Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சூறாவளிப் புயல் உருவாகும் தகவலை முன்னதாகவே அளிக்கும் நாசாவின் நவீன விமானத்தை வாங்குகிறது இந்தியா

Posted: 01 Feb 2014 11:16 PM PST

கடந்த ஆண்டு இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் ஐந்து சூறாவளிப் புயல்களினால் தாக்கப்பட்டன. இத்தகைய இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்தால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளமுடியும் என்ற எண்ணத்தில் இத்தகைய புயல்களைக் குறித்து முன்னெச்சரிக்கை அளிக்கும் அமெரிக்காவின் நாசா விமானம் ஒன்றை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாசா நிறுவனம் தன்னுடைய 'டிசி-8' ரக விமானத்தை பறக்கும் ஆராய்ச்சி மையமாக உபயோகிக்கின்றது. இந்த விமானத்தில் தொலை உணர்வு மூலம் தொல்பொருள், சுற்றுச்சூழல், புவியியல், நீரியல்,

ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 01 Feb 2014 11:13 PM PST

ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை தொடங்குகிறது. இதற்கு தடை விதிக்க கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க இன்று மறுத்துவிட்டது. மத்திய அரசு திட்ட மிட்டப்படி ஏலத்தை நடத்தலாம் என்று அறிவித்தது. 8 டெலிகாம் கம்பெனிகள்

அன்னிய செலாவணி மோசடி செய்து வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்கு கடத்தி விற்ற கேரள தொழில் அதிபர் கைது

Posted: 01 Feb 2014 11:01 PM PST

இந்தியாவில் உள்ள பிரபல அரசியல்வாதிகள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வெளிநாட்டு சொகுசு கார்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு இருப்பது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதில், பெரும் அளவில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து இதுபற்றி விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.

அசாம்: தலைக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட தீவிரவாத கமாண்டர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Posted: 01 Feb 2014 10:03 PM PST

அசாம் மாநிலத்தின் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட கம்தாபூர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த கமாண்டர் போலீசாரின் என்கவுண்டரில் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டான். அசாம் மாநிலத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த கம்தாபூர் விடுதலை இயக்கத்தின்

திருவனந்தபுரத்தில் பார்வையற்ற மாணவி ஆட்டோவில் கடத்தி கற்பழிப்பு: டிரைவர் கைது

Posted: 01 Feb 2014 09:44 PM PST

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு பிளஸ்–2 மாணவி பஸ்சில் வந்து இறங்கினார். அதன் பிறகு அவர், அங்கிருந்த ஆட்டோ ஸ்டோண்டில் ஒரு ஆட்டோ பிடித்து கிழக்கு கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார்

புத்தூரில் கார்–லாரி மோதல்: திருத்தணியை சேர்ந்த 4 பேர் பலி

Posted: 01 Feb 2014 09:37 PM PST

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா மல்லவரம் கிராமத்தை சேர்ந்த மணமகள் லீலாவதி குடும்பத்தினர். 25 பேர் நேற்று இரவு மினிலாரியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இன்று நடைபெறும் திருமணத்திற்கு வந்தனர். இதேபோல் திருத்தணி பாலாஜி நகரை சேர்ந்த ரகுபதி நாயுடு (வயது 53) தன்னுடைய மகள் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக மகன் சூர்யா (வயது 25) நண்பர்கள் மேகவர்ணம் (40), மோகன்பாபு (45) ஆகியோருடன் காரில் திருப்பதி நோக்கி சென்றார்.

புதிதாக தேர்வு செய்யப்படும் டெல்லி மேல்–சபை எம்.பி.க்களில் 36 பேர் கோடீசுவரர்கள்

Posted: 01 Feb 2014 09:25 PM PST

டெல்லி மேல்–சபைக்கு காலியாக உள்ள 55 உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 7–ந்தேதி நடக்கிறது. இதில் சரத்பவார், திக்விஜய்சிங் உள்பட 37 பேர் டெல்லி மேல்–சபை எம்.பி.யாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதியுள்ள 18 இடத்துக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. மேல்–சபைக்கு தேர்வு செய்யப்படும் 55 எம்.பி.க்களில் 36 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள். அதாவது 70 சதவீதம் பேர் கோடீசுவரர்களாக உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த சொத்து கணக்கு பட்டியலில் இருந்து இது தெரியவந்தது. பின்தங்கிய மாநிலமான பீகாரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பாரதீய ஜனதா எம்.பி.யான ஆர்.கே.சின்கா முதலிடத்தில் உள்ளார். அவருக்கும், அவரது மனைவிக்கும் ரூ.800 கோடி சொத்து இருக்கிறது.

ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 8 பேர் கைது

Posted: 01 Feb 2014 09:19 PM PST

சித்தூர் மாவட்டம் பாகராபேட்டை வன அதிகாரி பிரசாத்திற்கு சந்திரகிரி மண்டலம் கல்யாணி அணை ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையில் வனஅதிகாரிகள் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் மினிலாரியில் செம்மரக்கட்டைகள் ஏற்றுவதை அதிகாரிகள் பார்த்தனர். வன அதிகாரிகளை பார்த்ததும், செம்மரக்கட்டைகளை ஏற்றி கொண்டிருந்த 8 பேர் நாலாபுறமாக சிதறி தப்பி ஓடினர். அவர்களை வன அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிபிடித்தனர். 40 செம்மரக்கட்டைகளுடன்,

கோவா இசை விழாவை ரத்து செய்ததன் மூலம் இந்தோ-ரஷ்ய உறவுகள் பாதிக்கக்கூடும்: ரஷ்யத் தூதுவர் கருத்து

Posted: 01 Feb 2014 08:31 PM PST

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவா மாநிலத்தின் பாகா பகுதியில் 'இந்தோ-ரஷ்யன் ராக் பெஸ்டிவல்' என்ற இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் முதல் நிகழ்ச்சி சென்ற வருடம் பிப்ரவரி மாதம் 1-6ஆம் தேதி வரை நடைபெற்றது. அப்போது ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில்

கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக நீதிபதி என்.கே.பாட்டீல் நியமனம்

Posted: 01 Feb 2014 03:56 PM PST

கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி என்.கே.பாட்டீலை நியமித்து கவர்னர் பரத்வாஜ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் எண்ணமில்லை: உமர் அப்துல்லா

Posted: 01 Feb 2014 03:55 PM PST

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் உமர் அப்துல்லா, வரும் மே மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு 700 புதிய நிர்வாகப் பிரிவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

'ஸ்கேட்டிங்' விளையாட்டில் பெங்களூரை சேர்ந்த 5 வயது சிறுவன் கின்னஸ் சாதனை

Posted: 01 Feb 2014 02:12 PM PST

பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ். துணி துவைக்கும் எந்திரத்தை பழுது பார்க்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய மனைவி ஹேமா. இந்த தம்பதியின் மகன் ககன் (வயது 5). இவன் பசவேஸ்வரா நகரில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு 12 மணி நேரம் ஆகிறது

Posted: 01 Feb 2014 01:41 PM PST

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலேசியா, இங்கிலாந்து, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, பெங்களூர் மற்றும் பல்வேறு

இத்தாலி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் சோனியா, மன்மோகன் சிங்கிற்கு தொடர்பு?: சி.பி.ஐ. கண்காணிப்பு

Posted: 01 Feb 2014 01:10 PM PST

ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3600 கோடி மதிப்பில் 12 வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு ரூ.362 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இளைய தலைமுறையிடம் மதநல்லிணக்கத்தை உருவாக்க தலாய் லாமா வேண்டுகோள்

Posted: 01 Feb 2014 12:02 PM PST

அனைத்து மதங்களின் தலைவர்களும் இந்தியாவின் மதநல்லிணக்க பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் ரூ.13 கோடி போதை மருந்து கடத்த முயன்ற தென் ஆப்பிரிக்க பெண் கைது

Posted: 01 Feb 2014 08:24 AM PST

புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நைரோபி வழியாக ஜோகன்னஸ்பர்க் செல்லும் விமானத்தில் செல்வதற்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் வந்தார். சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை

டெல்லியில் ரூ.8 கோடி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

Posted: 01 Feb 2014 08:12 AM PST

புதுடெல்லி லஜ்பத் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த சொகுசு காரை வழிமறித்த ஒரு கும்பல், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அந்த காரில் இருந்த ரூ.7.69 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. கரோல் பாக் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு சென்றபோது

மேகாலயாவில் முதல் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த பெண் மரணம்

Posted: 01 Feb 2014 07:53 AM PST

மேகாலயாவில் முதன்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்றவரும் 103வது வயதை கடந்தவருமான சில்வரின் ஸ்வெர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடங்கிய சில்வரின், மேகாலயாவில் பல்வேறு சமூக சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டு மக்களின்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம்: நிதிஷ் குமார்

Posted: 01 Feb 2014 07:35 AM PST

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் 17 ஆண்டுகளாக நீடித்து வந்தது. ஆனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் பா.ஜனதா முன்னிறுத்தியதால், ஐக்கிய ஜனதா தளம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்வராக ஹரிஷ் ராவத் பதவியேற்றார்

Posted: 01 Feb 2014 06:42 AM PST

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவின் போது முதல்வர் விஜய் பகுகுணா (காங்கிரஸ்) மீட்பு பணிகளை சரிவர செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பொறுப்பேற்கு அவர் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™