மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல்
- எடியூரப்பா பா.ஜனதாவில் சேர்ந்தார்
- இந்தியா முழுவதும் பா.ஜனதா அலை வீசுகிறது: நரேந்திரமோடி பேச்சு
- வீடு இல்லாதவர்கள் இரவில் தங்க பழுதடைந்த பஸ்கள் வீடுகளாக மாறுகிறது: கெஜ்ரிவால் அரசின் புதிய திட்டம்
- ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 2 மாநிலம் உருவாகி விடும்: குலாம்நபி ஆசாத்
- திருவனந்தபுரம் அருகே குடிநீர் கிணற்றுக்குள் தவறி விழுந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
- ராகுல் தலைமையில் புதிய பிரசார படை: 150 வேட்பாளர்கள் இந்த மாத இறுதியில் அறிவிப்பு
- ஆம் ஆத்மி கட்சி 300 தொகுதியில் போட்டி: 125 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு
- திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
- தேவயானி கைது விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா மேலும் ஒரு பதிலடி நடவடிக்கை
- ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல்: இந்து ரக்ஷா தள ஒருங்கிணைப்பாளர் உள்பட 12 பேர் கைது
- சுப்ரீம் கோர்ட்டு என்னை மிக மோசமாக நடத்தியது: நீதிபதி கங்குலி குற்றச்சாட்டு
- பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் திட்டம்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
- ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்த எந்த நிறுவனமும் தேவை இல்லை: காங்கிரஸ்
- விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்
- கொச்சியில் வெடிவிபத்தில் அய்யப்ப பக்தர் படுகாயம்
- இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- பாலிவுட் நடிகர்களை இரவு நிகழ்ச்சியில் சந்தித்த அகிலேஷ் மீது குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு
- லஞ்சம் குறித்த தகவல் தெரிவிக்க டெல்லியில் இலவச தொலைபேசி சேவை: கெஜ்ரிவால் அறிவிப்பு
- அதிக முதலீடு என்பதற்காக நிலக்கரி நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்யாமல் இருக்கமுடியாது: உச்சநீதிமன்றம்
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்து இருக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு ஒப்புதல் Posted: 08 Jan 2014 11:34 PM PST மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. 57 சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது |
| எடியூரப்பா பா.ஜனதாவில் சேர்ந்தார் Posted: 08 Jan 2014 11:26 PM PST பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேறிய கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா தனது கட்சியை கலைத்துவிட்டு இன்று பாரதீய ஜனதாவில் முறைப்படி இணைந்தார். ஏற்கனவே எடியூரப்பா கட்சி எம்.எல்.ஏக்கள் 4 பேர் பாரதீய ஜனதாவில் சேருவதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்து விட்டனர். இன்று எடியூரப்பா மல்லேசுவரத்தில் உள்ள பாரதீய ஜனதா |
| இந்தியா முழுவதும் பா.ஜனதா அலை வீசுகிறது: நரேந்திரமோடி பேச்சு Posted: 08 Jan 2014 11:00 PM PST டெல்லி விஞ்ஞான பவனில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இந்த மாநாட்டில் இன்று பேசியதாவது:– கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் கீழ் நிலைக்கு சென்றுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இடையேயான தரம் தாழ்ந்த அரசியல் நாட்டின் வளர்ச்சியை பாதித்து வருகிறது. |
| வீடு இல்லாதவர்கள் இரவில் தங்க பழுதடைந்த பஸ்கள் வீடுகளாக மாறுகிறது: கெஜ்ரிவால் அரசின் புதிய திட்டம் Posted: 08 Jan 2014 10:59 PM PST டெல்லியில் பழுதடைந்த பஸ்களை வீடு இல்லாதவர்கள் இரவில் பயன்படுத்த கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிட தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டெல்லியில் நதிக்கரையோரத்திலும் பல்வேறு இடங்களில் சாலையோரத்திலும் குடியிருந்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது அவர்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கப்படும் என்று கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கெஜ்ரிவால் நடவடிக்கை |
| ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் 2 மாநிலம் உருவாகி விடும்: குலாம்நபி ஆசாத் Posted: 08 Jan 2014 10:39 PM PST ஆந்திராவை பிரிந்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் ''ஆந்திர மறு சீரமைப்பு மசோதா'' மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மீதான விவாதம் நடத்த முடியாதபடி உறுப்பினர்கள் அமளியில் ஈடு பட்டு வருவதால் சட்டசபை நடவடிக்கை முடங்கி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் நேற்று ஐதராபாத் வந்தார். |
| Posted: 08 Jan 2014 10:25 PM PST திருவனந்தபுரத்தை அடுத்த வடகரை, கன்னம்கரை சுனாமி காலனியை சேர்ந்தவர் ஜமீலா. இவரது வீட்டின் பின்பகுதியில் ஒரு குடிநீர் கிணறு உள்ளது. நேற்று காலையில் இங்கு பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது கிணற்றுக்குள் ஒரு சிறுத்தை புலி மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். |
| ராகுல் தலைமையில் புதிய பிரசார படை: 150 வேட்பாளர்கள் இந்த மாத இறுதியில் அறிவிப்பு Posted: 08 Jan 2014 10:04 PM PST பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் 6 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தையும் கடந்த மாதமே தொடங்கி |
| ஆம் ஆத்மி கட்சி 300 தொகுதியில் போட்டி: 125 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு Posted: 08 Jan 2014 09:49 PM PST டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவோருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த படியாக 3–வது பெரிய |
| திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா Posted: 08 Jan 2014 08:57 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11–ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும், 12–ந்தேதி துவாதசி விழாவும் கொண்டாடப்படுகிறது. இரு விழாவும், சனி, ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது |
| தேவயானி கைது விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா மேலும் ஒரு பதிலடி நடவடிக்கை Posted: 08 Jan 2014 06:03 PM PST அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்து நடத்திய விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது. ஆனால், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்ட அமெரிக்க அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளது. வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 13-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தேவயானியின் வக்கீல் விடுத்த கோரிக்கையை கோர்ட்டு ஏற்கக்கூடாது என்று அமெரிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், இந்திய அரசும் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. |
| ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல்: இந்து ரக்ஷா தள ஒருங்கிணைப்பாளர் உள்பட 12 பேர் கைது Posted: 08 Jan 2014 04:33 PM PST காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை ஒடுக்க ராணுவம் அனுப்பப்படுவது குறித்து பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூசன் கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காசியாபாத்தில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகம் மீது நேற்று ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. |
| சுப்ரீம் கோர்ட்டு என்னை மிக மோசமாக நடத்தியது: நீதிபதி கங்குலி குற்றச்சாட்டு Posted: 08 Jan 2014 03:36 PM PST ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.கங்குலி மீதான பாலியல் புகார் பற்றி சுப்ரீம் கோர்ட்டு நியமித்த 3 நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியது. அதில், கங்குலி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறியது. |
| பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் திட்டம்: உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை Posted: 08 Jan 2014 01:37 PM PST பாராளுமன்றத்தின் பதவிக்காலம், வரும் ஜூன் 1-ந்தேதி முடிகிறது. புதிய 16-வது பாராளுமன்றம் மே 31-ந்தேதிக்குள் அமைக்கப்படவேண்டும். இதற்கு ஏற்ற வகையில் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க |
| ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்த எந்த நிறுவனமும் தேவை இல்லை: காங்கிரஸ் Posted: 08 Jan 2014 12:47 PM PST பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால் இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காளர்களை கவரும் யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன |
| விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டப்பணிகள் தொடங்கிவிட்டன: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் Posted: 08 Jan 2014 12:32 PM PST அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வன சுற்றுச்சூழல் குறித்த பாராளுமன்ற நிலைக்குழு, இஸ்ரோ நிகழ்ச்சிகள் குறித்து பெங்களூரில் ஆலோசனை நடத்தியது. அப்போது இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராயும் விசயத்தை பொருத்தவரை நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம். அதற்கான பணிகள் தற்போது |
| கொச்சியில் வெடிவிபத்தில் அய்யப்ப பக்தர் படுகாயம் Posted: 08 Jan 2014 12:31 PM PST கொச்சி திரிக்ககராவில் உள்ள அய்யப்ப சேவா சங்க அலுவலகம் அருகே தமிழகத்தைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பக்தர் |
| இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 08 Jan 2014 11:39 AM PST உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில் சிகரெட் புகைத்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே, புகையிலை பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவர்களது எண்ணிக்கையை குறைக்க அமெரிக்க அரசாங்கம் |
| பாலிவுட் நடிகர்களை இரவு நிகழ்ச்சியில் சந்தித்த அகிலேஷ் மீது குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு Posted: 08 Jan 2014 11:31 AM PST உத்தரப்பிரதேச மாநில முசாபர் நகர் வன்முறையால் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவர் பிறந்த சொந்த ஊரான சைபையில் நடக்கும் மஹோட்சவ திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான்கான், தீபிகா படுகோன், மாதுரி தீக்சித் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேற்று கலந்துகொண்டனர். |
| லஞ்சம் குறித்த தகவல் தெரிவிக்க டெல்லியில் இலவச தொலைபேசி சேவை: கெஜ்ரிவால் அறிவிப்பு Posted: 08 Jan 2014 10:18 AM PST நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகளில் இன்று லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 2012-ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, லஞ்சம் மற்றும் ஊழலை தேர்தலின் முக்கிய பிரச்சாரமாக கொண்டு நாட்டின் தலைமையகத்தின் அரியணையில் அமைந்துள்ளது. |
| Posted: 08 Jan 2014 09:01 AM PST நிலக்கரி சுரங்கங்களில் உரிய அனுமதி பெறாமல் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |