Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தி.மு.க.,வில் இருந்து மு.க.அழகிரி 'சஸ்பெண்ட்': கட்சி விரோத நடவடிக்கை காரணமாம்

Posted:

தி.மு.க.,வில், ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி இடையே நிலவி வரும், பனிப்போரில், நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. 'என் ஆதரவாளர் களை, எப்படி, 'சஸ்பெண்ட்' செய்ய லாம்?' என, கட்சி தலைவர் கருணாநிதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அழகிரி, கட்சியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக, கட்சி தலைமை விளக்கம் அளித்துள்ளது.தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலர், அழகிரியின் பிறந்த நாளை ஒட்டி, மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரத்தினால், அழகிரியின் ஆதரவாளர் மன்னன் உட்பட, ஐந்து பேர் ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஸ்டாலின் ...

இது சகஜம் தான்: ஸ்டாலின் பேட்டி

Posted:

சென்னை: சென்னை விமான நிலையத்தில், நேற்று இரவு, கோவை செல்லும் முன், ஸ்டாலின் அளித்த பேட்டி:அழகிரி மீது, கட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோல், கட்சியில் பல முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இது சகஜம் தான். அழகிரி நீக்கத்தால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை; தனிப்பட்ட முறையில், எனக்கும் அழகிரிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.பேட்டி அளிக்காமல் ஸ்டாலின் "எஸ்கேப்': தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சென்னையில் இருந்து நேற்றிரவு கோவை வந்தார். அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ...

பென்னாகரம் பாணியில் திண்ணை பிரசாரம்: தொகுதிகளை 'அள்ள' பா.ம.க., தந்திரம்

Posted:

லோக்சபா தேர்தலில், பா.ம.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்பதில், அந்தக் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அதனால், பென்னாகரம் இடைத்தேர்தல் பாணியில், இப்போதே, திண்ணை பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.விரைவில் வெளியாகலாம்:லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., போட்டிஇடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனாலும், முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை; விரைவில், வெளியாகலாம் என, நம்பப்படுகிறது.கடந்த, 2009ல் நடந்த, லோக்சபா தேர்தலிலும், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், படுதோல்வியை சந்தித்த, பா.ம.க., வரும், லோக்சபா ...

போயஸ் தோட்டத்தில் 'பேக்ஸ்' மிஷின் 'ஜாம்' ? ராஜ்ய சபா எம்.பி.,வேட்பாளர்கள் மீது பறக்கும் புகார்கள்

Posted:

தூத்துக்குடி : ராஜ்ய சபா எம்.பி., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சின்னத்துரை ஆகியோர் மீது அடுக்கடுக்கான புகார்கள், தூத்துக்குடியில் இருந்து அனுப்பப்படுவதால், போயஸ் தோட்டத்தில் உள்ள 'பேக்ஸ்' மிஷின் 'ஜாம்' ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., சார்பில் ராஜ்ய சபா எம்.பி., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சின்னத்துரை ஆகிய இருவரும், கடந்த சட்டசபை தேர்தலில் ராதாபுரம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள். அந்த ...

தேர்தலில் ஓட்டுப்போட கட்சிகளிடம் கை நீட்டாதீங்க: ஒரு ஆண்டு சிறை நிச்சயம்

Posted:

சென்னை : லோக்சபா தேர்தலில், ஓட்டு போட பணம் வாங்கினால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார்.நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:'அனைவரும் ஓட்டு போட வேண்டும்; சிறிய தொகைக்காக, ஐந்து ஆண்டு உரிமையை விற்பனை செய்யாதீர்' என, மக்களிடம் பிரசாரம் செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்கினால், 1 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும். அதேபோல், பணம் கொடுப்போர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த லோக்சபா தேர்தலில், பணம் கொடுத்ததாக, 300 பேர் மீது வழக்கு பதிவு ...

'கெஜ்ரிவாலை போராட்டம் நடத்த அனுமதித்தது ஏன்?'

Posted:

புதுடில்லி : 'தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், போராட்டம் நடத்த அனுமதி அளித்தது ஏன்?' என, டில்லி போலீசாருக்கு, சுப்ரீம் கோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது.சுப்ரீம் கோர்ட்டில் வழக்குடில்லியைச் சேர்ந்த, வழக்கறிஞர், எம்.எல்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனு:டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில், நகரின் மையப் பகுதியில், தன் ஆதரவாளர்களுடன் திரண்டு, இரண்டு நாட்கள், தர்ணா போராட்டம் நடத்தினார். டில்லி போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க ...

'ஆம் ஆத்மி' தொண்டரை தாக்கிய டில்லி போலீஸ்: 'வீடியோ' ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு

Posted:

புதுடில்லி : டில்லியில், இளைஞர் ஒருவரை, போலீசார், கொடூரமாக தாக்கும், 'வீடியோ'வை, ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, இளைஞரை தாக்கிய, மூன்று போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.போராட்டம்:டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி நடக்கிறது. இங்கு, காவல் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதனால், டில்லி போலீசார், தங்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக, கெஜ்ரிவால், குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக, சமீபத்தில், இரண்டு நாள், 'தர்ணா' ...

அரியானா மக்களுடன் காங்., முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இணைகிறார்

Posted:

சண்டிகர் : ''மக்களுக்காக ஏராளமான நலத் திட்டங்களை எங்கள் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தத் திட்டங்கள், மக்களை சென்றடைந்துள்ளதா, எந்த அளவிற்கு, மக்களுக்கு பயனளிக்கிறது என்பதை, கடிதம் மூலம், மக்களை தொடர்பு கொண்டு கேட்க உள்ளேன்,'' என, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அரியானா முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.நெருங்கும் தலைவர்கள்:நாடு முழுவதும் சமீப காலமாக, புதிய, அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே இருந்த, மிகப் பெரிய இடைவெளி, சமீபகாலமாக குறைந்து வருகிறது. சாதாரண மக்களை புறக்கணித்து வந்த, ...

மோடியின் வாசகம்: காப்பியடித்த காங்.,

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுலை முன்னிலைப்படுத்தி வெளிவந்துள்ள விளம்பரத்தில், இடம் பெற்றிருந்த வாசகம், 'காப்பி'யடிக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், மோடி பயன்படுத்திய வாசகத்தை, ராகுல் 'சுட்டு' விட்டதாக, பா.ஜ.,வினர் வசைபாடுகின்றனர்.காங்கிரஸ் சார்பில் நேற்று, டில்லி உட்பட, சில மாநில பத்திரிகைகளில், காங்கிரஸ் சார்பில், ஒருபக்க விளம்பரம் வெளியாகி இருந்தது. இதில், பொதுமக்கள் சிலரது மத்தியில், ராகுல் கையை கட்டிக்கொண்டு நிற்பது போல் படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு மேல், 'நான் அல்ல நாம்' என்ற வாசகம் இடம் ...

காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் திடீர் கூட்டணி: மம்தாவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்?

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி கட்சியினர், காங்., சார்பில், ராஜ்யசபாவுக்கு நிறுத்தப்பட்டுள்ள சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளனர்.கருத்து வேறுபாடு: கடந்த சட்டசபைத் தேர்தலில், காங்., கட்சி, திரிணமுல் காங்.,குடன், கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பின், கருத்து வேறுபாடு எழுந்ததை அடுத்து, காங்., ...

2005ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை இப்போதே மாற்றலாம்

Posted:

புதுடில்லி: பொதுமக்கள், 2005ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து இப்போதே மாற்றி கொள்ளலாம் என, ரிசர்வ் வங்கி, அறிவித்துள்ளது.2005ம் ஆண்டிற்கு பின், வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகள், மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்படுகின்றன. மேற்கண்ட ஆண்டிற்கு, பின் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் பின்புறம், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இரு தினங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி, 2005ம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட நோட்டுகளை, ஏப்ரல் 1ம் தேதி முதல், பொதுமக்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என, அறிவித்திருந்தது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™