Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பூமிக்கு அருகே சுற்றிவரும் மிக அபாயகரமான விண்பாறை

Posted: 08 Jan 2014 11:05 PM PST

new_potentially_001

new_potentially_001விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது.

2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படபிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும். சூரியனை சுற்றிவரும் இந்த விண்பாறை மிக அபாயகரமானது என்று விண்பாறை மற்றும் வால் நட்சத்திரங்களை பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பௌத்த பிக்குகளிடம் பிரதமர் மன்னிப்பு கோரவுள்ளார்

Posted: 08 Jan 2014 10:18 PM PST

dm-jeyaratna

dm-jeyaratnaபிரதமர் டி.எம். ஜயரட்ன பௌத்த பிக்குகளிடம்; மன்னிப்பு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹா சங்கத்தினரை, காவியுடைத்தரித்த(சிவிரதாரி) என்ற திட்டியதாக பிதமர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பௌத்த பிக்குகளை இழிவுபடுத்தவில்லை என அவரது ஊடகச் செயலாளர் ஜயசுந்தர உடுகும்பர தெரிவித்துள்ளார்.

பிரதமர் பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு நேற்றைய தினம் போராட்டம் நடத்தியிருந்தது. இந்தப் போராட்டத்தின் போது பௌத்த பிக்கு ஒருவரும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்குள் பகிரங்கமாக பௌத்த பிக்குகளிடம் மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் உறுதியளித்ததனைத் தொடாந்து, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த சிங்கள ராவய அமைப்பினர் அகன்று சென்றிருந்தனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

ராதீகா சிற்சபேசன் இலங்கையை நெருக்கடிக்குள் ஆழ்த்த முயற்சிக்கின்றார் – இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

Posted: 08 Jan 2014 10:10 PM PST

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் இலங்கையை நெருக்கடிக்குள் ஆழ்த்த முயற்சித்து வருவதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை விஜயத்தின் போது நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகத் தெரிவித்து, அரசாங்கத்திற்கு எதிராக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. சிற்சபேசன் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தார் எனவும் அதனால் அவரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியிருந்தாகவும் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறும் வகையில் செயற்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மிகவும் நாகரீகமான […]

18 நிமிடங்கள் மாத்திரம் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கிய பயங்கரவாதத் தடுப்பு காவல்துறை

Posted: 08 Jan 2014 06:02 AM PST

 கிளிநொச்சியில் திடீரென மரணமடைந்த தன்னுடைய 16 வயதான மகனுக்கு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (வயது 48) இன்று 18 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் மேலும் சில மணித்துளிகள் அங்கு நிற்பதற்கு அனுமதிக்குமாறு உறவினர்கள் கோரிய போதிலும் அதற்கு பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் அனுமதிக்கவில்லை. மீறி மறித்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திவிட்டு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். தனது மகனான நிதர்ஷனின் இறுதிக்கிரியைகளில் பங்குகொள்ள, கொழும்பு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால் அழைக்கபட்ட சீலன் கைது

Posted: 08 Jan 2014 05:55 AM PST

news_24306

news_24306புலிகளின் புதிய தலைவர் என இலங்கை அரசால் அழைக்கபட்ட சீலன் இந்தோனேசியாவின் மேடான் நகரில் வைத்து இலங்கை புலனாய்வு பிறிவினரால் கைது செய்யபட்டுள்ளார்.

குமரன் பத்மநாபன் வழங்கிய தகவலின் அடிபடையில் இந்தோனேசியன் பொலிசாரின் உதவியுடன் இவர் கைது செய்யபட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அளவில் இவர் கைது செய்யபட்டு மிஹின் விமானசேவையின் மூலம் கொழும்புக்கு அழைத்து வரபட்டுள்ளார். இவரின் கைது தொடர்பான தகவல் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முதல் லண்டன் நோக்கி புறபட்ட விமானம் மேலும் 3 விமானங்கள் விசேட படையினரால் திருப்பி அழைக்கபட்டு தேடுதல் நடத்தப்படதன் மூலம் இவர் கைது அம்பலம் ஆகியுள்ளது.

இலங்கை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒரு மேலதிகாரி புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டமான் ஆப்ரிக்காவின் கான நாட்டில் வசித்து வருவதாக சீலன் தகவல் வெளியிட்டதாக அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியுள்ளார்.

தலைவர் வெளிவராமல் இருப்பதற்கான காரணம் தெரிகிறதா தமிழர்களுகுள்ளேயே இருக்கும் பல தலைவர்கள் விலை போனவர்களாயின் எப்படி தலைவர் வருவார் அவர்கள் அறியப்பட்டு விரட்டப்படும் வரை தலைவர் பாதுகாப்பு முக்கியம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீரர்களிடம் வெறி இல்லையா? பதிலடி கொடுத்த டோனி

Posted: 08 Jan 2014 02:02 AM PST

இந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி. தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி பறிகொடுத்து. இந்நிலையில் இந்திய அணியின் ஆட்டத்திறனை விமர்சித்து கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, இந்திய அணியினரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இல்லை என்றார். இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் டோனி. கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் டோனி பங்கேற்ற போது, கவாஸ்கரின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். […]

அவுஸ்திரேலியாவிடம் தோற்றது வெட்க கேடானது! முன்னாள் வீரர் சாடல்

Posted: 08 Jan 2014 01:58 AM PST

england_team_002

england_team_002அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து முற்றிலுமாக இழந்துள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் வந்து குவிகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் இழந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் மீது அந்நாட்டு முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாள ருமான ஜெப்ரி பாய்காட் கடுமையாக பாய்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாள் ஆட்டத்தில் விளையாடும் முட்டாள்கள் போல் இங்கிலாந்து வீரர்கள் ஆடுகிறார்கள்.

தற்போதைய அவுஸ்திரேலிய அணி தலை சிறந்தது இல்லை என்பதால் இங்கிலாந்து 'ஓயிட்வாஷ்' செய்யப்பட்டதை ஜீரணிக்க முடியவில்லை.

இங்கிலாந்து அணி 2006–07 ல் ஆஷஸ் தொடரை முழுமையாக இழந்ததற்கும், தற்போது 'ஓயிட்வாஷ்' ஆனததற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அப்போதைய அவுஸ்திரேலிய அணியில் வார்னே, மெக்ராத், கில் கிறிஸ்ட் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தனர்.

அப்போது தோல்வி அடைந்ததில் அவமானம் இல்லை. ஆனால், தற்போதைய தோல்வி மிகவும் அவமானமானது என்று தெரிவித்துள்ளார்.

இதே இங்கிலாந்தில் முன்னாள் அணித்தலைவரான இயன் போத்தமும் இங்கிலாந்து அணியை கடுமையாக சாடியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது மிகவும் வெட்க கேடானது என்றும், இங்கிலாந்து அணிக்கு முதுகெலும்பு இல்லாதததை இந்த தோல்வி எடுத்துக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Gorilla Glass தொடுதிரையில் புதிய புரட்சி

Posted: 08 Jan 2014 01:55 AM PST

gorilla_glass_001

gorilla_glass_001தற்போது அதிகளவான ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களில் பயன்படுத்தப்பட்டுவரும் Gorilla Glass தொடுதிரையினை வடிவமைத்த Corning நிறுவனம் தற்போது புதிய புரட்சி ஒன்றினை செய்துள்ளது. அதாவது Gorilla Glass இன் புதிய பதிப்பான நுண்ணுயிர்களைக் கொல்லக்கூடிய Antimicrobial Corning Gorilla Glass இனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இது ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் போன்றவற்றில் பக்டீரியாக்களின் தொற்றினை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தனது புதிய டேப்லட் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டது சம்சுங் (வீடியோ இணைப்பு)

Posted: 08 Jan 2014 01:50 AM PST

galaxy_note_pro12_001

galaxy_note_pro12_001சம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy Note Pro 12.2 தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட் ஆனது 12.2 அங்குல அளவு, 2560 x 1600 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த டேப்லட்டில் Qualcomm Snapdragon 800 Processor, 3GB RAM மற்றும் 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 9,500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈராக்கிற்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

Posted: 08 Jan 2014 01:42 AM PST

modern_weapons_001

modern_weapons_001ஈராக்கிற்கு இராணுவ உபகரணங்களை துரிதமாக வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈராக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக அரச துருப்பினருக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா யுத்த உபகரணங்களை வழங்கவுள்ளது.

இன்னும் சில தினங்களில் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட நவீன ரக ஆயுதங்கள் ஈராக்கிற்கு வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஃபளுஜா நகர் ஏற்கனவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அன்பர் பகுதியில் தாக்குதல்கள் தீவிரடைந்துவருகின்றன.

அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடைய கிளர்ச்சிக்குழுவே ஈராக் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா, அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு

Posted: 08 Jan 2014 01:35 AM PST

canada_storm_002

canada_storm_002அமெரிக்கா மற்றும் கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருப்பதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வீசுவதால், பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிகாகோ, மோன்டனா, மின்னசோடா, இல்லினாயிஸ் ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது.

அதிகபட்சமாக, மான்டனாவின் கோமர்டவுன் பகுதியில் நேற்று மைனஸ் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் பதிவானது.

சிகாகோவில் மைனஸ் 16 டிகிரி பதிவானது, கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்தளவுக்கு பனிப்பொழிவு இருந்ததில்லை என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்படுவதால், போக்குவரத்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல நகரங்களில் பனியில் உறைந்து மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வசிக்க முடியாமல் மக்கள் அரசின் தற்காலிக தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடும் குளிருக்கு இதுவரையிலும் 16 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

இதே போல கனடாவிலும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இல்லாமல் கடும் குளிரில் தவிக்கின்றனர்.

அங்கு மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இதனால், விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சிகாகோவை ஒட்டியுள்ள வட தகோடா, தென் தகோடா பகுதிகளில் மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

இன்னும் 3- 4 நாட்களுக்குள் வானிலை சீராகும் பனிப்புயல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோத்தபாய எங்களை ஏமாற்றி விட்டார்!

Posted: 08 Jan 2014 01:31 AM PST

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தம்மை ஏமாற்றி விட்டதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஹலால் சான்றிதழ் செயற்பாடுகளின் பின்னணியில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான பசில் ராஜபக்ஷ இருக்கின்றார். ஹலால் விடயத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எங்கள் அமைப்பை ஏமாற்றி விட்டார். உலமாக்கள் மேற்கொண்டு வரும் பொய்க்கு ஏமாறாமல் நேரடியான முடிவை ஜனாதிபதியினால் எடுக்க […]

பொறாமையில் ஆசிட் ஊற்றிய பெண்

Posted: 08 Jan 2014 01:12 AM PST

naomi_acid_002

naomi_acid_002லண்டனில் சகதோழி ஒருத்தி தன்னை விட அழகாக இருந்த காரணத்தால், பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்த மேரி கோனி(வயது 21) என்ற பெண், தன்னுடன் பணிபுரியும் நயோமி ஓனி(வயது 21) என்ற பெண்ணின் மீது பயங்கர கோபத்தில் இருந்துள்ளார்.

இதற்கு காரணம் நயோமி, தன்னை விட அழகாக இருந்ததே.

இதனையடுத்து சதித்திட்டம் தீட்டி நயோமியின் மீது கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிட்டை ஊற்றியுள்ளார்.

இதுகுறித்து கரேத பட்டர்சேன் என்ற வழக்கறிஞர் கூறுகையில், நயோமி ஒருநாள் நள்ளிரவில் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது அவளுடன் இருக்கும் மேரி கந்தக அமிலம் என்ற ஒருவகை ஆசிட்டை வீசியுள்ளார்.

இதனால் அலறி துடிதுடித்து போன நயோமி, ஒருமாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது நயோமியின் அவல நிலையை கண்ட பின், தன் செயலுக்காக மிகவும் வேதனைப்படுவதாக மேரி தரப்பில் கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் இரட்டை வாயு கிரகங்கள்!

Posted: 08 Jan 2014 01:03 AM PST

1234600_327353344075520_881000635_n

1234600_327353344075520_881000635_nஇங்கிலாந்தில் உள்ள விண்வெளி இயற்பியல் நிபுணர்கள் நாசாவின் ஹெப்லர் விண்கலம் அனுப்பிய தகவல்கள் மற்றும் போட்டோக்களின் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் மூலம் பூமியின் இரட்டை வாயு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியில் இருந்து 200 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளன.

அவற்றுக்கு 'கே.ஓ.ஐ–314சி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகங்களின் விட்டம் பூமியை விட 60 சதவீதம் பெரியதாக உள்ளன.

இந்த கிரகங்களில் பல நூறு மைல் சுற்றளவுக்கு நைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் சூழந்துள்ளன. அதனால் இவை எடையின்றி மிகவும் லேசாக உள்ளன.

ஆனால் மிகவும் தடிமனான அளவில் இக்கிரகங்கள் உள்ளன. இங்கு எப்போதும் 104 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. அது உயிரினங்கள் வாழ தருதியற்ற தட்ப வெப்ப நிலையாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்றாவது கட்ட வீட்டு வசதி திட்டத்தை துவங்கியது இந்தியா

Posted: 08 Jan 2014 12:55 AM PST

sri-lanka-india-flag

sri-lanka-india-flagஇலங்கையில் மூன்றாவது கட்ட வீட்டு வசதி திட்டத்தை இந்தியா துவங்கியது. இதுகுறித்து இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் ஒய்.கே. சின்ஹா அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களுக்காகவும் தோட்ட தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காகவும் இலங்கையின் மத்திய பகுதியில் வீட்டு வசதி திட்டத்தை ஏற்படுத்தியது. இதன் 2ம் கட்ட பணியில் வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட மக்களுக்காகவும் இடம்பெயர்ந்த் மக்களுக்ககவும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம் கட்ட பணிகள் மத்திய கிழக்கு பகுதியில் துவங்கியுள்ளது. இதில் 16 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் 6 பேர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை : புனித தலம் மூடப்பட்டது !

Posted: 08 Jan 2014 12:49 AM PST

Murder_title

Murder_titleபாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அயூப் ஷா புகாரி என்ற புனித தலம் உள்ளது. இதன் அருகே 6 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். கொல்லப்பட்டவர்களில் 3 பேர் புனித தலத்தின் ஊழியர்கள். மற்ற 3 பேர் அங்கு வந்த பொதுமக்கள் ஆவர்.

கொலை செய்யப்பட்டவர்களின் பிணங்களுக்கு அருகே ரத்தம் தோய்ந்த கத்தி கிடந்தது. மேலும் ஒரு குறிப்பு எழுதப்பட்ட பேப்பரும் கிடந்தது. அதில் இந்த புனித தலத்துக்கு யாரும் வரக் கூடாது. மீறி வந்தால் அவர்களுக்கும் இதே கதிதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இக்கொலைகளுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இக்கொலையை தொடர்ந்து அந்த புனித தலம் மூடப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இச்சம்பவம் தவிர பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடந்த தீவிர வாதிகள் தாக்குதல்களில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™