Tamil News | Online Tamil News |
- ராகுலின் இமேஜை உயர்த்த500 கோடியில் ஒப்பந்தம்?
- பிரதமர் போட்டியில் ஸ்டாலின்? தேசிய அரசியலில் குதிக்க ஆர்வம்
- மத்தியில் ஆட்சியை பிடிக்க மகாராஷ்டிராவை குறி வைக்கும் அரசியல் கட்சிகள்
- விவசாயிகளிடம் போலீசார் அடாவடி வசூல் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம்
- தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- அப்பாவிகள் மீது தவறாக குற்றம் சாட்டும் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்'
- 'சேது சமுத்திர திட்டம் கூடாது': சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
- லஷ்கர் அமைப்புடன் உறவாடும் முசாபர் நகர் மக்கள்: போலீசாரிடம் சிக்கிய நபர்கள் 'பகீர்' தகவல்
- பிரியங்காவும் அரசியல் களத்தில் குதிக்க தயார் : காங்., கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்
- கூட்டணிக்காக சொந்த மகனையே கருணாநிதி கை கழுவினார் : தே.மு.தி.க., விவகாரத்தில் அழகிரிக்கு கண்டிப்பு
| ராகுலின் இமேஜை உயர்த்த500 கோடியில் ஒப்பந்தம்? Posted: புதுடில்லி;காங்., துணைத் தலைவர் ராகுலின் இமேஜை உயர்த்துவதற்காக, ஜப்பானை சேர்ந்த விளம்பர நிறுவனங்களுடன், 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.மத்தியில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சி காலம் நிறைவடைவதை அடுத்து, விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை காங்., துணைத் தலைவர் ராகுலை, கட்சியின் பிரதமர் வேட்பாளராகஅறிவிக்கும் ஏற்பாட்டில், காங்., தீவிரம் காட்டி வருகிறது.இதுகுறித்து, வடமாநிலங்களில் பிரபலமான இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது: ராகுலின் இமேஜை உயர்த்த, காங்., புது வியூகம் ... |
| பிரதமர் போட்டியில் ஸ்டாலின்? தேசிய அரசியலில் குதிக்க ஆர்வம் Posted: தேசிய அரசியலில் ஈடுபடும் ஆர்வம், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆர்வத்தை, வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிப்படுத்தி உள்ளார்.அந்த பேட்டியில், 'தேசிய அரசியலுக்கு வரும் தருணமாக, இதை நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் தேசிய அரசியலுக்கு நீங்கள் வரக்கூடாது?' என்ற கேள்விக்கு, ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:தி.மு.க.,வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று, மாநிலத்தில் சுயாட்சி;மத்தியில் கூட்டாட்சி. எனவே, தேசிய அரசியலில் ஏற்கனவே, தி.மு.க., கூட்டணி அமைத்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தது.கூட்டணி இல்லாத சூழ்நிலையிலும், ... |
| மத்தியில் ஆட்சியை பிடிக்க மகாராஷ்டிராவை குறி வைக்கும் அரசியல் கட்சிகள் Posted: மும்பை: லோக்சபா தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 48 லோக்சபா தொகுதிகளை உடைய மகாராஷ்டிராவின் பக்கம், முக்கிய கட்சிகளின் கவனம் திரும்பியுள்ளது. மாநிலத்தில், ஏற்கனவே, பா.ஜ., - சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணி லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், டில்லியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள, ஆம் ஆத்மியும், களம் காணவுள்ளது. மண்ணின் மைந்தர்கள் கொள்கையை முன்னிறுத்தி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேயும், தேர்தல் களத்தில் இறங்கவுள்ளதால், மகாராஷ்டிராவில், பலத்த போட்டி நிலவும் சூழ்நிலை ... |
| விவசாயிகளிடம் போலீசார் அடாவடி வசூல் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் Posted: நெல் அறுவடை இயந்திரம், ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், போலீசார் அடாவடியாக வசூல் செய்வது, விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம் வசூலிக்கும் நோக்கத்தோடு, வாகன சோதனை செய்வது, பல அப்பாவி மக்கள் இறப்பிற்கும் காரணமாகிறது.மேய்ச்சலுக்காக...:வேளாண் தொழில் அதிகம் உள்ள தமிழகத்தில், விவசாயம் சார்ந்த கருவிகள் மற்றும் கால்நடைகளை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல, லாரி உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் பணிக்கு நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர் பயன்படுத்தப்படுகின்றன.நிலம் மற்றும் செங்கல் சூளையில் வேலை செய்ய, ... |
| தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: சென்னை:'இலங்கை கடற்படையால், சிறை பிடிக்கப்பட்ட, 275 அப்பாவி தமிழக மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான, 84 படகுகளையும் விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:சமீப காலமாக, கடலோரப் பகுதிகளில், கட்டு மரத்தில் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால், மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இம்மாதம், 2ம் தேதி, ஐந்து இயந்திரப் படகுகளில் சென்ற, ராமநாதபுரம் மீனவர்கள், மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்த போது, இலங்கை ... |
| அப்பாவிகள் மீது தவறாக குற்றம் சாட்டும் போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்' Posted: புதுடில்லி : 'எந்த ஒரு கிரிமினல் வழக்கிலாவது, குற்றம் சாட்டப்பட்டவர், கோர்ட்டால், நிரபராதி என விடுவிக்கப்பட்டால், அந்த விசாரணையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிக்கு தண்டனை அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.ஆறு வயது சிறுமியை, கற்பழித்து, கொலை செய்ததாக, ஒருவர் மீது, வழக்கு தொடரப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில், இது பொய் வழக்கு என, தெரியவந்தது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவித்த நீதிபதிகள், சி.கே.பிரசாத், ஜெ.எஸ்.ஹேகர் ஆகியோர் அடங்கிய,'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:கிரிமினல் வழக்குகளை ... |
| 'சேது சமுத்திர திட்டம் கூடாது': சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு Posted: புதுடில்லி: 'சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது' என வலியுறுத்தி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. கடந்த, 2005ல், ஐ.மு., கூட்டணியின், முதலாவது ஆட்சியின் போது, சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டது. 2,100 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, இந்தத் திட்டம் துவக்கப்பட்டது.நாட்டின் மேற்குப் பகுதியிலிருந்து வரும் கப்பல்கள், இலங்கையைச் சுற்றி வராமல், நேரடியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, இந்தத் திட்டம் ... |
| லஷ்கர் அமைப்புடன் உறவாடும் முசாபர் நகர் மக்கள்: போலீசாரிடம் சிக்கிய நபர்கள் 'பகீர்' தகவல் Posted: புதுடில்லி : உ.பி.,யில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை சந்தித்ததாக, லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த இருவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இது, அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 'இவர்கள் சந்தித்த நபர்கள், முசாபர் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல' என, டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.கலவரம்:உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், ... |
| பிரியங்காவும் அரசியல் களத்தில் குதிக்க தயார் : காங்., கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம் Posted: புதுடில்லி: காங்., துணைத் தலைவர் ராகுல் வீட்டில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், காங்., தலைவர் சோனியாவின் மகள், பிரியங்கா, நேற்று, திடீரென கலந்து கொண்டார். இது, காங்., வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், காங்கிரசில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஊழல்:தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, இன்னும் சில மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தொடர்ந்து, 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் காங்., கூட்டணி அரசு, பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ளதால், மக்கள் ... |
| கூட்டணிக்காக சொந்த மகனையே கருணாநிதி கை கழுவினார் : தே.மு.தி.க., விவகாரத்தில் அழகிரிக்கு கண்டிப்பு Posted: விஜயகாந்தை விமர்சித்து, அழகிரி அளித்த பரபரப்பு பேட்டியால், தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் கோபம் அடைந்த ஸ்டாலின் கொடுத்த, "பிரஷர்' காரணமாக, "அழகிரியின் கருத்துக்கும், தி.மு.க.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சி கட்டுப்பாட்டை குலைக்க முயற்சிப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; கட்சியை விட்டே நீக்கி வைக்கப்படுவர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், கூட்டணிக்காக, சொந்த மகனையே கைகழுவும் நிலை, கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளது.மதுரை போஸ்டர் விவகாரமும், அதன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 08,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |