மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இம்பாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் குண்டு வீச்சு
- செயற்குழு நாளை கூடுகிறது: வாக்காளர்களை கவர பா.ஜனதா புதிய வியூகம்
- டெல்லியில் டென்மார்க் பெண்ணை கற்பழித்த 2 பேர் கைது: 4 பேர் தலைமறைவு
- பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை நீக்க முடிவு: நிதிஷ்குமார் நடவடிக்கை
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை இன்று தொடங்குகிறது
- பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்: பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
- கர்நாடகத்தில் சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் இல்லை: சித்தராமையா
- அமெரிக்க தூதர்களின் துணைவியர்களை இந்திய அரசு கண்காணிக்க ஆரம்பித்துள்ளது
- காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து உதவியை இந்திரா நாடினாரா?: புதிய சர்ச்சை
- இந்திய ராணுவத்தின் 66வது ஆண்டு விழா: மறைந்த வீர நெஞ்சங்களுக்கு மரியாதை
- ஆம் ஆத்மி கட்சி மீது சல்மான் குர்ஷித் கடும் தாக்கு: அராஜகவாதிகள் என கண்டனம்
- மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி குற்றச்சாட்டு
- மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திடீர் ராஜினாமா
- காவிரி நதிநீர் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- மத்திய மந்திரி சசி தரூரின் டுவிட்டர் திடீர் முடக்கம்
- மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு
- சிறுபான்மை இளைஞர்கள் பற்றிய ஷிண்டேயின் கருத்து நாட்டிற்கு தலைகுனிவு: பிரதமருக்கு மோடி கடிதம்
- போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி
- கடற்படைவீரர்கள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இத்தாலி அரசு மனு
- காங். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நாளை தேர்வு
| இம்பாலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் குண்டு வீச்சு Posted: 15 Jan 2014 11:01 PM PST மணிப்பூர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. லோகன். இவரது வீடு தலைநகர் இம்பாலில் உள்ள சங்கை போரோ பகுதியில் உள்ளது. நேற்று மாலை மர்ம மனிதர்கள் அவரது வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தப்பி விட்டனர். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதன் சத்தம் பல கிலோ மீட்டர் தூரம் வரை அதிர வைத்தது. குண்டு வீச்சில் வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. குண்டு வெடித்தபோது லோகன் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினருடன் |
| செயற்குழு நாளை கூடுகிறது: வாக்காளர்களை கவர பா.ஜனதா புதிய வியூகம் Posted: 15 Jan 2014 10:55 PM PST பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, பிரசார வியூகம், கூட்டணி பேச்சுவார்த்தை போன்ற ஏற்பாடுகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்றும், நாளையும் டெல்லியில் நடக்கிறது. நாளை ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் |
| டெல்லியில் டென்மார்க் பெண்ணை கற்பழித்த 2 பேர் கைது: 4 பேர் தலைமறைவு Posted: 15 Jan 2014 10:42 PM PST டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடந்த 1–ந் தேதி டெல்லி வந்தார். சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் அவருக்கு வயது 51. டெல்லியில் அவர் பகர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டல் அமெக்ஸ் இன்னில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் அவர் இந்தியா கேட் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். மாலை 4 மணிக்கு வெளியில் |
| பீகாரில் லஞ்சப் புகாரில் சிக்கிய 576 அதிகாரிகளை நீக்க முடிவு: நிதிஷ்குமார் நடவடிக்கை Posted: 15 Jan 2014 09:49 PM PST டெல்லியில் முதல் – மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிரடி நடவடிக்கையால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறார். ஊழலை ஒழிக்க உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறார். அதிகாரிகளை பம்பரம் போல் சூழல வைத்து வேலை வாங்குகிறார். அவரைப் போல் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் பெயர் எடுக்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக அவர் ஊழல் அதிகாரிகளை களை எடுக்க திட்டமிட்டுள்ளார். பீகாரில் 576 அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவர்களில் 187 பேர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை இன்று தொடங்குகிறது Posted: 15 Jan 2014 07:51 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தினமும் பல மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து சாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் மற்றும் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர். மகர விளக்கு திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை நேற்று முன்தினம் மதியம் நடந்தது. முன்னதாக பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட திருவாபரணங்களை தந்திரி கண்டரரு மகேஷ்வரரு, |
| பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடக்கம்: பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை Posted: 15 Jan 2014 07:15 PM PST பா.ஜனதா கட்சியின் 3 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்துள்ள பா.ஜனதா கட்சி, 'சிறந்த நிர்வாகம்' மற்றும் '272+ இடங்கள்' என்ற நோக்கங்களின் அடிப்படையில், வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தேர்தலுக்காக அனைத்து வகையிலும் தயாராகி |
| கர்நாடகத்தில் சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் இல்லை: சித்தராமையா Posted: 15 Jan 2014 07:04 PM PST கர்நாடகத்தில் சாராயம் விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்–மந்திரி சித்தராமையா, சாராயத்துக்கு தடை விதித்தது தவறான முடிவு என்று தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்–மந்திரி சித்தராமையாவிடம், 'சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் |
| அமெரிக்க தூதர்களின் துணைவியர்களை இந்திய அரசு கண்காணிக்க ஆரம்பித்துள்ளது Posted: 15 Jan 2014 02:26 PM PST இந்திய அரசின் தூதரக அதிகாரியாக அமெரிக்காவில் பணியாற்றியவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது பணிப்பெண்ணுக்கு ஊதியம் குறைவாக கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்ட அத்து மீறல் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை. இதனால் தற்போது அமெரிக்க அரசுக்கு மேலும் சில கெடுபிடிகளை விதிக்க அரசு |
| காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து உதவியை இந்திரா நாடினாரா?: புதிய சர்ச்சை Posted: 15 Jan 2014 01:22 PM PST பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் கடந்த 1984-ம் ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து விட்டனர். இவர்கள் காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தவர்கள். இவர்களை பொற்கோவிலில் இருந்து வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை |
| இந்திய ராணுவத்தின் 66வது ஆண்டு விழா: மறைந்த வீர நெஞ்சங்களுக்கு மரியாதை Posted: 15 Jan 2014 01:01 PM PST இந்திய ராணுவத்தின் 66வது ஆண்டு விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த 18 வீரர்களுக்கு இந்நிகழ்ச்சியில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தால் கவுரவிக்கப்பட்டனர் |
| ஆம் ஆத்மி கட்சி மீது சல்மான் குர்ஷித் கடும் தாக்கு: அராஜகவாதிகள் என கண்டனம் Posted: 15 Jan 2014 11:54 AM PST மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் அடிப்படை அமைப்பை சீர்குலைத்த அக்கட்சி அராஜகவாதிகளின் கூடாரமாகவும், மூன்றாம் தர நபர்களை கொண்டதாகவும் உள்ளது என கூறினார் |
| மோசமான பொருளாதார நிலைமைக்கு மத்திய அரசே காரணம்: நரேந்திர மோடி குற்றச்சாட்டு Posted: 15 Jan 2014 11:29 AM PST குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) கூட்டம் நடைபெற்றது. அதில், குஜராத் மாநில முதல்-மந்திரியும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது |
| மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. திடீர் ராஜினாமா Posted: 15 Jan 2014 11:06 AM PST திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்குவங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கும், அக்கட்சியின் எம்.பி. சோமன் மித்ராவுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு இருந்தது. இந்த நிலையில் சோமன் மித்ரா நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் |
| காவிரி நதிநீர் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 15 Jan 2014 10:50 AM PST தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்காக காவிரியிலிருந்து ஆண்டுதோறும் |
| மத்திய மந்திரி சசி தரூரின் டுவிட்டர் திடீர் முடக்கம் Posted: 15 Jan 2014 07:09 AM PST மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அத்துடன், அவரது பக்கத்திற்குள் ஊடுருவிய யாரோ மர்ம நபர், அதில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த |
| மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Posted: 15 Jan 2014 06:23 AM PST அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், சில கட்சிகளுடன் இது தொடர்பாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. |
| சிறுபான்மை இளைஞர்கள் பற்றிய ஷிண்டேயின் கருத்து நாட்டிற்கு தலைகுனிவு: பிரதமருக்கு மோடி கடிதம் Posted: 15 Jan 2014 05:14 AM PST சிறுபான்மை மக்களை கைது செய்யும்போது மாநில அரசுகள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் மீதான வழக்குகளை சீராய்வு செய்வதற்கு சிறப்பு குழுக்களை உருவாக்கும்படி மாநில அரசுகளை கேட்டு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறினார் |
| போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் பதிலடி Posted: 15 Jan 2014 04:34 AM PST ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி. டெல்லி அமைச்சரவையில் தனக்கு பதவி தராததற்கு எதிர்ப்பு தெரிவித்த இவர், இன்று திடீரென முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சனம் |
| கடற்படைவீரர்கள் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இத்தாலி அரசு மனு Posted: 15 Jan 2014 04:23 AM PST இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே இத்தாலி அரசு சார்பில் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் வழக்கை விரைவில் விசாரித்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை |
| காங். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நாளை தேர்வு Posted: 15 Jan 2014 03:59 AM PST பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல்– மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை முன் நிறுத்தி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நாளை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |