Tamil Star |
- ஓரினச் சேர்க்கை: மத்திய அமைச்சர்கள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி
- அமெரிக்காவால் இந்தியாவுக்கு பாதிப்பா?
- இஸ்ரேலின் “கொல்லும் வண்டிகள்”
- அச்சுறுத்தும் பனிப்புயல்: ஒன்பது பேர் பலி
- மூன்றாவது தடவையும் மஹிந்தவே ஜனாதிபதி; யாழ்ப்பாணத்தில் அமைச்சர் குணரட்ண
- மாகாணசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஜனாதிபதி
- போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம்
- இலத்திரனியல் அடையாள அட்டைக்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பம்!
- மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்?
- இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ஆவணப்படுத்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
- எதற்கு இந்த மனுஷன் கார் கண்ணாடியை உடைக்கிறாருனு தானே யோசிக்கீங்க…..
- இப்படியொரு மர்மமான இசைக்கருவியைப் பார்த்ததுண்டா?…..
- நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்கலாமா?…..
- விஜய்யின் ஜில்லா படமாக்கப்பட்ட காட்சி…..
- இவங்க கொடுக்குற பல்புக்கு சிரிப்பே வரலைன்னா கண்டிப்பா டாக்டர போய் பாருங்க…..
- ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து?
- இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து லசித் மலிங்க நீக்கம்
- 1067 கார்கள் தீயிட்டு எரிப்பு
- யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் லத்வியாவும் இணைவு
- நடுவானில் சிகரெட் பிடித்தவருக்கு நேர்ந்த கதி
| ஓரினச் சேர்க்கை: மத்திய அமைச்சர்கள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி Posted: 03 Jan 2014 10:49 PM PST ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை விமர்சித்து ப.சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது என்று தண்டனைக்குரிய குற்றம் என உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட […] |
| அமெரிக்காவால் இந்தியாவுக்கு பாதிப்பா? Posted: 03 Jan 2014 10:25 PM PST
ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்ற போது இதே ரகுராம் ராஜன், தனது முதல் பணக் கொள்கையை அறிவிப்பதை மூன்று நாட்கள் தள்ளி போட்டார், காரணம், அமெரிக்க மத்திய வங்கி US tapering பற்றிய முடிவை அறிவித்தால் அதற்கு தகுந்தாற்போல் தனது பணக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று காத்திருந்தார். ஜனவரி 1, 2014 முதல் ஆரம்பம் ஆகும் US tapering, எவ்வித பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும்? 2008க்கு பிறகு அமெரிக்க பணக் கொள்கை 2008-ல் ஏற்பட்ட நிதி சிக்கலால் அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அதே நேரத்தில் அதனின் நிதி நிறுவனங்களையும் சிக்கலில் இருந்து காப்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இதற்காக அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (இனிமேல் The Fed) அதிக பண அளிப்பை ஏற்படுத்தியது. வங்கிகளுக்கிடையே உள்ள ஒரு நாள் கொடுக்கல்-வாங்கல் வட்டி விகிதத்தை (இதனை fed funds rate என்பர்) 0% முதல் 0.25% வரை வைத்துகொள்வது The Fed பணக் கொள்கையின் மைய அம்சம். பண அளிப்பு அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். வட்டி விகிதம் குறைவாக இருந்தால் முதலீடு உயர்ந்து பொருளாதாரம் உயரும், வேலையின்மை குறையும் என்பது The Fedயின் பொருளாதாரக் கணக்கு. ஊக்க நடவடிக்கை (Quantitative Easing - QE) பண அளிப்பை எப்படி உயர்த்துவது? The Fed, டாலரை அச்சிட்டு வங்கிகளுக்கு கொடுத்து அதற்கு ஈடாக அவர்களிடமிருந்து அரசு கடன் பத்திரங்களையும், மற்ற சொத்துமீதான கடன் பத்திரங்களையும் வாங்கிக் கொள்ளும். இதனால், ஒருபுறம் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் அதிகமாகும், மற்றொரு புறம் நீண்ட கால வட்டி விகிதம் குறையும். இதை தான் Quantitative Easing (இனிமேல் QE) குறிப்பிட்டனர். முதல் நிலை QE-I யில் நவம்பர் 25, 2008 தொடங்கி மார்ச் 18, 2010 வரை The Fed பண அளிப்பை அதிகரித்தது. இதற்கு பிறகும் அமெரிக்க பொருளாதாரம் உயரவில்லை, அதே நேரத்தில் ஐரோப்பாவில் புதிய நிதி சிக்கல் உருவாகியது. எனவே, இரண்டாம் நிலை QE-II துவங்கியது. இதில், The Fed $600 பில்லியன் டாலர் அளவுக்கு குறுகிய கால அரசு கடன் பாத்திரங்களை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டு ஜூன் 2011 வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதிலும் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை. இதற்கிடையில் செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2012 வரை Operation Twist என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது. நீண்ட கால வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், அதே நேரத்தில் பண அளிப்பை அதிகரிக்கக் கூடாது என்பது இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, நீண்ட கால கடன் பத்திரங்களை The Fed வாங்கிக்கொண்டு அதற்கு ஈடாக குறுகிய கால கடன் பத்திரங்களைக் கொடுத்தது. இதனால் கடன் சந்தையில் நீண்ட காலக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தது. ஆனால், பண அளிப்பை அதிகரித்து குறுகியகால வட்டி விகிதத்தை நிலை நிறுத்த செப்டம்பர் 2012 முதல் QE-III செயல்படுத்தப்பட்டது. QE-III செயல்திட்டப்படி The Fed மாதம் தோறும் $85 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை வாங்கி அதற்கு ஈடான பண அளிப்பை ஏற்படுத்தும். இத்திட்டம் அமெரிக்க பொருளாதாரம் 2015 வரை தொடரும் என்றாலும், அமெரிக்க வேலையின்மை 6.5% விட குறையும்போதும், அல்லது பணவீக்கம் 2.5% விட அதிகமாகும்போதும், கடன் வாங்கும் திட்டம் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தது. US Tapering இப்போது The Fed கடன் பத்திரங்களை வாங்கும் அளவைக் படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மாதம்தோறும் $85 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை The Fed வாங்குவதாக பார்த்தோம், இனி, ஜனவரி 2014 முதல் $75 பில்லியன் அளவுக்கு கடன் பத்திரங்களை மட்டுமே The Fed வாங்கும். அதன் பிறகு படிப்படியாக இந்த கடன் பத்திரங்களை வாங்கும் அளவு குறைக்கப்படும். இது தான் US Tapering. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீண்டு 2014லில் 2.8% முதல் 3.4% வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாலும், 2013 நவம்பர் மாத வேலையின்மை விகிதம் 7% வரை குறைந்துள்ளதாலும் US Taperingயை The Fed துவங்கியுள்ளது. ஜனவரி 31, 2014 அன்று The Fed யின் புதிய தலைவராக பதவி ஏற்க உள்ள யேலனுக்கும் இதில் உடன்பாடு உண்டு எனத்தெரிகிறது. US Tapering - கினால் என்ன நடக்கும்? அமெரிக்காவில் அமெரிக்க டாலர் அளிப்பை The Fed குறைக்கும், அவ்வாறு குறைத்தால் அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயரும். அதிக வட்டி வரும் என்பதால் எல்லாரும் கடன் கொடுக்க அமெரிக்க நிதி சந்தை நோக்கி செல்வர். இது அமெரிக்க டாலரின் தேவையை உயர்த்தும். ஆக, ஒரு புறம் டாலர் வரத்து குறைய, மற்றொரு புறம் டாலர் தேவை அதிகரிக்க, அமெரிக்க டாலருக்கு நிகராக மற்ற நாடுகளின் பணங்களின் மதிப்பு குறையும். இது தான் இந்திய ரூபாய்க்கும் நிகழும். இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை நமது மொத்த உற்பத்தியில்(ஜிடிபியில்) 3% விட குறைவாக இருக்கும் என்பதாலும், அன்னியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், US Tapering பாதிப்பு குறைவாகவும், குறுகியகாலம் மட்டுமே இருக்கும் என்பதாலும், இதனை பற்றி நாம் பெரிய அளவில் கவலைகொள்ள தேவை இல்லை என RBIயையும், நிதி அமைச்சகமும் தெரிவிக்கின்றன. நம்புவோமாக. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 Jan 2014 10:18 PM PST
ஈரான், சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளிடமிருந்து தங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்து வரும் நிலையில் அந்நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் தற்காப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருகிறது. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை தடுத்தழிக்கும் அம்பை இஸ்ரேல் சோதனை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்தது. இதையடுத்து நேற்று இரண்டாவது முறையாக தனது மேம்படுத்தப்பட்ட அம்பை எய்து வெற்றிகரமாக இஸ்ரேல் சோதனை செய்துள்ளது. மத்திய தரைக்கடல் பகுதியின் மேல் பறந்து சென்ற இந்த அம்பு, வெற்றிகரமாக இலக்கை எட்டியதாக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சோதனை முயற்சியை நடத்தும்போது அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரி யேர் ரமடி தெரிவித்துள்ளார். தாக்க வரும் ஏவுகணைகளை பூமியின் வளிமண்டலத்தின் மேலேயே தடுத்தி நிறுத்தி அழிக்கும் இந்த ஏவுகணைக்கு "கொல்லும் வண்டிகள்" என பெயரிடப்பட்டுள்ளது. ரசாயன மற்றும் அணு ஆயுதங்களை கொண்ட ஏவுகணை தாக்க முனையும் போது தடுதழிக்கும் முயற்சியிலேயே இந்த சோதனையை இஸ்ரேல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் சிரியாவிடம் இதுபோன்ற நீண்ட ஏவுகணைகள் உள்ளதாகவும், மேலும் ஹிஸ்புல்லா அமைப்பிடமும் இத்தகைய ஏவுகணைகள் உள்ளதாகவும் இஸ்ரேல் உறுதியாக நம்புகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அச்சுறுத்தும் பனிப்புயல்: ஒன்பது பேர் பலி Posted: 03 Jan 2014 10:06 PM PST
இந்நிலையில் அங்கு 2 அடி உயரத்திற்கு பனி படர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விமான நிறுவனங்கள் நாடு முழுவதும் பயணிக்கும் 2300 விமானங்களை ரத்து செய்துள்ளன. வர்த்தக மற்றும் பாடசாலை கட்டிடங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மாசேச்சூசெட்ஸ் நகரம் அதிகளவில் பிரச்சினையை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய பனிப்புயல் மேலும் உத்வேகம் கொண்டு அதன் தன்மை பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பனிப்புயலின் காரணமாக மிச்சிகன், கெண்டகி, இண்டியானா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூன்றாவது தடவையும் மஹிந்தவே ஜனாதிபதி; யாழ்ப்பாணத்தில் அமைச்சர் குணரட்ண Posted: 03 Jan 2014 09:02 PM PST
அவரே அடுத்தமுறையும் ஜனாதிபதி என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக் கொள்கிறேன் என்றார் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன். கோப்பாய் அக்கரைப் பிரதே சத்தில் நேற்று நடைபெற்ற 48 குடும்பங்களுக்கான பொருள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் உட்பட அவரது உறுப்பினர்கள் போர்க் காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கே ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கும் போது பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தார் என்ற ஞாபகம் சம்பந்தனுக்கு வரவில்லை. எனவே நாம் இந்த பகுதியை ஒன்றிணைந்து உயர்த்த வேண்டுமானால் நாங்களும் நீங்களும் ஒன்று சேரவேண்டும். நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களித்தமை எங்களுக்குச் சந்தோசம். அத்தோடு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து உறுப்பினர்களை ஆட்சியல் அமர்த்தினார்கள். அதுகுறித்தும் நாங்கள் சந்தோசப்படுகின்றோம். தற்போது வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் கடமையாற்றுகிறார். அவரை நாங்கள் மதிக்கின்றோம் அவருக்கு நாங்கள் கெளரவமளிக்கின்றோம். மாகாண சபையின் அதிகாரங்கள் எவை என்பது பற்றி அவர் அறிந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஒரு மாட்டு வண்டியிலேயே ஒரு எருமை மாட்டையும் ஒரு கடா ஆட்டையும் கட்டினால் அவை சேர்ந்து நன்றாகப் பயணிக்க முடியாது. இதுபோன்றல்லாது மத்திய அரசும் மாகாண சபையும் சேர்ந்து செயற்பட்டால் மட்டுமே அபிவிருத்தியை அடையமுடியும் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாகாணசபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்: ஜனாதிபதி Posted: 03 Jan 2014 08:58 PM PST
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரசிறி தொடங்கொடவின் மகனுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். 1993ம் ஆண்டு தென் மாகாணசபையை பலவந்தமாகவே நிறுவினோம். ஆளுனர் பாகீர் மாகார் கடிதத்தில் கையொப்பமிடவில்லை. பலவந்தமாகவே தென் மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றினோம். அமரசிறி தொடங்கொட முதலமைச்சராக பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். மாகாணசபை நிறுவுதல் தொடர்பான பிரகடனத்தை நானே வாசித்தேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் காலிக்கு சென்றிருந்த போது முதலமைச்சர் சான் விஜயலாலிடம் இதனைத் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| போர்க்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம் Posted: 03 Jan 2014 08:55 PM PST அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 5ம் நாள் தொடக்கம், 11ம் நாள் வரையான காலப் பகுதியில் ஸ்டீபன் ஜே ராப் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர், சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளையும், அரசியல் கட்சிகளினதும் சிவில் அமைப்புகளினதும் தலைவர்களையும் சந்தித்து சிறிலங்காவில் நீதி, […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலத்திரனியல் அடையாள அட்டைக்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பம்! Posted: 03 Jan 2014 08:52 PM PST
2015 ஆம் ஆண்டு இறுதியில் சகலருக்கும் சர்வதேச தரத்திலான இலத்திரனியல் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மார்ச் மாதத்திலிருந்து கையினால் எழுதப்பட்ட அடையாள அட்டைக்குப் பதிலாக அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளே விநியோகிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர் வரலாற்றில் முதற் தடவையாக கடந்த வருடத்தில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த ஆட்பதிவு ஆணையாளர் நாயகம், இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்காக தரவுகள் திரட்டும் பணி மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதியில் பூர்த்தி செய்யப்படும். இதற்காக 331 இணைப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான தலா இரு முகாமைத்துவ உதவியாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர சர்வதேச தரத்திலான புகைப்படம் பிடிப்பதற்காக புகைப்படப் பிடிப்பாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். பிரதேச செயலாளர்களின் கண்காணிப்புடன் இணைப்பு அலுவலக பணிகள் முன்னெடுக்கப்படும். ஒருவரது தரவு பெறும் போது முழுக்குடும்பத்தினதும் தரவுகள் திரட்டப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட சகலரதும் தரவுகள் இதன் போது திரட்டிட உள்ளோம். விரல் அடையாளங்களும் திரட்டப்படும். 16 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அடையாள அட்டை பெறும் போது அதற்காக விண்ணப்பித்தால் மட்டுமே போதுமானது. வேறு தரவுகள் வழங்க வேண்டி ஏற்படாது. மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை தயாரிக்கப்பட உள்ளது. இதனால் திருட்டுத்தனமாக அடையாள அட்டை பெறுவது தடுக்கப்படும்.என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்? Posted: 03 Jan 2014 08:44 PM PST
அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக் கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார். கிராமங்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் சட்டபூர்வமாக அதிகாரம் பெறுகின்றது. ஓரிரு நபர்கள் தங்களின் அதிகாரப் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு எடுத்த அரசியல் முடிவுதான் இது' என்று ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டினார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக அரசாங்கம் இந்த சட்டத்தின் ஊடாக அரசியல் ஏதேச்சாதிகாரத்தை குவித்துக் கொள்ளவே முயன்றுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. மாகாண சபைகளிடம் இருந்த பல அதிகாரங்கள் இந்த சட்டத்தின் ஊடாக திருடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது. ஆனால், இதன் மூலம் சுமார் 18 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ச கூறுகிறார். இந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் தனது அதிகாரமே குறைக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். இந்தத் திணைக்களம் அரச சேவை ஆணைக்குழுவின் கீழேயே வருவதால், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஓராண்டுக்கு முன்னர் இந்த திவிநெகும சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, பெரும் அரசியலமைப்புச் சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னணியிலேயே, அப்போது தலைமை நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளும் ஆளுந்தரப்பால் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரட்டை பிரஜாவுரிமை: இலத்திரனியல் ஆவணப்படுத்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் Posted: 03 Jan 2014 08:40 PM PST இரட்டை பிரஜா உரிமை வழங்கல் மற்றும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் மற்றும் வீஸா வழங்கும் ஆகிய நடவடிக்கைகளை இலத்திரனியல் ஆவணப்படுத்தல் (e.documenting) முறைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை பெறவும் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புப் பதிவு மற்றும் வீஸா பெறவும் குடிவரவு குடியல்வு திணைக்களத்துக்கு பெருமளவு விண்ணப்பங்கள் கிடைத்து வரு கின்றன. வீஸா மற்றும் இரட்டைப் பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கையை இலகுபடுத்தவும் முகாமைத்துவம் செய்யவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதற்கு இந்த மனுஷன் கார் கண்ணாடியை உடைக்கிறாருனு தானே யோசிக்கீங்க….. Posted: 03 Jan 2014 07:36 PM PST
கனடாவில் காணப்படும் பனிப்பொழிவின் காரணமாக காரில் பனிக்கட்டி உரைந்து கண்ணாடி போன்று காணப்படுவதை ஒரு மனிதர் உடைக்கும் காட்சியே இதுவாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படியொரு மர்மமான இசைக்கருவியைப் பார்த்ததுண்டா?….. Posted: 03 Jan 2014 07:21 PM PST |
| நான்கே நான்கு நிமிடங்களில் 2013-ஐ மீண்டும் பார்க்கலாமா?….. Posted: 03 Jan 2014 07:16 PM PST
இதன் சுமார் 4.9 மில்லியன் வரையானவர்கள் பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் மீண்டும் 2013ம் ஆண்டினை நினைவுபடுத்தும் முகமாக இந்த வருடம் 4 நிமிடங்கள் ஓடக்கூடிய மற்றுமொரு வீடியோவை வெளியிட்டுள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| விஜய்யின் ஜில்லா படமாக்கப்பட்ட காட்சி….. Posted: 03 Jan 2014 07:05 PM PST |
| இவங்க கொடுக்குற பல்புக்கு சிரிப்பே வரலைன்னா கண்டிப்பா டாக்டர போய் பாருங்க….. Posted: 03 Jan 2014 07:50 AM PST |
| ஆறுதல் வெற்றி பெறுமா இங்கிலாந்து? Posted: 03 Jan 2014 01:46 AM PST
இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் வரலாற்று புகழ் மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின், கடைசி டெஸ்ட் தற்போது நடந்து வருகிறது. இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் குக் பந்துவீச முடிவு செய்தார். இதனைதொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து லசித் மலிங்க நீக்கம் Posted: 03 Jan 2014 01:36 AM PST
இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து புதிய வருடத்தில் அதிகளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக தொடரில் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. இதன்படி முழுமையான திறமைகளை வெளிப்படுத்தாத சிரேஷ்ட வீரர்களைக் கொண்டு போட்டிகளை வெற்றி கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. லசித் மலிங்க, திஸர பெரேரா இருவரும் போதுமானளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில்லை எனவும், லசித் மலிங்கவின் உடற்தகுதி தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், அதன் காரணமாக உடற்தகுதிப் பயிற்சிகளிலும் லசித் மலிங்க பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை திஸர பெரேரா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களைத் தவிர, இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மார்வன் அத்தப்பத்து, களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றுவான் கல்பகே ஆகியோரின் பதவிகளும் ஆபத்திலுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 03 Jan 2014 01:32 AM PST 2014ம் ஆண்டை வரவேற்பதாக பிரான்சில் 1067 கார்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் புத்தாண்டுக்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 31ம் திகதி, இரவில் பழைய கார்களை எரித்து அழிக்கும் சம்பவம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டு மட்டும் சுமார் 1067 கார்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் கூறுகையில், எதிரிகளை பழி வாங்கும் நோக்கில் அவர்கள் காரை புத்தாண்டு உற்சாகத்தை சாக்காக வைத்து எரிப்பதை சிலர் வழக்கமாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் லத்வியாவும் இணைவு Posted: 03 Jan 2014 01:11 AM PST யூரோ வலயத்தில் புதிதாக இணைந்துகொண்டுள்ள லத்வியாவுக்கு யூரோ நாணயத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பொதுவான நாணய அலகு ஒன்றை லத்வியா பயன்படுத்துவதால், அதன் பொருளாதாரத்தில் முக்கிய பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 18ஆவது நாடாக லத்வியா இணைந்துகொண்டது. ரஷ்யாவின் உதவிகளில் பெரும்பாலும் தங்கியிருப்பதற்கான வாய்ப்பை லத்வியா இதன் மூலம் குறைத்துக்கொண்டுள்ளது. இதேவேளை லத்வியாவில் 60 வீதமானவர்கள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொள்ள பெரிதும் விரும்பவில்லை என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுவானில் சிகரெட் பிடித்தவருக்கு நேர்ந்த கதி Posted: 03 Jan 2014 01:05 AM PST
விமானத்தின் உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பயணியை, அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த மதியாஸ் ஜார்க்(வயது 54) என தெரியவந்தது. இவர், விமானத்தில் ஏறியது முதல் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்ததாகவும், புகைப்பதை நிறுத்த சொன்ன விமான ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதியாஸை கட்டிப் போட்டுள்ளனர். இதனை விசாரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம் பாஸ்போர்டை பறிமுதல் செய்து ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை 10ம் திகதி நடைபெற உள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















