Tamil Star |
- திருப்பதிக்கு இனி செல்போன் மூலம் காணிக்கை போடலாம்
- இந்தியா அமெரிக்காவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
- பெண்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கி
- நடிகை மனோரமா மீது புகார்!
- அதிக பிள்ளைகள் பெற்றதால் வந்த விபரீதம்
- பிரான்ஸ் ஜனாதிபதி நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு
- வியக்கதக்க பயணம் மேற்கொண்ட அதிசய பறவை
- போதை தலைக்கேறியதால் துண்டிக்கப்பட்ட காதுகள்
- திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும் ஸ்டீபன் ராப் கேள்வி!
- லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு
- தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; விக்னேஸ்வரன்
- கொத்தணிக் குண்டை பாவிக்குமாறு அமெரிக்காவே கூறியது: அதனைச் செய்யவில்லையென இலங்கை மறுப்பு
- அண்ணன் தங்கை பாசம்….. உண்மைக்கும், படத்திற்கும் உள்ள வித்தியாசம்!….
- சிங்கத்தின் நகைச்சுவையான மேஜிக்…. 100 தடவை பார்த்தாலும் சிரிச்சிட்டே இருப்பீங்க!….
- நடுவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பெண்…..
- உகாண்டாவில் இந்திய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த காட்சி… (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
- ஆபத்தின் அழகிய மறுபக்கம்….
- முதியோர்களை உதாசினப்படுத்தும் பிள்ளைகளே இதையும் ஒருக்கா பாருங்க…..
- பிக்குகள் தலைமையிலான குழு கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்
- இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா?
| திருப்பதிக்கு இனி செல்போன் மூலம் காணிக்கை போடலாம் Posted: 10 Jan 2014 11:54 PM PST திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைப்பேசி மூலம் உண்டியலில் காணிக்கை செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. திருமலையில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் அதன் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சி.வி.ஆர். ராஜேந்திரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிரூபர்களிடம் கூறுகையில், திருமலையில் தேவஸ்தானத்துக்காக லட்டு கவுன்டர், அறைகளுக்கான முன் பணம் வழங்கும் கவுன்டர், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை மையம், விஐபி பிரேக் மற்றும் சேவை டிக்கெட்டுகள் விற்பனை என 40 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா அமெரிக்காவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் Posted: 10 Jan 2014 11:43 PM PST
விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட தேவயானி கோபர்கடேவை தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது. அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், தேவயானிக்கு இணையாக டெல்லியில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. தேவயானி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இந்தியா வந்து சேர்வதற்குள், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றும் பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரியை, இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் தம்மிடம் இருந்தாலும், அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. அதேவேளையில், தேவயானி வழக்கு தொடர்பான நடைமுறைகளில் இந்த அதிகாரி ஈடுபட்டிருந்ததன் காரணமாகவே, தேவயானி அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு ஆளானார் என இந்தியா நம்புவதாக வெளியுறவு வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக, இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதை அடுத்து, தேவையானி இன்று அங்கிருந்து இந்தியா புறப்பட்டார். இந்தியா புறப்படுவதற்கு முன்பு தேவயானி அளித்த பேட்டியில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும், இது பொய் குற்றச்சாட்டு என்பதை சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு நிரூபிப்பேன் என்றும் கூறினார். முன்னதாக, தேவயானி கோப்ரகடே தனது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸுக்கு குறைவான ஊதியம் அளித்தார்; விசா மோசடி செய்துள்ளார் என்ற புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அமெரிக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற பொலிஸார், காவல் நிலையத்தில் போதை கடத்தல் குற்றவாளிகளுடன் அடைத்து வைத்தனர். தேவயானியின் ஆடையை அகற்றி சோதனையிட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பெண் தூதரை மிகவும் மோசமாக நடத்திய அமெரிக்க அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துடன் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெண்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கி Posted: 10 Jan 2014 11:30 PM PST பெண்களை தற்காத்து கொள்வதற்காக அவர்களுக்காகவே பிரத்யோக துப்பாக்கி ஒன்று அறிமுகமாகிவுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டெல்லி மருத்துவ மாணவியின் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பின்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த 6 ஆம் திகதி கான்பூரை சேர்ந்த இந்திய ஆயுத தொழிற்சாலை ஒன்றால் "நீர்பிக்" என்ற பெயருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சில சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதன் எடை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Jan 2014 11:25 PM PST சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை மனோரமா மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை மனோரமா, சென்னை தியாகராயநகரில் வசிக்கிறார். அவர் மீது அவரது அண்ணன் மகன் காசிநாதன், சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். பின்னர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மக்களால் நேசிக்கப்படும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படும் நடிகை மனோரமா எனது அத்தை ஆவார். எங்களது பூர்வீகம் மன்னார்குடி. மனோரமாவுக்கு ஆறுமுகம், கிட்டு என்ற 2 அண்ணன்கள் உண்டு. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிக பிள்ளைகள் பெற்றதால் வந்த விபரீதம் Posted: 10 Jan 2014 11:18 PM PST
சீனாவில் பல திரைப்படங்களை எடுத்த இவர் ஆஸ்கார் விருதுக்குக்கூட பரிந்துரை செய்யப்பட்டவர். பெரும் பணக்காரரான இவருக்கு ஒரு குழந்தைக்கு மேல் இருப்பதாக சமீப காலமாக வதந்தி பரவ ஆரம்பித்தது. சீன அரசு நீண்டகாலமாக ஒரு குழந்தை விதிமுறையைக் கடுமையாகக் கடைப்பிடித்து வந்ததால் இந்த வதந்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் யிமோயு வெளிப்படையாக தனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருப்பதாக அறிவித்தார். இதற்குதான் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்த அவர் அரசிடம் அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். சீனாவின் குடும்பக்கட்டுப்பாடு திட்டக் குழு எடுக்கும் நடவடிக்கைக்கு தான் கட்டுப்படுவதாகவும் அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ஜியாங்சூ மாகாணத்தின் அதிகாரிகள் இந்தத் தம்பதியினரின் வருட வருமானத்தை அடிப்படையாகக் கணக்கிட்டு 7.48 மில்லியன் யுவானை அவருக்கு அபராதமாக விதித்துள்ளனர். இதற்காக கடந்த நவம்பர் முதலே ஒன்பது புலனாய்வுக் குழுவினர் இந்தத் தம்பதியினரின் வருமானம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். நேற்று பின்ஹு மாவட்டத்தில் உள்ள வுக்சி நகரத்தில் செயல்பட்டு வரும் குடும்பக் கட்டுப்பாடு திட்டக்குழு இந்த அபராதத்தை 30 நாட்களுக்குள் செலுத்துமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தற்போது சீனா ஒரு குழந்தைத் திட்டத்தைத் தளர்த்தியுள்ள நிலையில் யிமொயுவிற்கு இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சங் போன்ற பணக்காரர்கள் பணத்தை அளிப்பதன்மூலம் தாங்கள் விதிமுறைகளை மீறுவதால் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர் என்று ஒரு சாரார் குறிப்பிடும்போது அவருக்கு ஆதரவாகப் பேசும் சிலரோ ஒரு பிரபலமான நபர் என்ற முறையில் அவர் அக்கறையான அணுகுமுறையுடன் இந்த அபராதத்தைக் கட்ட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரான்ஸ் ஜனாதிபதி நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு Posted: 10 Jan 2014 11:11 PM PST
குறித்த பத்திரிகையின் சமீபத்திய இதழில், இந்த விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் 7 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர வீதிகளில் ஒலாந்தே அந்த நடிகையுடன், மோட்டார் சைக்கிளில் சுற்றி நேரம் செலவழிப்பதாக குளோஸர் பத்திரிகை சில நாள்களாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டு வருகிறது. பிரபல நடிகையான ஜூலி கேயட் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஒலாந்த் தற்போது பத்திரிகையாளரான வாலெரி ட்ரீயர்வெய்லருடன் வாழ்ந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒலாந்துடன் கேயட் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக குளோஸர் பத்திரிகை மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள ஹொலாந்த், "இது ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல்' என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இவர்களது தொடர்பு உறுதி செய்யப்பட்டால், ஜாக்சிராக், வாலெரி கிஸ்கார்ட் போன்ற திருமணத்தைத் தாண்டிய பந்தம் கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதிகளின் பட்டியலில் ஒலாந்தும் இடம்பிடிப்பார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வியக்கதக்க பயணம் மேற்கொண்ட அதிசய பறவை Posted: 10 Jan 2014 11:04 PM PST
இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், மொத்தம் 16,000 மைல் தூரம் பயணித்து பாலரோப் பறவயின் சாகசம் வியக்கதக்கதாய் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் ஷேடர்லாந்த் என்ற பகுதியிலிருந்து தன் பயணத்தை தொடங்கிய பாலரோப் பறவை அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதி, கரிபியன் மற்றும் மெக்ஸிகோ பகுதிகளிலும் பயணித்தது. இறுதியில் தென் அமெரிக்காவின் பெரூ நாட்டில் தன் பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியது. இதற்கிடையே இந்த பறவை அரேபிய கடல் பகுதியில் தஞ்சம் அடைந்திருக்கும் என்று சில விஞ்ஞானிகள் எண்ணினர். ஆனால் இப்பறவை பயணித்த இடங்களின் விளக்கப்படம் ஒன்று சுவிஸ் RSPB பறவை நிபுணர்கள் மற்றும் ஷேட்லாந்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியிடப்பட்டது. இதில் அப்பறவை பயணித்த இடங்கள் மிக தெளிவான முறையில் ஓவிய வடிவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவிஸ் RSPB பறவை நிபுணரான மால்சி ஸ்மித் கூறுகையில், இந்த பால்ரோப் பறவை பிரிட்டனில் வாழும் ஸ்டார்லிங் என்ற பறவையை காட்டிலும் சிறியது. எனினும் இப்பறவை கடினமான பயணத்தை மிகவும் அசாதரணமாக மேற்கொண்டு பத்திரமாக நாடு திரும்பி ஈடில்லா சாதனையை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| போதை தலைக்கேறியதால் துண்டிக்கப்பட்ட காதுகள் Posted: 10 Jan 2014 10:44 PM PST ரஷ்யாவில் குடிபோதையில் பந்தயம் கட்டி தோல்வியடைந்த இரண்டு பேர் தங்கள் காதுகளை அறுத்துக்கொண்டனர். ரஷ்யாவின் செர்பியன் கெமரோவோ பிராந்தியத்தில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இரண்டு பேர் இணைந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் விளையாட்டாக ஒரு போட்டி வைக்க நினைத்தனர். அதன்படி மல்யுத்தப் போட்டி நடத்தி தோல்வியடையும் நபர் தனது காதை அறுத்துக்கொள்ள வேண்டும் என்று பந்தயம் கட்டினர். இந்த அபாயகரமான விதிமுறையை இருவரும் ஏற்றதையடுத்து, களத்தில் இறங்கினர். முதல் சுற்றில் ஒருவர் வெற்றி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும் ஸ்டீபன் ராப் கேள்வி! Posted: 10 Jan 2014 10:28 PM PST திருகோணமலையில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்னவென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகார தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப் இலங்கை சட்டமா அதிபரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள இலங்கையின் சட்டமா அதிபரான பாலித பொணான்டோ, ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் கொலைகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| லண்டனில் இலங்கை இளம் தமிழ் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலங்களாக மீட்பு Posted: 10 Jan 2014 09:42 PM PST
நேற்று முன்தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு கணவர் சக்திவேல் வாகேஸ்வரன் வீட்டுக்கு வந்தபோது மூவருடைய சடலங்களை கண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம் தற்கொலையினால் சம்பவித்ததா? என்ற சந்தேகம் தொடர்வதாகவும் தெரிவித்த பொலிசார், இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழரின் கலாசாரத்தை அறியாத இராணுவம் வடக்கில் வேண்டாம்; விக்னேஸ்வரன் Posted: 10 Jan 2014 09:27 PM PST
இனரீதியான கற்கைகளுக்கான சர்வதேச மையத்தின் ஏற்பாட்டில் "வடக்கில் ஜனநாயகத்துவம்' என்னும் தலைப்பிலான கருத்துப் பகிர்வு நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: போரின் மாற்றங்களை வட மாகாணத்தில் நாம் உணரக்கூடியதாக உள்ளது. ஆட்சிமுறை, அபிவிருத்தி என்பது தொடர்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசுக்கும் மக்களும் இடையில் நல்லாட்சி முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் வடமாகாண சபையானது நல்லாட்சி உரையாடல் தொடர்பானது. சிவில் உத்தியோகத்தர்கள் சிறியதாகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. எனினும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு வடமாகாண சபை செயற்பட வேண்டியுள்ளது. அரசியல் கட்டமைப்புக்கள் மரபு ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும். வடமாகாணத்தில் இராணுவத்தினரை அகற்ற வேண்டும் என நாம் வலியுறுத்துவது இதனால் தான். சொந்தக் காணியில் பயிரிட முடியவில்லை வடக்கு மாகாணத்தில் போர் முடிந்து 5 வருடங்கள் கடந்தும் எமது மக்களைக் கொன்றுகுவித்த இராணுவத்தினர் பாதுகாப்புக்கு இருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு இதனால் பாதுகாப்பு இல்லை. மக்கள் தமது சொந்தக் காணிகளில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் அவர்களின் நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஹோட்டல்கள்தேவையில்லை மக்கள் பெருந்தெருக்களின் அபிவிருத்தியையும் ஹோட்டல்களின் வருகையையும் எதிர்பார்க்கவில்லை. தமக்கான பாதுகாப்பு, சுதந்திரம் இவற்றைத்தான் கேட்கிறார்கள். மக்களின் தேவை சரியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டத்தை வடமாகாண சபை முன்னெடுக்கும். தற்போது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அரசின் உதவியுடன் கிராம ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு இராணுவ ஆட்சி தேவைப்படாது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆளுநர் வடமாகாண சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அத்துடன் தொழில்சார் முன்னேற்றங்களைக் காண வடக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்ற தொழில்சார் நிபுணர்கள் மீண்டும் வடமாகாணத்துக்கு அழைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறானதொரு மாற்றங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் வடமாகாணத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொத்தணிக் குண்டை பாவிக்குமாறு அமெரிக்காவே கூறியது: அதனைச் செய்யவில்லையென இலங்கை மறுப்பு Posted: 10 Jan 2014 09:19 PM PST
முல்லைத்தீவு புனித அந்தோணியர் மைதானத்தில் அமெரிக்க அதிகாரிகள் நின்று எடுத்த படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை மற்றும் மன்னார் ஆண்டகை தோமஸ் சௌந்தரநாயகம் அவர்கள் போரின் போது கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டு ஆகியவற்றின் விளைவாகவே அமெரிக்கா தொடர்பான இந்தச் செய்தியை இலங்கை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர் ஒருவருக்கு இலங்கைக் கடற்படைத் தளபதி வழங்கிய பிறிதொரு செய்தியில், விடுதலைப்புலிகளின் கப்பல்களை அழிப்பதற்கான துல்லியத் தகவல்களை அமெரிக்காவே தந்து 2004ம் ஆண்டிலிருந்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்களை ஏற்றி வந்த கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந் நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியின் பிரகாரம் நோர்வேயின் முயற்சியுடனான பேச்சு ஆரம்பித்தவுடனே அமெரிக்கா செய்த பரிந்துரைகளில் ஒன்றாக இந்த கொத்தணிக் குண்டுகளைக் கொள்வனவு செய்து விடுதலைப் புலிகளிற்கு எதிராகப் பாவிக்கும்படியான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. நோர்வேப் பேச்சுக்கள் ஆரம்பித்தவுடனேயே இலங்கையின் முப்படைகளிற்கும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களில் விமானப்படைக்கென அமெரிக்காவால் வழங்கப்பட்ட அறிவுரையிலேயே இந்தக் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறான பரிந்துரை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஆதாரமும் மேற்படி செய்தியோடு இணைக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அண்ணன் தங்கை பாசம்….. உண்மைக்கும், படத்திற்கும் உள்ள வித்தியாசம்!…. Posted: 10 Jan 2014 02:38 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிங்கத்தின் நகைச்சுவையான மேஜிக்…. 100 தடவை பார்த்தாலும் சிரிச்சிட்டே இருப்பீங்க!…. Posted: 10 Jan 2014 02:26 AM PST |
| நடுவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த பெண்….. Posted: 10 Jan 2014 02:19 AM PST |
| உகாண்டாவில் இந்திய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த காட்சி… (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை) Posted: 10 Jan 2014 01:12 AM PST
உகாண்டாவில் இந்திய இளைஞர் ஒருவர் பலமாடிக் கட்டிடத்திலிருந்து தற்கொலை செய்து இறக்கும் காட்சியே இதுவாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Jan 2014 12:55 AM PST
சுமார் 200 மீற்றர்கள் ஆழத்திலிருந்து வெளியேறும் இத்தீக்குழம்பானது நீல நிறத்தில் காணப்படுவதை புகைப்படவியலாளர் ஒருவர் தனது கமெராவுக்குள் சிறைப்பிடத்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதியோர்களை உதாசினப்படுத்தும் பிள்ளைகளே இதையும் ஒருக்கா பாருங்க….. Posted: 10 Jan 2014 12:49 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிக்குகள் தலைமையிலான குழு கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் Posted: 10 Jan 2014 12:43 AM PST
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பௌத்த பிக்கு ஒருவர் வழிநடத்திய குழுவே இந்த தாக்குதலை நடத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அண்மைய காலமாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்கள் சிங்கள அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்குஉள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளுமா? Posted: 10 Jan 2014 12:32 AM PST ஐ.சி.சி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முதல் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில் 120 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் அவுஸ்திரேலியா (114), இங்கிலாந்து (111) அணிகள் உள்ளன. இதனிடையே, நியூசிலாந்து செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் போட்டி வரும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















