Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அரையிறுதியில் நடால், பெடரர்

Posted: 23 Jan 2014 08:06 AM PST

nadal (1)

nadal_federer_002அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால்(ஸ்பெயின்), 22ம் நிலை வீரர் டிமித்ரோவை(பல்கேரியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 3–6, 7–6, 7–6, 6–2 என்ற செட் கணக்கில் தனக்கு கடும் சவால் அளித்த 22 வயதான டிமித்ரோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

பெடரர் வெற்றி

மற்றொரு காலிஇறுதி ஆட்டத்தில் 6ம் நிலை வீரர் ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து), 4ம் நிலை வீரர் ஆன்டி முர்ரேவை(இங்கிலாந்து) சந்தித்தார்.

18வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறிவைக்கும் பெடரர் 6–3, 6–4, 7–6 (8–6) 6–3 என்ற செட் கணக்கில் முர்ரேவை சாய்த்து 11வது முறையாக அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடிக்கணக்கில் வருமானத்தை குவிக்கும் ஐபிஎல் போட்டிகள்

Posted: 23 Jan 2014 07:54 AM PST

ipl6_001

ipl6_0012013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் மட்டும் பிசிசிஐ-க்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பல்வேறு வகையில் வருமானத்தை குவித்து வருகிறது.

அணி ஒப்பந்தம், டெலிவிசன் விளம்பரம் உள்பட பல வழிகளில் பணத்தை அள்ளுகிறது.

இதேபோல ஐ.பி.எல். போட்டி மூலமும் கனிசமான பணம் குவிகிறது.

2013ம் ஆண்டு நடத்தப்பட்ட 6வது ஐ.பி.எல் போட்டி மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.385.36 கோடி லாபம் கிடைத்துள்ளது.

சென்னையில் நேற்று நடந்த பி.சி.சி.ஐ.யின் நிதிக்கமிட்டி கூட்டத்தின் மூலம் இது தெரியவந்ததாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 210 கோடி கூடுதலாக லாபம் கிடைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு ஓர் எச்சரிக்கை

Posted: 23 Jan 2014 07:45 AM PST

smoking_4

smoking_4கர்ப்பமாக இருக்கும் போது புகைப்பிடித்தால் பிறக்கும் குழந்தையானது அதன் எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டதாக மாற்றமடையும் அபாயம் இருப்பதாக டச்சு நரம்பியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 69 வயது பேராசிரியரான Dick Swaab என்பவர் தான் புதிதாக எழுதியுள்ள புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவரது கூற்று தொடர்பான விவாதங்கள் கடந்த 10 வருடங்களாக இடம்பெற்றுவருகின்ற போதிலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

எனினும் மூளை தொடர்பான வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி புகைப்பழக்கமானது பெண்களிடையே ஓரினச்சேர்க்கை பழக்கத்தை தூண்டுவதாக தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்டெல் அறிமுகம் செய்யும் Education Tablet

Posted: 23 Jan 2014 07:36 AM PST

intel_tablet_002

intel_tablet_002இன்டெல் நிறுவனமானது Education Tablet, classmate PC எனும் இருவகை கணனிச் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

Atom Z2520 processor இனைக் கொண்டுள்ள Education Tablet ஆனது 70 சென்டிமீற்றர்கள் வரையான ஆழத்தினுள் நீர் உட்புக முடியாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் 3G மொடம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது, 10 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் 12 மணித்தியாலங்கள் வரை மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலம் காணப்படுகின்றது.

Classmate PC ஆனது விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், N2806 Celeron processor உடையதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் விண்டோஸ் 7, லினக்ஸ் இயங்குதளங்களைக் கொண்டதும் Celeron N2805 processor இனைக் கொண்டதுமான பதிப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகளுக்கு தடை விதித்த பிரதமர்

Posted: 23 Jan 2014 07:29 AM PST

cameron_kids_002

cameron_kids_002இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கமரூன் தனது குழந்தைகளுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனின் குழந்தைகள் நான்சி, எல்வென் மற்றும் புளோரன்ஸ்.

இவர்களுக்கு கமரூன் பல்வேறு தடைகளை விதித்துள்ளார், முக்கியமாக காலை வேளையில் தொலைக்காட்சி மற்றும் வார விடுமுறை நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்ககூடாது என கூறியுள்ளார்.

எப்போதும் டிஸ்னி சேனலை விரும்பி பார்க்கும் குழந்தைகள் தற்போது, இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டுகளிக்கின்றனர்.

கமரூனின் மகள் நான்சி படம் வரைவதில் ஆர்வம் உள்ளவராகவும், மகன் எல்வென் கால்பந்து மற்றும் ரக்பி ஆகிய விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறியுள்ளனர்.

இந்த தடை அவர்களை வேறு ரசனைகள் கொண்டவர்களாக மாற்றியுள்ளது என்று கமரூன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இது வெறும் விளம்பரம் அல்ல பெற்றோர்களுக்கான பாடம்…..

Posted: 23 Jan 2014 07:18 AM PST

child_school_001.w245

child_school_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களை நடுநடுங்க வைக்கும் மனிதரின் துணிவு…..

Posted: 23 Jan 2014 07:12 AM PST

bear_mouth_001.w245

bear_mouth_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுவனின் தலை மீது ஏறிய கார்….. பின்பு நடந்த அதிர்ச்சியை நீங்களே பாருங்க…..

Posted: 23 Jan 2014 07:08 AM PST

child_accident_001.w245

child_accident_001.w2455 சிறுவன் ஒருவன் தனது பாட்டியுடன் நடந்து வந்துகொண்டிருக்க வேளையில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த காரினால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவமே இதுவாகும். கார் தனது தலையின் மேல் ஏறியும் சிறுவன் நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்டு எழுந்துள்ளது காண்பவர்களை புல்லரிக்க வைத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி முனையில் பெண்ணிடம் அரங்கேறும் கொள்ளை……

Posted: 23 Jan 2014 07:04 AM PST

knife_girl_atm_001.w245

knife_girl_atm_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

சும்மா சொல்லக்கூடாது எம்புட்டு அழகா மீன் பிடிக்கிறாங்க?…

Posted: 23 Jan 2014 06:59 AM PST

fish_catch_001.w245 (1)

fish_catch_001.w245 (1)

This posting includes an audio/video/photo media file: Download Now

மிஸ் பண்ணவே மாட்டீங்க இந்த கண்கொள்ளாக் காட்சியை…..

Posted: 23 Jan 2014 06:55 AM PST

cat_feeding_001.w245

cat_feeding_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரமா? வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர் -கழுகுக்கண்-

Posted: 23 Jan 2014 06:43 AM PST

முள்ளியவளை கிழக்கு, முள்ளியவளை மேற்கு பகுதிகளில் இறுதி யுத்தத்துக்குப்பின்னர் 550 க்கும் அதிகமான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன. இந்தக்குடும்பங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கென்று யுத்தத்துக்கு முன்னர் அங்கு கட்டப்பட்டிருந்த நான்கு பொதுக்கிணறுகளின் நீரும் தற்போது பளுப்பு மற்றும் மஞ்சள் நிறமாகியுள்ளன. மாற்று வழியின்றி குடிநீரைப்பெறுவதற்காக மக்கள் தத்தம் வீட்டு வளவுகளிலும், பொது இடங்களிலும் ஆங்காங்கே புதிது புதிதாக தோண்டும் (அகழும்) கிணறுகளிலும் பளுப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான நீரே ஊற்றெடுக்கின்றது. (பொதுவில் நிறம், மணம், சுவை அற்றது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

லலித் வீரதுங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்

Posted: 23 Jan 2014 06:30 AM PST

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் அமெரிக்கத் தலைவர்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத் தரப்பினருக்கும், செனட் சபை உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய […]

ஜெனீவா மனித உரிமை; கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார்

Posted: 23 Jan 2014 06:23 AM PST

ஜெனீவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடருக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடுவார் என குளோபல்தமிழ்ச்செய்திகளின் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுடன் தொலைபேசியில் சந்திப்பு தொடர்பாக உரையாடியதாக அரசாங்க தகவல்கள் கூறின. இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் மாத்திரமே தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என அரசாங்கம் கூறிய நிலையில் தற்போது ஜெனீவா மாநாட்டை முன்னிட்டு சந்திப்பதற்கான எற்பாடுகள் இடம்பெறுகின்றமை […]

அமெரிக்கா தூதுவருடன் சரத் பொன்சேகா இரகசிய சந்திப்பு

Posted: 23 Jan 2014 06:18 AM PST

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையில் இரகசியமான சந்திபொன்று நடைபெற்றுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தூதுவர் மைக்கேல் ஜே. சிசன் உடனான இந்த சந்திப்பு கொழும்பில் இரகசியமான இடம் ஒன்றில் மூடப்பட்ட அறையில் இடம்பெற்றதாக தெரியவருகிறது. இந்த இரகசிய சந்திப்பில் ஜெனிவா விடயங்கள் பற்றியே பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு […]

சில குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள பெற்றுவிட்டோம்: கோட்டாபய

Posted: 23 Jan 2014 06:09 AM PST

'தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த கால கட்டத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பேச்சுவார்த்தையினூடாக மீள பெறப்பட்டுவிட்டன' என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 'நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு முனைந்தால் அது தாய் நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமாகும்' என்றும் அவர் தெரிவித்தார். […]

நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்தலில் படப்பிடிப்புகள் ரத்து!- நாமல் ராஜபக்ச

Posted: 23 Jan 2014 06:05 AM PST

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இலங்கையில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெருமளவில் வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள நடிகர், நடிகைகள் தேர்தலில் போட்டியிட முண்டியடித்து வருகின்றனர். இதனால் சகல படப்பிடிப்புகளுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நடிகர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். வேட்புமனு சபைக்கு வந்து வரிசையில் நின்று வேட்புமனுக்களை கோரி […]

தொடர்ச்சியாக டிவி பார்த்து கின்னஸ் சாதனை

Posted: 23 Jan 2014 05:53 AM PST

அமெரிக்காவில் தொடர்சியாக தொலைக்காடசி பார்த்து கின்னஸ் சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியானது நேரடி தொலைக்காட்சிகளாகாவும் ஒளிபரப்பப்பட்டது. கின்னஸ் விதி முறைகளின் படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் பாத்ரூம் செல்வதற்காக அந்த நேரத்தை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இயேசு கிறிஸ்துவின் கை விரலை சேதப்படுத்திய மின்னல்

Posted: 23 Jan 2014 05:49 AM PST

பிரேசிலில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலையின் வலது கை விரல் மின்னல் தாக்கியதால் சேதமடைந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள கோர்கொவடோ மலை உச்சியில் 2000க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் மீட்பர் கிறிஸ்துவின் சிலை உள்ளது. இச்சிலை உலகிலேயே 4வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 மீற்றர்(31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து 39.6 மீற்றர் உயரமும், 30 மீற்றர் அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இந்நிலையில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபாச டாட்டூகளுக்கு தடை விதித்த ஜேர்மனி

Posted: 23 Jan 2014 05:39 AM PST

german_army_002

german_army_002ஜேர்மன் இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் ஆபாச டாட்டூ மற்றும் நீண்ட தாடி வைக்க கூடாது என்பது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பிரதிநிதிகளான ஜேர்மன் ராணுவ வீரர்கள் கடைப்பிடிப்பதற்கென சில விதிகளை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், பெண்ணின் நிர்வாண டாட்டூகளோ, அரசியலை தவறாக சுட்டிக்காட்டும் வகையில் பாரபட்சமான டாட்டூகளையோ உடலின் கழுத்து, கை மற்றும் முகம் போன்ற இடங்களில் பச்சைக்குத்தி கொள்ள கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காது மற்றும் வாய் பகுதிகளில் துளையிட்டு கடுக்கண் அணிதல், நகம் வளர்த்தல் மற்றும் நகையணிதல் போன்ற அனைத்து செயலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிபந்தனைகளுக்கு இராணுவ வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™