Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அவுஸ்திரேலியாவில் சச்சின் அதிரடி மழை பொழிவாரா?

Posted: 15 Jan 2014 11:01 PM PST

sachin_002

sachin_002அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டுவென்டி- 20 தொடரில் சச்சின் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர், மகத்தான சாதனையுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் திகதியுடன் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டுவென்டி- 20 தொடரில் பங்கேற்பதற்காக சிட்னி தண்டர்ஸ் அணி சச்சினை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு தொடர்களில் பங்கேற்ற 15 போட்டிகளில், இரண்டில் மட்டுமே சிட்னி தண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது, ஒருமுறை கூட முதல் சுற்றை தாண்டவில்லை.

இதனால் நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில், சச்சினை நான்கு வாரங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் செய்து தருமாறு மாநில அரசை அணுகியுள்ளனர், ஆனால் இதை சச்சின் ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது குறித்து தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை.

இந்த அணியில் அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இலங்கையின் தில்ஷன், மைக்கேல் ஹசி மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி: தொடரை வென்றது நியூசிலாந்து

Posted: 15 Jan 2014 10:59 PM PST

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி 20-இருபது கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி இருபது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக ராம்டின் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களும், பிளட்சர் 40 ஓட்டடங்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மிலின் 2 விக்கெட்டும், மெக்லகன், நாதன் மெக்கல்லம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

Xperia Z1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பாக பயனர்கள் முறைப்பாடு

Posted: 15 Jan 2014 10:56 PM PST

xperia_z1_001

xperia_z1_001Samsung மற்றும் LG நிறுவனங்கள் தமது வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய முன்னரே சோனி நிறுவனம் தனது Xperia Z1 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இக்கைப்பேசியின் வெளிப்பகுதி உலோகக் கலப்பினைக் கொண்டுள்ள போதிலும் அவை வளைவதாக சில பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் Xperia Z1 ஆனது வளையும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப்பிரச்சினைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விரைவில் அறிமுகமாகின்றது Facebook Paper

Posted: 15 Jan 2014 10:53 PM PST

mark_zuckerberg_001

mark_zuckerberg_001பல்வேறு வசதிகளை வழங்கி பில்லியன் கணக்கான பயனர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது விரைவில் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது ஒவ்வொரு பயனர்களும் உலகளாவிய செய்திகளை மொபைல் சாதனங்களினூடாக அறிந்துகொள்ளக்கூடியவாறு Facebook Paper எனும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த வசதியானது ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என பேஸப்புக் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சி.விக்கு புதிய அலுவலகம்; ஆளுநர் பங்கேற்கவில்லை

Posted: 15 Jan 2014 10:46 PM PST

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியிலுள்ள உள்ளூராட்சி அமைச்சின் புதிய அலுவலகம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்ட நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் தனது பணிகளை ஆரம்பித்தார். தற்போது வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடன் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றன. இதில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க பிரேஸில் இணக்கம்

Posted: 15 Jan 2014 10:43 PM PST

 இலங்கைக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்க பிரேஸில் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும், பிரேஸில் பாதுகாப்பு அமைச்சர் செல்சோ அமோரினுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பிரேஸிலுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை தலைநகர் பிரேஸிலியாவில் சந்தித்துள்ளார்.இராணுவப் பயிற்சி அளிப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சுவீடனில் ரயில் விபத்து: 48 மான்கள் பலி

Posted: 15 Jan 2014 10:39 PM PST

சுவீடனின் வடக்குப் பகுதியில் உள்ள லபோனியா பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோருக்கு கலைமான்களே வாழ்வாதாரமாக இருந்து வருகின்றன. குளிர்காலங்களில் இவை உணவு தேடி ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்லும்போது அங்கு செல்லும் ரெயில் போக்குவரத்துகளில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைப்பது வழக்கமாகும். ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று கைதூம் கிராமத்தின் அருகே 48 கலைமான்கள் பனி மூடிய தண்டவாளப் பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்துகொண்டிருந்த ரெயிலின் ஓசை கேட்டதும் திடுக்கிட்ட அந்த மான்கள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரித்தானிய காதல் ஜோடியை பதம் பார்த்த யானை

Posted: 15 Jan 2014 10:36 PM PST

elephant_attack_001

elephant_attack_001பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியையான 30 வயது சாரா ப்ரூக்சுக்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஜான்ஸ் டி கிளார்க்குடன் திருமணம் நிச்சயமானது. திருமணம் நிச்சயமானவுடன் தனது வருங்கால கணவருடன் தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய விளையாட்டு பூங்காவை காரில் சுற்றிப்பார்த்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலினால் அவர்கள் காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய அப்பூங்காவின் பொது மேலாளர் வில்லியம் மபாசா தகவல் தருகையில், ஆண் யானையான அதற்கு மதம் பிடித்தவுடன் அதன் சுய பலத்தை போல் 60 மடங்கு அசுர பலம் ஏற்பட்டதால் சாராவின் காரை அடித்து துவம்சம் செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த சாராவிற்கு பொம்பேலாவிலுள்ள மெடி-கிளினிக் மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன் பின் அவர் வீட்டிற்கு திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது காயங்கள் ஆற இன்னும் 3 வார காலம் ஆகுமென்றும், அதுவரை இருவரும் அந்நாட்டிலேயே தங்க நேரிட்டுள்ளது என்றும் தெரிகிறது. சாராவை தாக்கிய யானை ஏற்கனவே பலமுறை மதம் பிடித்ததால், பல காளைகளை அடித்து கொன்றுள்ளதாகவும், இந்த சம்பவத்திற்கு பின் அது கொன்றழிக்கப்பட்டு விட்டதாகவும் மபாசா தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரகசியமாக மூன்று ராக்கெட்டுகளை ஏவிய நாசா

Posted: 15 Jan 2014 10:34 PM PST

nasa_001

nasa_001அமெரிக்க இராணுவத்தின் ரகசிய பயணங்களை உள்ளடக்கிய மூன்று ராக்கெட்டுகளை நாசா இன்று விண்ணில் ஏவியது.

டெர்ரியர்-ஆனியன் என்ற இந்த ராக்கெட்டுகளை 20 விநாடி வித்தியாசத்தில், அதிகாலை 4.09 மணிக்கு தொடர்ச்சியாக விண்ணில் செலுத்தி நாசா சாதனை படைத்துள்ளது.

நாசா அதிகாரிகளிடம் ராக்கெட் எப்போது ஏவப்பட்டது என்ற தகவலை வெளியிட வேண்டாம் என அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

இரு அடுக்கு சுழற்சி கொண்ட இந்த ராக்கெட்டுகள் 1315 கிலோ எடை கொண்டதாகவும், 91 கிலோ எடையுள்ள பொருளை 200 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும், 363 கிலோ எடையுள்ள வெடிபொருளை 80 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை: தாய்லாந்து பிரதமர்

Posted: 15 Jan 2014 10:32 PM PST

images

imagesபிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என தாய்லாந்து பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தாய்லாந்தில் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த வார ஆரம்பத்தில் தாய்லாந்து தலைநகரை முற்றுக்கையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், தாம் பதவி விலகப் போவதில்லை என ஷினவத்ரா தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் இரண்டாம் திகதி தேர்தல் நடைபெறுவதில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோத்தாவின் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Posted: 15 Jan 2014 10:28 PM PST

போர்க்குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா திரட்டிய சாட்சியங்களைத் தம்முடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் திரட்டிய தகவல்களை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஏ ஸ்பவன் தெரிவித்துள்ளார். "நாடு முழுவதிலும் உள்ள பலதரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்டளவில் […]

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்

Posted: 15 Jan 2014 10:25 PM PST

Welikada_Prison.jpg-3

Welikada_Prison.jpg-3வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெண் சிறைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி அடிக்கடி சோதனையிடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைதிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இவ்வாறு கடுமையாக சோதனை இடுவதன் மூலம் கைதிகளின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண் கைதிகள் மட்டுமன்றி சிறுவர் சிறுமியரும் இவ்வாறு நிர்வாணமாக்கி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சந்தேகம் ஏற்பட்டால் வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி சோதனையிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

வெளியே அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கைதிகளை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லப்படும் போது இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கத்திற்கு தேவையான வகையில் ஊடகங்கள் இயங்குகின்றன

Posted: 15 Jan 2014 10:22 PM PST

அரசாங்கத்திற்கு தேவ்வாயன வகையில் ஊடகங்கள் இயங்கி வருவதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்திரனாலும் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. எனினும்இ ஜே.வி.பி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் பொருட்களின் விலைகளை குறைக்க முடியும். இந்த நாட்டின் அனைத்து ஊடகங்களும் அரசாங்கத்திற்கு தேவையான வகையில் செயற்படுகின்றன. அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் அரசாங்கம் ஏதாவது ஒரு வகையில் தொடர்புகளைப் பேணி வருகின்றது.இதனால் சரியான தகவல்களை மக்களினால் அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் முடக்கப்பட்டுள்ளது. […]

நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது: அனந்தி

Posted: 15 Jan 2014 10:19 PM PST

Ananthi_Sasitharan_addresses_media_after_130658234_thumbnail

Ananthi_Sasitharan_addresses_media_after_130658234_thumbnailநான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சிங்களவர்களுக்கும் எனக்கும் இடையில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. மக்களின் பிரதிநியான நான் முதலமைச்சரின் அனுமதியுடனேயே வெளிநாட்டு பிரதிநிகளை சந்திக்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

காணாமல் போனவர்களின் தகவல்களை திரட்டி வழங்கியுள்ளேன்.இதற்காக எனக்கு புனர்வாழ்வளித்தால் அது விந்தையானதாகவே இருக்கும் என்றார்.

அனந்தி சசிதரனை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது குறித்து பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர் பரப்புரை செய்து வருவதாகவும், அதனைத் தடுப்பதற்காகவே அவருக்கு புனர்வாழ்வு அளிப்பது குறித்து ஆராயப்படுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது,

'2009 மே மாதம் போரின் முடிவில் கைது செய்யப்படாதவர்கள் அல்லது சரணடையாதவர்கள் இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு திட்டத்தை தவறவிட்டுள்ளனர்.

புனர்வாழ்வுத் திட்டத்தில் இருந்து தப்பியவர்களில் அனந்தியும் அடங்குகிறார். அவரை புனர்வாழ்வுக்கு அனுப்புவது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும்.

ஒருவேளை அனந்தி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்திருக்கமாட்டார்.

அனந்தியை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைப்பதால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அனைத்துலக சமூகத்திடம் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தும் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆனால், அனந்தியை புனர்வாழ்வுக்கு உட்படுத்தாவிட்டால், போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை சீரழிக்கும் அவரது நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் உறுப்பினராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட அனந்தி சசிதரன், விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளரான எழிலனின் மனைவியாவார்.

இவர், வடக்கு மாகாணசபை உறுப்பினராப் பதவியேற்ற பின்னர், கனடா, அமெரிக்கா, ஜேர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அண்மையில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு தூதுவர் ஸ்டீபன் ராப், அனந்தி சசிதரனை சந்தித்து காணாமற்போனவர்களின் நிலை மற்றும் இறுதிப்போர் குறித்த விபரங்களை கேட்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் நாடு திரும்ப முறைப்பாடு!

Posted: 15 Jan 2014 02:17 AM PST

download (1) (1)

download (1) (1)மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரந்தெனிய கூறுகின்றார். மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடு திரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது. இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறுகின்றார். கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். இது தொடர்பில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தெளிவூட்டப்பட்ட போதிலும் அங்கு சென்ற பின்னர் சிலர் மீண்டும் நாட்டிற்கு வர முயற்சிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

த. தே. கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சி – சீ.வி.கே.சிவஞானம்

Posted: 15 Jan 2014 02:12 AM PST

kanthaiya-sivagnanam1

kanthaiya-sivagnanam1வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர். அவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சதி திட்டங்கள் உருவாக்கப்படுவதாக வெளியாகும் விசமத்தனமான கட்டுரைகளை த. தே. கூட்டமைப்பிற்குள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சியாகவே நாம் பார்க்கிறோம் என பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு எதிராக விரல் நீட்டுவதற்கே எவரும் துணியாத நிலையில், அவருக்கு எதிராக சதி திட்டம் உருவாக்கப்படுவதாக கூறுவது மிக அதிர்ச்சியளிக்கின்றது. ஆனால் இவ்வாறான விசமத்தனமான கட்டுரைகள் தொடர்பாக நாம் மிகதெளிவாக இருக்கிறோம் என மாகாணசபை பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை உறுப்பினர்களால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சதி திட்டம் உருவாக்கப்படுவதாகவும், இதன் மூலம் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை முதலமைச்சராக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடாகம் ஒன்றில் செய்தி வெளியான கட்டுரை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், கனடா நாட்டிலிருந்து இயக்கப்படும் ஆங்கில ஊடகமொன்றில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்கள் சதி திட்டம் ஒன்றை உருவாக்குவதாகவும், அதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் மூன்று உடந்தையாக இருப்பதாகவும், மேற்படி சதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் என்னை முதலமைச்சராக்குவதாகவும் மிக கற்பனையாக கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருக்கின்றது. இந்தக் கட்டுரை தொடர்பாக நான் அந்த ஆங்கில ஊடகத்திற்கு உடனடியாகவே எழுத்து மூலமாக என் மறுப்பினை தெரிவித்திருக்கின்றேன். அந்த மறுப்பில் நான் குறிப்பிடுகையில், முதலமைச்சரை கடந்த 30வருடங்களாக நான் அறிந்திருக்கிறேன். அவருக்கு எதிராக சதி திட்டம் உருவாக்குவதாக கூறுவது மித்தவறானது. நாங்கள் எங்கள் முதலமைச்சருடன் சமகாலத்திலும், எதிர்காலத்திலும் இணைந்தே இருப்போம். மேலும் குறித்த கட்டுரையில் என் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளமை, எனக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றது. முதலமைச்சர் தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதுடன், அவரை எங்கள் ஒளிக்கீற்றாகவே நான் பார்க்கிறேன். அவருக்கு எதிராக விரலை நீட்டுவதற்கே எவரும் துணிய மாட்டார்கள் என நான் திடமாக நம்புகிறேன். எனவே இந்த தெளிவுபடுத்தலை, தங்கள் ஊடகத்தில் உடனடியாக பிரசுரிப்பதுடன், பதிவு செய்யவும் நான் விரும்புகிறேன் என என்னுடைய மறுப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதேபோன்று மேற்படி கட்டுரையின் மொழி பெயர்ப்பினை தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சில ஊடகங்களும் பிரசுரித்திருப்பதாக நான் அறிகிறேன். அவர்களுக்கும் என்னுடைய மறுப்பு பொருத்தமாக அமையும் என நான் நம்புகிறேன். மேலும் இவ்வாறான கட்டுரைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ளும், அதன் மாகாண அரசாங்கத்திற்குள்ளும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சியாகவே நான் பார்க்கிறேன் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

Xperia Z1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பாக பயனர்கள் முறைப்பாடு

Posted: 15 Jan 2014 02:08 AM PST

xperia_z1_001

xperia_z1_001Samsung மற்றும் LG நிறுவனங்கள் தமது வளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய முன்னரே சோனி நிறுவனம் தனது Xperia Z1 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இந்நிலையில் இக்கைப்பேசியின் வெளிப்பகுதி உலோகக் கலப்பினைக் கொண்டுள்ள போதிலும் அவை வளைவதாக சில பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் Xperia Z1 ஆனது வளையும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இப்பிரச்சினைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

விரைவில் அறிமுகமாகின்றது Facebook Paper

Posted: 15 Jan 2014 02:07 AM PST

facebook_like_button_paper_craft

facebook_like_button_paper_craftபல்வேறு வசதிகளை வழங்கி பில்லியன் கணக்கான பயனர்களை தன்பக்கம் ஈர்த்துள்ள பேஸ்புக் சமூக வலைத்தளமானது விரைவில் மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்கின்றது.

அதாவது ஒவ்வொரு பயனர்களும் உலகளாவிய செய்திகளை மொபைல் சாதனங்களினூடாக அறிந்துகொள்ளக்கூடியவாறு Facebook Paper எனும் வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த வசதியானது ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என பேஸப்புக் வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வளை மேற்பரப்பினைக் கொண்ட புதிய டேப்லட் அறிமுகம்

Posted: 15 Jan 2014 02:04 AM PST

samsung_galaxy_tab_001

samsung_galaxy_tab_001டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல புரட்சிகளை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது வளை மேற்பரப்பினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி 8.4 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Snapdragon 800 and Exynos 5 Octa Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 16 அல்லது 32GB கொள்ளளவினை கொண்டதாக காணப்படுகின்றது.

இவற்றுடன் Android 4.4 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் இதன் பெறுமதியானது 1000 டொலர்கள் வரை இருக்கலாம் என கொரிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கம்பியில்லா முறையில் மின் இணைப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted: 15 Jan 2014 02:01 AM PST

wireless_connectivity_001

wireless_connectivity_001கம்பியில்லா முறையில் மின் சாதனங்களுக்கு மின் இணைப்பைப் பெறும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செல்போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை வயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மின் னணு மற்றும் கணினி பொறியியல் துறை உதவி பேராசிரியர் யாரோஸ்லாவ் உர்ஸுமோவ் கூறுகையில்,

"மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் கம்பி இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும்.

செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங் களுக்கும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™