Tamil News | Online Tamil News |
- ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி: புதிய உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு
- கட்டமைப்பு போச்சு: கவர்ச்சி காண்கிறார் கெஜ்ரி
- ஆஹா! 'ஆதார்' அட்டை இனி கட்டாயமில்லை: காஸ் மானியம் வழக்கம் போல் கிடைக்கும்
- தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கை முடிக்க சுப்ரீம் கோர்ட்கெடு: நான்கு மாதங்களில் தீர்வு காண வேண்டும் என கண்டிப்பு
- 'ராஜிவ் கொலையாளிகள் தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள்'
- 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சரியில்லை'
- கூட்டணி முடிவை மாநாட்டில் அறிவிப்பாரா? விஜயகாந்த் திட்டம் பற்றி புதிய தகவல் அம்பலம்
- துரைமுருகன் வாரிசுக்கு 'சீட்' கேட்டு 130 பேர் விருப்ப மனு
- பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கருணாநிதி
- ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ
| Posted: புதுடில்லி: நாட்டின் உயரிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளை, அரசியல்வாதிகளான ஆட்சியாளர்கள், இஷ்டத்திற்கு, இடமாற்றம் செய்து, தூக்கியடிக்கும் நிர்வாக சீர்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள், அதே பணியிடத்தில் பணியாற்ற வேண்டும். அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கென, ஒவ்வொரு மாநிலத்திலும் நியமிக்கப்பட உள்ள, 'சிவில் சர்வீசஸ் போர்டு' அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.கைப்பாவைகளாக: அரசியல் காரணங்களுக்காக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ... |
| கட்டமைப்பு போச்சு: கவர்ச்சி காண்கிறார் கெஜ்ரி Posted: டில்லி மாநிலத்தை ஆளும், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' அரசு, கவர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிப் போயுள்ளன.'கப்சிப்வால்': புதிய மருத்துவமனைகள், பள்ளிகள், புதிய பஸ்கள் வாங்குவது போன்ற, அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு, இப்போதைக்கு, நிறைவேற்றவே முடியாத, மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது, வீட்டுக்கு வீடு, 700 லிட்டர் தண்ணீர் வழங்குவது போன்ற கவர்ச்சி திட்டங்களில், காலத்தையும், காசையும் செலவிட்டு வருகிறது, கெஜ்ரிவால் அரசு. ஆட்சிக்கு ... |
| ஆஹா! 'ஆதார்' அட்டை இனி கட்டாயமில்லை: காஸ் மானியம் வழக்கம் போல் கிடைக்கும் Posted: புதுடில்லி: சமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, 'ஆதார்' அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம்.சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், 'ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது' என, உத்தரவிட்டது. இதற்கிடையே, 'ஆதார் எண்ணை, வங்கிக் கணக்குடன் ... |
| Posted: புதுடில்லி: வருமான வரி தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர், ஜெயலலிதா, அவரின் தோழி சசிகலா ஆகியோரை விடுவிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்து விட்டது. அவர்கள் மீதான, இந்த வழக்கை விசாரிக்க, விசாரணை நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிய சுப்ரீம் கோர்ட், நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் இருவரும் இணைந்து உருவாக்கிய, 'சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம், கடந்த, 1991 - 92, 1992 - 93 மற்றும் 1993 - 94ம் ஆண்டுகளில், வருமான வரி தாக்கல் செய்யவில்லை. இது குறித்து, ... |
| 'ராஜிவ் கொலையாளிகள் தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள்' Posted: புதுடில்லி: முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை, 'இவர்கள் மூவரும் தூக்கு தண்டனைக்கு ஏற்றவர்கள் தான்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று தெரிவித்தது.ராஜிவ் படுகொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, இந்த மூவரும், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி, தங்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரியிருந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதால், தங்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க உத்தரவிட வேண்டும் என, மூவரும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ... |
| 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சரியில்லை' Posted: 'தினமலர்' நாளிதழுக்கு, பா.ஜ., மூத்த தலைவர், சுப்ரமணியசாமி அளித்த சிறப்பு பேட்டி: கடந்த, 91 - 96ல், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 91 முதல், 94 வரை, கிட்டதட்ட, மூன்று ஆண்டுகள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதுதொடர்பாக, வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை, விசாரணை நீதிமன்றம், விசாரிக்க தடை கேட்டு, அதற்கான உத்தரவை, உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதா பெற்றிருந்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது.பின்னடைவு: வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்துக்கு ... |
| கூட்டணி முடிவை மாநாட்டில் அறிவிப்பாரா? விஜயகாந்த் திட்டம் பற்றி புதிய தகவல் அம்பலம் Posted: கூட்டணி விஷயத்தில், விஜயகாந்தின் அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து, பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க.,வும், -பா.ஜ.,வும், தூது மேல் தூது விட்டு வருகின்றன. ஆனாலும், எதற்கும் பிடிகொடுக்காமல், அந்தக் கட்சித் தலைவர், விஜயகாந்த் நழுவி வருகிறார்.'ஊழல் எதிர்ப்பு மாநாடு': அத்துடன், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, எறஞ்சியில், வரும் 2ம் தேதி நடக்கவுள்ள, தே.மு.தி.க., மாநில மாநாட்டில், கூட்டணி தொடர்பாக, கருத்து கேட்டு, முடிவை அறிவிப்பதாக தெரிவித்து உள்ளார். பா.ஜ., ... |
| துரைமுருகன் வாரிசுக்கு 'சீட்' கேட்டு 130 பேர் விருப்ப மனு Posted: லோக்சபா தேர்தலில் போட்டியிட, தி.மு.க., சார்பில், 1,000த்துக்கும் மேற்பட்டோர், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் செலுத்திய கட்டணம் மூலம், 3 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது. வேலூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர், துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி, 130 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, 20ம் தேதி முதல் விருப்ப மனுக்கள், கட்சித் தலைமையகமான அறிவாலயத்தில் பெறப்படுகின்றன. விருப்ப மனு கட்டணமாக, பொது தொகுதிக்கு, 25 ஆயிரம் ... |
| பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கருணாநிதி Posted: சென்னை: ''பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு, நாடகம் பற்றி எனக்கு தெரியாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில், அவரது பேட்டி: 'கவர்னர் உரை திருப்திகரமாக இல்லை. மக்கள் பிரச்னைக்காக எதுவுமில்லை' என, சொல்லி, சில கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அந்த கட்சிகள் சார்பில் சொல்லப்பட்ட கருத்துகள் தான், என் கருத்தும், தி.மு.க., கருத்தும். விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால் தான், கவர்னர் உரை மீதான விவாதத்தை, மூன்று நாட்களுக்கு மட்டும் நடத்த உள்ளனர். முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்பது, கனவா, நனவா என்று எனக்கு தெரியாது. பிரதமர் ஆவதற்கு, ... |
| ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ Posted: புதுடில்லி: பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை, ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, டில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தும், தொகுதி உடன்பாடு குறித்தும், பேசியதாக தெரிகிறது. தமிழகத்தில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், முதல் கட்சியாக, ம.தி.மு.க., இணைந்துள்ளது. ஆனாலும், எந்தெந்த தொகுதிகளி?ல் போட்டியிடுவது என்பது குறித்து, இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, நேற்று டில்லிக்கு வந்தார். பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை, அவர் இல்லத்தில் சந்தித்தார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, தொகுதி பங்கீடு, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 31,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |