Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் பதவியில் நீடிப்பாரா? : மன்மோகன் இன்று பதில்

Posted:

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சி்ங் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரவி வரும் வதந்திக்கு இன்று நடைபெறும் பத்திரிகையாளர்கள்சந்திப்பில் முற்றுப்பு்ள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.10 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான கூட்டணி அரசில் பிரதமராக பதவியேற்ற மன்மோகன்சிங் முதன் முறையாக கடந்த 2006-ம் ஆண்டில் பத்தரிகையாளர்களை சந்தித்தார். அதன் பின்னர் 2009-ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி. தொடர்ந்து 2010-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக பத்திரிகையாளர்களை ...

பா.ம.க., பொதுக்குழு தீர்மானத்தால் தொண்டர்கள் ஏமாற்றம்: கூட்டணி பற்றி தெளிவான அறிவிப்பு இல்லை

Posted:

சென்னையில் நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை. "அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ம.க., அனைத்து ஜாதி அமைப்புகளுடன் இணைந்து, "சமூக ஜனநாயக கூட்டணி' சார்பில் போட்டியிடும்' என, அந்தக் கட்சித் தலைவர், ராமதாஸ் அறிவித்ததார். "பா.ஜ.,வுடன் கூட்டணி உண்டா, இல்லையா என்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம்' என்ற எதிர்பார்ப்புடன் வந்த, அக்கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஒவ்வொரு தேர்தலின் போதும், அ.தி.மு.க., தி.மு.க., என, மாறி மாறி, ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்து, வெற்றிக்கனி பறிப்பதையே, வழக்கமாகக் ...

முந்தைய காங்., அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை: கெஜ்ரிவால் உறுதி

Posted:

புதுடில்லி: டில்லி சட்டசபையில், நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், காங்கிரஸ் ஆதரவுடன், 'ஆம் ஆத்மி' அரசு வெற்றி பெற்றது. எனினும், ''முந்தைய காங்., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்; ஊழல்வாதிகளை தப்ப விட மாட்டோம்,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.மொத்தம், 70 சட்டசபை தொகுதிகளை கொண்ட, டில்லி சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும், ஆட்சி அமைக்க தேவையான, 36 இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தேர்தலுக்கு முன் வரை, தங்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி ...

'அடித்தால் எதிர்த்து அடிப்போம்'

Posted:

சென்னையில், நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காடுவெட்டி குரு பேசுவார்' என, அறிவிக்கப்பட்டதும், கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர். கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது.அப்போது, குரு பேசியதாவது: மரக்காணம் சம்பவம் தொடர்பாக, 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். 134 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. என் மீது, தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாய்ந்தது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சம்பவம் நடந்த இடத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகமாக கொடுக்காதது தான், பிரச்னைக்கு காரணம். வன்னியர்கள் போராட்டத்தில் ...

தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம்: 1,000 மெகாவாட் மட்டுமே கிடைக்க வாய்ப்பு

Posted:

சென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.வெளிமாநிலங்களில் மின்சாரம்: தமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதை சமாளிக்கவும், ...

மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி

Posted:

நாடு முழுவதும், தன்னாட்சி அந்தஸ்துடன் (அட்டானமஸ்) இயங்கி வரும், 300க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்களின் (எம்.பி.ஏ.,) எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் கீழ், மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தன. கடந்த ஏப்ரலில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அதிகாரங்கள் அனைத்தையும், பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யிடம் வழங்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உட்பட, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை முறைப்படுத்துவதற்காக, புதிய விதிமுறைகளை, யு.ஜி.சி., உருவாக்கி உள்ளது. இந்த ...

சென்னை விமான நிலையத்தில் 12வது முறையாக கண்ணாடி உடைந்தது

Posted:

சென்னை: சென்னை விமான நிலையத்தில், நேற்று, 12வது முறையாக கண்ணாடி நொறுங்கி விழுந்து, விபத்து ஏற்பட்டது.சென்னை விமான நிலையத்தில், புதிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள், 2,015 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மே, 12ம் தேதி, புதிய உள்நாட்டு விமான முனையத்தில், மேற்கூரை தகடுகள் விழுந்து நொறுங்கின. இதைத் தொடர்ந்து, புதிய பன்னாட்டு மற்றும் பழைய பன்னாட்டு விமான முனையங்களில், மேற்கூரை சரிந்து விபத்துக்கள் ஏற்பட்டன. நவ., 3ம் தேதி, இரவு, 7:30 மணிக்கு, புதிய பன்னாட்டு முனையத்தில், ஒன்பதாவது முறையாக, அலங்கார கண்ணாடி சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டது. நவ.,15 அதிகாலை, ...

சமையல் காஸ் விலை உயர்வு: ரத்து செய்ய மொய்லி மறுப்பு

Posted:

''மானியம் இல்லாத, சமையல் காஸ் சிலிண்டர் விலையேற்றத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை,'' என, பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி நேற்று கூறினார். மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு, நேற்று முன்தினம், 220 ரூபாய் உயர்த்தியது.இந்த விலை ஏற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என, தமிழக முதல்வர், ஜெயலலிதா உட்பட, பலர் மத்திய அரசிடம் கோரினர். இது குறித்து, பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்ப மொய்லி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின், 30 சதவீத சமையல் காஸ் தேவை, இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், ...

பா.ஜ., பக்கம் சாய்கிறது தே.மு.தி.க.,: வெளிப்பட்டது விஜயகாந்த் லட்சியம்

Posted:

மதுரை: புத்தாண்டு பிறந்ததுமே லோக்சபா தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாகி விட்டன. மத்தியில் இழந்த அதிகாரத்தை பெறும் நோக்கத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரை அறிவித்து சில மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலை காட்டி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் பிரதிநித்துவம் கிடைக்கும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., காங்., கம்யூ., கட்சிகளை தவிர்த்து பிராந்திய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் பா.ஜ., தலைமையில் கூட்டணியில் இணைய முடிவு செய்து விட்டன. தங்களுக்கு ...

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் தோட்டவேலை கேட்கும் ஜமீன் வாரிசுகள்

Posted:

திருநெல்வேலி: ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 254வது பிறந்த நாளான இன்று அவரது வாரிசுகள் இன்னமும் வறுமையில் வாடுகின்றனர்.பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1760ல் ஜன., 3ல் பிறந்தார். ஆங்கிலேயருக்கு கப்பம் செலுத்த மறுத்தார். ஆங்கிலேயருடன் போரிட்டு, 1799 அக்.,16ல், நெல்லை அருகே கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை தொடர்ந்து அவரது தம்பிமார் ஊமைத்துரை, துரைசிங்கம் உள்ளிட்டோரும் ஆங்கிலயேருக்கு எதிராக போராடினர். அவர்களும் தூக்கிலிடப்பட்டனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™