மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- லிப்ட் வழக்கு ஒன்றில் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச நஷ்டஈடு தீர்ப்பு
- அசுர வேகத்தில் வந்த கார் மரத்தில் மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி
- வங்கிகளுக்கான கடன் வட்டி உயர்வு
- கற்பழிப்பு குற்றச்சாட்டு: தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீது 5-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்
- தமிழ்நாட்டில் உறுப்பினர்களை அதிகப்படுத்த ஆம்ஆத்மி கட்சி தீவிரம்
- உத்தரப்பிரதேசத்தில் கெஜ்ரிவால் மப்ளர் விற்பனை அமோகம்
- தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடியவர் கைது: காமிரா காட்டி கொடுத்தது
- ஆம்ஆத்மிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு
- ஜெய்ப்பூரில் ரந்தம்போர் வனப்பூங்கா: அதிசய பெண் புலியான "மச்லி" காணவில்லை
- நிதி அமைச்சர் சிதம்பரம் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார்
- பிரபல இந்தி திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாராட்டு விழா: நரேந்திர மோடி கலந்துகொண்டார்
- பூமியின் மிக உயரமான பெண்மணிக்கு மறுவாழ்வு : எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
- ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
- மோடியை கண்டு பயம் இல்லை: காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெறும் - தேர்தல் குறித்து ராகுல்காந்தி பேட்டி
- மதிய உணவுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்: அகிலேஷ் தகவல்
- ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளை: செய்தி சேனலில் திருட்டை ஒத்துக்கொண்ட திருடன்
- அந்தமான் படகு விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது
- காங்கிரசின் மறைமுக பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அருண் ஜெட்லி
- கேரளாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: முதல்வர் உம்மன் சாண்டி தகவல்
| லிப்ட் வழக்கு ஒன்றில் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய உச்சபட்ச நஷ்டஈடு தீர்ப்பு Posted: 27 Jan 2014 11:24 PM PST டெல்லியைச் சேர்ந்த விபின் ஹண்டா (வயது 46) என்பவர் கடந்த 2003-ம் ஆண்டில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவான ராவில் (ஆர்ஏ டபிள்யு) இயக்குனராகப் பணிபுரிந்து வந்தார். டெல்லியின் லோதி சாலையில் உள்ள ரா அலுவலகத்தில் அந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அலுவலகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தவுடன் ஹண்டாவும், மற்ற 12 அதிகாரிகளும் கீழ்த்தளத்திற்கு வருவதற்காக லிப்டில் ஏறியுள்ளனர். ஏழாவது மாடிக்கும் ஆறாவது மாடிக்கும் இடையில் |
| அசுர வேகத்தில் வந்த கார் மரத்தில் மோதி விபத்து: குழந்தை உள்பட 4 பேர் பலி Posted: 27 Jan 2014 11:21 PM PST ஆந்திர மாநிலம், கறீம் நகர் மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்து விட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கறீம் நகர் மாவட்டத்தில் உள்ள மெடிப்பள்ளி கிராமம் அருகே படுவேகமாக வந்த கார், இன்று காலை 7.30 மணியளவில் ஒரு குறுகிய வளைவில் |
| வங்கிகளுக்கான கடன் வட்டி உயர்வு Posted: 27 Jan 2014 11:00 PM PST ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி 7.75 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது |
| கற்பழிப்பு குற்றச்சாட்டு: தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீது 5-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 27 Jan 2014 10:59 PM PST கோவாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது தன்னை கற்பழிக்க முயன்றதாக தெகல்கா ஆசிரியர் தேஜ்பால் மீது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார். அதன்பேரில் கோவா போலீசார், கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, டெல்லி ஐகோர்ட்டில் தருண் தேஜ்பால் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். |
| தமிழ்நாட்டில் உறுப்பினர்களை அதிகப்படுத்த ஆம்ஆத்மி கட்சி தீவிரம் Posted: 27 Jan 2014 10:18 PM PST டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆம்ஆத்மி கட்சிக்கு சமீபத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கியது. ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. |
| உத்தரப்பிரதேசத்தில் கெஜ்ரிவால் மப்ளர் விற்பனை அமோகம் Posted: 27 Jan 2014 10:17 PM PST டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கழுத்தில் 'மப்ளர்', 'ஸ்வெட்டர்' அணிந்து எளிமையாக இருக்கிறார். இதே எளிமையான உடையில் தான் ராம்லீலா மைதானத்தில் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். சட்டசபைக்கும் இதே உடையில் தான் வருகிறார். டெல்லியில் போராட்டம் நடத்திய போது 'மப்ளர்', 'ஸ்வெட்டர்' அணிந்திருந்தார். சமீபத்தில் குடியரசுதின விழாவிலும் இதே உடையில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த உடை டெல்லியில் பேஷனை ஏற்படுத்தியது. எல்லோரும் அவரைப் போல் |
| தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 27 Jan 2014 09:50 PM PST புதுடெல்லியில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி புதிதாக போட்டியிட்டு 28 தொகுதிகளை கைப்பற்றியது. அத்துடன் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி செய்து வருகிறது. வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது குறிப்பிட்ட அளவு பணம் செலவு செய்யலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், |
| திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடியவர் கைது: காமிரா காட்டி கொடுத்தது Posted: 27 Jan 2014 08:51 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் பணம் தினமும் எண்ணப்படும். நேற்று கோவிலில் உள்ள பரக்காமணி மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணியில் சென்ட்ரல் பாங்கி சார்பில் நியமிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் |
| ஆம்ஆத்மிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு Posted: 27 Jan 2014 08:06 PM PST காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் நடைபெற்று வரும் ஆம்ஆத்மி ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் ஆட்சிக்கு |
| ஜெய்ப்பூரில் ரந்தம்போர் வனப்பூங்கா: அதிசய பெண் புலியான "மச்லி" காணவில்லை Posted: 27 Jan 2014 01:44 PM PST ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள ரந்தம்போர் வனப்பூங்காவில் 17 வயதான "மச்லி" என்றழைக்கப்படும் பெண் புலியை கடந்த ஜனவரி 9ந் தேதி முதல் காணவில்லை என அப்பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். அப்புலியை கண்டறிவதற்கான முயற்சியில் ஐந்து ரகசிய கேமராக்கள் |
| நிதி அமைச்சர் சிதம்பரம் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றார் Posted: 27 Jan 2014 12:16 PM PST இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையே இரு நாட்டு வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்க நிதி அமைச்சர் சிதம்பரம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார |
| பிரபல இந்தி திரைப்படப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு பாராட்டு விழா: நரேந்திர மோடி கலந்துகொண்டார் Posted: 27 Jan 2014 11:48 AM PST மும்பையில் பிரபல ஹிந்தி திரைப்படங்களின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். அப்போது விழாவில் பேசிய அவர், இந்தியாவில் மட்டுமே போர் நினைவு சின்னங்கள் |
| பூமியின் மிக உயரமான பெண்மணிக்கு மறுவாழ்வு : எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை Posted: 27 Jan 2014 11:35 AM PST பூமிப்பந்தில் மிக உயரமான பெண்ணான சித்திக்கா பர்வீனுக்கு, மிக உயரமாக இருப்பது மகிழ்ச்சியை அளிக்காமல் துக்கத்தை அளித்திருக்கின்றது. கின்னஸ் சாதனையாளரான அப்பெண் ஆதரிக்க யாரும் இல்லாததால் நோயால் அவதிப்பட்டு வீட்டுற்குள்ளேயே அடைந்து கிடக்க நேரிட்டது. |
| ஓரினச்சேர்க்கை குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை Posted: 27 Jan 2014 11:11 AM PST ஓரினச்சேர்க்கை என்பது நமது பண்பாட்டிற்கு எதிரானது என கூறி கடந்த வருடம் அது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ஏற்கவில்லை. இரு தனி மனிதர்களுக்கு இடையேயான தனிப்பட்ட உறவை தடுக்க கூடாது என |
| Posted: 27 Jan 2014 10:59 AM PST காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகைக்கு விரிவான பேட்டி ஒன்று அளித்துள்ளார். பேட்டியின் விபரம் வருமாறு:– கேள்வி: நீங்கள் அதிகமாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பது இல்லை. அதற்கு என்ன காரணம்? பிரச்சினைகளை சந்திக்க பயப்படுகிறீர்களா |
| மதிய உணவுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்: அகிலேஷ் தகவல் Posted: 27 Jan 2014 09:43 AM PST உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும் போது காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டாலோ பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல் மந்திரி அகிலேஷ் யாதவ் |
| ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளை: செய்தி சேனலில் திருட்டை ஒத்துக்கொண்ட திருடன் Posted: 27 Jan 2014 09:28 AM PST கடந்த சனிக்கிழமையன்று ஐதராபாத்தின் மத்திய பகுதியிலுள்ள பஞ்சகுட்டா பகுதியில் உள்ள டனிஷ்க் நகைகடையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்திருந்தது. அச்சம்பவத்தில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். |
| அந்தமான் படகு விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது Posted: 27 Jan 2014 08:49 AM PST காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் குடியரசு தினத்தையொட்டி அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் அங்கு ஏற்கனவே வந்திருந்த மும்பையை சேர்ந்த உறவினர்களும் ஒன்று சேர்ந்தனர். குடியரசு தினத்தன்று தனியர் படகு ஒன்றில் அவர்கள் 51 பேரும் தீவுகளை சுற்றிப்பார்க்க சென்றனர். |
| காங்கிரசின் மறைமுக பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி அருண் ஜெட்லி Posted: 27 Jan 2014 07:58 AM PST பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத போதும், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை மையமாக வைத்து தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து பா.ஜனதா தலைவர் அருண் ஜெட்லி கூறியதாவது:- |
| கேரளாவில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: முதல்வர் உம்மன் சாண்டி தகவல் Posted: 27 Jan 2014 07:49 AM PST கேரள மாநிலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |