Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தெற்கு பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு

Posted: 01 Jan 2014 11:06 PM PST

earthquake_graphic_051709_xlarge

earthquake_graphic_051709_xlargeதெற்கு பசிபிக் கடல் பகுதியில் நியூசிலாந்து, ஓசியானா, வனாத்து சாலமன் தீவுகள் உள்ளன. இதில் வனாத்து தீவுப் பகுதியை யொட்டியுள்ள தெற்கு பசிபிக்கடலில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு தாக்கியது. இது ரிக்டர் அளவில் 6.6 அளவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

96 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேத விவரம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

3வது நாளாகவும் மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது

Posted: 01 Jan 2014 10:49 PM PST

2251848-a-small-wooden-boat-anchored-in-the-bay

2251848-a-small-wooden-boat-anchored-in-the-bayஇலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, பாம்பன் மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

பாம்பன் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த 29-ம் திகதி கைது செய்தனர். இதனையடுத்து 18 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இரண்டு நாட்களாக கற்கள், போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடி வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாம்பன் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 271 தமிழக மீனவர்கள் மற்றும் 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது – ராதீகா

Posted: 01 Jan 2014 10:45 PM PST

radika

radikaகைது செய்யப் போவதாக இலங்கை அதிகாரிகள் தம்மை எச்சரித்தனர் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியான நெருக்குதல்களை சந்திக்க நேரிட்டது.

கைது செய்து நாடு கடத்த நேரிடலாம் என இலங்கை அதிகாரிகள் எச்சரித்தனர்.

நான் சிறுவயதில் வாழ்ந்து வந்த இடத்தை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.

கனேடியர்கள் என்ற ரீதியில் இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்.

அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டதனைப் போன்றேää எனக்கும் அதே நிலைமை ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுத்தனர்.

மனித உரிமைப் பாதுகாப்பு இலகுவான விடயமல்ல எனினும்ää கருத்துச் சுதந்திரம் மற்றும் திறந்த பேச்சுவார்த்தைகளின் மூலமாக மனித உரிமைகளை பாதுகாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

3600 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா

Posted: 01 Jan 2014 10:40 PM PST

heliy

heliyமுக்கிய பிரமுகவர்களுக்காக 12 நவீன சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க, ஆங்கில இத்தாலிய நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

லஞ்சப் புகாரின் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பெற இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு 360 ரூபா கோடி லஞ்சம் தரப்பட்டதாக கடந்த 2010-ம் ஆண்டு புகார் எழுந்தது.

லஞ்சம் தந்தது தொடர்பாக அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, அது தொடர்பான விசாரணை இத்தாலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இந்திய விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகிக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

ஒப்பந்தத்தின்படி மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை இந்தியா கொள்முதல் செய்யவிருந்தது. அதில் 3 ஹெலிகாப்டர்களை அந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கிவிட்டது. அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையில் 30 சதவீதத்தை இந்தியா வழங்கிவிட்டது.

இந்நிலையில், லஞ்ச விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஒப்பந்தத்தை முடக்கிவைப்பதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா அறிவித்தது.

பின்னர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியது. அந்நிறுவனம் அளித்த பதிலை இந்தியா நிராகரித்துவிட்டது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் வைத்திருந்த ஆவணத்தை ஆராய்ந்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதியது.

இதற்கிடையே இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், சர்வதேச மத்தியஸ்தர் குழுவை நாடியது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஆகியோர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை அவர்கள் எடுத்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதிகள் மீதும் கரிசனை கொள்ள வேண்டும்: போப்

Posted: 01 Jan 2014 10:35 PM PST

நகரங்களை வடிவமைப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாது, இருப்பிடங்களை இழந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதும் கரிசனை கொள்ள வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் பாப்பரசர் பதவியேற்றதன் பின்னர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது முதலாவது புத்தாண்டு திருப்பலி பூஜைகளை ஒப்புக்கொடுத்தார். கடந்த வருடம் இத்தாலி நாட்டிற்கே அதிகளவான அகதிகள் தஞ்சமடைந்ததாக சுட்டிக்காட்டிய பாப்பரசர், அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். திருப்பலியின் பின்னர் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களிடம் பாப்பரசர் […]

சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு தள்ளி பிறந்த இரட்டை குழந்தைகள்

Posted: 01 Jan 2014 10:01 PM PST

baby

babyநேற்று முன்தினம் அமெரிக்காவில் 2 பெண்களுக்கு நடைபெற்ற வெவ்வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.

கடந்து சென்ற டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் வைத்தியசாலையில் 31ம் திகதி நள்ளிரவு 11.58 மணிக்கு லொர்ரெய்ன் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்கு நடைபெற்ற தலைப் பிரசவத்தில் 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில் (அதாவது) 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவு 12.01 மணிக்கு இரண்டாவதாக 5 பவுண்ட் எடையுடன் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பில் உள்ள கால இடைவெளி வெறும் 3 நிமிடங்கள் மட்டும்தான் என்றபோதிலும், முன்னதாக பிறந்த பெண் குழந்தையின் பிறந்த தேதி 31-12-2013 என்றும், அடுத்ததாக பிறந்த ஆண் குழந்தையின் பிறந்த தேதி 1-1-2014 எனவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், டொரொண்டோ நகரில் உள்ள கிரெடிட் வேல்லி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட லிண்ட்ஸே ஸல்குவெரியோ என்ற பெண்ணுக்கு 31-12-2013 பின்னிரவு 11.52 மணிக்கு 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்த 8 நிமிடங்களில் (அதாவது) 1-1-2014 அதிகாலை 12 மணி 38 விணாடிக்கு மற்றொரு பெண் குழந்தையையும் அவர் பிரசவித்தார்.

ஒரே பிரசவத்தில், வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 2 தாய்களும், அவர்களின் 4 குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவேன்: ரஷ்ய ஜனாதிபதி சூளுரை

Posted: 01 Jan 2014 09:56 PM PST

russia

russiaரஷ்யாவின் வோல்காகிரேட் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அங்கு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அங்கு ஒரு ரயில் நிலையத்திலும், டிராலி பஸ்சிலும் கடந்த 26, 27 திகதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இந்தக் குண்டு வெடிப்புகளில் 34 பேர் பலியாகி விட்டனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி ஜனாதிபதி விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அங்கு வடக்கு காகசஸ் பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக்கோரி, தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அங்கு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசினார்.

அப்போது அவர் இரண்டு குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் செய்தார். நாட்டில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் பொதுமக்கள் மலர் கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது

Posted: 01 Jan 2014 09:41 PM PST

warcrime-picture

warcrime-pictureஇலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது.

அதற்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைக்கு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை அவசியம். யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் இதுவரை அரசியல் தீர்வு எட்டப்படவில்லை.

ஆயுத ரீதியான போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் முடிந்த பின்னர் ஒரு தீர்வு எட்டப்படும் போதே உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு சாத்தியப்பாடானது. ஆனால் இந்த நியதிக்கு மாறாக இலங்கையில் இதனை நடைமுறைப் படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற பொதுநாலவாய மாநாட்டுக்கு வருகை தந்திருந்த தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியிடம் அங்கு இந்தப் பொறிமுறையை அமுல்படுத்தி எவ்வாறு பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டது என்பது தொடர்பிலும் அதனை இங்கு அமுல்படுத்துவதன் மூலம் இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுவது குறித்தும் இலங்கை அரசாங்கம் கருத்து தெரிவித்து இருந்தது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பிரச்சனையின் போது சம்மந்தப்பட்ட இருதரப்பு ஒரு இணக்கப்பாட்டுக்குள் வந்து தங்களுக்குள் பரஸ்பரம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.

வெறுமனவே போர் குற்றம் மட்டும் நடந்திருந்தால் போரில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு தீர்வின் ஊடாக பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆராயலாம் ஆனால் இங்கு நடந்தது திட்டமிட்ட ஒரு இனவழிப்பு அதற்கு பொது மனிப்பு வழங்க முடியாது.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும் இன்றும் திட்டமிட்டவகையில் இன அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாயக் கருத்தடை கூட ஒரு இன அழிப்பின் அடையாளமே.

இந் நிலையில் தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமானா ஆணைக்குழு என்ற பொறிமுறை இங்கு சாத்திப்பாடானது அல்ல. நாம் அதற்கு இணங்கி போக முடியாது. அப்படி யாராவது இணங்கி போனால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

இலங்கையை பொறுத்தவரைக்கும் திட்டமிட்ட தமிழ் மக்களின் மீதான இனவழிப்பை நிறுத்துவதன் ஊடாகவே தீர்வை எட்டலாம் என தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்­லைன்­ஸ் விமானம் ; பயணிகள் மயிரிழையில் தப்பினர்

Posted: 01 Jan 2014 09:32 PM PST

srilankan_air-60x60

mumbai airportகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானத்தின் முன் கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவானது. இதன் மூலம் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான யூ.எல்.503 என்ற விமானம் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் லண்டன் நோக்கி பயணிப்பதாக இருந்தது.

எனினும் ஒரு மணி நேர தாமதத்தின் பின்னர் குறித்த விமானம் 3.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

பயணத்தை ஆரம்பித்து அரை மணி நேரத்துக்குள் அந்த விமானம் கட்டுப்பாட்டறையுடன் தொடர்பு கொண்டு மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் முன் கண்ணாடியில் ஏற்பட்ட வெடிப்பே இதற்கு காரணமாகும். இந்தவெடிப்பையடுத்து விமானத்திற்குள் அமுக்கம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அனைத்து பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து பயணிகளை ஒக்ஸிசன் வாயுக் கருவிகளை பொருத்திக் கொள்ளுமாறு விமானக் கப்டன் அறிவித்துள்ளார்.

இதனால் அதில் பணித்த 250 பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.

விமானம் அவசரமாக தரையிறக்கபட்டமையினால், பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன் விமானத்திலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

சம்பவத்தை அடுத்து தரையிறக்கப்பட்ட விமானம் நேற்று இரவு வரை தனது லண்டன் நோக்கிய பயணத்தை தொடரவில்லை.

இந் நிலையில் லண்டன் நோக்கி பயணிக்க தயாரான பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த விமானத்தில் பணித்த பயணிகள் நேற்றிரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்கு தொடர சந்தர்ப்பம்

Posted: 01 Jan 2014 09:04 PM PST

email

emailஇலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் மார்ச் மாதமளவில் மின்னஞ்சல் மூலம் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர மக்களுக்கு சந்தர்ப்பம் கிட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்றின் பதிவாளர் நாயகம் மஹேசி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதன்படி தூரப் பிரதேசங்களில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் நலன்களைப் பெற்றுக்கொள்ள இந்த வழி உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல் கட்டமாக அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்து வழக்குத் தொடர முடியும். அத்துடன் 24 மணித்தியாலங்களும் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பயண செலவுகள் கிடையாது. வழக்கு தொடர்பான மூல ஆவணங்களை பின்னர் நீதிமன்றிடம் ஒப்படைக்க முடியும். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளும் விசாரணை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™