ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சொல்லிவிட துடிக்கும் கண்கள்
- இன்று 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாள்
- இன்று பிறந்த நாள் காணும் ஜாஹீதா பானு (மாமி) அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
- குரங்கும்.. தோட்டக்காரனும்..!!
- 12 லட்சம் கொடுத்து காருக்கு பதிவு எண்1 வாங்கிய தொழில் அதிபர் !
- எனதருமைக் கவிதைத் திருடர்களே!
- அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -82)
- அறிமுகம் இமாம்
- மண்டையோட்டுப் புதையல்கள்
- பெற்ற குழந்தைகளைரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை
- சாட்சியங்கள்
- நூலிடைக் காதல்
- விண்டோஸ் 7 உதவி தேவை
- தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்
- வாழ்த்துக்கள் --வேகத்திற்கு
- பாமரர் தேவாரம்
- ஜிசாட்14செயற்கைக்கோளின்பாதை அதிகரிப்பு
- 63 நாயன்மார்களின் பெயர்களும் அவர்கள் வாழ்ந்த காலமும்
- திருவெம்பாவை
| Posted: 07 Jan 2014 10:28 AM PST (சொல்லிவிட துடிக்கும் கண்கள்) ! "உன் கண்கள் எதையோ சொல்லிவிட துடிக்கிறது ஒன்னும் தெரியாதது போல் நடிக்கிறது உன் உதடு....!!!! ! ! (solli vida dhudikkum kangal) ! "un kangal ethaiyo solli vida dhudikkiradhu onnum theriyaathadhu poal nadikkiradhu un uthadu....!!!! ¥===<===============>===¥ ! by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை |
| இன்று 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாள் Posted: 07 Jan 2014 09:21 AM PST இன்று 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி அவர்களின் பிறந்தநாள் அபிநய சரஸ்வதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். |
| இன்று பிறந்த நாள் காணும் ஜாஹீதா பானு (மாமி) அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 07 Jan 2014 08:49 AM PST இன்று பிறந்த நாள் காணும் ஜாஹீதா பானு (மாமி) அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ![]() |
| லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு Posted: 07 Jan 2014 08:20 AM PST விமானத்திற்கு அருகே விநோதமான பறக்கும் தட்டை பார்த்ததாக விமானி ஒருவர் கூறியிருக்கிறார். லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு மேற்கில் உள்ள பெர்க்ஷைர் பகுதிக்கு மேலே, 34,000 அடி உயரத்தில் ஏ320 ஏர்பஸ் பயணிகள் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தின் இடதுபுறத்தில் திடீரென புட்பால் வடிவத்தில் ஒரு மர்மபொருள் பறந்தது. விமானத்தை மோதுவதுபோல் வேகமாக வந்த அந்த பறக்கும் தட்டை பார்த்த விமானி திகைத்துப் போனார். பறக்கும் தட்டு விமானத்தில் மோதுவதை தடுக்கமுடியாது என்று விமானி ... |
| குரங்கும்.. தோட்டக்காரனும்..!! Posted: 07 Jan 2014 08:13 AM PST ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும். ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய ... |
| 12 லட்சம் கொடுத்து காருக்கு பதிவு எண்1 வாங்கிய தொழில் அதிபர் ! Posted: 07 Jan 2014 08:09 AM PST மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் வாகனங்களுக்கான பதிவு எண்ணில் பேன்சி நம்பர்களை ஏலம் விடும் முறையை போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது. எனவே தங்களுக்கு பிடித்தமான நம்பர், லக்கி நம்பர், பேன்சி நம்பர் போன்றவற்றை பெற விரும்புவோர் தாங்கள் கேட்கும் பதிவு எண்ணை வேறு யாரும் கேட்காத பட்சத்தில் போக்குவரத்து துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே எண்ணை கேட்கும் போது ஏல முறையில் வழங்குவது வழக்கம். இந்நிலையில் எண்.1 என்ற கார் எண்ணை ரூ.1 லட்சம் விலை வைத்து மும்பை ... |
| Posted: 07 Jan 2014 07:42 AM PST (முகநூலிலும் வேறுசில வலைப்பூக்களிலும் எனது கவிதைகளில் சில களவாடப்பட்டு வேறு சிலர் பெயரில் வெளியிடப்பட்டதைக் கண்டபோது ஏற்பட்ட உணர்வுகளை இப்படித்தான் பிரதிபலிக்க முடிந்தது என் பேனாவால்...) எனதருமைக் கவிதைத் திருடர்களே! எப்படிப் போகிறது உங்கள் எழுத்துத் திருட்டு? திருடியவரை எல்லாம் திருப்திதானே? கடைசியாகக் களவாடிய கவிதைகள் எத்தனை? எப்படி இசைகிறது உங்கள் மனம் இந்த எச்சில் பிழைப்பிற்கு? எப்போது உணர்வீர்கள் இது எவ்வகையிலும் ஏற்கத்தகாததென்பதை? அது எப்படியது? நகலெடுத்துப் ... |
| அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு Posted: 07 Jan 2014 07:34 AM PST இன்னும் அச்சிலிருந்து வராத 80 ரூபாய் புத்தகத்தின் ஒரு காப்பி 5000 ரூபாய்க்கு விற்ற ஆச்சரியம் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே இசைக்கச்சேரிகள் களை கட்டுகிறதோ இல்லையோ, இலக்கிய கச்சேரி களைகட்டி விடும். புத்தக கண்காட்சியை குறிவைத்து எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இயங்கும், தங்கள் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும் எழுத்தாளர்களை ப்ரமோட் செய்யவும் இலக்கிய சர்ச்சை என்னும் அடிதடி நடைபெறுவது வாடிக்கையான ஒன்று. இந்த ஆண்டும் இப்படியான ஒரு இலக்கிய சர்ச்சை நடந்துகொண்டுள்ளது, ஆனால் இதில் எல்லாம் சிக்காமல் நிசப்தம்.காம் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -82) Posted: 07 Jan 2014 06:14 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 07 Jan 2014 06:12 AM PST பெயர்: இமாம் சொந்த ஊர்: திருகோணமலை ,இலங்கை . ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: தேடுதல்கள் மூலம் பொழுதுபோக்கு: கவிதை எழுதுவது . தொழில்: .வியாபாரி ... மேலும் என்னைப் பற்றி: எதிலும் ஆர்வமுள்ளவன் |
| Posted: 07 Jan 2014 06:05 AM PST இங்கே தோண்டப்படுவது பொன்னாலான புதையல்களல்ல மண்டையோட்டு குவியல்கள் . மனித உடல்களின் அவியல்கள் மன்னர்கள் ஆண்ட மன்னார் புதைகுழி மன்னராட்சி நடந்த மானிடர் கதக்களி மடையர்கள் கூட்டத்தின் இரகசிய வேட்டை காடையர்களின் காட்டுமிராண்டிச் சேட்டை புதைந்தது பூக்களும் மா ( ஆ)க்களும் குழந்தையர் பிஞ்சுகளும் அன்னையர் பஞ்சுகளும் அன்பில் மிகுந்த தந்தையரும் அன்னர்களும் பரிதவிக்க பரிதவிக்க பச்சிளம் தம்பிமாரும் எத்தனை அக்காமார்கள் தொலைந்தனரோ தேடுதலுக்காய் போடப்பட்ட எத்தனையோ விலாசங்கள் ... |
| பெற்ற குழந்தைகளைரயிலில் தவிக்கவிட்டு ஓடிய தாய்: 10 நாட்களில் குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்த தந்தை Posted: 07 Jan 2014 06:01 AM PST பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டார். தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கங்கா ச கர் விரைவு ரயிலில் சென்ற அவர் தனது 3 பெண் குழந்தைகளையும் பரௌனி சந்திப்பு ரயில் நிலையத்தில் நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடிவிட்டார். ரெயில் நிலையத்தில் 3 குழந்தைகளும் அழுதுகொண்டு நின்றிருந்ததை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை மீட்டு பாட்னாவிலுள்ள பிரயாஸ் ... |
| Posted: 07 Jan 2014 04:37 AM PST எத்தனை தடவைகள் நான் அந்த வேலியைக் கடந்து வந்திருப்பேன் என் கால் பட்ட காயங்கள் சாட்சி அக்கணங்களில் ஏற்பட்ட புண்ணுக்கு வெறும் மண்ணைத் தானே தடாவி விட்டாய் இப்பொழுது வடுக்கள் சாட்சி. நான் உள்ளே வர நீ உயர்த்தி விட்ட வேலிக்கம்பிகள் என்னை இம்சித்தன இப்போது அவை அகன்றிருக்கும் காட்சி சாட்சி காட்டுப் பாதையில் புற்களும் கற்களும் நடை தள்ளாட்டின இப்போது ஒற்றையடிப் பாதை சாட்சி மரத்தின் மீதேறி உட்கார்ந்து அங்கலாய்த்துக் கொண்ட போது முறிந்து வீழ்ந்தோமே ... |
