Tamil Star |
- கனடா நாட்டில் குடியேறிய முதல் சீக்கியரின் பெயரில் புதிய பூங்கா
- வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள முதலமைச்சர்
- ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் : முடிவினை எட்ட ஐ.நா அணுசக்திக் குழு சந்திப்பு
- அனந்தி சசிதரன் பங்குபற்றிய பொது நிழ்வினை புறக்கணித்த அதிகாரிகள்
- இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை வங்காள தேசத்தில் தொடர்ந்தும் அதிகரிப்பு
- ராஜபக்சவின் ஆட்சி தொடருமானால் நாட்டு மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை எதிர் நோக்குவர்
- வடமாகாண உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகனின் ஒளிநாடா பொலிஸாரால் அபகரிப்பு
- அமெரிக்க அதிகாரி ஸ்டீபன் ரெப் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு
- 2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராகத் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு
- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் 23ஆவது விடயமாக இலங்கை!
- சிரியாவின் பிடிபட்ட 60 பேரை ஈராக் ஜிஹாதிகள் சுட்டுக்கொன்றனர்
- சர்வ தேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைப்பது தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை – டியூ குணசேகர
- வெனிசுவேலா தூதரகம் பராகுவேயில் மீண்டும் திறக்கப்பட்டது!
| கனடா நாட்டில் குடியேறிய முதல் சீக்கியரின் பெயரில் புதிய பூங்கா Posted: 14 Jan 2014 10:53 PM PST
இவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை அன்று அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வந்தபின்னர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது கனடாவில் குடியேறிய சீக்கியர்களின் தன்னலமற்ற சேவைகள் குறித்து அவர்கள் புகழ்ந்து பேசினார். கடந்த 1909 ஆம் ஆண்டில் கடுமையான தட்ப வெப்ப சூழ்நிலைகள் காணப்பட்ட ஆல்பர்ட்டா மாகாணத்தில் குடியேறிய ஹர்நாம் சிங் ஹரி என்றவரின் விவசாய குடும்பத்தினர் அயராத உழைப்பால் அந்தப் பகுதில் உள்ள வளமான விளைநிலங்களைக் கண்டறிந்து விவசாய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதன் காரணமாக தற்போது கல்கரி நகரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பூங்காவிற்கு அவரது பெயரை சூட்டி கௌரவிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். தங்கள் நாட்டில் உள்ள முக்கியமான மருத்துவமனைகள் அனைத்திலும் குருநானக் தேவ் பெயரில் ஒரு பிரிவு செயல்பட்டு வருவதாக மன்மீத் சிங் குறிப்பிட்டார். தங்கள் முன்னோர்களிடமிருந்தும், குருக்களிடமிருந்தும் பெற்றுள்ள நல்ல போதனைகளின் தெய்வீக சக்தியினால் சீக்கியர்கள் செல்வச் செழிப்பினை அனுபவிப்பதாக அவர் கூறினார். பஞ்சாப் அரசுடன் இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக ரெட்போர்ட் குறிப்பிட்டார். வேளாண் மற்றும் கால்நடை மரபியல் குறித்த இந்த ஒப்பந்தங்கள் மூலம் பால் பொருட்கள் மற்றும் பன்றி வர்த்தகம் அதிகரிக்கக்கூடும். முக்கியமான திட்டங்களில் தொடர்பை ஏற்படுத்தும்விதமாக விவசாய தொழிலாளர் குழு ஒன்றும் அமைக்கப்படும் என்றும் ரெட்போர்ட் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள முதலமைச்சர் Posted: 14 Jan 2014 10:37 PM PST
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்றது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையைக் கைப்பற்றி ஒக்ரோபர் மாதம் ஆட்சி அமைத்திருந்தது. ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாளை வியாழக்கிழமையே முதல் தடவையாக வடக்கு மாகாண அரச நிர்வாக அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இழுபறி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபைக்கும், திணைக்களத் தலைவர்கள், செயலாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்ச்சியாக நீடித்து வருகின்றன. வடக்கு மாகாண ஆளுநர், மாகாணசபை நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பதா கத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த நிலையில் நாளை வியா ழக்கிழமை கல்லை 9.30 மணிக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அலுவலகம் திறப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகம் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. 26, சோமசுந்தரம் அவனியூவில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் : முடிவினை எட்ட ஐ.நா அணுசக்திக் குழு சந்திப்பு Posted: 14 Jan 2014 10:25 PM PST ஈரானின் அணுசக்தி ஆயுத உற்பத்தி முயற்சியை எதிர்த்த ஐ.நா உறுப்பினர் நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன. கடந்த வருடம் அங்கு புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஹசன் ருஹானி அணுசக்தி உற்பத்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறி ஈரானின் மீதுள்ள பொருளாதாரத் தடைகளை விலக்க முயற்சித்தார். இரு தரப்பினருக்குமிடையே நடந்த தொடர் சந்திப்புகளின் விளைவாக ஈரானின் கட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தி இயக்கங்களைத் தொடர்ந்து பரஸ்பர ஒப்பந்தம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆறு உலக நாடுகளுக்கும், […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனந்தி சசிதரன் பங்குபற்றிய பொது நிழ்வினை புறக்கணித்த அதிகாரிகள் Posted: 14 Jan 2014 09:50 PM PST
வட-கிழக்கில் பொது நிகழ்வுகளில் அப்பகுதி படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. அவ்வகையில் அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அழைக்கப்பட்டுள்ளார். அதே போன்று அப்பகுதி படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். எனினும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கெடுக்கும் நிகழ்வில் தாம் பங்கெடுக்க தயாரில்லையென தெரிவித்துள்ள படை முகாம் அதிகாரி மற்றும் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அவரே தமக்கு தற்போது எதிரியென தெரிவித்துள்ளதுடன் அவரை அழைக்காது விட்டால் தாம் வருகை தர தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிலும் தமக்கு எதிராக அவர் வழக்குகளை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுதலித்து அனந்தி தலைமையில் நிகழ்வினை நடத்தி முடித்துள்ளனர்.a This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்து மதத்தினருக்கு எதிரான வன்முறை வங்காள தேசத்தில் தொடர்ந்தும் அதிகரிப்பு Posted: 14 Jan 2014 09:30 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராஜபக்சவின் ஆட்சி தொடருமானால் நாட்டு மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை எதிர் நோக்குவர் Posted: 14 Jan 2014 09:22 PM PST
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி தொடர்ந்து இருக்குமேயானால் இந்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும் தெரணியகல தொகுதி ஐ.தே.க. அமைப்பாளருமான ரன்ஜித் பொல்கம்பல தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த அரசு கேலிக்கூத்து நிகழ்ச்சிக்கு இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அதன் சுமையை மக்களின் தலையில் கட்டிவிடுகின்றது. இந்நாட்டிற்கு எந்தவொரு முதலீட்டாளர்களும் வருவதில்லை. மாறாக பெற்ற கடனை மக்களை அடகு வைத்து கூடுதல் வட்டிக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெற்று வருகின்றது. அதிவேக பாதை அமைப்பதாக கூறி 30 சதவீதமான நிதியை கொள்ளையடித்துக் கொள்கின்றனர். மேலும் வரலாறு காணாத வகையில் நாட்டின் நாலா பக்கமும் பாலியல் துஷ்பிரயோகமும் கொள்ளைச்சம்பவங்களும் வணக்கஸ்தலங்கள் நொருக்கப்படுவதென பல குற்றச்செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதனால் இவற்றை பார்க்கும் போது இன்று இந்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தாததையே புலப்படுத்துகிறது. இந்த அரசின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் நாம் அனைவரும் இணைந்து புரட்சி போராட்டத்தில் களமிறங்க வேண்டும். மேலும் ஐ.தே.கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பொய்ப்பிரசாரம் செய்து நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளப் பார்க்கிறது. இதற்கு எமது கட்சி ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாண உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகனின் ஒளிநாடா பொலிஸாரால் அபகரிப்பு Posted: 14 Jan 2014 03:16 AM PST
