Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும்: அன்னா ஹசாரே விருப்பம்

Posted: 06 Feb 2014 10:55 PM PST

காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராடி வருபவருமான அன்னா ஹசாரே தனது 17 அம்ச கொள்கை பட்டியல் குறித்து மேற்கு வங்காள முதல்– மந்திரி மம்தாபானர்ஜிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், கிராம சமூக மையம் பொருளாதார முன்னேற்றம், தொழிற்கல்வி மேம்பாடு மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வருதல் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

பாராளுமன்ற தேர்தல்: நடிகை ரம்யா எம்.பி மாண்டியா தொகுதியில் போட்டி

Posted: 06 Feb 2014 10:41 PM PST

பாராளுமன்ற தேர்தலில் நடிகை ரம்யா எம்.பி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசில் மாநில வாரியாக பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் இந்த முறை உற்சாகத்தில் உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக இருந்த பாரதீய ஜனதா

கேரளாவில் 2 கிலோ மீட்டர் தூரம் மதம் பிடித்து ஓடிய யானை சேற்றில் சிக்கி பரிதாப சாவு

Posted: 06 Feb 2014 10:31 PM PST

எர்ணாகுளத்தை அடுத்த பள்ளுருத்தி பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள பூங்குன்னம் பகுதியில் உள்ள கோவில் யானை அய்யப்பன் அழைத்து செல்லப்பட்டது. வழியில் திடீரென அந்த யானைக்கு மதம் பிடித்தது. அது தன்னுடன் வந்த பாகன்களை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

ராகுல் காந்திக்கு உதவியாக பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார்

Posted: 06 Feb 2014 09:11 PM PST

ராகுல்காந்தி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தாயராகி வருகிறது. எம்.பியாக இருக்கும் அவர் காங்கிரஸ் துணைத்தலைவராகவும், பின்னர் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டு படிப்படியாக அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக நநேந்திர மோடியை அறிவித்ததால் காங்கிரசும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டது. ஆனால் கடைசி நேரத்தில்

ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி 2 நாளில் நீக்கம்: காங். மேலிடம் முடிவு

Posted: 06 Feb 2014 08:53 PM PST

ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தெலுங்கானா தொடர்பாக மாநில சட்டசபையில் விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு அனுப்பி வைத்த 'ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு' மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றாமல் அதனை நிராகரித்து ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பினார். இருந்த போதிலும் தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சுங்கத்துறையிடன் இருந்து தப்பிப்பதற்காக தங்க உருண்டைகளை விழுங்கியவரை காட்டிக் கொடுத்த வயிற்றுவலி

Posted: 06 Feb 2014 07:59 PM PST

வெளிநாட்டிலிருந்து கடத்திவரும் தங்கத்திற்கு கிடைக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு அதனால் அவதிக்குள்ளாகும் அப்பாவி மக்கள் பலருண்டு. அவர்களில் ஒருவராகக் கூட தற்போது பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த மனிதன் இருக்கக்கூடும். கேரளா மாநிலத்தின் கன்கங்காடு பகுதியைச் சேர்ந்த சசிதரன்(44) என்ற பயணி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி துபாயிலிருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.அங்கிருந்து வரும்போது இவர் 300கிராம் மதிப்புள்ள 32-35 தங்க உருண்டைகளைக் கொண்டு வந்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் விசாரணை: டெல்லி அரசு நடவடிக்கை

Posted: 06 Feb 2014 07:29 PM PST

டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் கலவரங்கள் மூண்டன. இதில் 2,733 பேர் கொல்லப்பட்டனர். கலவரங்கள் நடந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த

பாராளுமன்ற கூட்டத்தொடர் 17-ந்தேதி முடிகிறது?: இடைக்கால பட்ஜெட் மட்டுமே நிறைவேறும்

Posted: 06 Feb 2014 07:02 PM PST

பாராளுமன்ற நடப்பு கூட்டத்தொடர் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதற்காக எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு நாடியது. ஆனால் தெலுங்கானா விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பிடித்துச்செல்லப்படும் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளால் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில் பாராளுமன்றம் முடங்கியது.

ஆம் ஆத்மி கொண்டுவரவுள்ள ஜன் லோக்பால் மசோதா அரசியலமைப்பிற்கு முரணானது: மத்திய அரசு வழக்கறிஞர்

Posted: 06 Feb 2014 02:43 PM PST

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசாங்கம் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடிவுசெய்துள்ளது. மத்திய அரசின் ஒப்புதலை பெறாமல், முதல்வர் கெஜ்ரிவால் அதை நிறைவேற்ற முயல்வது குறித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கருத்து தெரிவிக்க டெல்லி கவர்னர் நஜீப் ஜங் கேட்டிருந்தார்.

வர்த்தக விசயத்தில் கெஜ்ரிவால் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் : இன்போசிஸ் நாராயண மூர்த்தி

Posted: 06 Feb 2014 01:14 PM PST

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக என்.ஆர். நாராயண மூர்த்தி இருந்து வருகிறார். டெல்லி சென்ற அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மின்சார விலைபட்டியல் மற்றும் மின்விநியோகம் குறித்து சமீபத்தில் முரண்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அவர் கூறியதாவது:-

பெண் மருத்துவரை மானபங்கம் படுத்த முயற்சித்ததாக ஜம்மு காஷ்மீர் மந்திரி மீது பாலியல் குற்றச்சாட்டு

Posted: 06 Feb 2014 12:26 PM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷபீர் அகமது கான் இருந்து வருகிறார். இவர் மீது பெண் மருத்துவர் ஒருவர், தன்னை மானபங்கம் படுத்த முயற்சித்ததாக ஷஹீத்கஞ் போலீசில் புகார் தெரிவித்தார்.

ரெயிலில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா: பாராளுமன்ற குழு பரிந்துரை

Posted: 06 Feb 2014 12:25 PM PST

பாராளுமன்றத்தின் ரெயில்வே நிலைக்குழு ரெயில் பயணத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் செய்தது. டி.ஆர்.பாலு தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவினர் இதற்காக

சச்சினுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது மிகப்பெரிய தவறு: முன்னாள் விளையாட்டு துறை மந்திரி உமாபாரதி

Posted: 06 Feb 2014 11:26 AM PST

இந்திய வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர் ராவிற்கும், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்து இந்தியாவிற்கு பெருமை தேடிதந்த வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மண்டேலா பற்றிய திரைப்படத்தைத் தனிப்பட்ட முறையில் பார்த்த இந்திய ஜனாதிபதி

Posted: 06 Feb 2014 10:28 AM PST

தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவரான மறைந்த நெல்சன் மண்டேலா பற்றிய திரைப்படமான 'லாங் வாக் டு பிரீடம்' என்ற படத்தை இந்திய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி கடந்த ஒன்றாம் தேதி பார்த்து

கர்நாடக மாநிலம் தார்வாரில் லாரி கவிழ்ந்து விபத்து: 7 குழந்தைகள் பலி

Posted: 06 Feb 2014 10:24 AM PST

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தை சேர்ந்த மதரஸா பள்ளி சிறுவர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சதோ ஷீத் மசூதிக்கு தொழுகையில் கலந்துகொள்வதற்காக லாரியில் சென்றனர். சுமார் 60 பேருடன் சென்ற அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கலட்டகட்டு என்னுமிடத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது.

உத்தர பிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் சுட்டுக்கொலை

Posted: 06 Feb 2014 09:56 AM PST

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் முன்னாள் மந்திரி பர்வீன் அமானுல்லா ஆம் ஆத்மியில் இணைந்தார்

Posted: 06 Feb 2014 08:15 AM PST

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்த பர்வீன் அமானுல்லா, ஆட்சியில் வெளிப்படைதன்மை இல்லாததால் பதவியிலிருந்தும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்தும் விலகினார். பின்னர் அவர் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவருடன் பீகாரைச் சேர்ந்த தகவல் ஆர்வலரான சுமன் லாலும் ஆம் ஆத்மி

நிதிஷ்குமாரை பாராட்டிய இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

Posted: 06 Feb 2014 07:46 AM PST

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரை பாராட்டி பேசியதற்காகவும், பா.ஜனதா கட்சியின் கொள்கையை மீறியதற்காகவும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ராணா கங்கேஸ்வர் சிங் மற்றும் அவனிஷ் குமார் சிங் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்குமாறு மாநில பா.ஜ.க. தலைவர் மங்கள் பாண்டே உத்திரவிட்டுள்ளார். சமஸ்திபூர்

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தல்

Posted: 06 Feb 2014 06:58 AM PST

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தின. இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் அரசியல் கட்சிகளின் பொறுப்பை நினைவுபடுத்தும் வகையில், 7 மகளிர் அமைப்பினர் இன்று டெல்லியில் ஒன்றுதிரண்டு தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

வகுப்புவாத வன்முறையை தடுக்க அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்: ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தல்

Posted: 06 Feb 2014 06:51 AM PST

பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று வகுப்புவாத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இந்த மசோதாவை எதிர்த்ததால் விவாதம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அவசர சட்டம் கொண்டு வந்து இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தி உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™