Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ராஷ்டீரிய ஜனதா தளத்தை அழிக்க நிதிஷ்குமார் சதி: லல்லு பிரசாத் குற்றச்சாட்டு

Posted: 24 Feb 2014 11:50 PM PST

பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளத்தை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்களில் 13 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு நேற்று ஆதரவு தெரிவித்தனர். இவர்களில் 5 பேர் முஸ்லிம்கள், எம்.எல்.ஏக்களின் பெரும்பாலானோர் விலகியதால் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 2 ஆக உடைந்து விட்டது. லல்லு பிரசாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 13 எம்.எல்.ஏக்களும் நேற்று சம்ரத் சவுத்ரி எம்.எல்.ஏ. வீட்டில் கூடி இந்த முடிவை எடுத்தனர். பின்னர், அது குறித்து சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கோவாவில் இரண்டாவது நாளாக தொடரும் டாக்சி ஸ்டிரைக்: சுற்றுலா பயணிகள் தவிப்பு

Posted: 24 Feb 2014 11:31 PM PST

இந்தியாவின் புகழ்மிக்க சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவாவை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களை வரவேற்று, கோவாவில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிக்காட்டுவதையே தொழிலாக செய்து ஆயிரக்கணக்கான டாக்சி டிரைவர்களும், 'டூரிஸ்ட் கைடு'களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போடும் நோக்கத்தில் சுற்றுலா

திரைப்பட கூட்டுத்தயாரிப்பு ஒப்பந்தத்தில் இந்தியா- கனடா கையெழுத்து

Posted: 24 Feb 2014 11:30 PM PST

இந்தியா மற்றும் கனடா இருநாடுகளும் தனது ஒலி- ஒளி கூட்டுத்தயாரிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இருநாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பாக தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் பிமல் ஜூல்கா மற்றும் கனடா நாட்டின் உயர் ஆணையர் ஸ்டீவர்ட் பெக் கையெழுத்திட்டனர்.

ராகுல் காந்தியை திருமணம் செய்ய தயார்: பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அறிவிப்பு

Posted: 24 Feb 2014 11:10 PM PST

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் தனது போஜ்புரி மொழி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ராகுல் காந்தி விரும்பினால் அவரை திருமணம் செய்து

பேஸ்புக் மூலம் காதல்: காதலியை தேடி பாகிஸ்தான் சென்ற இந்திய வாலிபர் தலிபான் பகுதியில் மாயம்

Posted: 24 Feb 2014 11:10 PM PST

மும்பையைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஹமீது அன்சாரி. 26 வயதான இவர் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் காதல் வயப்பட்டார். காதலியை தேடி கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 4–ந்தேதி ஹமீது அன்சாரி பாகிஸ்தான் புறப்பட்டார். ஆனால் இதுவரை அவர் நாடு திரும்பவில்லை. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி காதலியை சந்திக்க திட்டமிட்டார். காதலியை சந்தித்து பேச இருக்கும் தகவலை அவர் அங்கிருந்து மும்பை

ஆந்திராவில் புதிய ஆட்சி அமைக்க காங். முயற்சி: தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

Posted: 24 Feb 2014 11:08 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியதை தொடர்ந்து முதல்–மந்திரி பதவியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த கவர்னர் நரசிம்மர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் மாநிலம் பிரிக்கப்படும் வரை அங்கு புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

பத்திரிகைத்துறையை குற்றம்சாட்டவில்லை: ஷிண்டே விளக்கம்

Posted: 24 Feb 2014 11:03 PM PST

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே காங்கிரஸ் குறித்து தவறாக செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்கள் அடித்து நொறுக்கப்படும் என்று மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, கடந்த நான்கு மாதங்களாக சில ஊடகங்கள் என்னை பற்றியும் காங்கிரஸ் கட்சி குறித்தும் தவறான செய்திகளை திரித்து கூறிவருகிறது.

கள்ளக்காதலன் நகையை மோசம் செய்ததால் மனமுடைந்த பெண் 5 வயது மகனுடன் தற்கொலை

Posted: 24 Feb 2014 11:02 PM PST

மகாராஷ்டிர மாநிலம், தானே அருகில் உள்ள மிரா சாலை பகுதியை சேர்ந்தவர் யசோதா(30). திருமணமான இவருக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்த யசோதா அந்த கடையின் உரிமையாளருடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்த நெருக்கத்தை பயன்படுத்தி அவரது தங்க செயினை

பாராளுமன்ற தேர்தல்: 12 கட்சிகள் தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை

Posted: 24 Feb 2014 11:00 PM PST

பாராளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், பாரதீய ஜனதா தலைமையில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்கிறது. ஆம் ஆத்மி கட்சி யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக நாடு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இதற்கிடையே காங்கிரஸ், பாரதீய ஜனதா அணிக்கு மாற்றாக புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் இனி புகை பிடிக்க முடியாது: நவீன கருவி பொருத்த முடிவு

Posted: 24 Feb 2014 10:58 PM PST

ஓடும் ரெயில்களில் தீ பிடித்து பயணிகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. அதன்படி எட்டு ராஜஸ்தானி, எட்டு சதாப்தி எக்ஸ்பிரஸ், மற்றும் 6 ரெயில்கள் உள்பட மொத்தம் 22 ரெயில்களில் புகை தடுப்பு கருவி பொருத்தப்படுகிறது. இந்த கருவி ரெயிலில் புகை வந்தால் கண்டறிந்து ரெயிலை நிறுத்தி விடும். இதற்கான கம்ப்யூட்டர் மென்பொருளை 'ரிசர்ச் டிசைன் அண்ட் ஸ்டாண்டர்டு ஆர்கனைசேஷன்' என்ற நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. அதனை கொண்டு நவீன கருவி தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

சத்தீஸ்கரில் மனைவி, குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு போலீஸ் உயரதிகாரி தற்கொலை

Posted: 24 Feb 2014 10:01 PM PST

சத்தீஸ்கரில் உள்ள ஜக்டல்பூர் நகரின் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்தவர் தேவநாராயண் பட்டேல். இவருக்கும் அங்கு பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

சீமாந்திரா தலைநகரை புதிய அரசே தேர்வு செய்ய வேண்டும்: சந்திரபாபு நாயுடு

Posted: 24 Feb 2014 09:26 PM PST

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கபட்டு உள்ளது. தெலுங்கானாவுக்கும், சீமாந்திரா பகுதிக்கும் 10 ஆண்டுகள் ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்றும் அதற்குள் சீமாந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய தலைநகர் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே புதிய தலைநகர் உருவாக்கும் பொறுப்பை சீமாந்திராவில் அமைக்க புதிய அரசே மேற்கொள்ள வேண்டும் என்று தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படாது

Posted: 24 Feb 2014 07:38 PM PST

ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டசபை தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திராவை பிரிக்கும் பணி முடிவடைய இன்னும் 4 மாதங்கள் ஆகும் என்பதால், பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றுபட்ட ஆந்திராவாகவே, பாராளுமன்ற தேர்தல் மட்டும் நடத்தப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரபூர்வ முடிவை, மத்திய

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமையவுள்ள ஏழு புதிய விமான நிலையங்கள்

Posted: 24 Feb 2014 04:02 PM PST

மாநிலங்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பிராந்திய அல்லது தொலைதூரப் பகுதிகளில் செயல்படும் விமான இணைப்புகளும் உந்துதலாக இருக்கமுடியும் என்று மத்திய அரசு எண்ணுகின்றது. இதனைத் தொடர்ந்து மாநில அரசின் கீழ்வரும் நிலையங்கள் உட்பட நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விமான நிலையங்களை

சுற்றுலாப்பயணிகளின் வருகைக்காக 3-4 புதிய தீவுகளைத் திறக்க அந்தமான் அரசு திட்டம்

Posted: 24 Feb 2014 03:20 PM PST

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 556 ஆகும். ஆனால், இதில் 37 தீவுகள் மட்டுமே இதுவரை குடியேற்றத்திற்கு பயன்பட்டு வருகின்றன. சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த தீவுகளுக்கு சென்ற வருடம் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளனர். எனவே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை

ரிலையன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய இயலாது: பிரதமருக்கு வீரப்ப மொய்லி கடிதம்

Posted: 24 Feb 2014 01:11 PM PST

இயற்கை எரிவாயு விலையை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 4.2 டாலர் என்ற விலையில் இருந்து 8 டாலருக்கு உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் உரிமத்தை

லல்லு பிரசாத் கட்சி உடைந்தது: 13 எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு

Posted: 24 Feb 2014 12:21 PM PST

பீகார் மாநில முதல்-மந்திரியாகவும், மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்தவர், லல்லு பிரசாத் யாதவ். அவருடைய தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம், வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

தொகுதிக்காக நிதி செலவழிக்காத சச்சின் டெண்டுல்கர், ரேகா

Posted: 24 Feb 2014 11:17 AM PST

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரபல இந்தி நடிகை ரேகா ஆகியோர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் இணைய தளப்பகுதியில்

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகல்?: லல்லு பிரசாத் யாதவ் மறுப்பு

Posted: 24 Feb 2014 10:27 AM PST

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து 13 எம்.எல்.ஏ.க்கள் விலகி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஆதரவளிக்க போவதாக இன்று மதியம் தகவல் வெளியானது. வரும் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு செய்வதில் கட்சித் தலைமைக்கும் அவர்களுக்கும் முரண்பாடு

காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 24 Feb 2014 09:26 AM PST

காஷ்மீரின் வடக்குப் பகுதியிலுள்ள குப்வாரா மாவட்டத்தில் இன்று ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ராணுவப்படை லோலாப் பகுதியிலுள்ள


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™