Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தேவயானியை மீண்டும் கைது செய்வோம்: அமெரிக்கா எச்சரிக்கை

Posted: 10 Jan 2014 11:53 PM PST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்தவர் தேவயானி கோபர்கடே. இவர் மீது விசா மோசடி மற்றும் பணிப்பெண் சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க இந்திய அரசு

மனைவிக்கு காசநோய் பாதிப்பு: பரோலை நீட்டிக்க சஞ்சய்தத் கோரிக்கை

Posted: 10 Jan 2014 11:46 PM PST

மும்பை குண்டு வெடிப்பில் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. புனே ஏர்வாடா சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த அவர் தற்போது 30 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்பதை காரணமாக கூறி வெளியே வந்துள்ள சஞ்சய்தத்தின் பரோல் காலம் வருகிற 21–ந் தேதியுடன் முடிகிறது.

மானிய விலையில் வழங்கப்படும் 12 சிலிண்டர்கள் அறிவிப்பை வெளியிட ராகுல் கோரிக்கை

Posted: 10 Jan 2014 10:52 PM PST

சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தற்போது ஒரு குடும்பத்துக்கு, ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் 9 சிலிண்டர்களே வழங்கப்பட்டு வருகிறது. இது நடுத்தர குடும்பத்து மக்களை மிகவும் பாதிப்பதாக உள்ளது. மானியம் இல்லாத சிலிண்டர்களை பெற ஒவ்வொரு தடவையும் ரூ.1,500–க்கு மேல் செலவிட வேண்டியதுள்ளது. மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தினால் மக்கள் பாதிப்பு குறையும் என்று கூறப்பட்டது.

ஆந்திர சட்டசபையில் சீமாந்திரா–தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் அடிதடி

Posted: 10 Jan 2014 10:52 PM PST

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீதான விவாதம் நடந்து வருகிறது. உறுப்பினர்களின் தொடர் அமளியால் விவாதம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 7–வது நாளான நேற்றும் சபையில் அமளி ஏற்பட்டது. காலை 9 மணிக்கு சபை கூடியதும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் ஏற்பட்ட கூச்சல்–குழப்பத்தால் சபை 30 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியதும் மீண்டும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த மாத இறுதியில் மோடி தீவிர பிரசாரம்: ஆம் ஆத்மி சவாலை முறியடிக்க வியூகம்

Posted: 10 Jan 2014 10:30 PM PST

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால், பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் முடிவு செய்துள்ளன. வரும் 17–ந்தேதி டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க.வின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு இரு கட்சிகளும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த ஆண்டே பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எல்லா பணிகளையும் தொடங்கியது. இதனால் நாடெங்கும் ''மோடி அலை'' வீசுகிறது. இதுவரை நடத்தப்பட்ட கருத்து

தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் மோடி ஆட்சி அமைப்பார்: பா.ஜனதா பாராளுமன்ற குழு நம்பிக்கை

Posted: 10 Jan 2014 10:18 PM PST

பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் 17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பாராளுமன்ற குழு நேற்று கூடி விவாதித்தது. கூட்டத்துக்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தியே தீருவது என்ற உறுதியுடன் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்துகிறோம். இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரம் அலுவலக பொறுப்பாளர்கள்

நரேந்திர மோடிக்கு அன்னாஹசாரே ஆதரவு?

Posted: 10 Jan 2014 10:13 PM PST

நரேந்திர மோடிக்கே நான் வாக்களிப்பேன் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நேற்று அறிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ''இந்தியாவுக்கு நல்ல, வலுவான தலைவர் தேவை. இப்போதைக்கு மோடியே அதற்கு தகுதியான தலைவர்'' என்று கூறி

வைகுண்ட ஏகாதசி விழா: திருப்பதி கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம்

Posted: 10 Jan 2014 10:10 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியும், நாளை துவாதசி விழாவும் கொண்டாடப்படுகிறது. விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்றே திருமலையில் குவிந்தனர். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 2 நாட்களுக்கும் தரிசனத்துக்கு 40 ஆயிரம் டிக்கெட் வழங்க முடிவு

தவறாமல் பள்ளிக்கு வரும் 1–ம் வகுப்பு மாணவிகளுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை: கர்நாடகத்தில் புதிய திட்டம்

Posted: 10 Jan 2014 10:01 PM PST

தவறாமல் பள்ளிக்கு வரும் 1–ம் வகுப்பு மாணவி களுக்கு தினமும் ரூ.2 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் கர்நா டகத்தில் அமல்படுத்தப் பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெண் குழந்தைகள் கல்வி பயில்வது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பள்ளியில் சேரும் பலர் பாதியிலேயே பள்ளிக்கு வராமல்

பாமாயில் வழக்கை வாபஸ் பெற மறுப்பு: ஊழல் தடுப்பு கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - உம்மன்சாண்டி பேட்டி

Posted: 10 Jan 2014 09:42 PM PST

கேரளாவில் 1991–1992 –ம் ஆண்டில் கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது பாமாயில் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ.2.32 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து அப்போதைய முதல்–மந்திரி கருணாகரன், நிதி

தென்இந்தியாவில் சோனியா தீவிர பிரசாரம்: அனைத்து மாநிலங்களிலும் பேசுகிறார்

Posted: 10 Jan 2014 09:13 PM PST

2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த

எனக்காக குரல் கொடுத்த நாட்டு மக்களுக்கு நன்றி: டெல்லி திரும்பிய தேவயானி பேட்டி

Posted: 10 Jan 2014 08:44 PM PST

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானியை விசா மோசடி மற்றும் பணிப்பெண்ணுக்கான சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் விடுதலையான அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி தலைமைச் செயலக வாசலில் அமர்ந்து இன்று மக்களின் கோரிக்கை மனுக்களை பெறுகிறார், கெஜ்ரிவால்

Posted: 10 Jan 2014 08:12 PM PST

'முதல்வன்' படத்தில் வரும் ஒருநாள் முதல் மந்திரி அர்ஜுன் பாணியில் டெல்லியின் முதல் மந்திரியாக பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தேசிய தலைப்பு செய்திகளில் நாள் தோறும் பேசப்படும் நபராக அரவிந்த் கெஜ்ரிவால் மாறி வருகிறார்.

டெல்லியில் ராகுல்காந்தியுடன் லாலுபிரசாத் யாதவ் திடீர் சந்திப்பு

Posted: 10 Jan 2014 07:34 PM PST

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அவர்களது இந்த சந்திப்பு சில நிமிட நேரம் மட்டுமே நீடித்தது.

இந்தியா திரும்பும் தேவயானி டெல்லியில் புதிய பணியை ஏற்கிறார்

Posted: 10 Jan 2014 07:09 PM PST

அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், தேவயானி வெளியேற்றப்பட்டார். நாடு திரும்பும் அவர் டெல்லியில் புதிய பணியை ஏற்கிறார். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இந்தியாவின் துணைத்தூதராகப் பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே (வயது 39). இவர் தனது பணிப்பெண்ணின் விசா விண்ணப்பத்தில் தவறான தகவல்கள், வாக்குமூலம்

தேவயானி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி: அமெரிக்கத் தூதரக அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டார்

Posted: 10 Jan 2014 07:07 PM PST

அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரில் உள்ள இந்தியத்தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே விசா மோசடி தொடர்பாக சென்ற மாதம் கைது செய்யப்பட்டார்.இந்தியா அளித்த விளக்கங்களைத் தொடர்ந்தும் திருப்தியுறாத அமெரிக்க அரசு அவரைத்

கூடங்குளம் 2-வது அணு உலை செப்டம்பரில் மின் உற்பத்தியை தொடங்கும்: நாராயணசாமி பேட்டி

Posted: 10 Jan 2014 02:55 PM PST

டெல்லியில் பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலை மூலம் இப்போது 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரம்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் ராகுல்காந்தி இன்று சந்திப்பு

Posted: 10 Jan 2014 12:14 PM PST

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) பெங்களூருக்கு வருகிறார். இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர்

மெட்ரோ ரெயில் திட்டத்தில் ரிலையன்ஸ் முத்திரை: சிவசேனா கடும் எதிர்ப்பு

Posted: 10 Jan 2014 11:35 AM PST

மும்பை புறநகர் பகுதியான காட்கோபரிலிருந்து அந்தேரி வழியாக வெர்சோவா வரையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு

விரைவில் வேட்பாளர் பட்டியல்: கட்சியினர் விருப்பத்தை ஏற்று ராகுல் முடிவு

Posted: 10 Jan 2014 07:59 AM PST

நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்காணல் குழுவுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™