| Posted: 07 Jan 2014 02:49 AM PST விரகம் என்னை வதைத்தாலும்!!! நரகம் என்னைத் தீண்டினாலும்!!! கிரகங்கள் சேரும் வரையாவது-நான் விரதம் இருப்பேன் ... நூலிடையில் நுழையாத காற்றைவிட தோலிடையில் நுழையும் காதல் மேலானது என்பதற்காக. |
| Posted: 07 Jan 2014 12:45 AM PST நண்பர்களே எனது லேபில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்தேன். ரீஸ்டார்ட் ஆகும்போதெல்லாம் ஆஸ்க்மீ லேட்டர் என்று கேட்கிறது,திரை கருப்பாக மாறிவிடுகிறது என்ன செய்வது என தெரிந்தவர்கள் கூறுங்கள். நன்றி |
| தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் Posted: 06 Jan 2014 11:45 PM PST உலக அளவில் தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம் கிடைத்துள்ளது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் கூறினார். மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கத்தை சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் நேற்று நடத்தின. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம், விழா மலரை வெளியிட்டு தலைமை உ அவர் தனது உரையில் ... |
| Posted: 06 Jan 2014 10:40 PM PST வாழ்த்துக்கள் --வேகத்திற்கு சென்னையில் ரிலையன்ஸ் fresh , பள்ளிக்கரணை யில் நேற்று இரவு 1-30 மணிக்கு , கதவை உடைத்து ,பணபெட்டியை களவாட நினைத்த போது தங்க ராசு என்பவர் பிடிபட்டார். திருடர்கள் கண்காணிப்பு அலாரம் மும்பை நிருவாகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இவர் கடப்பாரை கொண்டு நெம்பி, கண்ணாடி திரையை உடைக்க , அந்த செய்தி / காணொளி மும்பையில் பதிய ,அந்த அதிகாரி , சென்னை அதிகாரிக்கு போன் மூலம் தெரியபடுத்த , அவர் போலீசிற்கு தெரிய படுத்த , போலிஸ் அவரை இரவு 2 மணி சுமாருக்கு பிடித்து சென்றது. அலாரம் ... |
| Posted: 06 Jan 2014 08:04 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| ஜிசாட்14செயற்கைக்கோளின்பாதை அதிகரிப்பு Posted: 06 Jan 2014 06:49 PM PST ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-14 செயற்கைக்கோளின் முதல் பாதை அதிகரிப்புத் திட்டம் திங்கள்கிழமை (ஜன.6) மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பூமியிலிருந்து செயற்கைக்கோளின் குறைந்தபட்ச தூரம் 8,966 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது. இப்போது பூமியை குறைந்தபட்சம் 8,966 கிலோமீட்டரும், அதிகபட்சம் 35,974 கிலோமீட்டரும் கொண்ட பாதையில் செயற்கைக்கோள் சுற்றிவருகிறது. பாதை அதிகரிப்புத் திட்டத்துக்காக, செயற்கைக்கோளில் உள்ள மோட்டார் திங்கள்கிழமை 3,134 விநாடிகள் ... |
| 63 நாயன்மார்களின் பெயர்களும் அவர்கள் வாழ்ந்த காலமும் Posted: 06 Jan 2014 06:12 PM PST கி.பி. 300 – 600 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த நாயன்மார்கள் 1.அமர்நீதி நாயனார் 2.கண்ணப்ப நாயனார் 3.எறிபத்த நாயனார் 4.அரிவாட்டாய நாயனார் 5.மூர்த்தி நாயனார் 6.சண்டேசுர நாயனார் 7.காரைக்காலம்மையார் 8.நமிநந்தியடிகள் 9.திருமூல நாயனார் 10.தண்டியடிகள் நாயனார் 11.சாக்கிய நாயனார் 12.கூற்றுவ நாயனார் 13.புகழ்ச்சோழ நாயனார் 14.ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 15.கணம்புல்ல நாயனார் 16.புகழ்த்துணை நாயனார் 17.கோச்செங்கட்சோழ நாயனார் கி.பி. 600 – 660 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த ... |
| Posted: 06 Jan 2014 05:51 PM PST புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
/0097.gif)