Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


7 அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ.32 கோடி நிதி: முதல்வர் உத்தரவு

Posted: 22 Jan 2014 01:04 PM PST

7 இடங்களில் அரசு அரிசி ஆலைகளை நவீனமயமாக்க ரூ.32.60 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

உடல் நலம் பாதித்த தந்தையை பார்க்க ஒரு மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு

Posted: 22 Jan 2014 01:03 PM PST

உடல் நிலை பாதித்த தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்லூரி பஸ் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் சாவு

Posted: 22 Jan 2014 12:54 PM PST

புதுவை அருகே கல்லூரி பஸ் மோதியதில் பைக்கில் வந்த இரண்டு கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், அந்தப் பஸ் கவிழ்ந்ததில் கல்லூரி மாணவர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

குழந்தையை கடத்தி விற்றார் முன்னாள் கணவர்: 4 மாதம் விடாமல் போராடி மீட்டார் தாய்

Posted: 22 Jan 2014 12:52 PM PST

விவாகரத்து செய்த கணவரால் கடத்தி விற்கப்பட்ட தனது குழந்தையை சென்னையைச் சேர்ந்த பெண் நான்கு மாதம் அசராமல் போராடி பெங்களூருவில் இருந்து மீட்டு வந்தார்.

அமெரிக்க விண்வெளி மையத்துக்கு கல்விச் சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்கள்

Posted: 22 Jan 2014 12:49 PM PST

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ-இந்தியன் பள்ளியின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி 50 மாணவர்கள் அமெரிக்க விண்வெளி மையத்துக்கு (நாசா) கல்விச் சுற்றுலா மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இராக்: வான் தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி

Posted: 22 Jan 2014 12:30 PM PST

இராக் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர்.

அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள்: இலங்கை அறிவிப்பு

Posted: 22 Jan 2014 12:30 PM PST

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

"பைத்தியக்கார முதல்வர்' கேஜரிவால்: சுஷில்குமார் ஷிண்டே கடும் தாக்கு

Posted: 22 Jan 2014 12:27 PM PST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் "பைத்தியம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கடுமையாக சாடியுள்ளார்.

மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு: குஜராத், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள்

Posted: 22 Jan 2014 12:24 PM PST

மக்களவைத் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் மசோதாக்கள் மீதான அறிக்கை விரைவில் தாக்கல்

Posted: 22 Jan 2014 12:23 PM PST

ஊழல் தொடர்பான மசோதாக்கள் மீது நாடாளுமன்ற நிலைக்குழு பிப்ரவரி 5ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

மோடி போட்டியிடும் தொகுதியை அறிவிக்க வேண்டும்:காங்கிரஸ்

Posted: 22 Jan 2014 12:23 PM PST

மக்களவைத் தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதியை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான மதுசூதன் மிஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

ஜான் கெர்ரி- குர்ஷித் சந்திப்பு

Posted: 22 Jan 2014 12:22 PM PST

தேவயானி விவகாரத்தால் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் சுவிட்ஸர்லாந்து நாட்டில் புதன்கிழமை சந்தித்தனர்.

தில்லி முதல்வருக்கு எதிரான புகார்: போலீஸ் விசாரணைக்கு இந்தூர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Jan 2014 12:21 PM PST

அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பு செய்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக இந்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் மரணம்

Posted: 22 Jan 2014 12:21 PM PST

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் துணை முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவருமான சுதிர் மகாதோ (58) புதன்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

நாட்டை பிளவுபடுத்த முயற்சி: அமெரிக்கா மீது இலங்கை குற்றச்சாட்டு

Posted: 22 Jan 2014 12:20 PM PST

இலங்கையை பிளவுபடுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா மீது அந்நாட்டு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சையில் போட்டியிட டி.ஆர். பாலு விருப்ப மனு

Posted: 22 Jan 2014 12:13 PM PST

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட டி.ஆர். பாலு விருப்ப மனு அளித்துள்ளார்.

தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் பேச இ.ஜ.க., கொ.ம.தே.க. குழு அமைப்பு

Posted: 22 Jan 2014 12:12 PM PST

மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழுக்களை இந்திய ஜனநாயக் கட்சியும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் அறிவித்துள்ளன.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 3 வரை சிறைக் காவல்

Posted: 22 Jan 2014 12:11 PM PST

எல்லை தாண்டியதாக திங்கள்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை சிறைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஆதரவு

Posted: 22 Jan 2014 12:11 PM PST

வரும் மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்

Posted: 22 Jan 2014 12:08 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டிலிருந்து வியாழக்கிழமை (ஜன.23) சென்னை திரும்புகிறார்.

மோடி பிரசார திடல்: காவல்துறை அதிகாரிகள் ஆய்வு

Posted: 22 Jan 2014 12:07 PM PST

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி பங்கேற்க உள்ள தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற தேர்வு செய்யப்பட்ட இடத்தை காவல்துறை உயர் அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

Posted: 22 Jan 2014 12:05 PM PST

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய மனித வாழ்க்கையில் கூலித் தொழிலாளர்களில் தொடங்கி, மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் வரை எல்லோருக்குமே பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தோல்கூத்துப் பாவை

Posted: 22 Jan 2014 12:04 PM PST

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாடு. பல்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற, பல்வேறு மொழிகளைப் பேசுகிற பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

முதல்வரின் அவசர கவனத்திற்கு...

Posted: 22 Jan 2014 12:03 PM PST

இன்று இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு, நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் முறைகேடு, பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பில் தனியாருக்கு நிர்ணயிக்கப்படும் விலை என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதற்கு முழுமுதற்காரணம் - பொது கணக்குத் தணிக்கைத் துறை.

பிப்ரவரி 4இல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Posted: 22 Jan 2014 11:59 AM PST

மக்களவைத் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம், தில்லியில் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

புத்துயிர் பெறுமா "பக்கிங்காம்'?

Posted: 22 Jan 2014 11:58 AM PST

50 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள பக்கிங்காம் கால்வாய் திட்டத்துக்குப் புத்துயிரூட்ட மத்திய கப்பல் துறை இப்போது முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல்: தேமுதிக போட்டியிட ஆதரவா?

Posted: 22 Jan 2014 11:57 AM PST

கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அந்தக் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

12 நீதிபதிகள் நியமன விவகாரம்: வழக்குரைஞர்கள் போராட்டம் வாபஸ்

Posted: 22 Jan 2014 11:56 AM PST

சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 12 பேருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் பணிகளைப் புறக்கணித்து வந்த வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை புதன்கிழமை மாலையில் திரும்ப பெற்றுக் கொண்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமை தீர்ப்பாயத்தில் பைசல்

Posted: 22 Jan 2014 11:55 AM PST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகமும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தொடர்ந்த வழக்குகள் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டன.

3 மாவட்டங்களில் கோயில்கள்-அரண்மனையை புனரமைக்க ரூ.6 கோடி நிதி

Posted: 22 Jan 2014 11:55 AM PST

மூன்று மாவட்டங்களில் கோயில்கள் மற்றும் அரண்மனை ரூ.6 கோடியில் புனரமைக்கப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Posted: 22 Jan 2014 11:51 AM PST

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய இலங்கைக் கடற்படையினர் அவர்களை கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தல்: பார்வையாளராக பிரவீண் குமார் நியமனம்

Posted: 22 Jan 2014 11:46 AM PST

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

குளித்தலை அருகே தண்டவாளத்தில் விரிசல்: உடனடி நடவடிக்கையால் விபத்து தவிர்ப்பு

Posted: 22 Jan 2014 11:24 AM PST

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூர் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உடனடியாகக் கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

விவசாயக் கடன்களை அறவே ரத்து செய்ய வேண்டும்

Posted: 22 Jan 2014 11:23 AM PST

விவசாயக் கடன்கள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

என் புகார் மீதான விசாரணை முடியும்வரை சென்னையிலிருந்து மாற்றக் கூடாது: நீதிபதி சி.எஸ்.கர்ணன் கோரிக்கை

Posted: 22 Jan 2014 11:23 AM PST

எனது புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கோரி நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று முதல் பா.ம.க., ம.தி.மு.க.வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு

Posted: 22 Jan 2014 11:22 AM PST

பாமக, மதிமுகவுடன் வியாழக்கிழமைமுதல் அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறவுள்ளது என்று, மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இலங்கை மீனவர்களின் 11 படகுகள் விடுவிப்பு: தமிழக அரசு

Posted: 22 Jan 2014 11:21 AM PST

தமிழகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 11 படகுகள் புதன்கிழமை விடுவிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை திரும்பினார் விஜயகாந்த்

Posted: 22 Jan 2014 11:20 AM PST

மலேசிய பயணம் மேற்கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்னை திரும்பினார்.

குடிமக்கள் குறைதீர் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை

Posted: 22 Jan 2014 11:18 AM PST

எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குடிமக்கள் குறைதீர் சட்ட மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத் துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

Posted: 22 Jan 2014 11:17 AM PST

தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை கன்னியாகுமரி மாவட்ட தமிழ் நல எழுத்தாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனியார் கல்லூரியில் நீர்த்தேக்க தொட்டி களியக்காவிளையில் பாஜக போராட்டம்

Posted: 22 Jan 2014 11:17 AM PST

களியக்காவிளை பேரூராட்சியில் தனியார் கல்லூரி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

குடியரசு தின விழா ஒத்திகை

Posted: 22 Jan 2014 11:17 AM PST

நாகர்கோவிலில் குடியரசு தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜனவரி 26 ஆம் தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு

உரிமை மீறல் விவகாரம்: காஷ்மீர் மேலவை முன் வி.கே.சிங் ஆஜராகவில்லை

Posted: 22 Jan 2014 11:17 AM PST

உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் ஜம்மு-காஷ்மீர் மாநில மேலவை முன் 2-வது முறையாக புதன்கிழமை ஆஜராகவில்லை.

பூதப்பாண்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 22 Jan 2014 11:17 AM PST

பூதப்பாண்டி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டுமானங்களை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

நாகர்கோவிலில் ஹெச்.எம்.எஸ். போராட்டம்

Posted: 22 Jan 2014 11:16 AM PST

அரசு போக்குவரத்துக் கழக நிதிநெருக்கடியை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவிலில் ஹெச்.எம்.எஸ். சார்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

வெள்ளமடத்தில் பழுதான லாரியால் போக்குவரத்து நெரிசல்

Posted: 22 Jan 2014 11:16 AM PST

நாகர்கோவில் அருகே வெள்ளமடத்தில் புதன்கிழமை சாலையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மின்சாரம் பாய்ந்து முதியவர் சாவு

Posted: 22 Jan 2014 11:16 AM PST

களியக்காவிளை அருகே மின்சாரம் பாய்ந்து முதியவர் புதன்கிழமை இறந்தார். களியக்காவிளை அருகேயுள்ள தையாலுமூடு மண்ணாரதிட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுநாடார் மகன்

கிள்ளியூர் பேரூராட்சியில் உறுப்பினர், பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 22 Jan 2014 11:16 AM PST

கிள்ளியூர் பேரூராட்சியில் திட்டமிட்டபடி சாலைப் பணிகள் செய்யாமல் இழுத்தடிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 வது வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை உள்ளிருப்பு

நாகர்கோவில்: நகராட்சி கூட்டத்தில் மதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு

Posted: 22 Jan 2014 11:15 AM PST

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காத அரசை கண்டித்து நாகர்கோவில் நகராட்சிக் கூட்டத்தில் இருந்து மதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

Posted: 22 Jan 2014 11:15 AM PST

""குடியரசு தின விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதால், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்'' என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாளை சுங்கான்கடையில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா

Posted: 22 Jan 2014 11:15 AM PST

சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி அரங்கில் வெள்ளிக்கிழமை(ஜன. 24) தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.

கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 22 Jan 2014 11:15 AM PST

குழித்துறை அருகே கேரளத்துக்கு சுமை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 22 Jan 2014 11:15 AM PST

புதுக்கடை அருகே உள்ள பாரக்கன்விளை பகுதியில் புதன்கிழமை பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து  போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தூய மரியன்னை கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை கண்காட்சி

Posted: 22 Jan 2014 11:14 AM PST

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நுண்ணுயிரியல் தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

பைக் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறை

Posted: 22 Jan 2014 11:14 AM PST

திருச்செந்தூரில் பைக் திருடிய இளைஞருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கிராம வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும்

Posted: 22 Jan 2014 11:13 AM PST

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அதிக அளவிலான கடனுதவிகளை கிராம வங்கிகள் வழங்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர்  ம. ரவிக்குமார்.

தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம்: திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Posted: 22 Jan 2014 11:13 AM PST

தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜே.சி.ஐ. மகளிரணி பதவியேற்பு

Posted: 22 Jan 2014 11:13 AM PST

கோவில்பட்டி ஜே.சி.ஐ. (ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல்) மகளிரணி நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

என்எஸ்எஸ் முகாம்

Posted: 22 Jan 2014 11:12 AM PST

மணப்பாடு புதுக்குடியேற்றில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. முகாமை புனித வளன் பள்ளித் தாளாளர் இருதயராஜ் பர்னாண்டோ தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் கூட்டம்

Posted: 22 Jan 2014 11:12 AM PST

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் பேச்சியம்மாள் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணை

பேய்க்குளத்தில் வியாபாரி மீது தாக்குதல்

Posted: 22 Jan 2014 11:12 AM PST

பேய்க்குளத்தில் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 22 Jan 2014 11:12 AM PST

தூத்துக்குடியில் நாடார் பேரவை இளைஞர் அணி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன. நாடார் பேரவையின், தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா, பேரவை தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 22 Jan 2014 11:11 AM PST

தூத்துக்குடி மாவட்ட பைக்கா விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

முசாஃபர்நகர் கலவரம்: முலாயம் சிங்குக்கு எதிரான மனு தள்ளுபடி

Posted: 22 Jan 2014 11:11 AM PST

முசாஃபர்நகர் கலவரம் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, அவருக்கு சம்மன் அனுப்பக் கோரிய மனுவை நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

காயல்பட்டினத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 22 Jan 2014 11:11 AM PST

காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

25-ல் ஆறுமுகனேரியில் செஸ் போட்டி தொடக்கம்

Posted: 22 Jan 2014 11:11 AM PST

ஆறுமுகனேரியில் ரெயின்போ செஸ் அகாதெமி சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான 7-ஆவது செஸ் போட்டி 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.

கேஜரிவால் தர்னாவில் மோதல்: தில்லி போலீஸார் வழக்குப் பதிவு

Posted: 22 Jan 2014 11:11 AM PST

"ஆம் ஆத்மி' கட்சித் தொண்டர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மேற்கொண்ட தர்னாவின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக அடையாளம் தெரியாத சிலர் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கயத்தாறில் ஆட்டோ கவிழ்ந்து இளைஞர் சாவு

Posted: 22 Jan 2014 11:11 AM PST

கயத்தாறு பிரதானச் சாலையில் புதன்கிழமை சென்று கொண்டிருந்த ஆட்டோ கவிழ்ந்ததில், அதிலிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜனவரி 24 மின் தடை

Posted: 22 Jan 2014 11:11 AM PST

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன.24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்: விநியோகஸ்தரை மாற்றும் வசதி 480 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

Posted: 22 Jan 2014 11:10 AM PST

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி, மேலும் 480 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, புதன்கிழமை வழங்கினார்.

ஆதரவை வாபஸ் பெறும்படி காங்கிரஸூக்கு கடிதம் எழுத முடியுமா? கேஜரிவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் சவால்

Posted: 22 Jan 2014 11:10 AM PST

தில்லி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும்படி காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் எழுத முடியுமா? என்று அந்த மாநில முதல்வர் கேஜரிவாலுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

கன்னியாகுமரி

Posted: 22 Jan 2014 11:10 AM PST

ஆம் ஆத்மியில் இணைந்தார் அருந்ததி ராயின் தாயார்

Posted: 22 Jan 2014 11:07 AM PST

பிரபல சமூக ஆர்வலர் அருந்ததி ராயின் தாயார் மேரி ராய், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவராகிறார் ஜி.கே.வாசன்?

Posted: 22 Jan 2014 11:04 AM PST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிய வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அக் கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரள செவிலியர்கள் குறித்த பேச்சு: மன்னிப்பு கேட்டார் குமார் விஸ்வாஸ்

Posted: 22 Jan 2014 11:04 AM PST

கேரள செவிலியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய தனது கருத்துக்காக, ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு உறுப்பினர் குமார் விஸ்வாஸ் புதன்கிழமை மன்னிப்பு கேட்டார்.

கண் பார்வைக் குறைபாடுடன் பணியில் 600 டிடிசி ஓட்டுநர்கள்

Posted: 22 Jan 2014 11:04 AM PST

தில்லி போக்குவரத்துக் கழகத்தில் (டிடிசி) சுமார் 600 ஓட்டுநர்கள் கண்பார்வைக் குறைபாடுடன் பணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் "தமிழ்நாடு

Posted: 22 Jan 2014 11:04 AM PST

தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினஅணிவகுப்பில் இடம் பெறும் மாநிலங்களுக்கான அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு இடம்பெறவுள்ளது.

முதல்வர் கேஜரிவாலுக்கு காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி

Posted: 22 Jan 2014 11:03 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கடும் காய்ச்சல் காரணமாக காஜியாபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார்.

25இல் ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை

Posted: 22 Jan 2014 11:03 AM PST

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே 3 நாள் அரசு முறைப் பயணமாக வரும் 25ம் தேதி இந்தியா வருகிறார்.

தில்லியில் இரண்டாவது நாளாக மழை

Posted: 22 Jan 2014 11:03 AM PST

தில்லியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

"சட்டத்தை தானே கையில் எடுப்பது தவறு'

Posted: 22 Jan 2014 11:03 AM PST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தானே கையில் சட்டத்தை எடுப்பது தவறாகும் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சபிர் அலி தெரிவித்தார்.

சுனந்தா மரணம்: தற்கொலையாக இருக்க முடியாது

Posted: 22 Jan 2014 11:03 AM PST

எனது தாய் சுனந்தா புஷ்கர், தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையானவர் அல்ல என்று சிவ மேனன் (21) தெரிவித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு எதிரான தேர்தல் மனு: உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

Posted: 22 Jan 2014 11:03 AM PST

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்ட சொத்து விவரங்கள் தவறானவை என்பதால்,  அதை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு

ஆம் ஆத்மி கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள்

Posted: 22 Jan 2014 11:02 AM PST

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டிவிட்டது என்று அக் கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்தார்.

மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற நடனக் கலைஞர்

Posted: 22 Jan 2014 11:02 AM PST

தில்லியில் பணக் கஷ்டத்தில் மனைவி, குழந்தைகளுக்கு விஷ மாத்திரை கலந்த பாலை அருந்தச் செய்து, தானும் தற்கொலைக்கு முயன்றார் நடனப் பயிற்சியாளர். இச் சம்பவத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி

Posted: 22 Jan 2014 11:02 AM PST

""குடியரசு தின விழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளதால், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்'' என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை

Posted: 22 Jan 2014 11:01 AM PST

தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 22 Jan 2014 11:01 AM PST

செங்கல்பட்டு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை கல்லூரி  அரங்கில் நடைபெற்றது.

மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளில் நீச்சல் படைவீரர்களை அமர்த்த கோரிக்கை

Posted: 22 Jan 2014 11:01 AM PST

மாமல்லபுரம் கடலில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடற்கரைப் பகுதியில் நீச்சல் படைவீரர்களை பணியமர்த்தக் கோரி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு வார விழா

Posted: 22 Jan 2014 11:01 AM PST

பென்னலூர் பகுதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக ஹாக்கி அணி: காஞ்சிபுரம் மாணவி தேர்வு

Posted: 22 Jan 2014 11:00 AM PST

தமிழக ஹாக்கி அணியில் காஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவி சரண்யா  தேர்வு செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ஆதி திராவிடர் நலப் பள்ளியில் அமைச்சர் ஆய்வு

Posted: 22 Jan 2014 11:00 AM PST

செங்கல்பட்டு அருகே ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில், அத் துறை அமைச்சர் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.

கல்லால்தாக்கி ஒருவர் கொலை

Posted: 22 Jan 2014 11:00 AM PST

செங்கல்பட்டு மருத்துவமனை பின்புறம் உள்ள புதரில் புதன்கிழமை 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மனுநீதி நாள் முகாம்

Posted: 22 Jan 2014 11:00 AM PST

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

ராமானுஜர் கோயிலில் அனுஷ்டான குள உற்சவம்

Posted: 22 Jan 2014 10:59 AM PST

செவிலிமேடு ராமானுஜர் கோயிலில், அனுஷ்டான குள உற்சவம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடந்தது.

அரசு ஊழியர் சங்கம் உண்ணாவிரதம்

Posted: 22 Jan 2014 10:59 AM PST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெடிகுண்டு புரளி: கருங்குழி பள்ளிக்கு விடுமுறை

Posted: 22 Jan 2014 10:59 AM PST

  மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு உள்ளதாக, புதன்கிழமை வந்த தகவலால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

Posted: 22 Jan 2014 10:59 AM PST

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

இலங்கை ராணுவத்துக்கு பிரிட்டன் உதவக்கூடாது

Posted: 22 Jan 2014 10:58 AM PST

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 1980ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது அந்நாட்டு ராணுவத்துக்கு உதவக் கூடாது என்று அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சருக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்தி வலியுறுத்தியதை குறிப்பிடும் ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

Posted: 22 Jan 2014 10:58 AM PST

திருவள்ளூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™