Tamil News | Online Tamil News |
- பிரதமர் பதவியில் போட்டி இல்லை : சரத் பவார் உறுதி
- முரசு சின்னத்திற்கு அதிக முக்கியத்துவம் வருமென விஜயகாந்த் நம்பிக்கை
- காங்., இல்லாத இந்தியா: மோடி விருப்பம்
- ராகுலின் சொந்த தொகுதியில் காங்கிரசார் நடுக்கம்
- கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்?
- காத்திருப்போர் பட்டியலில் காங்கிரஸ்
- மத்திய அரசை ஆதரித்தவருக்கு தெரியாதா? முதல்வர் பதில்
- பிறரை வெறுப்பது உண்மையான மதம் அல்ல: பிரதமர் பேச்சு
- மகள்களை பிரிந்து எப்படி வாழ்வேன்? தேவயானி கண்ணீர்
- மத்திய அரசுடன் பேச்சு நடத்திய பிறகே தமிழக மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை தகவல்
- ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கி
| பிரதமர் பதவியில் போட்டி இல்லை : சரத் பவார் உறுதி Posted: மும்பை: ""பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை,'' என, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார் திட்டவட்டமாக நேற்று தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, நேற்று முன்தினம், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன். அவர் என், அரசியல் குரு; அவரால் தான், நான் அரசியலுக்கு வந்தேன். பிரதமராவதற்கு, 1992ம் ஆண்டில் இருந்து அவர் முயற்சித்து வருகிறார்' என, குறிப்பிட்டு இருந்தார்.ஷிண்டே கருத்து குறித்து, டில்லியில் நேற்று, பவார் கூறுகையில், ""வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், நான் ... |
| முரசு சின்னத்திற்கு அதிக முக்கியத்துவம் வருமென விஜயகாந்த் நம்பிக்கை Posted: சென்னை: தமிழகத்தில், முரசு சின்னத்திற்கு முக்கியத்துவம் வரும்; தே.மு.தி.க., ஆட்சியைப் பிடிக்கும் காலம், வெகு தூரத்தில் இல்லை,'' என, அந்தக் கட்சியின் தலைவர், விஜயகாந்த் தெரிவித்தார். அத்துடன், லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி, தடாலடியாக அறிவித்து விட்டால், அதிக அளவில் தொகுதிகளை பெற முடியாது என்பதால், அந்த விஷயத்தில், பேரம் படிய வேண்டும் என்பதற்காக, காத்திருக்கிறார்.சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, பொதுமக்களுக்கு, பொங்கல் இலவச பொருட்களை வழங்கும் விழா, நேற்று நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ... |
| காங்., இல்லாத இந்தியா: மோடி விருப்பம் Posted: புதுடில்லி:''காங்கிரஸ் கட்சியினர், ஊழல்களுக்காக வெட்கப்படுவது இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; இந்த நாட்டு மக்களின் முழக்கம்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார். கோவாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பங்கேற்ற, பிரமாண்ட பொதுக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், மோடி பேசியதாவது:காங்கிரஸ் கட்சியினர், ஊழலில் மூழ்கி விட்டனர். ஆனால், அந்த ஊழல்களுக்காக, இவர்கள் வெட்கப்படுவது இல்லை. இதனால் தான், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறோம். இது, ... |
| ராகுலின் சொந்த தொகுதியில் காங்கிரசார் நடுக்கம் Posted: அமேதி : ராகுலின் சொந்த தொகுதியான, உ.பி., மாநிலம் அமேதியில், 'ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, குமார் விஷ்வாஸ், நேற்று பிரசாரம் மேற்கொண்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது, காங்கிரசாருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக, கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம், கல்வீச்சு போன்ற வன்முறைகளில் இறங்கினர். எனினும், அதைப்பற்றி கவலைப்படாமல், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணை தலைவர், ராகுலையும், குமார் விஷ்வாஸ் கடுமையாக சாடினார்.அமேதியில் 'ஆம் ஆத்மி':காங்., துணை தலைவர் ராகுல், உ.பி., மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக பதவி ... |
| கன்னியாகுமரியில் போட்டியிட ராகுல் திட்டம்? Posted: உத்தர பிரதேச மாநிலம், ஒரு காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. அந்த மாநிலத்தில் இருந்துதான், காங்கிரசுக்கு, அதிக அளவில், எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் வளர்ச்சிக்குப் பின், உ.பி.,யில் காங்கிரஸ் பலவீனம் அடைந்து விட்டது. இருந்தாலும், அங்கு கட்சியை வலுப்படுத்த, ராகுல் தீவிர பிரயத்தனம் செய்து வருகிறார்.அமேதி தொகுதியை விட...கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், வரும் தேர்தலில், தொகுதி மாறி போட்டியிட ... |
| காத்திருப்போர் பட்டியலில் காங்கிரஸ் Posted: 'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை இணைப்பதற்கே, முன்னுரிமை கொடுங்கள்; காங்கிரசை கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என, பொருளாளர் ஸ்டாலினிடம், கட்சித் தலைவர், கருணாநிதி தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதனால், தி.மு.க.,வின், காத்திருப்போர் பட்டியலில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.மேலும், கருணாநிதி, காங்கிரஸ் தலைவர், சோனியாவோ அல்லது துணைத் தலைவர் ராகுலோ, நேரில் சந்தித்து, ஆதரவுகேட்டால் மட்டுமே, கூட்டணி குறித்து பரிசீலிக்கவும், தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.மத்தியில் ஆட்சியில் உள்ள, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ... |
| மத்திய அரசை ஆதரித்தவருக்கு தெரியாதா? முதல்வர் பதில் Posted: சென்னை:'ஒப்பந்த அடிப்படை, மாற்றுப் பணியில் மருத்துவர் நியமனத்தில், இட ஒதுக்கீடு பொருந்தாது; ஓமந்தூரார் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு, அதிக தகுதி, அனுபவம் மிக்கவர்களை கொண்டு வரவே, அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது,' என, கருணாநிதி குற்றச்சாட்டுக்கு, ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.இதுகுறித்த அவரது அறிக்கை:சமூக நீதியின் குரல் வளையை நான் நெரிப்பதாக, கருணாநிதி கூறுவது வேடிக்கையானது மட்டுமல்ல; ஏற்க இயலாதது. கருணாநிதி அறிக்கையில், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமையும், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில், ... |
| பிறரை வெறுப்பது உண்மையான மதம் அல்ல: பிரதமர் பேச்சு Posted: புதுடில்லி:''மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதும், மனம் புண்படும்படியாக பேசுவதும், உண்மையான மதம் அல்ல; மதம் என்பது, அந்த அடிப்படையில் அமைந்ததல்ல. அனைவரின் நம்பிக்கைக்கும், சகிப்பு தன்மைக்கும், பரஸ்பரம் மதிப்பு அளிப்பதே உண்மையான மதம். இதைத் தான், சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.நிறைவு விழா:சுவாமி விவேகானந்தரின், 150வது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும், கடந்த ஓர் ஆண்டாக, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் நிறைவு விழா, மத்திய கலாசார அமைச்சகம் சார்பில், டில்லியில், நேற்று நடந்தது. இதில், ... |
| மகள்களை பிரிந்து எப்படி வாழ்வேன்? தேவயானி கண்ணீர் Posted: புதுடில்லி : 'என்னை விட்டு பிரிந்து, என் மகள்கள், அமெரிக்காவில் எப்படி வசிப்பரோ, என நினைக்கும்போது, துக்கம் தொண்டையை அடைக்கிறது' என, அமெரிக்க அரசால் வெளியேற்றப்பட்ட, தூதரக அதிகாரி தேவயானி, பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.'விசா' மோசடியாம்:அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றிய தேவயானி, விசா மோசடியில் ஈடுபட்டதாக, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரின் உடைகளை களைந்து, போலீசார் சோதனையிட்டனர்.இந்த விவகாரம், இந்தியாவில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தியா திரும்பிய தேவயானி, ... |
| மத்திய அரசுடன் பேச்சு நடத்திய பிறகே தமிழக மீனவர்கள் விடுவிப்பு: இலங்கை தகவல் Posted: கொழும்பு: 'இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படமாட்டார்கள்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, 275 தமிழர்கள், ஓரிரு நாளில் விடுவிக்கப்படுவார்கள், என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக, தமிழக முதல்வர், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.இதுகுறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர், ரஜிதா சேனரத்னே கூறியதாவது: இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள், அதிநவீன வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால், இலங்கைக்கு, கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே தான், தமிழக மீனவர்களை, இலங்கை ... |
| ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் கட்டணம்: ரிசர்வ் வங்கி Posted: புதுடில்லி: வங்கி ஏ.டி.எம்., இயந்திரங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், வாடிக்கையாளரிடம் இருந்து கட்டணம் வசூலிக்க, வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, விரைவில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, "டெபிட் கார்டுகள்' என்ற பெயரில், வங்கி பண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையை, ஏ.டி.எம்., இயந்திரங்களில் செருகி, பணம் பெற்றுக் கொள்ளலாம். கணக்கு வைத்துள்ள வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரத்திலிருந்து, எத்தனை முறை வேண்டுமானாலும், பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த கட்டணமும் கிடையாது.ஆனால், பிற ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 13,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |