மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நாகாலாந்தில் 9 பேர் சிதைந்த நிலையில் மரணம்: இறந்தவர்களின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தன
- பஞ்சாப் எல்லைக்கோடு அருகே ரூ.20 கோடி ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை
- அமெரிக்க தூதரகங்களில் சினிமா காட்டக்கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு
- கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனை சந்தித்து அறிவுரை கேட்ட உள்துறை மந்திரி
- பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி விரைவில் அறிவிக்கப்படுகிறார்: சோனியாகாந்தி முடிவு
- மெட்ரோ ரெயில் நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதிதிட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
- ஆந்திரா பிரிவினையை தடுக்க கிரண்குமார் ரெட்டி வியூகம்
- பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டி: பிரதமர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
- கடும் கண்டனங்களுக்கு பணிந்து ஆடம்பர பங்களாவில் குடியேறும் திட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
- கர்நாடகத்தில் எடியூரப்பா இணைந்ததால் பாரதிய ஜனதாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து
- பாராளுமன்ற தேர்தல் வியூகம்: இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய குழு உறுப்பினர்களின் கூட்டம்
- ஊழல் எதிர்ப்பு போரை நாடு முழுவதும் நடத்துவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
- மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ‘யார் அடுத்த பிரதமர் என விவாதிப்பதா?’: அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை
- பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக-இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச வாய்ப்பு: மன்மோகன்சிங் தகவல்
- பீகார் படுகொலை வழக்கு: 10 பேரின் மரண தண்டனை-4 பேரின் ஆயுள் தண்டனை ரத்து
- கெஜ்ரிவாலின் அமைச்சர்களுக்கு அரசு முறைப்படி சொகுசு கார்கள்
- மும்பை விமான நிலையத்தில் ரூ. 7.5 கோடி போதைப்பொருளுடன் தென் ஆப்பிரிக்க பெண் கைது
- வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்குகளுக்கு மறுவிசாரணை கிடையாது: உச்சநீதிமன்றம்
- மும்பையில் மருத்துவரை தாக்கிய 3 போலீசார் சரண்: டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
- பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உயர்வு உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
| நாகாலாந்தில் 9 பேர் சிதைந்த நிலையில் மரணம்: இறந்தவர்களின் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தன Posted: 03 Jan 2014 11:49 PM PST நாகலாந்து மாநிலம் டிமப்பூர் பகுதியில் படுகொலை சம்பவமாக கருதப்படும் விதத்தில் 9 சடலங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மேல் ஒருவர் வரிசையாக அடுக்கப்பட்டது போல் இருந்த இந்த ஒன்பது சடலங்களின் கண்கள் கட்டப்பட்டிருந்ததுடன், கைகளும் பின் நோக்கி கட்டப்பட்டிருந்தன |
| பஞ்சாப் எல்லைக்கோடு அருகே ரூ.20 கோடி ஹெராயின் கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை Posted: 03 Jan 2014 11:34 PM PST பஞ்சாப் மாநில எல்லைக்கோடு வழியாக ரூ.20 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடத்தி வந்த 2 பாகிஸ்தானியர்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநில எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று அதிகாலை கடுமையான பனி பெய்தது. பனி மூட்டத்தையும், இருளையும் சாதகமாக்கிக் கொண்டு பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். |
| அமெரிக்க தூதரகங்களில் சினிமா காட்டக்கூடாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு Posted: 03 Jan 2014 11:11 PM PST அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைதூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர், விசா விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்ததாகவும், இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு மிகக்குறைந்த சம்பளம் அளித்ததாகவும் அமெரிக்க போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 12ந்தேதி, தேவயானி கைது செய்யப்பட்டார். அவர் ஆடை களைந்து சோதனையிடப்பட்டார். இதனால் இந்தியாவில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. |
| கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தனை சந்தித்து அறிவுரை கேட்ட உள்துறை மந்திரி Posted: 03 Jan 2014 10:31 PM PST கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 1–ந்தேதி கேரள அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இதில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்துறை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே இந்த பொறுப்பை வகித்து வந்த திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் வன இலாகா பொறுப்புக்கு மாற்றப்பட்டார். |
| பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி விரைவில் அறிவிக்கப்படுகிறார்: சோனியாகாந்தி முடிவு Posted: 03 Jan 2014 10:09 PM PST பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுதத மாத இறுதியில் 7 கட்ட தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை பிரதமர் வேட்பாளர் என்று |
| மெட்ரோ ரெயில் நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதிதிட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Posted: 03 Jan 2014 10:07 PM PST இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் விமானத்தை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருப்பதை ராணுவ உளவுத்துறை கடந்த வாரம் கண்டுபிடித்து எச்சரித்தது. இந்த நிலையில் ராணுவ உளவுத்துறை மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் பல்வேறு குழுக்களாக ஊடுருவி, மிகப்பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதே அந்த எச்சரிக்கை ஆகும். கடந்த 31–ந்தேதி இந்த எச்சரிக்கை தகவலை மத்திய உள்துறைக்கும், ரெயில்வே அமைச்சகத்துக்கும் ராணுவ உளவுத்துறை அனுப்பியது. |
| ஆந்திரா பிரிவினையை தடுக்க கிரண்குமார் ரெட்டி வியூகம் Posted: 03 Jan 2014 09:52 PM PST ஆந்திர சட்டசபையில் தனி தெலுங்கானா மசோதா விவாதம் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் சபை தொடங்கியதுமே மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை நாள் முழுக்க முடங்கியது. மாநில பிரிவினைக்கு ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி |
| பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டி: பிரதமர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 03 Jan 2014 09:51 PM PST டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்தக்கட்டமாக பாராளுமன்ற தேர்தலை குறிவைத்துள்ளது. இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது |
| கடும் கண்டனங்களுக்கு பணிந்து ஆடம்பர பங்களாவில் குடியேறும் திட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால் Posted: 03 Jan 2014 09:26 PM PST அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அரசு செலவினங்களில் சிக்கனம், அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட முற்போக்கு முழக்கங்களுடன் 'ஆம் ஆத்மி' கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல் மந்திரி ஆனதும் 9000 சதுரடியில் 10 படுக்கை அறை கொண்ட இரட்டை பங்களாவில் |
| கர்நாடகத்தில் எடியூரப்பா இணைந்ததால் பாரதிய ஜனதாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து Posted: 03 Jan 2014 09:00 PM PST கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவர் படுதோல்வி அடைந்ததுடன் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பும் பாதிக்கப்பட்டது |
| பாராளுமன்ற தேர்தல் வியூகம்: இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய குழு உறுப்பினர்களின் கூட்டம் Posted: 03 Jan 2014 08:00 PM PST டெல்லி மாநிலத்தில் அதிரடியாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டு வருகிறது. நாள்தோறும் முக்கிய வி.ஐ.பிக்கள் பலர் அக்கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஊழல் அரசியல் கட்சிகளை விரட்டியடிக்க அக்கட்சி அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் ஒரு கட்டமாக நாடாளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள உள்ள வியூகங்கள் குறித்து |
| ஊழல் எதிர்ப்பு போரை நாடு முழுவதும் நடத்துவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு Posted: 03 Jan 2014 01:46 PM PST டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- டெல்லி மக்கள் எங்களுக்கு ஆட்சி நடத்தும் வாய்ப்பை அளித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவோம். இந்த போரை நாடு |
| மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் ‘யார் அடுத்த பிரதமர் என விவாதிப்பதா?’: அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை Posted: 03 Jan 2014 01:04 PM PST டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூன்றாவது முறை ஆட்சி அமைத்தால் நான் பிரதமராக மாட்டேன்; பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதியானவர்" என |
| பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக-இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச வாய்ப்பு: மன்மோகன்சிங் தகவல் Posted: 03 Jan 2014 12:36 PM PST பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்து உள்ளார். டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் இதுபற்றி அவர் |
| பீகார் படுகொலை வழக்கு: 10 பேரின் மரண தண்டனை-4 பேரின் ஆயுள் தண்டனை ரத்து Posted: 03 Jan 2014 08:44 AM PST பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள இட்சாரியா கிராமத்தில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாநிலத்தையே உலுக்கிய இந்த வழக்கை விசாரித்த |
| கெஜ்ரிவாலின் அமைச்சர்களுக்கு அரசு முறைப்படி சொகுசு கார்கள் Posted: 03 Jan 2014 08:03 AM PST டெல்லியிலுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்களுக்கு அரசு முறைப்படி டொயோட்டோ கார் வழங்கப்பட்டது. அக்கட்சி அமைச்சர்களான மணிஷ் சிசோடியா, ராக்கி பிர்லா மற்றும் சவுரவ் பரத்வாஜ் ஆகியோர் இன்று |
| மும்பை விமான நிலையத்தில் ரூ. 7.5 கோடி போதைப்பொருளுடன் தென் ஆப்பிரிக்க பெண் கைது Posted: 03 Jan 2014 06:55 AM PST புதுடெல்லியில் இருந்து இன்று அதிகாலை மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, |
| வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்குகளுக்கு மறுவிசாரணை கிடையாது: உச்சநீதிமன்றம் Posted: 03 Jan 2014 06:24 AM PST வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அவர்களும் தண்டனையை எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்நிலையில் இந்த நால்வருக்கு ஆதரவாக மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| மும்பையில் மருத்துவரை தாக்கிய 3 போலீசார் சரண்: டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் Posted: 03 Jan 2014 05:39 AM PST மகாராஷ்டிராவின் சோலாபூர் அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய போலீசாரை கைது செய்யக்கோரியும் பணி இடைநீக்கம் செய்யக்கோரியும் 4,000 மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவருக்கு உடனடியான சிகிச்சை வழங்கக் கோரி போலீஸ்காரர்கள் மூன்று பேர் மருத்துவர் ஒருவரை தாக்கினர். இச்சம்பவம் மருத்துவமனையில் உள்ள ரகசிய கேமராவில் பதிவாகி இருந்தது. மருத்துவரை காவல்துறையினர் தாக்கியது, அரசு மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. |
| பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உயர்வு உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல் Posted: 03 Jan 2014 05:33 AM PST சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16–ந் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வாட் வரியின் அடிப்படையில் ஒவ்வொரு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |