மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கற்பழிப்பு புகாரில் பதவி விலகிய காஷ்மீர் மந்திரியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி
- தெலுங்கானா விவகாரம்: பாராளுமன்றத்தின் இருசபைகளும் முடங்கியது
- பாராளுமன்றத்தில் விவாதம் செய்யுங்கள், முடக்காதீர்கள்: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வேண்டுகோள்
- ‘என்னை கைது செய்து பார்’: மகாராஷ்டிர அரசுக்கு ராஜ் தாக்கரே சவால்
- ஜன் லோக்பாலுக்கு ஆதரவு-கெஜ்ரிவால் பதவியில் இருந்து விலகி ஓட அனுமதிக்க மாட்டோம்: பா.ஜ.க.
- கெஜ்ரிவால் அரசுக்கு மீண்டும் நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ. மிரட்டல்
- பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும்: பிரகாஷ்கரத் பேச்சு
- ஆந்திராவை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார்: கிரண்குமார் ரெட்டி பேட்டி
- சீமாந்திராவிற்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்கினால் தெலுங்கானாவை ஆதரிக்க தயார்: பா.ஜ.கட்சி
- எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை: அத்வானி
- ஆந்திராவில் மத்திய மந்திரி சிரஞ்சீவியை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர்
- சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: 2 ராணுவ அதிகாரிகள் பலி - 12 வீரர்கள் படுகாயம்
- பாராளுமன்றம் முடக்கம்-லோக்பால் அமைப்பின் நடுவர்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வுக்கு பிரதமர் அழைப்பு
- பீகாரில் இரு சகோதரிகள் படுகொலை
- நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இன்றும், நாளையும் நடக்கிறது
- மம்தா பானர்ஜி மிகவும் எளிமையானவர்: அன்னா ஹசாரே பாராட்டு
- ஒடிசாவில் படகு விபத்து: 10 பேர் பலி மேலும் 7 பேரை காணவில்லை
- ஜன்லோக்பால் மசோதா - மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் முதல் மந்திரி பதவி ராஜினாமா: கெஜ்ரிவால் முடிவு
- 60 ஆண்டு கால ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு அம்பேத்கர் அளித்த உரிமைகளை பறித்து விட்டனர்: மோடி ஆவேசம்
- நலத்திட்டங்களுக்கான மத்திய நிதியை ஏப்பம் விட்ட ஒடிசா அரசு: நவீன் பட்நாயக் மீது ராகுல் பாய்ச்சல்
| கற்பழிப்பு புகாரில் பதவி விலகிய காஷ்மீர் மந்திரியை கைது செய்ய சபாநாயகர் அனுமதி Posted: 09 Feb 2014 11:18 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சபீர் அஹ்மத் கான். அலுவலக விஷயமாக பேச வேண்டும் என்று பெண் டாக்டர் ஒருவரை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து பாலியல் |
| தெலுங்கானா விவகாரம்: பாராளுமன்றத்தின் இருசபைகளும் முடங்கியது Posted: 09 Feb 2014 11:17 PM PST 15–வது பாராளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் கடந்த வாரம் புதன்கிழமை தொடங்கியது. தெலுங்கானா பிரிப்பு மசோதா, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சர்ச்சை போன்ற பிரச்சினைகள் காரணமாக அன்று பாராளுமன்றத்தின் இரு சபைகளும் சுமூகமாக இயங்கவில்லை. வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் எம்.பி.க்கள் அமளியில் பாராளுமன்ற இரு சபைகளும் முடங்கின. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதனால் பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் பகல் 11 மணிக்கு கூடியது. |
| பாராளுமன்றத்தில் விவாதம் செய்யுங்கள், முடக்காதீர்கள்: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வேண்டுகோள் Posted: 09 Feb 2014 11:06 PM PST பாராளுமன்றத்தில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:– |
| ‘என்னை கைது செய்து பார்’: மகாராஷ்டிர அரசுக்கு ராஜ் தாக்கரே சவால் Posted: 09 Feb 2014 10:48 PM PST மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, கட்டணத்தை செலுத்த மறுத்து வரும் மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள பல சோதனச் சாவடிகளை அடித்து, நொறுக்கி துவம்சம் செய்து |
| ஜன் லோக்பாலுக்கு ஆதரவு-கெஜ்ரிவால் பதவியில் இருந்து விலகி ஓட அனுமதிக்க மாட்டோம்: பா.ஜ.க. Posted: 09 Feb 2014 10:23 PM PST டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, ''ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாவிட்டால் பதவியில் இருந்து விலகுவேன்'' என்று கூறினார். |
| கெஜ்ரிவால் அரசுக்கு மீண்டும் நெருக்கடி: ஆதரவை வாபஸ் பெறுவதாக சுயேட்சை எம்.எல்.ஏ. மிரட்டல் Posted: 09 Feb 2014 09:24 PM PST டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை பலம் கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. |
| பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மதவாதம் தலைதூக்கும்: பிரகாஷ்கரத் பேச்சு Posted: 09 Feb 2014 07:35 PM PST கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் கரத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தினால், அது மதவாதம், முதலாளித்துவம் தலைதூக்க காரணமாகி விடும். பா.ஜனதாவையும், காங்கிரசையும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டுமென்றால் அவ்விரு கட்சிகளும் இல்லாத மூன்றாவது அணி |
| ஆந்திராவை பிரிப்பதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார்: கிரண்குமார் ரெட்டி பேட்டி Posted: 09 Feb 2014 04:13 PM PST ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்களும் 2 மாத தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் கடுமையாக போராடின |
| சீமாந்திராவிற்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்கினால் தெலுங்கானாவை ஆதரிக்க தயார்: பா.ஜ.கட்சி Posted: 09 Feb 2014 03:49 PM PST தெலுங்கானா விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீமாந்தரா மாநிலத்திற்கு மத்திய நிதி தொகுப்பிலிருந்து சிறப்பு நிதியாக ரூ.17000 கோடி வழங்கவேண்டும் |
| எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை: அத்வானி Posted: 09 Feb 2014 03:35 PM PST முன்னாள் பிரதமர் வாஜ்பாயை அடுத்து பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருந்து வருபவர், 86 வயது எல்.கே.அத்வானி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானி பா.ஜனதா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான |
| ஆந்திராவில் மத்திய மந்திரி சிரஞ்சீவியை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர் Posted: 09 Feb 2014 02:54 PM PST மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சிரஞ்சீவி நேற்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 3 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆந்திராவில் சீமாந்திரா போராட்டக் குழுவினர் ஆங்காங்கே நேற்று பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
| சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: 2 ராணுவ அதிகாரிகள் பலி - 12 வீரர்கள் படுகாயம் Posted: 09 Feb 2014 02:25 PM PST சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்ட வனப்பகுதியான போடகரஜ்படார் கிராமத்தில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ராணுவத்தினரும், சிறப்பு பாதுகாப்பு படையினரும் நேற்று காலையில் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினர் |
| பாராளுமன்றம் முடக்கம்-லோக்பால் அமைப்பின் நடுவர்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வுக்கு பிரதமர் அழைப்பு Posted: 09 Feb 2014 02:09 PM PST ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பின் நடுவர்களை தேர்ந்தெடுத்த பிரதமரின் முடிவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பில் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியான உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பி.பி.ராவ் |
| பீகாரில் இரு சகோதரிகள் படுகொலை Posted: 09 Feb 2014 01:14 PM PST பீகாரில் உள்ள புத்தகயா நகரில் இரு சகோதரிகள் அடையாளம் தெரியாத நபர்களால் தங்கள் வீட்டிலேயே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட இரு பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து உறுதியான தகவல் பிரேத பரிசோதனை |
| நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இன்றும், நாளையும் நடக்கிறது Posted: 09 Feb 2014 01:02 PM PST நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த ஊழியர்களின் சம்பள விகிதம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப்பின் திருத்தப்படவில்லை |
| மம்தா பானர்ஜி மிகவும் எளிமையானவர்: அன்னா ஹசாரே பாராட்டு Posted: 09 Feb 2014 12:22 PM PST ஊழலுக்கு எதிராக போராடுபவரும் சமூக ஆர்வலருமான காந்தியவாதி அன்னாஹசாரே சமீபகாலமாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜிக்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல்-மந்திரியாக இருக்கும் மம்தாபானர்ஜி மிகவும் எளிமையானவராக காணப்படுகிறார் |
| ஒடிசாவில் படகு விபத்து: 10 பேர் பலி மேலும் 7 பேரை காணவில்லை Posted: 09 Feb 2014 10:45 AM PST ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில் சம்பல்பூர், ஹிராகுட் மற்றும் பர்கார்ஹ் பகுதியை சேர்ந்த லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் சுமார் 120 பேர் படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்ததால் அப்படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் |
| ஜன்லோக்பால் மசோதா - மத்திய அரசு ஒப்புதல் தராவிட்டால் முதல் மந்திரி பதவி ராஜினாமா: கெஜ்ரிவால் முடிவு Posted: 09 Feb 2014 09:42 AM PST ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவிற்கு டெல்லி மாநில அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், தற்போது ஆளும் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன |
| Posted: 09 Feb 2014 06:19 AM PST கேரள மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான கொச்சியில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை காட்டமாக விமர்சித்து அவர் பேசியதாவது:- கடந்த 60 ஆண்டு |
| நலத்திட்டங்களுக்கான மத்திய நிதியை ஏப்பம் விட்ட ஒடிசா அரசு: நவீன் பட்நாயக் மீது ராகுல் பாய்ச்சல் Posted: 09 Feb 2014 05:16 AM PST ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டம், சலிபூர் அருகேயுள்ள பட்டபடா கிராமத்தில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார். ஒடிசா மாநில அரசின் மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ஒடிசா மாநில |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |