Tamil News | Online Tamil News |
- மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருக்கும் மத்திய அரசு: சுஷ்மா ஆவேச தாக்கு
- ஹேர்ஸ்டலை கிண்டலடித்ததால் தகராறு : காங்., எம்.எல்.ஏ., மகன் அடித்து கொலை
- அ.தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் : பா.ம.க., ராமதாஸ் ஆவேச பேச்சு
- திருமண அழைப்பிதழிலும் நரேந்திர மோடி படம்
- ஊழல்வாதிகள் பெயர்கள் வெளியீடு: 'ஆம் ஆத்மி'யின் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த அதிரடி
- பா.ஜ.,வுக்காக 'வாய்ஸ்' கொடுப்பாரா ரஜினிகாந்த்? தேதி மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு
- சுமுக சூழலை கெடுக்கும் இலங்கை பிரதமருக்கு ஜெ., காட்டமான கடிதம்
- காங்., கூட்டணியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவுகிறார் சரத் பவார்: மோடியுடன் சந்திப்பு
- விஜயகாந்த் அழைப்பால் பா.ஜ., காங்., தி.மு.க., குழப்பம்: கூட்டணி பிரச்னைக்கு நாளை 'தெளிவு' கிடைக்குமா?
- நீதிபதி வர்மா மனைவி கடிதம்: "பத்ம பூஷண் விருது வேண்டாம்'
| மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருக்கும் மத்திய அரசு: சுஷ்மா ஆவேச தாக்கு Posted: பாம்பன் : "மீனவர் பிரச்னை குறித்து ஒவ்வொரு லோக்சபா கூட்டத்தொடரிலும் பா.ஜ., குரல் எழுப்புகிறது. இதுகுறித்து விவாதிக்கிறது. மத்திய காங்., பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. மத்திய அரசு, ஊமை அரசாக விளங்குகிறது," என, பாம்பனில் நடந்த கடல் தாமரை போராட்டத்தில் பா.ஜ., லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக சாடினார்.அவர் பேசியதாவது: துரதிஷ்டவசமாக இதுவரை மத்திய காங்., அரசு, மீனவர்களை புறக்கணித்து வந்துள்ளது. மீனவர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு கல்வி வசதி இல்லை. பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவில்லை. தமிழகம், குஜராத் ... |
| ஹேர்ஸ்டலை கிண்டலடித்ததால் தகராறு : காங்., எம்.எல்.ஏ., மகன் அடித்து கொலை Posted: புதுடில்லி: டில்லியில், அருணாச்சல பிரதேச மாநில காங்., எம்.எல்.ஏ.,வின் மகன், சில கடைக்காரர்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த, காங்., எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர், நிடோ பவித்ரா. இவரின் மகன், நிடோ டானியன், டில்லியில் உள்ள கல்லூரியில், முதலாமாண்டு படித்து வந்தான். இரண்டு நாட்களுக்கு முன், டில்லியில் உள்ள லஜ்பதி நகருக்கு சென்றிருந்தான். அங்குள்ள, சில கடைக்காரர்கள், டானியனின் தலைமுடி அலங்காரத்தை கிண்டல் செய்தனர். இதையடுத்து, அந்த கடைக்காரர்களுக்கும், டானியனுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. ... |
| அ.தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் : பா.ம.க., ராமதாஸ் ஆவேச பேச்சு Posted: "தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது," என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் ... |
| திருமண அழைப்பிதழிலும் நரேந்திர மோடி படம் Posted: ஜெய்ப்பூர் : பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடிக்கு, நாடு முழுவதும் ஆதரவான நிலை காணப்படுகிறது என்பதை உறுதி செய்யும் மற்றொரு அம்சமாக, ராஜஸ்தானில், திருமண அழைப்பிதழில், மோடியின் படம் அச்சடிக்கப்பட்டு, அவரின் ஆசியுடன் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், வசுந்தரா ராஜே தலைமையிலான, ராஜஸ்தான் மாநிலத்தில், மோடியின் தீவிர ஆதரவாளரான அக் ஷய் என்பவர், தன் திருமணத்திற்காக, அழைப்பிதழ் அச்சிட்டுள்ளார். அதில், மோடியின் படத்தை அச்சிட்டு, அவர் ஆசியுடன் திருமணம் நடைபெறுவதாக ... |
| ஊழல்வாதிகள் பெயர்கள் வெளியீடு: 'ஆம் ஆத்மி'யின் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த அதிரடி Posted: நாடு முழுவதும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, முக்கிய தலைவர்கள் பலரையும் எதிர்த்து, வேட்பாளரை நிறுத்துவோம்' என, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைமை நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராஜா ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, டில்லி சட்டசபை தேர்தலில், முதன்முறையாக போட்டியிட்டு, ஆட்சி அமைத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் லோக்சபா தேர்தலிலும், போட்டியிடப்போவதாக, அந்த கட்சி அறிவித்துள்ளது.இந்நிலையில், டில்லியில் நேற்று, ஆம் ஆத்மி ... |
| பா.ஜ.,வுக்காக 'வாய்ஸ்' கொடுப்பாரா ரஜினிகாந்த்? தேதி மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு Posted: 'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக, நடிகர் ரஜினிகாந்த், 'வாய்ஸ்' கொடுக்க வேண்டும்' என, அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதுதொடர்பாக, அவரைச் சந்தித்துப் பேசவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.வரும், 10ம் தேதி, ரஜினிகாந்த், சீனா செல்ல இருப்பதால், 8ம் தேதி சென்னை வரும் மோடியும், அவரும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.ஏழாம் பொருத்தம்:நடிகர் ரஜினிக்கும், அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், தன் லட்சக்கணக்கான ரசிகர்கள், யாருக்கு ஓட்டுப்போட ... |
| சுமுக சூழலை கெடுக்கும் இலங்கை பிரதமருக்கு ஜெ., காட்டமான கடிதம் Posted: சென்னை:'இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள், 38 பேரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடும் எதிர்ப்பு:கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே, ஜன., 27ல், சென்னையில் பேச்சு நடந்தது. இது ஏற்படுத்திய, சுமுக சூழலால், கடந்த இரு வாரங்களில், 295 தமிழக மீனவர்கள், 45 படகுகளுடன், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர்.இந்த சுமுக சூழ்நிலையை, சீர்குலைக்கும் விதமாக, ஜன., 29, இரவு, பாக் ஜலசந்தி பகுதியில், ஆறு விசைப்படகுகளில், ... |
| காங்., கூட்டணியிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவுகிறார் சரத் பவார்: மோடியுடன் சந்திப்பு Posted: புதுடில்லி : ''லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை பேசுவதற்கு, காங்., கட்சி தயக்கம் காட்டுகிறது. இதனால், எந்த கட்சியுடன் வேண்டுமானாலும், நாங்கள் கூட்டணி அமைப்போம்,'' என, தேசியவாத காங்., தலைவர்களில் ஒருவரான, பிரபுல் படேல் மிரட்டல் விடுத்துள்ளார்.இதற்கிடையே, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, சரத் பவார் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாயின. எனினும், அதை பவார் மறுத்துள்ளார்.15 ஆண்டுகளாக: மகாராஷ்டிராவில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசின், பிரித்விராஜ் ... |
| விஜயகாந்த் அழைப்பால் பா.ஜ., காங்., தி.மு.க., குழப்பம்: கூட்டணி பிரச்னைக்கு நாளை 'தெளிவு' கிடைக்குமா? Posted: உளுந்தூர்பேட்டை யில், நாளை நடைபெறும், ஊழல் எதிர்ப்பு மாநாட்டுக்கு, தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் கட்சி களுக்கு, தே.மு.தி.க., அழைப்பு விடுத்துள்ளது.அ.தி.மு.க., மற்றும் ச.ம.க., தவிர்த்து, மற்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கூட்டணி விஷயத்தில், குழப்ப நிலையை நீடிக்க வைத்திருக்கிறார் விஜயகாந்த். அதனால், நாளைய மாநாட்டிலாவது, 'தெளிவு' கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு, கட்சிகள் மத்தியில் எழுந்துள்ளது.தே.மு.தி.க., சார்பில், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள, எறஞ்சியில், நாளை, ஊழல் எதிர்ப்பு மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தான், கூட்டணி குறித்து முடிவு ... |
| நீதிபதி வர்மா மனைவி கடிதம்: "பத்ம பூஷண் விருது வேண்டாம்' Posted: புதுடில்லி: மறைந்த நீதிபதி வர்மாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த, "பத்ம பூஷண்' விருதை, அவர் மனைவி ஏற்க மறுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடுமையான சட்டம் : டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, "இதுபோன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்' என, பல தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து, நீதிபதி, ஜே.எஸ்.வர்மாவிடம், இதற்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழு, இதற்காக, புதிய விதிமுறைகளை வகுத்தது. இதன்பின், நீதிபதி வர்மா, கடந்தாண்டு, ஏப்ரலில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |