மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
- சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் நடை திறப்பு நேரம் அதிகரிப்பு
- உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் மீண்டும் முதல்வராகிறார்?
- சபரிமலை கோவில் குறித்து அவரவர் மொழியில் பக்தர்கள் டெலிபோனில் விபரம் அறியும் வசதி: தேவசம் போர்டு ஏற்பாடு
- இலாகா மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆந்திரா மந்திரி ராஜினாமா முடிவு- கிரண்குமார்ரெட்டி மீது சரமாரி புகார்
- புத்தாண்டில் 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தவற விட்டு 30 நிமிடத்தில் திரும்ப பெற்ற வியாபாரி
- ரெயில் டிக்கெட் கோட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு?: சி.பி.ஐ. விசாரணையில் தகவல்
- பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை: குடிபோதையில் இளைஞர் வெறிச்செயல்
- திருப்பதியில் ரூ.773 கோடி உண்டியல் வருமானம்: கடந்த ஆண்டை விட குறைந்தது
- கேரளாவில் இனி காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருக்காது: ரமேஷ் சென்னிதலா பேட்டி
- ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் போர்டு உறுப்பினர்
- தூக்கம் ஒரு மனிதனின் மூளைச்சிதைவை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல்
- குறிப்புகள் எழுதப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும்: ரிசர்வ் வங்கி
- டெல்லி அரசை கவிழ்த்தால் காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரசாந்த் பூஷன் பேட்டி
- டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள்
- அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணியா?: டாக்டர் ராமதாஸ் பதில்
- இலவச குடிநீர், பாதி விலையில் மின்சாரத்தை தொடர்ந்து இரவு காப்பகங்கள்: கெஜ்ரிவால் அறிவிப்பு
- இமாசல பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
- டெல்லியை போல மும்பையில் மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம்: காங்கிரஸ் எம்.பி. போர்க்கொடி
| காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் ஊழலில் வித்தியாசம் இல்லை: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு Posted: 01 Jan 2014 11:04 PM PST ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளில் ஒருவரான பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த நாட்டின் குடிமகன் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரலாம். ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் இல்லை. எங்கள் கட்சியில் பிரதமராக தகுதி படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். காங்கிரசைப் போல் பாரதீய ஜனதாவும் ஊழல் நிறைந்த கட்சிதான். பாரதீய |
| சபரிமலையில் மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் நடை திறப்பு நேரம் அதிகரிப்பு Posted: 01 Jan 2014 10:34 PM PST பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30–ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் அய்யப்பப் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று புத்தாண்டு தினத்தையொட்டி வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் கூட்டம் |
| உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் மீண்டும் முதல்வராகிறார்? Posted: 01 Jan 2014 10:34 PM PST உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக அந்த கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உள்ளார். முலாயம்சிங் யாதவ் பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்ற ஆசையுடன் தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளில் இல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3–வது அணியை ஏற்படுத்தி பிரதமராகி |
| Posted: 01 Jan 2014 10:16 PM PST கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு விழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பல்வேறு மொழிகள் பேசும் அவர்களுக்கு சபரிமலை கோவில் பற்றியும் அங்கு நடைபெறும் வழிபாட்டு விவரங்கள் குறித்தும் முழுமையாக தெரிவதில்லை. இதற்கு தீர்வு காண வேண்டுமென இங்கு வந்த பக்தர்கள் பலரும் தேவசம் போர்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். |
| இலாகா மாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆந்திரா மந்திரி ராஜினாமா முடிவு- கிரண்குமார்ரெட்டி மீது சரமாரி புகார் Posted: 01 Jan 2014 10:12 PM PST ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி நேற்று தனது மந்திரி சபையை மாற்றி அமைத்தார். இதன்படி உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரி ஸ்ரீதர்பாபு வசம் கூடுதலாக இருந்த சட்டமன்ற விவகாரத்து துறை பறிக்கப்பட்டது. இந்த இலாகா பள்ளி கல்வித்துறை மந்திரி சைலஜாநாத்துக்கு வழங்கப்பட்டது. ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீது நாளை (3–ந் தேதி) |
| புத்தாண்டில் 5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தவற விட்டு 30 நிமிடத்தில் திரும்ப பெற்ற வியாபாரி Posted: 01 Jan 2014 10:05 PM PST மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்கோபர் பகுதியில் வசித்து வருபவர் சந்தீப் ஜெயின். அவர் புத்தாண்டான நேற்று மும்ப்ராவிலுள்ள தனது வாடிக்கையாளருக்கு காண்பிப்பதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு கட்கோபர் ரெயில் நிலையத்தில் சி.எஸ்.டியிலிருந்து கல்யாண் செல்லும் மெட்ரோ ரெயிலில் ஏறினார். ரெயிலில் ஏறிய உடன் மேலே உள்ள அடுக்கில் நகைப் பையை வைத்த அவர் மும்ப்ராவில் இறங்கும் போது அதை |
| ரெயில் டிக்கெட் கோட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு?: சி.பி.ஐ. விசாரணையில் தகவல் Posted: 01 Jan 2014 09:51 PM PST ரெயிலில் பயணம் செய்ய வி.ஐ.பி க்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் "எமர்ஜென்சி கோட்டா" டிக்கெட் ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. ரெயில்வே துறை உயரதிகாரிகளும், ரெயில்வே சங்கத்தினர்களும் இக் கோட்டாவை தவறாக பயன்படுத்தி ரெயில் டிக்கெட் ஏஜென்டுகள் மற்றும் தனியார் தொழிலதிபர்களுடன் இணைந்து அதிக விலைக்கு |
| பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை: குடிபோதையில் இளைஞர் வெறிச்செயல் Posted: 01 Jan 2014 09:40 PM PST பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது அருந்தியபடி புத்தாண்டு |
| திருப்பதியில் ரூ.773 கோடி உண்டியல் வருமானம்: கடந்த ஆண்டை விட குறைந்தது Posted: 01 Jan 2014 08:52 PM PST திருமலை ஏழுமலையானை கடந்த ஆண்டு 2013–இல் 1.96 கோடி பக்தர்கள் தரிசித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் 2013–ம் ஆண்டு தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை உண்டியல் வருமானத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 2010–ம் ஆண்டு 2.14 கோடி பக்தர்களும், 2011–இல் 2.24 கோடி பக்தர்களும், 2012–இல் 2.43 கோடி பக்தர்களும் தரிசித்துள்ளனர். வரிசையாக அதிகரித்து வந்த பக்தர்கள் எண்ணிக்கை ஆந்திர மாநிலத்தில், நடைபெற்ற தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக 2013–ம் ஆண்டில் 1.96 கோடி பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2012–ம் ஆண்டை விட 50 லட்சம் |
| கேரளாவில் இனி காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருக்காது: ரமேஷ் சென்னிதலா பேட்டி Posted: 01 Jan 2014 08:42 PM PST கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக உம்மன்சாண்டி இருந்து வருகிறார். இவரது மந்திரிசபையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை மந்திரி பதவி அளிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ரமேஷ் சென்னிதலா பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் கேரள காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசலுக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பதவியேற்ற பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரமேஷ் சென்னிதலா கோஷ்டி பூசலை மறந்து செயல்படப்போவதாக கூறினார். அவரது பேட்டி வருமாறு:– |
| ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் போர்டு உறுப்பினர் Posted: 01 Jan 2014 07:46 PM PST இன்போசிஸ் நிறுவனத்தில் போர்டு உறுப்பினராக பதவி வகித்த வி.பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன் பதவி விலகியது பெரு நிறுவன வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளதாக வந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் அக்கட்சியில் சேர்ந்துள்ளதை அவர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி அரசியல் |
| தூக்கம் ஒரு மனிதனின் மூளைச்சிதைவை தடுக்கும்: விஞ்ஞானிகள் தகவல் Posted: 01 Jan 2014 07:42 PM PST ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல்நலத்திற்கு நல்ல தூக்கமும் ஒரு காரணமாக உள்ளது. தூக்கம் இல்லாமை என்பது மாரடைப்பு, உடற்பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர். சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வானது தூக்கமின்மை என்பது எவ்வாறு மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதை தெரிவிப்பதாக உள்ளது. உப்சாலா பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் ஒரு |
| குறிப்புகள் எழுதப்பட்டு வரும் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ளும்: ரிசர்வ் வங்கி Posted: 01 Jan 2014 07:25 PM PST கடந்த ஒரு மாத காலமாக சமூக இணையதளங்களில் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் எந்த வங்கிகளும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்ற வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. அதனால் பொதுமக்கள் அத்தகைய நோட்டுகளை எங்கு மாற்றுவது என்று குழப்பத்தில் இருந்தனர். இதனைத் தெளிவுபடுத்தும் விதத்தில் இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. சமீபத்தில் வெளியாகியுள்ள இத்தகைய வதந்திகள் குறித்து கவலைப்படாமல் |
| டெல்லி அரசை கவிழ்த்தால் காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரசாந்த் பூஷன் பேட்டி Posted: 01 Jan 2014 03:15 PM PST ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லி தேர்தல் வெற்றியை தொடர்ந்து அங்கு நாங்கள் அரசு அமைத்து உள்ளோம். அரசு அமைக்க நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அவர்கள் கட்டாயத்தின் பேரில் எங்களுக்கு ஆதரவு வழங்கி உள்ளனர் |
| டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு: காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு ஆம் ஆத்மி வேண்டுகோள் Posted: 01 Jan 2014 12:53 PM PST டெல்லி சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, பல்வேறு இழுபறிக்குப்பின் ஆட்சி அமைத்தது. அதன்படி அக்கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 28-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 6 பேர் மாநில மந்திரிகளாக பதவி ஏற்றனர் |
| அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Posted: 01 Jan 2014 11:37 AM PST டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் தோழியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக பல்லப்கர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார் |
| பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணியா?: டாக்டர் ராமதாஸ் பதில் Posted: 01 Jan 2014 11:27 AM PST பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ் சமூக ஊடக பேரவை விளக்க கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தமிழ் சமூக ஊடக பேரவையை பயன்படுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் போல் வீடு வீடாக சென்று பாராளுமன்ற தேர்தலில் மக்களை சந்தித்து ஆதரவு அளிக்க கேட்டு கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- |
| இலவச குடிநீர், பாதி விலையில் மின்சாரத்தை தொடர்ந்து இரவு காப்பகங்கள்: கெஜ்ரிவால் அறிவிப்பு Posted: 01 Jan 2014 10:57 AM PST டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக தனது வீட்டில் ஆலோசனை நடத்திய அவர், அனைத்து குடும்பங்களுக்கும் |
| இமாசல பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் Posted: 01 Jan 2014 09:58 AM PST பாரதீய ஜனதா இளைஞர் அணி தலைவர் அனுராக்சிங் தாகூர் எம்.பி. இன்று தேர்தல் ஆணையர் வி.சம்பத்தை சந்தித்து இமாசல பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், அவருடைய மனைவி பிரதிபா சிங் எம்.பி. ஆகியோர் மீது ஒரு புகார் மனு கொடுத்தார் |
| டெல்லியை போல மும்பையில் மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம்: காங்கிரஸ் எம்.பி. போர்க்கொடி Posted: 01 Jan 2014 08:02 AM PST டெல்லியை போல மும்பையில் மின்கட்டணத்தை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று காங்கிரஸ் எம்.பி. போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |