Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மீனவர்கள் பிரச்சினை: இந்தியா–இலங்கை மந்திரிகள் இன்று பேச்சுவார்த்தை

Posted: 14 Jan 2014 11:17 PM PST

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா– இலங்கை மந்திரிகள் இன்று பேச்சுவார்தை நடத்துகிறார்கள். இந்தியா சார்பில் வேளாண் துறை மந்திரி சரத்பவாரும், இலங்கை சார்பில் அந்நாட்டு மீன்வளத்துறை மந்திரி ரஜிதா செனரத்னாவும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறார்கள். மன்னார் வளைகுடாவில் மீன்பிடிப்பதில் இரு நாடுகள் இடையே நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதிக்கிறார்கள்.

பாலியல் புகாரை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி அவதூறு வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

Posted: 14 Jan 2014 11:17 PM PST

தன் மீதான பாலியல் புகாரை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது பயிற்சி பெண் வக்கீல் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறினார்.

குறைந்த பட்ச மாத ஓய்வூதியம் ரூ.1000 வழங்க மத்திய அரசு முடிவு

Posted: 14 Jan 2014 11:13 PM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம் மூலம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாத ஓய்வூதியம் பெறுபவர்களில் சுமார் 22 லட்சம் பேர் மாதம் தோறும் ரூ. 1000க்கு கீழ் தான் பென்சன் பெற்று வருகிறார்கள். மத்திய தொழிலாளர் நலத்துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி குறைந்த பட்ச மாத ஒய்வூதியத்தை ரூ. 1000 ஆக நிர்ணயிக்க

தேர்தலில் காங்கிரஸ் இல்லை: பா.ஜ.க. – ஆம் ஆத்மி இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்

Posted: 14 Jan 2014 10:52 PM PST

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில் எடியுரப்பா போன்ற ஊழல் குற்றச்சாட்டு நபர்கள் உள்ளனர். ஆனால் மற்றொரு பக்கத்தில் ஆம் ஆத்மி உள்ளது. இந்த கட்சி நேர்மையான அரசியலை நடத்துகிறது. ஆம் ஆத்மிக்கும்

பிரியங்கா தேர்தலில் போட்டியிடமாட்டார்: ராகுல்காந்தி பேட்டி

Posted: 14 Jan 2014 10:46 PM PST

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:– பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பற்றி மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 2004, 2009–ம் ஆண்டுகளில் காங்கிரஸ் தோற்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்த வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: மத்திய அரசு முடிவு

Posted: 14 Jan 2014 10:14 PM PST

இந்திய எண்ணை நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகமாக இருந்ததால் சமீபத்தில் 2 தடவை அடுத்தடுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.

டெல்லியில் அன்னிய நேரடி முதலீடு அனுமதி ‘திடீர்’ வாபஸ்: கெஜ்ரிவால் அரசு நடவடிக்கை

Posted: 14 Jan 2014 10:10 PM PST

டெல்லியில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்ய ஷீலா தீட்சித் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு அனுமதி வழங்கியது. தற்போது இந்த அனுமதியை வாபஸ் பெற அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி மாநில தொழில்துறை செயலாளர் அமித் யாதவ், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி: பிரசாந்த் பூஷன் அறிவிப்பு

Posted: 14 Jan 2014 08:40 PM PST

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

கேரள இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரையில் போலீஸ் ஜீப்பின் மேல் அமர்ந்து பயணம் செய்த ராகுல்காந்தி

Posted: 14 Jan 2014 08:30 PM PST

கேரள மாநிலம் ஆலப்புழையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரையை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். பிறகு சிறிது தூரம் அவர் பாதயாத்திரையில் நடந்து சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ராகுல்காந்தியை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ராகுல்காந்தி பாதுகாப்புக்கு வந்து இருந்த போலீஸ் ஜீப்பு மீது

கோவா கட்டிட சரிவு சம்பவம்: துணை ஆட்சியர் கைது

Posted: 14 Jan 2014 07:22 PM PST

கோவா மாநில தலைநகர் பனாஜி அருகே, கனகோனா என்ற இடத்தில் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 29 பேர் பலியானார்கள். ஜார்க்கண்ட் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பலர் இந்த கட்டிட

ஜார்க்கண்டில் கோவிலுக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி 8 பேர் கும்பலால் கற்பழிப்பு

Posted: 14 Jan 2014 06:42 PM PST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் 16 வயது நிறைந்த பள்ளி மாணவி கடந்த ஞாயிறு அன்று பயிற்சி வகுப்புக்கு சென்று படித்து விட்டு வரும் வழியில் ரீத்து சாலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அவுரங்கபாத் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

Posted: 14 Jan 2014 06:02 PM PST

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே கவுசாம்பியில் அமைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகம் முன், இந்து ரக்ஷாதள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் சுமார் 40 பேர் கடந்த சில தினங்களுக்கு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி வீடு திரும்பினார்

Posted: 14 Jan 2014 05:41 PM PST

கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தஊரான புதுப் பள்ளிக்கு சென்று இருந்தார். வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு

பிரதமர் வேட்பாளராக கட்சி அறிவித்தால் ஏற்க தயார்: ராகுல் காந்தி

Posted: 14 Jan 2014 03:25 PM PST

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் வருகிற ஜனவரி 17ந் தேதி கூடுகிறது. இதில், பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்படுபவர் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது

Posted: 14 Jan 2014 02:23 PM PST

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரச்சித்தி பெற்றது ஆகும். இந்த காலங்களில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடிதாங்கி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம்

பதவியில் இருக்கும் போதே கேள்வி எழுப்பாதது ஏன்?: ஆர்.கே சிங்குக்கு காங்கிரஸ் கேள்வி

Posted: 14 Jan 2014 01:49 PM PST

ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டி

உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்

Posted: 14 Jan 2014 01:22 PM PST

உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் அங்குள்ள 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எனினும் பெண்களை தாக்கிய மூத்த போலீசாரை சஸ்பெண்ட செய்யாதால் சர்ச்சை எழுந்துள்ளது

அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டால் குமார் விஸ்வாஸ் தோல்வி அடைவார்: லல்லு பிரசாத் யாதவ்

Posted: 14 Jan 2014 12:25 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் கூறி வருகிறார். அங்கு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்

ஆதாரங்களை திருத்தியதாக ஆம் ஆத்மி மந்திரி மீது குற்றசாட்டு: பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 14 Jan 2014 11:44 AM PST

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஊழல் வழக்கு ஒன்றில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் சோம்நாத் பாரதியும் அவரது கட்சிக்காரரும் போராடி வந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல அவதூறானதும்

அமைதிக்காகவும், மத சுதந்திரத்திற்காகவும் தான் போராடுகிறேன்: தலாய் லாமா

Posted: 14 Jan 2014 10:13 AM PST

திபெத்தியர்களின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா சட்டீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள சிர்பூரில் இருக்கும் புத்தர்களின் தொல்பொருள் மையத்திற்கு வருகை தந்தார். மகாநதிக் கரையினில் அமைந்துள்ள இந்த நகரம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™