Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காதலனுடன் சேர்க்கக்கோரி கெஜ்ரிவாலிடம் பெண் கண்ணீர்: உதவி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் சென்றார்

Posted: 09 Jan 2014 11:59 PM PST

டெல்லி முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தினமும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். நேற்று முன் தினமும் அவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். கெஜ்ரிவாலிடம் அப்போது ஒரு இளம்பெண் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் நான் ஒரு வாலிபரை காதலித்து வருகிறேன். அந்த வாலிபர் என்னை ஏமாற்றி விட்டார். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என்று கூறி இருந்தார். அந்த மனுவை படித்ததும் கெஜ்ரிவாலுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. போலீஸ் உதவியை நாடும்படி கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த பெண் நீங்கள் உதவி செய்யுங்கள் என்றார்.

ஆதாரம் இருந்தால் குற்றம் சாட்டப்படாதவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Posted: 09 Jan 2014 11:40 PM PST

2–ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் பாரதி செல்லு லார் முதன்மை நிர்வாக இயக்குனர் சுனில் மிட்டல், எஸ்ஸார் நிறுவனத்தின் ருயியா ஆகியோருக்கு சி.பி.ஐ. விசேஷ கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இதில் மிட்டல், ருயியா ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள்

மன்மோகன்சிங்குடன் ராகுல் திடீர் சந்திப்பு: தேர்தல் பற்றி ஆலோசனை

Posted: 09 Jan 2014 11:32 PM PST

காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டம் இன்று பிரதமர் மன்மோகன்சிங் வீட்டில் நடந்தது. நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவசரமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமை தாங்கினார். பிரதமர் மன்மோகன்சிங், துணைத் தலைவர் ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

வருமான வரி மோசடி வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மனைவிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு

Posted: 09 Jan 2014 11:07 PM PST

ஐதராபாத்தைச் சேர்ந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை திருத்தி மோசடியில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதன் அதிபர் ராமலிங்க ராஜு, 2 சகோதர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

தமிழக காங். வேட்பாளர்களை குலாம் நபி ஆசாத் தேர்வு செய்கிறார்

Posted: 09 Jan 2014 09:26 PM PST

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 17–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முடிந்ததும், காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு பணி தொடங்க உள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார். அதன்படி இந்த மாத இறுதியில் 150 முதல் 200 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டசபையில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா: கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted: 09 Jan 2014 09:19 PM PST

ஊழலை ஓழிக்க ஜன்லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரேயுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பலமுறை உண்ணா விரதம் இருந்தார். தற்போது டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது மாநிலத்தில் ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் டெல்லி

மராட்டியத்தில் மின் கட்டணத்தை 15 சதவீதம் குறைக்க முடிவு: மந்திரிசபை இன்று ஆலோசனை

Posted: 09 Jan 2014 09:11 PM PST

டெல்லியில் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மின்சார கட்டணத்தை குறைத்தார். கடந்த 1–ந்தேதி முதல் இந்த கட்டண குறைப்பு

நாளை வைகுண்ட ஏகாதசி விழா: திருப்பதி கோவிலில் குவியும் பக்தர்கள்

Posted: 09 Jan 2014 09:00 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடக்கிறது. மறுநாள் துவாதசி விழா நடைபெறுகிறது. விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த 2 விழாக்களும் வருவதால் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: சென்னை ரெயில் தப்பியது

Posted: 09 Jan 2014 08:32 PM PST

திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் ரெயில்வே கேட் அருகே உள்ள குடியிருப்பைச் சேர்ந்த திவாகரன் என்பவர் நேற்று அதிகாலை தண்டவாளப்பாதையில் நடந்து சென்றார். அப்போது ரெயில்வே கேட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டார். அந்த நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட

ஆம் ஆத்மியின் கொள்கைகளை எதிர்த்து பா.ஜனதா தர்ணா: டெல்லியில் இன்று நடக்கிறது

Posted: 09 Jan 2014 08:11 PM PST

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் தேசவிரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ராஜ்காட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக பாரதீய ஜனதா

ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

Posted: 09 Jan 2014 07:15 PM PST

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான மாநில மறு சீரமைப்பு வரைவு மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள்

இந்தியாவில் தயாரித்து வெளியிடப்பட்ட பெண்களுக்கான முதல் கைத்துப்பாக்கி

Posted: 09 Jan 2014 07:02 PM PST

புதுடெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற பெண்ணிற்கு ஒரு கற்பழிப்புக் கும்பலால் ஏற்பட்ட கொடூர மரணம் கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில்(ஐஓஎப்) பெண்களுக்கான கைத்துப்பாக்கியை வடிவமைக்கக் காரணமாக இருந்தது. டைட்டானியம் அலாயில் 500 கிராம் எடையில், 32 திறனுடன் கூடிய இலகுரக துப்பாக்கி இங்கு பெண்களுக்கென முதன் முதலாக தயாரிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. 1,22,360 ரூபாய் விலை கொண்ட இந்தத் துப்பாக்கி 'நிர்பீ'க் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பெங்களூர்: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - பள்ளிக்கூட வேன் டிரைவர் கைது

Posted: 09 Jan 2014 06:34 PM PST

பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே–அவுட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவரபீசனஹள்ளியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரின் 3 வயது சிறுமி ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கைகொண்டனஹள்ளியில் உள்ள நர்சரி பள்ளியில் ராதிகாவை, அவளது பெற்றோர் சேர்ந்திருந்தனர். தினமும்

ஜெகன்மோகன் ரெட்டி சொத்துக்குவிப்பு வழக்கு: ரூ.59 கோடி முடக்கம்-மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted: 09 Jan 2014 03:31 PM PST

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தை ராஜசேகரரெட்டி முதல்–மந்திரியாக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை மத்திய

பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: ராஜ்தாக்கரே பேட்டி

Posted: 09 Jan 2014 02:55 PM PST

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:– குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இந்த பதவிக்கு போட்டியிடும் நிலையில் அவர்

சோனியா மருமகன் வதேராவின் காரை அபாயகரமாக முந்திச்சென்ற டெல்லி தொழிலதிபருக்கு அபராதம்

Posted: 09 Jan 2014 02:53 PM PST

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது பாதுகாவலருடன் டெல்லி ஓக்லா பகுதியிலிருந்து நேற்று வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது கார் முன்னே அதிவேகமாக வந்த ஒரு மாருதி கார் முந்தி சென்றது. இதையடுத்து ராபர்ட் வதேராவின் காரில் இருந்த பாதுகாவலர் அருகிலிருந்த டிராபிக் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு?

Posted: 09 Jan 2014 02:25 PM PST

வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக குறைக்க மத்திய அரசு கடந்த 2012–ம் ஆண்டு முடிவு செய்தது. ஆனால் இதற்கு நாடு முழுவதும்

நரேந்திர மோடியால் நிலையான ஆட்சியை கொடுக்கமுடியும்: கிரண் பேடி வெளிப்படையான ஆதரவு

Posted: 09 Jan 2014 02:09 PM PST

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே போட்டி நடக்கவுள்ளது. இதில் மோடிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாட்டை பாதுகாத்த வீரர் பனிச்சரிவில் சிக்கி பலி

Posted: 09 Jan 2014 01:28 PM PST

இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையாக பனிபொழிந்து வருகிறது. இக்கடும் பனிப்பொழிவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவா வண்ணம் நமது வீரர்கள் நாட்டை பாதுகாப்பு வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி குறித்து மெத்தனமாக இருக்கவேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கை

Posted: 09 Jan 2014 11:53 AM PST

ஐதராபாத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்ட மூன்று நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. டெல்லியில் வெற்றிகண்டுள்ள இக்கட்சி வரும் லோக்சபா தேர்தலில் கால்பதிக்கும் என்று அப்போது எச்சரிக்கை விடப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™