Tamil Star |
- முக்காடு அணிந்த பெண்ணுக்கு அபராதம்
- ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா
- சூரியன் உமிழ்ந்த மிகப்பெரிய கிளரொளிக்காட்சிகள் நாசா வெளியீடு
- தங்கள் நாட்டிற்கான விசாக்களை ஏலத்தில் விட இங்கிலாந்து முடிவு
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்
- மன்னார் மற்றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்யவும்
- காணாமல் போனோர் என்றொரு இனம் உருவாகியுள்ளது: சி.வி
- புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம்
- விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! திவயின ஊடகம்
- கனேடிய மனித உரிமை செயற்பாட்டாளர் இலங்கைக்கு விஜயம்
- ரஷியாவில் துப்பாக்கி குண்டு காயத்துடன் 5 பேர் உடல்கள் கண்டெடுப்பு
- ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 402 ரன்கள் குவிப்பு
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்போட்டி : ஜெயவர்த்தனே அபார சதம்
- இந்த வயசுல இப்படியொரு குத்தா?…. நீயெல்லாம் நல்லா வருவப்பா….
- நீ எனக்கு வேணாம்…. முகத்தை பார்த்தாலே முகம் சுழிக்கும் மகள்!… அப்படி இந்த தாய் செய்த தவறு தான் என்ன?….
- இந்தக் காரை நல்லா பாருங்க…. ஆனாலும் நிச்சயம் ஏமாறுவீங்க!….
- உகாண்டாவில் இந்திய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த காட்சி… (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
- வருடம் முழுவதும் மரதன் ஓடி சாதனை படைத்த தம்பதியர்….
- 14 வயது பாலகனின் வியக்க வைக்கும் அபாரதிறமை…..
- இலங்கையை நெருக்கடிக்குள் தள்ள ராதிகா சிற்சபேசன் முயற்சி
| முக்காடு அணிந்த பெண்ணுக்கு அபராதம் Posted: 09 Jan 2014 10:59 PM PST பிரான்ஸ் நாட்டின் தடையை மீறி முக்காடு அணிந்த பெண்ணுக்கு 150 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் பொதுமக்கள் முகத்தை மூடியபடி தெருக்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தடையை மீறி பிரான்சில் உள்ள வெர்சைலர்சை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், முகத்தை மூடும் முக்காடு அணிந்து சென்றதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அப்பெண், கிறிஸ்தவராக இருந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மதத்துக்கு மாறியதாகவும், முஸ்லிம் சட்டப்படி முக்காடு அணிந்திருக்கிறேன் இதில் தவறில்லை என்றும் நீதிமன்றத்தில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐஸ் கட்டியாக உறைந்து கிடக்கும் நயாகரா Posted: 09 Jan 2014 10:49 PM PST
அமெரிக்காவே உலக மக்களின் கண்களில் பெரும் காட்சிப் பொருளாக மாறி மாபெரும் ஐஸ் கட்டி நாடாக மாறிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் பனிக் கட்டிகள், ஐஸ் கட்டிகள், கடும் குளிர், பனிக் காற்று. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றை தாங்க முடியாமல் அமெரிக்கா நடுங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது, மேலிருந்து பெரும் சத்தத்துடன் விழும் தண்ணீர் தற்போது ஐஸ் கட்டியாக காட்சி தருகிறது. கீழே பார்த்தால் ஐஸ் மலைகளாக மாறி நிற்கின்றது தண்ணீர் தடாகம். நயாகரா உறைந்து போயிருப்பதைக் காண கடும் குளிரையும், உயிர் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் அங்கு வந்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். 1912ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இப்படி உறைந்துள்ளதாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சூரியன் உமிழ்ந்த மிகப்பெரிய கிளரொளிக்காட்சிகள் நாசா வெளியீடு Posted: 09 Jan 2014 10:40 PM PST பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சூரியன் உள்ளது. சூரியனின் மத்தியப்பகுதியிலிருந்து கடந்த 7-ம் தேதியன்று மிகப்பெரிய அளவிலான ஒளிக்கற்றைகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன. சூரியன் உமிழ்ந்த இந்த கிளரொளிக்காட்சிகளை நாசாவின் சோலார் டைனமிக் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். 1944 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிளரொளியானது கடந்த பத்து வருடங்களில் காணப்படாத மிகப்பெரிய ஒன்று என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிளரொளிக்காட்சியின் போது சக்திவாய்ந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெடித்து சிதறுகின்றன. இவ்வாறு வெடித்து சிதறிவரும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தங்கள் நாட்டிற்கான விசாக்களை ஏலத்தில் விட இங்கிலாந்து முடிவு Posted: 09 Jan 2014 10:34 PM PST பொதுமக்களிடத்தில் அதிக நிதியினைப் பெற்று அவர்களை சிரமப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாகவும் அதே சமயம் தங்கள் நாட்டிலுள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேம்பாட்டிற்கான பெரும் வெளிநாட்டு முதலீடுகளைத் திரட்டவும் இங்கிலாந்தின் இடம்பெயர்தல்(மைகிரேஷன்) ஆலோசனைக் குழு புதிய வழிமுறைகளை ஆராய்ந்து வருகின்றது. இந்தக் குழுவின் தலைவரான சர் டேவிட் மெட்காஃப் தங்கள் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க புதிய வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதன் ஒரு பிரிவாக அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் […] |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் Posted: 09 Jan 2014 09:59 PM PST
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தனர். சற்று நேரத்திற்கு முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வந்தடைந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மன்னார் மற்றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்யவும் Posted: 09 Jan 2014 09:48 PM PST
தமிழ் – சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் இந்த ஆயர்களின் சதியை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் மக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல், கொத்து குண்டுகளை போட்டனரென்றும், எனவே சர்வதேச விசாரணை தேவையென்றும் அமெரிக்க விசேட பிரதிநிதி ஸ்டீபன் ராப்பிடம் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆகியோர் தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார். தேரர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் தமிழ் இந்து சமூகத்தினர் நூற்றுக்கு 95வீதம் வாழ்கின்றனர். அதில் வடித்தெடுத்த சிறுதொகை தமிழ் மக்கள் தான் கத்தோலிக்கர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். அவ்வாறானதோர் நிலையில் இந்த இரண்டு ஆயர்களும் மேற்குல நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப பிரபாகரன் இருந்த காலத்திலும் இன்றும் தமது நடவடிக்கைகளை கைவிடாது முன்னெடுத்து வருகின்றனர். எமது இராணுவத்தினர் கொடுமையான புலி பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மனிதாபிமான அடிப்படையிலேயே யுத்தத்தை முன்னெடுத்து மக்களை பாதுகாத்தனர். யுத்தத்தின் போது சில இழப்பீடுகள் ஏற்படலாம் அது இயற்கை. ஆனால் இந்த ஆயர்களின் குற்றச்சாட்டுகள் போன்று எமது படையினர் நடந்து கொள்ளவில்லை. ஒன்றுபட்ட இலங்கையை, மக்களை மீண்டும் பிளவுபடுத்த இவர்கள் இருவரும் முயற்சிக்கின்றனர். இங்கு பிரிவினையை ஏற்படுத்துவதே இவர்களின் இலக்காகும். அதனை அடைவதற்காக மேற்குலகத்தினருக்கு பொய்யான தகவல்களை வழங்குகின்றனர். இதனை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதைவிடுத்து பிரிவினைவாத ஆயர்களின் பொறியில் சிக்கலாகாது. இலங்கைக்கு எதிராகவும் பிரிவினைவாதத்திற்கும் துணை போகும் மன்னார், யாழ். ஆயர்களை கைது செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| காணாமல் போனோர் என்றொரு இனம் உருவாகியுள்ளது: சி.வி Posted: 09 Jan 2014 09:23 PM PST இலங்கையில் காணாமற் போனோர் என்ற ஒரு மனித இனம் உருவாகியுள்ளதாகவும் அந்நிலைமையினை அரசாங்கம் கவனத்தில் எடுத்து சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத்தில் இன்று (09) நடைபெறபோது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'காணாமற் போனோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்' என வலியுறுத்தும் பிரேரணையொன்று வடமாகாண சபை […] |
| புலிகளுக்கு ஆதரவளித்த நாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டத் தயார்!– இலங்கை அரசாங்கம் Posted: 09 Jan 2014 09:08 PM PST
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வன்னிப் போரின் போது பதினொரு மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அமெரிக்க இராணுவத்தினர் பயன்படுத்தும் சமிக்ஞை கருவிகள், நோர்வேயின் செய்மதித் தொடர்பாடல் சாதனங்கள் போன்றனவற்றை புலிகள் பயன்படுத்தியுள்ளனர். 30 ஆண்டுகள் பிரபாகரன் செய்த போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் அமெரிக்கா கேள்வி எழுப்பத் தவறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. விஸ்வநாதன் ருத்ரகுமாரன் மற்றும் அடெல் பாலசிங்கம் ஆகியோருக்கு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விக்னேஸ்வரனின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! திவயின ஊடகம் Posted: 09 Jan 2014 09:01 PM PST வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இலங்கையின் முழு வரலாற்றையும் மாற்றி எழுத வேண்டுமென்று விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன், உள்நாட்டு வெளிநாட்டு புத்திஜீவிகளைக் கொண்டு வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் எஸ்.ஓ.எஸ் கிராம அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விஜய மன்னரின் வருகை, போர்த்துகேய, ஒல்லாந்த மற்றும் ஆங்கிலேயே […] |
| கனேடிய மனித உரிமை செயற்பாட்டாளர் இலங்கைக்கு விஜயம் Posted: 09 Jan 2014 08:48 PM PST
முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான மொபி மென்டல் என்பவரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அழைப்பினை ஏற்று மொபி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். கனடாவின், போஸ்டர் போர் டிமொக்ரடிக் என்ற அமைப்பின் தலைவராக மொபி கடமையாற்றி வருகின்றார். மொபி மொன்டல் இலங்கையில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷியாவில் துப்பாக்கி குண்டு காயத்துடன் 5 பேர் உடல்கள் கண்டெடுப்பு Posted: 09 Jan 2014 04:00 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஞ்சி கிரிக்கெட்: மும்பை 402 ரன்கள் குவிப்பு Posted: 09 Jan 2014 03:52 PM PST
இதில் அசோக் திண்டா 3 பேரை காலிசெய்தார். இதைத் தொடர்ந்து அரிந்தம் கோசும் (78 ரன், நாட்-அவுட்) விக்கெட் கீப்பர் மகேஷ் ரவுத்தும் (105 ரன், நாட்-அவுட்) ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். 2-வது நாள் முடிவில் ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரில் நடந்து வரும் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் கர்நாடக அணி 349 ரன்களும், உத்தரபிரதேசம் 9 விக்கெட்டுக்கு 221 ரன்களும் எடுத்துள்ளன. வதோதராவில் நடக்கும் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 277 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. கேப்டன் பர்வேஸ் ரசூல் 103 ரன்கள் (137 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். 27 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பஞ்சாப் அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்போட்டி : ஜெயவர்த்தனே அபார சதம் Posted: 09 Jan 2014 03:50 PM PST
இந்த நிலையில் 2–வது நாளான நேற்று இலங்கை பேட்ஸ்மேன்கள் நிதானம் காட்டினாலும், நாள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். சங்கக்கரா 26 ரன்னிலும், சன்டிமால் 12 ரன்னிலும், முதலாவது சதத்தை தவற விட்ட கவ்ஷல் சில்வா 95 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மூத்த வீரர் மஹேலா ஜெயவர்த்தனே தனது 32–வது சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு அவர் ருசித்த முதல் சதம் இதுவாகும். ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்துள்ளது. ஜெயவர்த்தனே 106 ரன்களுடனும் (230 பந்து, 12 பவுண்டரி), கேப்டன் மேத்யூஸ் 42 ரன்களுடனும் களத்தில் நிற்கிறார்கள். இலங்கை அணி இதுவரை 153 ரன்கள் முன்னிலை பெற்று வலுவடைந்துள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த வயசுல இப்படியொரு குத்தா?…. நீயெல்லாம் நல்லா வருவப்பா…. Posted: 09 Jan 2014 03:37 PM PST |
| Posted: 09 Jan 2014 03:35 PM PST |
| இந்தக் காரை நல்லா பாருங்க…. ஆனாலும் நிச்சயம் ஏமாறுவீங்க!…. Posted: 09 Jan 2014 03:33 PM PST |
| உகாண்டாவில் இந்திய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த காட்சி… (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை) Posted: 09 Jan 2014 03:31 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வருடம் முழுவதும் மரதன் ஓடி சாதனை படைத்த தம்பதியர்…. Posted: 09 Jan 2014 03:28 PM PST
அதாவது இவர்கள் இருவரும் கடந்த 2013ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் குறித்த நேரம் ஒதுக்கி மரதன் ஓடியுள்ளனர். இதன்படி தமது 366வது மரதனை அவர்கள் நிறைவு செய்யும்போது மொத்தமாக 15,000 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு ஓடியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 14 வயது பாலகனின் வியக்க வைக்கும் அபாரதிறமை….. Posted: 09 Jan 2014 03:25 PM PST
Jake என்றழைக்கப்படும் 14 வயதான அமெரிக்க சிறுவன் தனது உடல் எடையை நினைத்த மாத்திரத்தில் இரட்டிக்கும் ஆற்றல் கொண்டவனாக காணப்படுகின்றான். 5 அடிகள் 3 அங்குல உயரத்தைக் கொண்ட இச்சிறுவன் 119 பவுண்ட்ஸ் எடை உடையவனாக இருப்பதுடன் உலகின் பலம் வாய்ந்த சிறுவனாகவும் கருதப்படுகின்றான். தனது தந்தை உடற்பயிற்சி செய்வதை பார்த்து ஈர்க்கப்பட்ட இவன் தனது 12 வயதிலிருந்தே கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளான். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையை நெருக்கடிக்குள் தள்ள ராதிகா சிற்சபேசன் முயற்சி Posted: 09 Jan 2014 06:32 AM PST
கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த ராதிகா சிற்சபேசன், நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு எதிராக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சிற்சபேசன் சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு விஜயம் செய்ததால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்சபேசன் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் அதிகாரிகள் மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும், சிற்சபேசனின் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கனடாவில் உள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கவே ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்து வட பகுதி மக்களை சந்தித்தாக அரசாங்கம் ஏற்கனவே விமர்சித்திருந்மை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

















