Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பூனையிடமிருந்து நாயை காப்பாற்ற போராடும் பெண்…. எங்கேயாவது கேள்விப்பட்டதுண்டா?…

Posted: 27 Jan 2014 02:30 AM PST

cat_attack_dog_001.w245

cat_attack_dog_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இவரை நினைத்து வேதனைப்படுவதா?… அல்லது சிரிப்பதா?….

Posted: 27 Jan 2014 02:27 AM PST

man_druck_001.w245

man_druck_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

முகமூடி கொள்ளைக்காரி செய்யும் அட்டூழியத்தைப் பாருங்க…… எம்புட்டு கொடுத்தாலும் பத்தலையாம்!…

Posted: 27 Jan 2014 02:23 AM PST

woman_rob_001.w245

woman_rob_001.w245      

This posting includes an audio/video/photo media file: Download Now

கரடியின் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர்தப்பிய தம்பதியர்……

Posted: 27 Jan 2014 02:20 AM PST

bear_family_001.w245

bear_family_001.w245

கலிபோர்னியாவின் பஸடேனா பகுதியிலுள்ள தமது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வெளியேறிய வயதான தம்பதியர் கரடியின் தாக்குதலிலிருந்து நூலிழையில் தப்பியுள்ளனர்.

இவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வேளையில் அங்கே கரடி ஒன்று காணப்படுவதும், தம்பதியரைக் கண்ட கரடி மிரளுவதும், பின்னர் தம்பதியரின் பின்னால் கரடி மெதுவாக செல்வதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரே பெண் இரண்டு பேரை காதலித்ததால் நேர்ந்த விபரீதம்…..

Posted: 27 Jan 2014 02:15 AM PST

one_gril_two_lover_001.w245

one_gril_two_lover_001.w245

இன்றைய காலக்கட்டத்தில் பேஸ்புக் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கிறது என்பதற்கு இக்காணொளியே உதாரணமாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்

Posted: 27 Jan 2014 02:05 AM PST

hillary-clinton

hillary-clintonஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப்போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார்.

அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிலாரி,

"தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியாரிட்டிஸ் யு.எஸ்.ஏ. ஆக்சன் என்ற லாப நோக்கமற்ற அரசியல் அமைப்பு, ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செல்வந்தர்களிடம் நிதி திரட்டும் பணியை விரைவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தில் இ-சிகரெட்டுகளை பயன்படுத்த தடை

Posted: 27 Jan 2014 02:00 AM PST

04-1378269061-e-cigatettes-13-600-jpg

04-1378269061-e-cigatettes-13-600-jpgஇங்கிலாந்தில் இ-சிகரெட்டுகளை பயன்படுத்த 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இ-சிகரெட்டுகள் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன.

இதனை பயன்படுத்துவதால் இளைஞர்கள் நிக்கோட்டின் சுவைக்கு எளிதாக பழகி விடக்கூடும் என்றும், எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் எனவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்வதை பிரிட்டன் அரசாங்கம் தடை செய்து புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளது.

எனினும் இதன் காரணமாக உண்மையான சிகரெட்டுகளை புகைக்க ஆரம்பித்தால், அது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, உண்மையான சிகரெட்டுகளை வாங்கவும் தடை விதிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ : பலியான நபர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்

Posted: 27 Jan 2014 01:56 AM PST

canada_elder_home_fire_001

canada_elder_home_fire_001கனடாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான நபர்களின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கனடாவின் கியூபெக் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் கடந்த 23ம் திகதி நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் 32 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது, இதுவரையிலும் 8 பேரின் உடல்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.

பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால் உடல்களை தேடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தீயை அணைக்க பயன்படுத்திய தண்ணீர் தற்போது பனியாக உறைந்துள்ளதால், வெப்பமூட்டும் கருவிகளை கொண்டு பனியை உருக்கி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த விடுதியிலிருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள், காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்தும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிகரெட் நெருப்பினால் தீ பற்றியிருக்கலாம் என்றும், முதியோர் இல்லத்தில் போதிய தீயணைப்பு கருவிகள் இல்லாததும் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூகுள்- சாம்சங் நிறுவனங்களுக்கிடையே உலகளாவிய காப்புரிமை ஒப்பந்தம்

Posted: 27 Jan 2014 01:52 AM PST

download (5)

download (5)தகவல் தொழில்நுட்பத்துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும்பொருட்டும், செலவுமிகுந்த சட்ட மோதல்களின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது அடுத்த பத்தாண்டுகளில் பெறவிருக்கும் காப்புரிமைகள் மீதும், தற்போது நடைமுறையில் உள்ள காப்புரிமைகள் மீதும் செல்லுபடியாகும் என்று சாம்சங் நிறுவனம் இன்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விதிமுறைகள் அறிக்கைகளில் வெளியிடப்படவில்லை. இரு நிறுவனங்களுக்கிடையேயான இந்த உடன்பாடு சட்டரீதியான மோதல்களைக் குறைத்து கண்டுபிடிப்புகள் மீதான கவனத்தை அதிகரிக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் துணை பொது வழக்கறிஞரான ஆலன் லோ தெரிவித்தார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறைகளில் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கின்றது என்று சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பில் ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்கான மெமரி சிப்ஸ் போன்ற முக்கியமான தொழில்நுட்பக் கூறுகளை தயாரிப்பதில் சாம்சங் முன்னணியில் உள்ளது.

அதுபோல் இணையதளத் தேடலில் முக்கியப் பங்கு வகிக்கும் கூகுள் வர்த்தகரீதியாக அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஆண்டிராய்ட் போன்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்த புதிய ஒப்பந்த அறிவிப்பின்மூலம் கூகுள் நிறுவனத்தின் முக்கிய திட்டங்களில் ஹார்டுவேர் தொழில்நுட்ப பங்குதாரராக சாம்சங் நிறுவனம் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நொமுரா நிதி முதலீட்டின் ஆய்வாளரான சுங் சங் வான் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய காப்புரிமம் கொண்ட தொழில்நுட்ப நிறுவன உத்திகளை பிற நிறுவனங்கள் பின்பற்றும்போது பொதுவாக வழக்குகள் மூலமே இத்தகைய பிரச்சினைகள் சந்திக்கப்படும். ஆனால் பல வழக்குகள் இதுபோல் நீதிமன்றத்திற்கு வெளியே குறுக்கு உரிமம் குறித்த உடன்பாடுகள் பெறப்படுவதோடு முடிந்துவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

LG அறிமுகம் செய்யும் வினைத்திறன் வாய்ந்த கைப்பேசி

Posted: 27 Jan 2014 01:46 AM PST

download (4)

download (4)LG நிறுவனமானது G Pro 2 எனும் வினைத்திறன் கூடிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress கண்காட்சியின்போது அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் Quad-Core Qualcomm Snapdragon 800 Processor மற்றும் Adreno 330 GPU என்பனவற்றுடன் பிரதான நினைவகமாக 3GB RAM இனையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இக்கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

காச நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்லைக்கொண்டு சிகிச்சை அளிக்க

Posted: 27 Jan 2014 01:40 AM PST

lung_tb_001

lung_tb_001காச நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்லைக்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இது காச நோய்க்கு எதிரான நிர்ப்பீடனத்தை தூண்டுவதற்கு உதவியாக இருக்கும் எனவும், பாதிப்புக்கு உள்ளான இழையங்களை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும் எனவும் அக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

இக் குழு 2009ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 21 வயதிலிருந்து 65 வயது வரையான 30 நோயாளிகளை அவதானித்து அதன் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, தென் ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் சுமார் 450,000 பேர் காச நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கைப்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கு

Posted: 27 Jan 2014 01:35 AM PST

ubuntu_touch_001

ubuntu_touch_001கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன.

இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு பேக்கப் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு phoneMiner எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது.

இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மன்னார் மனித புதை குழி தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம் – ஜே.வி.பி

Posted: 27 Jan 2014 01:32 AM PST

mannar_skeleton_003

mannar_skeleton_003மன்னார் பாரிய மனித புதை குழி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் பாரியளவில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

43 மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரரணை நடாத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என ஜே.வி.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத்தளையில் 150 மண்டையோடுகளும் எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது, எனினும், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதை குழி தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய அமைதி காக்கும் இராணுவம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஒருவரை மாறி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்திக் கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் குற்றம் இழைத்திருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள உடல் எச்சங்கள் துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், பொதுமக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜே.வி.பி கோரியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.சி.சி நிர்வாக அமைப்பு மாற்றம்: முன்னாள் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

Posted: 27 Jan 2014 01:20 AM PST

download (3)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) செயற்குழு கூட்டம் நாளையும் (28–ந்தேதி), நாளை மறுநாளும் (29–ந்தேதி) துபாயில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஐ.சி.சி.யின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் கமிட்டி சார்பில் ஐ.சி.சி. நிர்வாக விவகாரங்களில் சில மாற்றங்களை கொண்டு வரும் வகையில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த வரைவு திட்டத்தில் ஐ.சி.சி விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

download (3)மேலும் அதிக வருவாய் தரும் வாரியங்களுக்கு அதற்கு ஏற்ற வகையில் ஐ.சி.சி வருவாயை கணிசமாக பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.

ஐ.சி.சி.யின் இந்த புதிய வரைவு திட்டத்துக்கு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை உள்பட சில நாட்டு வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஐ.சி.சி.யின் 10 குழு உறுப்பினர்களில் 7 பேர் ஆதரவு கிடைத்தால் இந்த திட்டம் நிறைவேறும்.

ஐ.சி.சி நிர்வாக அமைப்பில் மாற்றம் செய்யப்படும் இந்த முடிவுக்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், முன்னாள் ஐ.சி.சி மேட்ச் நடுவருமான கிளைவ் லாயிட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வரைவு திட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அவர் ஐ.சி.சி. தலைவர் ஆலன் ஈசாக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதேபோல ஐ.சி.சி. முன்னாள் தலைவர்கள் மால்கம் கிரே (ஆஸ்திரேலியா) ஈசன் மணி (பாகிஸ்தான்) மற்றும் மால்கம் ஸ்பிடு ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கக் கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு மாகாண சபையின் ஜந்தாவது அமர்வு : கைதடியிலுள்ள வடமாகாணசபைக் கட்டடத்தில் இன்று காலை ஆரம்பம்

Posted: 27 Jan 2014 01:13 AM PST

images

imagesஇலங்கை அரசு தொடர்ந்தும் வடக்கு மாகாண சபையினை முடக்கும் வகையினில் தனது செயற்பாடகளை முன்னெடுத்து வரும் நிலையினில் அதனது ஜந்தாவது அமர்வு கைதடியிலுள்ள வடமாகாணசபைக் கட்டடத்தில் இன்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய அமர்வில் இனப்படுகொலைக்கு சர்வதேசம் நீதி வழங்கவேண்டும் மற்றும்  மன்னார் மனித புதைகுழி தொடர்பான சர்வதேச விகாரணை கோரும் பிரேரணை உட்பபட முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவற்றின் மீதான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே இலங்கையின் எதிர்வரும் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்க வேண்டுமென சிவாஜிலிங்கம் வலியுறுத்தி வருகின்றார்.மாகாணசபையின் பிரதம செயலாளர் உள்ளிட்ட நிர்வாக மட்டம் கூட்டமைப்பு மாகாணசபைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவருவது பற்றிய சீற்றம் பலரதும் உரைகளினில் தெரிகின்றது.

இதேவேளை றெக்சியன் கொலை வழக்கில் கைதாகியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் இன்று சபைக்கு வருகை தந்துள்ளார்.சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரது பாதுகாப்புடன் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மரபுசார்ந்த அரிய வகை பார்வை குறைபாட்டுக்கு மரபணு சிகிச்சை

Posted: 27 Jan 2014 12:59 AM PST

392688923Untitled-1

392688923Untitled-1மரபுசார்ந்த அரிய வகை பார்வை குறைபாட்டை மரபணு சிகிச்சை மூலம் போக்க முடியும் என்ற வியத்தகு சாதனையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். விழித்திரைக்கு பின்புறம் உள்ள ஒளியை உள்வாங்கும் செல்கள், மெல்ல மெல்ல வலுவிழந்து, இறந்தும் விடுவதால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை பலரும் இத்தகைய பார்வை இழப்பு நோய்க்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது. கண்களின் விழித்திரையை பலவீனமடையச் செய்து, அதன் விளைவாக பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் இத்தகைய மரபணுவை மாற்றுவதன் மூலம் இந்த நோய் குறைபாட்டை போக்க முடியும் என்று இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மருத்துவர்கள் தங்களின் பரிசோதனைகளின் மூலம் தற்போது கண்டறிந்துள்ளனர். 'ஜீன் தெரபி' எனப்படும் இத்தகைய மரபணு மாற்று சிகிச்சையின் மூலம் பார்வைத் திறனை முழுவதுமாக இழந்துவிட்ட 6 நோயாளிகளிடம் சோதனை முறையில் இந்த நவீன சிகிச்சை முறையை மேற்கொண்டதில், சில மாதங்களுக்குப் பிறகு மங்கலான வெளிச்சத்தில் பார்வைத் திறனில் மேம்பாடுகள் இருப்பதாக நோயாளிகள் தெரிவித்தனர். ஆறு பேரில் இருவரால் சிறிய எழுத்துகளையும் படிக்க முடிந்தது என்ற தகவலை 'லான்செட்' மருத்துவ இதழ் தெரிவிக்கின்றது. இவர்களில் ஒருவரான வெய்ன் தாம்ப்சன், தனது 17 வயதில் பார்வை குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவர். இந்த ஆராய்ச்சியின் மூலம் மீண்டும் பார்க்கும் திறனை பெற்றுள்ள அவர் கூறுகையில், 'கடந்த 25 ஆண்டுகளாக எந்தப் பொருளையும் தெளிவாக பார்க்க முடியாமல் இருட்டு உலகத்தில் வாழ்ந்து வந்தேன். எனது 9 வயது மகளின் அழகு முகத்தை பார்க்கவே முடியாதா...? என இரவும், பகலும் ஏங்கிக் கொண்டிருந்தேன். இப்போது, அவளது மலர் முகத்தை என்னால் மிக துல்லியமாக பார்க்க முடிகிறது. அது மட்டுமின்றி அவளது வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையும் என்னால் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. பகலில் சூரிய வெளிச்சத்தை கூட பார்க்க இயலாத என்னால் இப்போது இரவு நேரத்தில் வானத்தில் உள்ள மங்கலான நட்சத்திரங்களையும் பார்க்க முடிகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'இந்த மரபணு சிகிச்சையின் பலன் நோயாளியின் இறுதிக் காலம் வரை நீடிக்குமா...? என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது' என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுப்பீல்டு கண் ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் ராபர்ட் மக்லெரன் தெரிவித்துள்ளார். நோயாளிகள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் வரை பார்வை மேம்பாடுகள் பராமரிக்கப்படக்கூடும். 2 ஆண்டு கால தீவிர கண்காணிப்புக்கு பிறகே இந்த மரபணு சிகிச்சை நிரந்தரப் பலனை அளிக்குமா? என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது -முதலமைச்சர்

Posted: 27 Jan 2014 12:52 AM PST

vikn

viknவடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.    சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர்.

வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர்.   அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறி வுறுத்தினார் என்று அறிய முடிகிறது.

பிரேரணைகள் திருத்தம் வடக்கு மகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் – கடந்த மூன்று மாதங்களில் – இரண்டாவது தடவையாக மாகாண சபை உறுப்பினர்களை முதலமைச்சர் நேற்றுச் சந்தித்துப் பேசினார்.

மாகாண சபையின் 23 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்த சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.   கூட்டத்தில் மூன்று பிரேரணைகள் பற்றி நீண்ட நேரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட போரால் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த, இலங்கையில் நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இன அழிப்பு என்பதை சர்வதேசத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்னும் பிரேரணை, உறுப்பினர் அனந்தி சசிதர னால் முன்வைக்கப்பட்ட, வன் னியில் மாவட்டச் செயலர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் காணாமற் போன ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்தி அதனை ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்லல் மற்றும் மன்னார் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரேரணை என்பன பற்றியே கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்தப் பிரேரணைகள் காட்டமானவையாக – கடும்போக்கானவையாக – இருப்பதால் அவற்றைத் திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.    ஆனால் பிரேரணையைத் திருத்தவோ கைவிடவோ முடியாது என்று உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துவிட்டார் என்றும் உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகியோர் பிரேரணைகளைத் திருத்துவதற்கு இணங்கினார்கள் என்றும் தெரிகிறது.

இந்தப் பிரேரணைகள் அரசுடன் முரண்பாட்டை உருவாக்கும் என்றும் வடமாகாண சபை இயங்குவதற்கு ஏற்கனவே முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவரும் நிலையில் இத்தகைய கடும்போக்கு மேலும் முரண்பாடுகளை வளர்க்கும் என்றும் தெரிவித்தே உறுப்பினர்களை மென்போக்குடன் நடந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.   அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களின் திருத்தப்பட்ட பிரேரணைகளே இன்று சபையில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை-வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

Posted: 27 Jan 2014 12:45 AM PST

download (2)

download (2)இரண்டு டெஸ்ட், இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சென்றுள்ளது. இலங்கை-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் மிர்புரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பலம் வாய்ந்த இலங்கை அணியில் பேட்டிங்கில் கேப்டன் மேத்யூஸ், மஹேலா ஜெயவர்த்தனே, சங்கக்கரா, பிரசன்ன ஜெயவர்த்தனே, கவ்ஷால் சில்வா, சன்டிமால், பந்து வீச்சில் ஹெராத், எரங்கா, சுரங்கா லக்மல் உள்ளிட்டோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். வங்காளதேச அணியை பொறுத்தவரை கேப்டன் முஷ்பிகிர் ரகிம், ஷகிப் அல்–ஹசன், தமிம் இக்பால், மக்முதுல்லா, மொமினுல் ஹக் போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், டெஸ்டில் அந்த அணி இதுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. இலங்கைக்கு எதிராக டிரா செய்தாலே அவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 14 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் 13–ல் இலங்கை வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறியும் புலம்பெயர் தமிழர்கள் – மஹிந்த ராஜபக்ஷ

Posted: 27 Jan 2014 12:38 AM PST

mahinda-rajapkse1-e1352856364572

mahinda-rajapkse1-e1352856364572புலம்பெயர் தமிழர்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறிவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதனை முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் பாடசாலையொன்றின் நீச்சல் தடாக ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், போலிப் பிரச்சாரங்களை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை கைவிட்டு நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய வகையில் சேiவாயற்றுவதே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எம்மை பற்றி கண்டு கொள்ளாத புலம்பெயர் தமிழர்கள் தற்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை விமர்சனம் செய்த சில வெளிநாட்டுத் தலைவர்களே ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை ஏற்றக் கொண்டுள்ள நிலையில், நாட்டில் பிறந்த சிலர் வென்னெடுக்கப்பட்ட சுதந்திரத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனைத்து இன மற்றும் மத மக்களும் சகவாழ்வுடன் சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறப்படுவதாக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகிற்கு போலிப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சாரங்களுக்காக நேரத்தை செலவிடாது மக்களின் நலனில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கிய தாய்

Posted: 27 Jan 2014 12:31 AM PST

download (1)

download (1)சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே, வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார்.

எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் அப்பெண்ணின் வயிற்றில் பொருத்தப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை கடந்த 2012–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது 9 பெண்களுக்கு இந்த ஆபரேசன் நடந்தப்பட்டது.

அவர்களில் இப்பெண்ணுக்கு மட்டும் கருப்பை சீராக செயல்பட தொடங்கியது. இந்த நிலையில் இப்பெண்ணின் உடலில் உருவான முட்டையை வெளியே எடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்தனர்.

பின்னர் அந்த கரு முட்டையை உடல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட கருப்பையில் பத்திரமாக வைத்தனர். தற்போது அக்கருமுட்டை வளர்ச்சி அடைய தொடங்கி விட்டது.

எனவே, கர்ப்பிணி ஆன அவர் ஒரு குழந்தையை பெற உள்ளார். இதன் மூலம், உலகிலேயே உடல் உறுப்பு மாற்று கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இந்த தகவலை ஆஸ்திரேலியா டாக்டர்கள் தெரிவித்தனர். அனால், அந்த பெண்ணின் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™