Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பெண்ணைக் கொன்று பேரலில் அடைத்த இருவருக்கு ஆயுள் சிறை

Posted: 24 Jan 2014 01:18 PM PST

திருச்சி அருகே சின்னசூரியூரில் பெண்ணைக் கொன்று சடலத்தை பேரலில் அடைத்த இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் ஏஐடியுசி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 24 Jan 2014 01:18 PM PST

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது.

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் புறக்கணிப்பு, ஊர்வலம் வழக்குரைஞர் சங்கம் முடிவு

Posted: 24 Jan 2014 01:18 PM PST

தொடர்ந்து வழக்குரைஞர் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் திருச்சி மாநகரம் கோட்டை காவல் ஆய்வாளர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜன. 27ஆம் தேதி நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்கவும், 28ஆம் தேதி ஊர்வலமாகச் சென்று மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்கவும் வழக்குரைஞர் சங்கம் முடிவு செய்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு பொறுப்புணர்வு அவசியம் மாநகரக் காவல் ஆணையர்

Posted: 24 Jan 2014 01:17 PM PST

வாகன ஓட்டிகள் தங்களுடன் சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மீதான பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றார் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் சைலேஸ்குமார் யாதவ்

இணையதளத்தில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம்

Posted: 24 Jan 2014 01:17 PM PST

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு

Posted: 24 Jan 2014 01:17 PM PST

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் 17 பேர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகள் குறித்த களஆய்வுப் பயிற்சியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல்: என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

Posted: 24 Jan 2014 01:16 PM PST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

வேலூர்

Posted: 24 Jan 2014 01:16 PM PST

மதுரை

Posted: 24 Jan 2014 01:16 PM PST

புதுக்கோட்டை

Posted: 24 Jan 2014 01:15 PM PST

திருநெல்வேலி

Posted: 24 Jan 2014 01:15 PM PST

ஈரோடு

Posted: 24 Jan 2014 01:15 PM PST

தமிழகத்தில் தொடரும் கலாசார சீரழிவு: கருணாநிதி

Posted: 24 Jan 2014 01:13 PM PST

நாட்டுப்புறக் கலைகளை மறக்கடிப்பதன் மூலம் தமிழகத்தில் கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகின்றது என திமுக தலைவர் கருணிநிதி கூறினார்.

மீண்டும் அழகிரிக்கு கிடைக்குமா தென்மாவட்ட அதிகாரம்?

Posted: 24 Jan 2014 01:12 PM PST

தென் மாவட்ட திமுகவில் அதிகார மையமாக இருந்த தென் மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இதை சாதாரண நடவடிக்கையாகவே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

வரவேற்பும், அதிர்ச்சியும்

Posted: 24 Jan 2014 01:12 PM PST

திமுகவிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதை அந்தக் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

மு.க. அழகிரி நீக்கம்: கோபாலபுரத்தில் குவிந்த திமுக தலைவர்கள்

Posted: 24 Jan 2014 01:10 PM PST

திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி, தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கருணாநிதியைச் சந்திக்க அவரது கோபாலபுரம் இல்லத்தில் அக்கட்சியின் தலைவர்கள் திரண்டனர்.

போஸ்டர் யுத்தம் முதல் சஸ்பெண்ட் வரை...

Posted: 24 Jan 2014 01:08 PM PST

அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30-இல் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.

"சிறுபான்மையினர் அதிக கடன் பெற நடவடிக்கை'

Posted: 24 Jan 2014 01:06 PM PST

சிறுபான்மையினர் சுய தொழில் தொடங்க கூடுதல் கடன்களைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாநில அரசின் பங்கு மூலதனத் தொகைக்கு மேலும் ரூ.1 கோடி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

திமுகவுடன் மீண்டும் கூட்டணி? ஜி.கே.வாசன் சூசகம்

Posted: 24 Jan 2014 01:05 PM PST

தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

குமரி மீனவர் சவூதி அரேபியாவில் சாவு

Posted: 24 Jan 2014 01:04 PM PST

கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர், சவூதி அரேபியாவில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

"தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம்'

Posted: 24 Jan 2014 01:03 PM PST

வரும் மக்களவைத் தேர்தல், வாக்குகள் விற்கப்படாத தேர்தலாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வாக்குகள் விற்பனைக்கல்ல...

Posted: 24 Jan 2014 01:00 PM PST

இந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் சாசனத்தால் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு அமைப்பு.

இந்தியருக்கே பெருமை

Posted: 24 Jan 2014 01:00 PM PST

இந்திய மக்களின் அறிவாற்றல், சட்ட நுணுக்கம், ஆழ்ந்த அனுபவம், அகன்ற தேசியப் பார்வை, தீர்க்க தரிசனம் ஆகிய அனைத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதுதான் நம் அரசியல் அமைப்புச் சட்டம்.

கவலைப்பட்டாக வேண்டும்!

Posted: 24 Jan 2014 12:58 PM PST

நிலப்பரப்பு என்று எடுத்துக் கொண்டால், 3,287,263 சதுர கி.மீ. விஸ்தீரணத்துடன் உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் 2.4% என்பதுடன், உலக மக்கள் தொகையில் 16.7% பேர் வாழும் பிரதேசம் இது.

மக்களவை தேர்தலுக்காக ஃபேஸ்புக்கில் தனி முகவரி

Posted: 24 Jan 2014 12:56 PM PST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட தகவல்கள் பெற தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஃபேஸ்புக் இணையதளத்தில் பிரத்யேக முகவரியை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தொடங்கி வைத்தார்.

என். சின்னத்துரை, சசிகலா புஷ்பா ராஜிநாமா ஏற்பு

Posted: 24 Jan 2014 12:54 PM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டங்களில், மேயராக இருந்த எல். சசிகலா புஷ்பா, மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்த என். சின்னத்துரை ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். அவர்களது ராஜிநாமாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வரைபடங்களை பதிவிறக்க புவிசார் தகவல் அமைப்பு

Posted: 24 Jan 2014 12:30 PM PST

அரசுத் துறைகள் தங்களுக்குத் தேவையான வரைபடங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில், அதற்கென தனியாக புவிசார் தகவல் அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு

Posted: 24 Jan 2014 12:29 PM PST

தமிழகச் சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களில் 18 பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இலங்கை சிறையிலிருந்த பாம்பன் மீனவர்கள் விடுதலை

Posted: 24 Jan 2014 12:29 PM PST

எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட் மீனவர்கள் 18 பேரை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

சிவாஜிகணேசன் சிலை விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடி

Posted: 24 Jan 2014 12:28 PM PST

காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சிவாஜிகணேசனின் சிலையை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

வீரபாண்டி ஆறுமுகம் சிலையை அகற்ற சேலம் மாநகராட்சிக்கு தடை

Posted: 24 Jan 2014 12:27 PM PST

சேலத்தில் வைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலையை அகற்ற மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

"பாஜக - தேமுதிக கூட்டணி உறுதி'

Posted: 24 Jan 2014 12:25 PM PST

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் உறுதியாகக் கூட்டணி ஏற்ப டும் நம்புகிறேன் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

Posted: 24 Jan 2014 12:20 PM PST

ஆசனவாயில் தங்கக்கட்டிகளை கடத்திய 3 பேர் சிக்கினர்.

சேலம் அருகே வேன் மோதியதில் 3 பெண்கள் சாவு

Posted: 24 Jan 2014 12:20 PM PST

சேலத்தில் விவசாயக் கூலி வேலைக்குச் சென்ற பெண்கள் மீது நிலைதடுமாறி ஓடிய வேன் மோதியதில் வெள்ளிக்கிழமை மூவர் உயிரிழந்தனர்.

ஆழ்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

Posted: 24 Jan 2014 12:18 PM PST

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு இரும்புக் குழாய்களை ஏற்றிச் சென்ற சிறிய சரக்கு கப்பல் ஆழ்கடலில் சென்றபோது உடைந்து சேதமடைந்தது. அந்தக் கப்பலில் இருந்த 6 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களை மீனவர்கள் மீட்டு, சின்னத்துறை பகுதிக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனர்.

சென்னை வழக்குரைஞர் கொலை வழக்கு: திருவண்ணாமலை நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

Posted: 24 Jan 2014 12:17 PM PST

சென்னை ஹோட்டலில் வழக்குரைஞர் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் 5 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 24 Jan 2014 12:16 PM PST

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமாஜவாதி எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்

Posted: 24 Jan 2014 12:13 PM PST

உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதிக் கட்சி எம்.எல்.ஏ. தீபக் குமார் (55) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

90 வயதில் திருமணம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகி

Posted: 24 Jan 2014 12:12 PM PST

கேரளத்தில் தன்னைவிட 30 வயது குறைவான அங்கன்வாடி பணிப் பெண்ணை 90வயதாகும் சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக பேரவையில் பாஜகவினர் தர்னா

Posted: 24 Jan 2014 12:11 PM PST

கர்நாடக மாநிலம், குல்பர்காவில் அண்மையில் போலீஸார்- ரெüடி இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல் உதவி ஆய்வாளர் மல்லிகார்ஜுன பாண்டே உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி, கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

கேஜரிவால் தர்னா: தில்லி போலீஸூக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Posted: 24 Jan 2014 12:09 PM PST

தில்லியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில் இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தடுக்கத் தவறிய தில்லி போலீஸின் செயலை உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தை 50% எம்.பி.க்கள் விரும்பவில்லை

Posted: 24 Jan 2014 12:07 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் விரும்பவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர்: ஓடையில் கார் கவிழ்ந்து 8 பேர் சாவு

Posted: 24 Jan 2014 12:05 PM PST

சத்தீஸ்கரில் ஓடையில் கார் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

அசாமில் குண்டு வெடிப்பு: 2 உல்ஃபா ஆதரவாளர்கள் சாவு

Posted: 24 Jan 2014 12:04 PM PST

அசாமில் கார்களில் ஏற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் உல்ஃபா தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கை உயர்வுக்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல்

Posted: 24 Jan 2014 12:03 PM PST

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9லிருந்து 12ஆக உயர்த்துவதற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு தனது அடுத்த கூட்டத்தில் வழங்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான அலை இல்லை: சரத் பவார்

Posted: 24 Jan 2014 12:01 PM PST

வரும் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிரான அலை இல்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் கூறினார்.

மிசோரம்: போதைப் பொருள் வைத்திருந்த 3 பெண்கள் கைது

Posted: 24 Jan 2014 11:59 AM PST

மிசோரம் மாநிலம் ஐசாலில் 17.5 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர், உறுப்பினர்கள் விரைவில் நியமனம்

Posted: 24 Jan 2014 11:59 AM PST

லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் அதற்கான 8 உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையின் தொடக்கமாக, அந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

ஆந்திரம்: தீ விபத்தில் 4 பேர் சாவு

Posted: 24 Jan 2014 11:56 AM PST

ஆந்திரப் பிரதேசத்தில் குடிசை வீடு ஒன்று தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

வைஷ்ணவ தேவி கோவிலுக்கு பிப்ரவரி 2 முதல் ரயில் சேவை

Posted: 24 Jan 2014 11:56 AM PST

பிரபலமான வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் மாநில கத்ரா புனித தலத்துக்கு நீண்டகாலமாக தாமதமாகி வந்த ரயில் சேவை அடுத்த மாதம் 2ஆம் தேவி தொடங்கக் கூடும் என்று வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முசாஃபர்நகர் கலவரம்: 2 பேர் மீது குற்றப்பத்திரிகை

Posted: 24 Jan 2014 11:53 AM PST

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் 2 பேருக்கு எதிராக சிறப்பு புலானாய்வுக் குழு வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மாநிலங்களவைத் தேர்தல்: அஸாமில் 3 இடத்துக்கு 39 காங்கிரஸார் மனு

Posted: 24 Jan 2014 11:52 AM PST

அஸாம் மாநிலத்தில் விரைவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 39 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

சத்தீஸ்கர்: 2 நக்ஸல் தலைவர்களை கைது செய்ய என்ஐஏ தீவிரம்

Posted: 24 Jan 2014 11:52 AM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட 2 நக்ஸல் தலைவர்களை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தெலங்கானா விவகாரம் எதிரொலி: தில்லி பயணத்தை தவிர்த்தார் கிரண்குமார் ரெட்டி

Posted: 24 Jan 2014 11:51 AM PST

ஆந்திர சட்டப்பேரவையில் தெலங்கானா மசோதா விவாதத்தில் உள்ளதால், மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதை முதல்வர் கிரண்குமார் ரெட்டி தவிர்த்துள்ளார்.

பிகாரில் எந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி?

Posted: 24 Jan 2014 11:49 AM PST

பிகாரில் வரும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதற்கு பதில் அளிக்க மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துவிட்டார்.

பாத்ரிபல் என்கவுன்ட்டர் வழக்கில் ராணுவத்தின் முடிவு ஏமாற்றமளிக்கிறது

Posted: 24 Jan 2014 11:47 AM PST

பாத்ரிபல் போலி என்கவுன்ட்டர் வழக்கு நிறைவு பெற்றதாக ராணுவ விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள்

Posted: 24 Jan 2014 11:46 AM PST

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகளை நடத்திய வெவ்வேறு ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 சிறுசேமிப்பு விழிப்புணர்வு

Posted: 24 Jan 2014 11:35 AM PST

போளூரை அடுத்த மாம்பட்டு ஊராட்சியில், ஜெ.ஜெ. கலைநிகழ்ச்சிக் குழு சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

யோகா பயிற்சி முகாம்

Posted: 24 Jan 2014 11:35 AM PST

தானிப்பாடியை அடுத்த ரெட்டியார் பாளையத்தில் வாழும் கலை மையம் சார்பில் கிராம மக்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாம் ரெட்டியார்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சி.பூபதி தலைமையில் நடைபெறுகிறது.

குடிநீர்ப் பிரச்னை தீர்ப்பது எப்படி? 

Posted: 24 Jan 2014 11:35 AM PST

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக, கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களின் தலைவர்களுடான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஜனவரி 25 மின் தடை

Posted: 24 Jan 2014 11:34 AM PST

ஆரணி 110 கே.வி. துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய அவசரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.கே.

கிணற்று நீரில் விஷம் கலந்தது கண்டுபிடிப்பு

Posted: 24 Jan 2014 11:34 AM PST

போளூரை அடுóத்த படைவீடு ஊராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளி கிணற்றில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதிமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 24 Jan 2014 11:34 AM PST

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி, ஆரணியை அடுத்த சேவூரில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

29-ல் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jan 2014 11:33 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜமுனாமரத்தூர் வட்டாரவளர்ச்சி அலுவலகம் முன் இம்மாதம் 29ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி

Posted: 24 Jan 2014 11:33 AM PST

அட்மா திட்டத்தின் கீழ், தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட மேல்சிறுப்பாக்கம் புதூர் கிராமத்தில் 25 விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி அண்மையில் துவங்கப்பட்டது.

விபத்தில் விவசாயி சாவு

Posted: 24 Jan 2014 11:33 AM PST

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சைக்கிகளில், சென்றவர் உயிரிழந்தார்.

மரக்கன்று நடும் விழா

Posted: 24 Jan 2014 11:33 AM PST

திருவண்ணாமலையை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஜனவரி 25 மின் தடை

Posted: 24 Jan 2014 11:32 AM PST

திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜனவரி 25) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மின்னணு தொடர்பியல் துறை கருத்தரங்கம்

Posted: 24 Jan 2014 11:32 AM PST

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

சென்னை வழக்குரைஞர் கொலை வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

Posted: 24 Jan 2014 11:32 AM PST

சென்னை ஹோட்டலில் வழக்குரைஞர் வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் 5 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தனர்.

பிஞ்சூரில் அம்மா திட்ட முகாம்

Posted: 24 Jan 2014 11:31 AM PST

செங்கம் அருகேயுள்ள பிஞ்சூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 85 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஒன்றியக் குழுத் தலைவர் எம்.கணேசன் வழங்கினார் .

வாக்காளர் தின விழிப்புணர்வு 14 கி.மீ. தொலைவுக்கு மனிதச் சங்கிலி

Posted: 24 Jan 2014 11:31 AM PST

தேசிய வாக்காளர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனிதச் சங்கிலி நடைபெற்றது.

வாக்காளர் தினம்: இன்று விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

Posted: 24 Jan 2014 11:31 AM PST

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி,  திருவண்ணாமலையில் விழிப்புணர்வுத் தொடர் ஓட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

கட்டடத்தின் சுவர் விழுந்து 4 இருசக்கர வாகனங்கள் சேதம்

Posted: 24 Jan 2014 11:31 AM PST

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை இரவு பழைய கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

பைக் மோதி தொழிலாளி சாவு

Posted: 24 Jan 2014 11:30 AM PST

திருவண்ணாமலையை அடுத்த பரமனந்தல் கிராமத்துக்குள்பட்ட எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த தொழிலாளி சங்கர் (24), பைக் மோதி இறந்தார்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர்,உறுப்பினர்கள் விரைவில் நியமனம்

Posted: 24 Jan 2014 11:30 AM PST

லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் அதற்கான 8 உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையின் தொடக்கமாக, அந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

கேஜரிவால் தர்னா: தில்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Posted: 24 Jan 2014 11:29 AM PST

தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில்  முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில் இரண்டு நாள்கள் நடத்தப்பட்ட போராட்டத்தைத் தடுக்கத் தவறிய தில்லி போலீஸின் செயலை உச்ச நீதிமன்றம் கண்டித்தது.

பொறியியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

Posted: 24 Jan 2014 11:29 AM PST

விருதுநகர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி முன்பு அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி மாணவ, மாணவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் 36 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள்

Posted: 24 Jan 2014 11:29 AM PST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 36 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் கட்டித் தர உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என்று ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து வியாழக்கிழமை கூறினார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை சரிபார்க்க பெரும் கூட்டம்

Posted: 24 Jan 2014 11:28 AM PST

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பை சரிபார்க்க ஓட்டுநர், நடத்துநர் உரிமம் பெற்று பதிவு செய்திருந்தவர்கள் குவிந்தனர். 

பொறியியல் கல்லூரி மாணவர் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து சாவு

Posted: 24 Jan 2014 11:28 AM PST

விருதுநகர் அருகே படியில் பயணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.     விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அழகுபாண்டி (20).

பலசரக்கு கடையில்  பணம் திருட்டு

Posted: 24 Jan 2014 11:28 AM PST

ராஜபாளையம் அருகேயுள்ள சோழாபுரத்தில் பலசரக்குக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம், ரீசார்ஜ் கார்டுகள் திருடப்பட்டது குறித்து தளவாய்புரம் போலீஸார் வெள்ளிக்கிழமை

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Posted: 24 Jan 2014 11:27 AM PST

: சாத்தூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மெட்ரிக். பள்ளியில் நடனப் போட்டி

Posted: 24 Jan 2014 11:27 AM PST

ராஜபாளையம் சத்யா வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் மாணவ- மாணவிகளின் நடனப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளித் தாளாளர் சி. குமரேசன் தலைமை வகித்து நடனப் போட்டிகளை துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

விருதுநகர்

Posted: 24 Jan 2014 11:26 AM PST

திருவண்ணாமலை

Posted: 24 Jan 2014 11:26 AM PST

காளிகேசம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை தடுக்கக்கூடாது

Posted: 24 Jan 2014 11:19 AM PST

பூதப்பாண்டி அருகே காளிகேசம் காட்டுப் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களை வனத்துறையினர் தடுக்கக்கூடாது என மாவட்ட வன அதிகாரியிடம் கோயில் நிர்வாகிகள்

மலையோர கிராமங்களில் வன விலங்குகளால் பயிர்கள் சேதம்

Posted: 24 Jan 2014 11:19 AM PST

கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில், வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

நாகர்கோவிலில் இன்று வாக்காளர் தின விழிப்புணர்வு கூட்டம்

Posted: 24 Jan 2014 11:19 AM PST

நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கூட்டம், சனிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

Posted: 24 Jan 2014 11:18 AM PST

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவியின் குடும்பத்துக்கு பா.ஜ.க. ஆறுதல்

Posted: 24 Jan 2014 11:18 AM PST

குமரி மாவட்டம், பத்துகாணி அருகே அரசு பஸ்ஸிலிருந்து விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவியின் குடுபத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினார்

குமரி மீனவர் சவூதி அரேபியாவில் சாவு

Posted: 24 Jan 2014 11:18 AM PST

கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர், சவூதி அரேபியாவில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சாமிதோப்பில் கலிவேட்டை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Posted: 24 Jan 2014 11:17 AM PST

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா கலிவேட்டை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

"ஐ.நா. சபையும், உலக சமூகமும் இணைந்து தான் இலங்கைத் தமிழர்களுக்கு தாயக உரிமை வழங்க முடியும்'

Posted: 24 Jan 2014 11:17 AM PST

ஐநா சபையும், உலக சமூகமும் இணைந்துதான் இலங்கை தமிழ் மக்களின் தாயக உரிமையை வழங்க முடியும் என்றார் தாமரை மாத இதழ் ஆசிரியர் சி. மகேந்திரன். 

குடியரசு தினவிழா குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 24 Jan 2014 11:17 AM PST

குடியரசு தினவிழாவையொட்டி, குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்களில் பார்சல்கள் அனுப்ப தாற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருங்கல்லில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jan 2014 11:16 AM PST

கருங்கல் பஸ் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி தொழிலதிபர் காரில் நகை,செல்போன் திருட்டு

Posted: 24 Jan 2014 11:16 AM PST

திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த குமரி தொழிலதிபருடைய காரிலிருந்த நகை மற்றும் செல்போனை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

முதியவரை கொன்ற வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள்

Posted: 24 Jan 2014 11:16 AM PST

குலசேகரம் அருகே பணம் கொடுத்து வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், முதியவரை குத்திக் கொன்ற வழக்கு மற்றும் மகனை கொலைசெய்ய முயன்ற வழக்கு ஆகியவற்றில், லாரி ஓட்டுநருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு சிறைத் தண்டனையும் அளித்து வெள்ளிக்கிழமை

ஆலங்கோடு பகத்சிங் படிப்பக ஆண்டு விழா

Posted: 24 Jan 2014 11:15 AM PST

நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு டி.ஒய்.எப்.ஐ. பகத்சிங் படிப்பக 19-ஆவது ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது.

வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Posted: 24 Jan 2014 11:15 AM PST

தூத்துக்குடியில் வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து பங்கேற்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™