 23 Feb 2014 08:42 PM PST இந்திய பாராளுமன்றத்துக்கு கடந்த 1951- 52-ம் ஆண்டுகளில் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. அப்போதைய தேர்தலில் நாட்டின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கை 17 கோடியே 32 லட்சத்து 12 ஆயிரத்து 343 ஆகும். ஆனால் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள 16-வது பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் எண்ணிக்கை, 81 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரத்து 184-ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது 4.7 மடங்கு அதிகரிப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| இந்தியாவில் ராணுவ புரட்சிக்கான சூழ்நிலை ஒருபோதும் ஏற்படாது: ஏ.கே.அந்தோணி பேட்டி Posted: 23 Feb 2014 08:10 PM PST இந்திய ராணுவத்தினரின் 2 பிரிவினர் 2012-ம் ஆண்டு டெல்லியை நோக்கி படையை நகர்த்தியதாக புதிய சர்ச்சை எழுந்தது. இதுபற்றி கூறிய ராணுவ தளபதி ஏ.கே.சவுத்ரி, இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறினார். இந்த நிலையில் கொச்சியில் கடலோர காவல்படை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி நிருபர்களிடம் |
| ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதைமருந்து பொருளுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள கிரீஸ் நாட்டவர் Posted: 23 Feb 2014 07:43 PM PST கிரீஸ் நாட்டைச் சேர்ந்த எம்மானுவல் சட்சகிஸ் (35) என்ற கிரீஸ் நாட்டவர் கடந்த வியாழனன்று புதுடெல்லி ரயில் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து எல்எஸ்டி என்ற போதை மருந்து தடவப்பட்ட 140 தபால்தலைகளும், 250 கிராம் எடை கொண்ட ஹஷீஷ் என்ற போதை மருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. |
| ராகுல்காந்தி பிரசாரத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு Posted: 23 Feb 2014 07:16 PM PST அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளையும், நாளை மறுநாளும் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால் ராகுல்காந்தியை பிரசாரத்துக்கு அனுமதிக்க முடியாது என்று விவசாய சங்கமான கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதியின் தலைவர் அகில் கோகாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அங்கு குடியேறிய உள்ளூர் மக்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் உறுதியளித்தார். |
| இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவை அணு ஆயுதத்தால் அழித்தது: குஜராத் பாடபுத்தகத்தில் சர்ச்சை Posted: 23 Feb 2014 04:34 PM PST குஜராத்தில் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழி பாடப்புத்தகத்தில் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவை அணு ஆயுதத்தால் அழித்தது, என்றும் தேசத்தந்தை மகாத்மா காந்தி அக்டோபர் 30, 1948ல் படுகொலை செய்யப்பட்டதாகவும் பிழையாக அச்சடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
| டெல்லியில் அசாம் பெண் கற்பழிப்பு: இருவர் கைது Posted: 23 Feb 2014 04:04 PM PST டெல்லியின் தெற்கில் உள்ள மகில்பாபூர் பகுதியில் அசாம் மாநிலத்தை சோ்ந்த பெண்ணை அதே மாநிலம் தேஜ்பூரைச் சேர்ந்த ராகுல், ஹருண் என்ற இரு வாலிபர்கள் கற்பழித்துள்ளனர். ராகுலுக்கு அந்த பெண்ணை ஏற்கனவே தெரியும். ராகுலும் அந்த பெண்ணும் முதலில் கேரளாவிற்கு சென்றுள்ளனர் |
| சிறையில் தருண் தேஜ்பாலிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் Posted: 23 Feb 2014 03:46 PM PST தெகல்கா பத்திரிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் சக பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவா போலீசார் கைது செய்தனர். தற்போது பனாஜி அருகே வாஸ்கோ நகரில் சடா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேஜ்பால் |
| கிருஷ்ணா நதியில் மூழ்கி இரண்டு அனல்மின் நிலைய இன்ஜினியர்கள் மாயம் Posted: 23 Feb 2014 02:26 PM PST ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வைகுண்டபுரத்தில் நேற்று இரவு இரண்டு அனல்மின் நிலைய இன்ஜினியர்கள் கிருஷ்ணா நதியில் மாயமாகியுள்ளனர். விஜயவாடாவிலுள்ள என்.டி.டி.பி அனல்மின் நிலையத்தின் கீழ் பயிற்சி பெற்று வந்த 12 உதவி பொறியாளர்கள் |
| டெல்லி விமான நிலையத்தில் 20 கிலோ தங்கம் கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது Posted: 23 Feb 2014 02:07 PM PST டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மும்பையில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளை தீவிர சோதனை செய்தனர். அப்போது 2 பேரின் கைப்பைகளில் 20 கிலோ தங்க கட்டிகள் |
| தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசிய கொடியை பயன்படுத்தக்கூடாது: ஆம்ஆத்மி கட்சி தலைவருக்கு எச்சரிக்கை Posted: 23 Feb 2014 01:36 PM PST உத்தரபிரதேச மாநில அமேதியில் நடந்த பிரசார கூட்டத்தில் தடைஉத்தரவை மீறி தேசிய கொடியை ஆம்ஆத்மி கட்சி தலைவர் குமார் விஸ்வாஸ் பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி தலைவர் முன்னாசிங் மாவட்ட நிர்வாகத்தில் புகார் கூறினார் |
| மேற்கு வங்காளத்தில் டிரக் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் பலி - 35 பேர் படுகாயம் Posted: 23 Feb 2014 12:14 PM PST மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்திற்கு கிழக்கே உள்ள பெல்டாவில் சுற்றுலா பேருந்து ஒன்று பூரியிலிருந்து லால்காருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரக் மீது சுற்றுலா பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் |
| தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பு: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு Posted: 23 Feb 2014 11:25 AM PST தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தேர்தல் குறித்து சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பதற்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |