Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'மறைநீர்' பயன்பாட்டை அறிந்தால் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

Posted:

மதுரை:நாட்டில் 'மறைநீரை' அறிந்து, நீர்மேலாண்மையை கடைபிடித்தால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்.ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நீர், 'மறைநீர்' ஆகும். ஒரு கிலோ அரிசி என்பது 2500 முதல் 3000 லிட்டர் தண்ணீருக்குச் சமம். ஒரு கிலோ அரிசியை உருவாக்க இந்தளவு தண்ணீர் தேவைப்படுகிறது என பொருள். அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும், வேளாண் சார் பொருட்களுக்கும் மறைநீர் தேவையாக ...

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு

Posted:

சென்னை:பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கி வட்டாரங்களில் கூறப்படுகிறது.பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.ரிசர்வ் வங்கி உத்தரவு:இந்த சம்பவம் நாடெங்கும், வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ...

காங்., தலைவர்களுக்கு நூறு ரூபாய் புத்தாண்டு பரிசு வழங்கிய ஸ்டாலின்

Posted:

சென்னை: ஆங்கில புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் நேற்று, வாழ்த்து தெரிவித்தனர். தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு, 100 ரூபாயை, புத்தாண்டு பரிசாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வழங்கி, பரபரப்பை ஏற்படுத்தினார்.தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், நேற்று முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது கருணாநிதிக்கு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு, புத்தகங்கள், மலர் கொத்துக்களை வழங்கினர்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, ...

மினி தலைமை செயலகமாக மாறிய கொடநாடு

Posted:

சென்னை:கொடநாட்டில் தங்கி இருந்து, அரசு திட்டங்களை துவக்கி வைப்பதால், முதல்வர் தங்கியுள்ள பங்களா, மினி தலைமைச் செயலகமாக மாறியுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, டிசம்பர், 24ம் தேதி, கொடநாடு சென்றார். அவர் ஓய்வெடுக்க அங்கு செல்வதாக, கூறப்படும் குற்றச்சாட்டை தவிர்க்க, அங்கு இருந்தபடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.அரசு வெளியிடும் செய்தி குறிப்பிலும், 'கொடநாடு முகாம் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி' என்றே குறிப்பிடுகின்றனர்.கடந்த வாரம், ரேஷன் கடைகளில், அரிசி வாங்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக, ...

காங்., நம்பும் கவர்ச்சி அறிவிப்புகள்: மோடி பிரசாரத்தை முறியடிக்க புதிய தந்திரம்

Posted:

கடந்த, 2004 மற்றும், 2009ல் நடந்த, லோக்சபா தேர்தல்களில், தோல்வியை சந்தித்த, பாரதிய ஜனதா கட்சி, 10 ஆண்டுகளாக, எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என, திட்டமிட்டு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே, பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறது.மோடியை பிரதமர் பதவியில் எப்படியும் அமர்த்தி விட வேண்டும், அவருக்கு ஆதரவாக வீசும் அலையை சாதகமாக பயன்படுத்த வேண்டும் என, தமிழக பா.ஜ.,வினரும், 'வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' என்ற ...

அரியானா மாநிலத்துக்கு குறி வைக்கிறது 'ஆம் ஆத்மி'

Posted:

புதுடில்லி :டில்லியை தொடர்ந்து, அரியானா மாநிலத்துக்கு, 'ஆம் ஆத்மி' கட்சியினர் குறி வைத்துள்ளனர். அங்கு, காங்., தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடு பிரச்னையை முன் வைத்து, பிரசாரம் செய்ய, திட்டமிட்டுள்ளனர்.ஆட்சியை பிடித்தது:அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, டில்லியில், ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை பிரசாரம் செய்து, ஆட்சியை பிடித்துள்ளது.இதையடுத்து, அருகில் உள்ள, அரியானா மாநிலத்தின் மீது, அந்த கட்சியினரின் கவனம் திரும்பியுள்ளது. அரியானாவிலும், காங்., ஆட்சி தான் நடக்கிறது. பூபிந்தர் ...

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து: மத்திய அரசு அதிரடி

Posted:

புதுடில்லி : வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தெரிய வந்ததால், அந்த ஒப்பந்தத்தை, மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,கள் பயணிக்க, 2010ல், அதிநவீன ஹெலிகாப்டர்கள், 12 வாங்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்தது.பிரிட்டன் - இத்தாலி கூட்டு, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்திடம், இந்த ஹெலிகாப்டர்களை வாங்க, 3,600 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, அந்த நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த சிலருக்கு, லஞ்சம் கொடுத்ததாக, தகவல் வெளியானது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு ...

ஐந்து மாநில தேர்தலில் கறுப்பு பண ஆதிக்கம்: ரூ.32 கோடியை கைப்பற்றியது தேர்தல் கமிஷன்

Posted:

புதுடில்லி : சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பண பலம், புகுந்து விளையாடி உள்ளது அம்பலமாகி உள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில், கணக்கில் காட்டப்படாத, 32 கோடி ரூபாய், அரசியல் கட்சியினரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:கண்காணிப்பு குழுக்கள்:தேர்தல்களில், அரசியல் கட்சியினரால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படும் போக்கு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த பண பலத்தை கட்டுப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்தல்களின் போது, ...

பா.ஜ., தலைவர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை : புத்தாண்டு நாளில் வைகோவும் மோடிக்கு ஆதரவு

Posted:

புத்தாண்டு தினமான நேற்று, கூட்டணிக்கான பேச்சு வார்த்தையை, தமிழக பா.ஜ., அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை, பா.ஜ., தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுத்தனர். இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்த முதல் சந்திப்பும், பேச்சுவார்த்தையும், அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சென்னையில் புத்தாண்டு சிறப்பு பேட்டி அளித்த, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, 'பா.ஜ., அணியில் சேர்வதற்கான, பூர்வாங்க பேச்சு முடிந்துள்ளது. மோடி தான் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™