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளியவளை கணுக்கேணி கிழக்கில் இலவச கண்ணாடி வழங்குவதற்கான பரிசோதனைகளை வவுனியாவிலுள்ள வைத்தியசாலை மற்றும் கொழும்பிலுள்ள விஷன் கெயாருடன் இணைந்து கடந்த ஞாயிறன்று மேற்கொண்டிருந்தோம். அதில் 150 பேர் பங்குபற்றியதுடன் 93 பேருக்கு இலவசமாக கண்ணாடி வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தோம். இதேவேளை, அழிந்துபோகின்ற எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலைநிகழ்ச்சியொன்றையும் அதே தினத்தில் நடத்தினோம். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர். புனர்வாழ்வு பெற்றவர்களில் இரண்டு கண்களையும் இழந்த ஒருவரும் இரண்டு கால்களை இழந்த மற்றுமொருவரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் நிகழ்ச்சியை நிறுத்துமாறு கோரினர். அதற்கு நான் இணங்காது நிகழ்ச்சியை தொடந்து நடத்தினேன். எனினும் அங்குவந்த இராணுவத்தினர் நிகழ்ச்சியை நடத்தவிடாது குழப்பங்களை விளைவித்துகொண்டிருந்தனர். இறுதியில் எனது வீடியோ கமராவின் ஒளிநாடாவை பொலிஸாரால் பறித்தெடுத்து சென்றுவிட்டனர். அது இன்னும் என்னிடம் கையளிக்கப்படவில்லை என்றார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தொடர்புகேட்டபோது,ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் ஆவணப்படம் தயாரிக்க முயன்றதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன அதனையடுத்தே நாம் அந்த வீடியோ கமராவின் ஒளிநாடாவை கைப்பற்றினோம் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க அதிகாரி ஸ்டீபன் ரெப் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு Posted: 14 Jan 2014 03:10 AM PST
யுத்த குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் விசேட தூதுவர் ஸ்டிபன் ஜே ரெப், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் ரெப், சர்வதேசத்திற்கு இரட்டை வேடம் போடுவதாக இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இவ்வாறான காட்டிச் கொடுப்புக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றும் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவீந்து மனோஜ் குறிப்பிட்டுள்ளார். ஸ்டிபன் ஜே ரெப் போன்றோர் இங்கு வந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து, அன்று விடுதலை புலிகளால் குண்டுகளால் பெற்றுக்கொள்ள முடியாதனை இன்று பேனையினால் பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கு ஒரு போதும் இடம்கொடுக்க கூடாது என குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2013-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராகத் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு Posted: 14 Jan 2014 03:02 AM PST
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து தேர்வு பெற்ற லயனல் மெஸ்சியின் சாதனைக்கு இவரின் தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த ஆண்டு பிபா தேர்வில் ரொனால்டோ 27.99 சதவிகித வாகுகளையும், லயனல் மெஸ்சி 24.72வாக்குகளையும், பிரான்க் ரிபெரி 23.36 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். தனது அணியினருக்கும் குடும்பத்தினருக்கும் தான் முதலிடம் பெற்றது குறித்து ரொனால்டோ நன்றி கூறினார். இதற்காக தான் நிறைய தியாகங்கள் செய்ததாகக் கூறிய ரொனால்டோ தன மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக மறைந்த போர்ச்சுகல்லின் முன்னாள் கால்பந்து வீரரான யுசுபியோவிற்கும்,தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கும் இதன்மூலம் அஞ்சலி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் 23ஆவது விடயமாக இலங்கை! Posted: 14 Jan 2014 02:59 AM PST
ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கை இந்த வருடம் அங்கத்துவம் பெறாத போதும், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக அமெரிக்காவினால் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் சமர்பிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு மார்ச் 28 ஆம் திகதி வரை இடம்பெறும். இந்த அமர்வில் 23 விடயமாக இலங்கை விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியாவின் பிடிபட்ட 60 பேரை ஈராக் ஜிஹாதிகள் சுட்டுக்கொன்றனர் Posted: 14 Jan 2014 02:56 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வ தேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைப்பது தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை – டியூ குணசேகர Posted: 14 Jan 2014 02:52 AM PST
"இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர்.அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி, எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அன்று ஜனாதிபதி தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தளர்ந்திருப்பாரானால் அமெரிக்கர்கள் பிரபாகரனை மீட்டுக் கொண்டு சென்றிருப்பர்" – இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரகசியத் தகவலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், அமைச்சருமான டியூ குணசேகர வெளிப்படுத்தியுள்ளார். காலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு, "எமக்குச் சர்வதேச ரீதியில் சவால்கள் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி வாரம் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 19ஆம் திகதி அனைவரும் வெளியில் கொண்டுவரப்பட்டனர். இதன்போது நான் அறிந்த சில விடயங்களைக் கூறவேண்டும். ஏனெனில் அந்தச் சந்தர்ப்பங்களில் இவற்றைக் கூறவில்லை. தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறவேண்டும். வரலாற்றில் இவை அறிக்கைப்படுத்தப்படவேண்டும். அப்போது இருந்த நிலைமை என்ன? அந்த இறுதி 5 தினங்களில் என்ன நடந்து என்று எனக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, எமது ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார். இல்லையேல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவோம் எனக் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் போரை நிறுத்துமாறு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கூறினார். கனேடியப் பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோரும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கூறினர். எனக்கு ஞாபகம் இருக்கிறது. மே 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. அன்று காலை ஜனாதிபதி ஜோர்தான் நாட்டுக்குச் சென்றிருந்தார். நான் வரும்வரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் இதைத் தொடருங்கள். எவருக்கும் அடிபணிய இடமளிக்க வேண்டாம் என்று கூறினார். இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன். அன்று ஜனாதிபதி தமது உறுதியிலிருந்து தளர்ந்திருந்தால், அமெரிக்கர்கள் வந்து பிரபாகரனை மீட்க்கொண்டு சென்றிருப்பர். அவ்வாறானநிலை ஏற்பட இடமளிக்கப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அன்று போரை முடிவுக்குக் கொண்டுவந்ததே இன்று சர்வ தேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பிரதான காரணமாக உள்ளது. அதைவிடுத்து, தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை – எனத் தெரிவித்துள்ளார். – எனக்கு ஞாபகம் இருக்கிறது. மே 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெனிசுவேலா தூதரகம் பராகுவேயில் மீண்டும் திறக்கப்பட்டது! Posted: 14 Jan 2014 02:46 AM PST
இவர் வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேசின் நெருங்கிய நண்பர் ஆவார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து வெனிசுவேலா பராகுவேயில் இருந்த தனது தூதரகத்தை மூடியது. 18 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது. வெனிசுவேலாவின் தூதரான அப்ரடோ முர்கா பாராகுவே நாட்டின் விவசாய விளைபொருட்கள் தங்கள் நாட்டிற்கு முக்கியமான தேவையாகும் என்றார். அதேபோல் வெனிசுவேலா உலகின் மிகப் பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டுள்ளது. பாரகுவேயில் எண்ணெய் உற்பத்தி இல்லை. எனவே அந்தப் பிராந்தியத்தின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான வெனிசுவேலாவுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ளுவதன்மூலம் அவர்கள் நன்மை பெறலாம். இரண்டு தென் அமெரிக்க நாடுகளும் தங்களின் பொருளாதார உதவிகளை ஒன்றுக்கொன்று தொடரலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















