மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
- வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. புதிய கட்சி தொடங்கினார்
- உத்தரபிரதேசத்தில் 49 இடங்களில் வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. முன்னிலை
- டெல்லி தலைமை போலீஸ் அதிகாரி நியமனம்: கெஜ்ரிவால் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது
- தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம்: கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு
- ஆம்ஆத்மி மந்திரி பதவி விலக கோரி டெல்லியில் 14 இடங்களில் பாரதீய ஜனதா போராட்டம்
- முதல் மனைவி மர்ம சாவு: சோலார் வழக்கில் கைதான பிஜு ராதாகிருஷ்ணன் குற்றவாளி - கேரள கோர்ட்டு தீர்ப்பு
- கொல்கத்தா: முப்பது வருடங்களுக்கு முன்னால் வீட்டை விட்டு சென்ற பெண் லட்சாதிபதியாகத் திரும்பிவந்த சம்பவம்
- ஓடும் ரெயிலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகாரிக்கு நிரந்தர படுக்கை வசதி
- நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கை இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த அமெரிக்கா விருப்பம்
- இந்தியா–பிரான்சு கூட்டு முயற்சியில் தயாராகும் காலநிலை மாற்றத்தை கண்டறிய உதவும் செயற்கைகோள்
- ரூ.60 ஆயிரம் கோடி செலவில் மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில்
- மேற்குவங்கத்தில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட அதிநவீன சொகுசு கார் பறிமுதல்
- தேர்தலுக்கு பின் எம்.பி.க்கள் தேர்வு செய்தால் பிரதமர் பதவி ஏற்பது குறித்து பரிசீலிப்பேன்: ராகுல் காந்தி
- காங்கிரசின் ரத்தம் உறிஞ்சும் கொள்கைகள் மக்களை வெகுவாக பாதிக்கிறது: வெங்கையா நாயுடு
- சட்ட மந்திரி சோம்நாத் பார்தி ராஜினாமா செய்யமாட்டார்: ஆம் ஆத்மி கட்சி
- 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பசுமை இந்தியா திட்டம்: மத்திய அரசு வரும் வாரத்தில் ஒப்புதல்
- அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000: நிதி அமைச்சகம் ஒப்புதல்
- கேரள தனியார் பேருந்துகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு
- கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்கட்சித் தலைவரானார்
| குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Posted: 23 Jan 2014 11:14 PM PST குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். பிறகு ராஜபாதையில் நடக்கும் கண்கவர் அணிவகுப்பை பார்வையிடுவார். குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது டெல்லியில் நாசவேலையில் ஈடுபட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி |
| வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. புதிய கட்சி தொடங்கினார் Posted: 23 Jan 2014 11:12 PM PST கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பியாக இருந்து ஓய்வு பெற்றவர் சங்கர் பிதாரி. இவர் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப் படையின் தலைவராக பதவி வகித்தவர். பின்னர் பெங்களூர் போலீஸ் கமிஷனராகவும், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாகவும் பதவி உயர்வு பெற்றார். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் சங்கர் பிதாரி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது. இதனால் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு |
| உத்தரபிரதேசத்தில் 49 இடங்களில் வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. முன்னிலை Posted: 23 Jan 2014 10:57 PM PST பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள், விலைவாசி உயர்வு மற்றும் திறமையற்ற நிர்வாகம் காரணமாக மத்திய அரசு மீது நாடெங்கும் மக்களுக்கு அதிருப்தி |
| டெல்லி தலைமை போலீஸ் அதிகாரி நியமனம்: கெஜ்ரிவால் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது Posted: 23 Jan 2014 10:01 PM PST டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அதிகரித்தப்படி உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகள் என்று கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருவது காங்கிரசாரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநிலத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவு தலைவராக |
| தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம்: கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு Posted: 23 Jan 2014 09:52 PM PST டெல்லி மாநில முதல்– மந்திரி கெஜ்ரிவால், தங்கள் அரசுக்கு போலீசாரை கட்டுப்படுத்தும் அதிகாரம் வேண்டும் என்று வற்புறுத்தி சமீபத்தில் போராட்டம் நடத்தினார். டெல்லி ரெயில் பவன் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தின் போது, போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் போலீசார் காயம் அடைந்தனர். |
| ஆம்ஆத்மி மந்திரி பதவி விலக கோரி டெல்லியில் 14 இடங்களில் பாரதீய ஜனதா போராட்டம் Posted: 23 Jan 2014 09:35 PM PST டெல்லியில் போதை மருந்து கடத்தல், விபசார கும்பலை ஒழிக்க சட்ட மந்திரி சோம்நாத் திடீர் சோதனை நடத்தினார். அப்போது உகாண்டா நாட்டு பெண்ணிடம் அவர் அத்து மீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் |
| முதல் மனைவி மர்ம சாவு: சோலார் வழக்கில் கைதான பிஜு ராதாகிருஷ்ணன் குற்றவாளி - கேரள கோர்ட்டு தீர்ப்பு Posted: 23 Jan 2014 09:28 PM PST கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவரது 2–வது மனைவி சரிதா நாயர் மற்றும் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் |
| Posted: 23 Jan 2014 07:35 PM PST கொல்கத்தாவைச் சேர்ந்த மார்வாரி இனப் பெண்ணான சண்டா சாவேரி புவல்காவின் 17 ஆவது வயதில் அவளுடைய பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். படித்து, சுயமாகத் தொழில் செய்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த சண்டாவிற்கு இந்த ஏற்பாடு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால் தனக்கு உதவுவதாகக் கூறிய அமெரிக்கத் தம்பதியர் ஒருவருடன் அவர் தனது வீட்டைவிட்டு கிளம்பி அமெரிக்கா சென்றுவிட்டார். இது நடந்தது 1984 ஆம் ஆண்டு ஆகும். முப்பது வருடங்களுக்கு முன்னால் |
| ஓடும் ரெயிலில் குற்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பு அதிகாரிக்கு நிரந்தர படுக்கை வசதி Posted: 23 Jan 2014 03:25 PM PST ஓடும் ரெயில்களில் பலவித குற்ற சம்பவங்களும், நக்சல்கள் தாக்குதல் போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் நக்சல் பகுதி காட்டு வழியாக செல்லும் ரெயில்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்கள் |
| நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கை இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த அமெரிக்கா விருப்பம் Posted: 23 Jan 2014 02:26 PM PST நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு குறித்து இந்திய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தி நடிகை ஜியாகான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், ஜியாகானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது நண்பரும், பிரபல இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகனான சூரஜ் பஞ்சோலியை கைது செய் |
| இந்தியா–பிரான்சு கூட்டு முயற்சியில் தயாராகும் காலநிலை மாற்றத்தை கண்டறிய உதவும் செயற்கைகோள் Posted: 23 Jan 2014 02:05 PM PST இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணனை, இந்தியாவுக்கான பிரான்சு நாட்டு தூதர் பிரான்கோயிஸ் ரிச்சிர், தூதரக விண்வெளி பிரிவு ஆலோசகர் மேத்யூ ஜே.வெயிஸ் ஆகியோர் பெங்களூரில் நேற்று சந்தித்து பேசினார்கள். |
| ரூ.60 ஆயிரம் கோடி செலவில் மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் Posted: 23 Jan 2014 01:32 PM PST நாட்டின் நிதிநகரமான மும்பையில் பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. பொதுத்துறை சேவைகளான ரெயில், பஸ் சேவைகளை தினமும் |
| மேற்குவங்கத்தில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்ட அதிநவீன சொகுசு கார் பறிமுதல் Posted: 23 Jan 2014 01:26 PM PST குடியரசு தினம் முன்னிட்டு நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மேற்குவங்க துர்க்காபூர் அருகே பர்துவான் மாவட்ட என்.எச். 2 தேசிய நெடுஞ்சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பன்முக வசதி கொண்ட அதி நவீன காரை போலீசார் கவனித்தனர். உடனே அங்கு சென்று பார்த்தபோது அந்த வாகனத்தில் யாரும் இல்லை. சத்தீஸ்கர் மாநில பதிவு எண்ணுடன் நின்ற அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். |
| Posted: 23 Jan 2014 12:14 PM PST பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில வாரங்களில் வெளியாக உள்ளது. இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி |
| காங்கிரசின் ரத்தம் உறிஞ்சும் கொள்கைகள் மக்களை வெகுவாக பாதிக்கிறது: வெங்கையா நாயுடு Posted: 23 Jan 2014 11:51 AM PST வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிதிமந்திரி ப. சிதம்பரம், பா.ஜனதாவின் பொருளாதாரக்கோடு இரத்தக்கறை படிந்தது என்று கூறினார். இதற்கு பதிலளித்து ஐதராபாத்தில் பேசிய பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:- |
| சட்ட மந்திரி சோம்நாத் பார்தி ராஜினாமா செய்யமாட்டார்: ஆம் ஆத்மி கட்சி Posted: 23 Jan 2014 10:20 AM PST டெல்லி சட்டமந்திரி சோம்நாத் பார்தியின் தொகுதியில், உகண்டா நாட்டு பெண்கள் 7 பேர் பாலியல் தொழில் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மந்திரி சோம்நாத் பார்தி கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் அப்பகுதி மக்களுடன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார். |
| 13,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பசுமை இந்தியா திட்டம்: மத்திய அரசு வரும் வாரத்தில் ஒப்புதல் Posted: 23 Jan 2014 08:40 AM PST நாடு முழுவதும் பசுமைக் காடுகளை உருவாக்கி கரியமில வாயு அதிகரிக்கத் தொடங்கியுள்ள சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பசுமை இந்தியா திட்டம் இன்னும் இறுதி வடிவம் பெறாமல் இருக்கின்றது. ஆனால் அதற்குள் மத்திய அரசு பல பசுமைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தின் இறுதி வடிவமும், நிதி பெற சாத்தியமான |
| அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000: நிதி அமைச்சகம் ஒப்புதல் Posted: 23 Jan 2014 07:31 AM PST அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தற்போது 5 இலட்சம் விதவை பெண்கள் மாதம் |
| கேரள தனியார் பேருந்துகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு Posted: 23 Jan 2014 07:15 AM PST மத்திய அரசு கடந்த சில மாதங்களாக டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு மாநில அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தவேண்டும் என கடந்த சில நாட்களாக குரல் |
| கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்கட்சித் தலைவரானார் Posted: 23 Jan 2014 06:10 AM PST கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பா கடந்த மாதம் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவரது கர்நாடக ஜனதா கட்சி, பா.ஜனதா கட்சியுடன் இணைந்துள்ளதாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் ககோடு திம்மம்பாவுக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தார். அதனை ஏற்கொண்ட சபாநாயகர், பா.ஜனதாவின் முன்னாள் முதல் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கர்நாடகாவின் முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா மீது கடந்த 2012-ம் ஆண்டு சுரங்க ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பதவி விலகிய அவர் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார். பிறகு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |