Daily Thanthi |
- இன்று நாள் எப்படி?
- பிப்ரவரி 14–ல் காதலர் தினம் இந்த வார இறுதியில் ரோஜா ஏற்றுமதி தொடங்கும்
- அதிரடி படையினர் தோளில்
- பள்ளத்திவிடுதியில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார்
- பேச்சுவார்த்தை நடந்தாலும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் இலங்கை மந்திரி சொல்கிறார்
- கடந்த 30 வருடத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டுக்குதமிழக மீனவர்கள் 362 பலி
- ஊட்டி அருகே 3 பேரை அடித்துக்கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது
- 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்.பி.ஐ.; கறுப்பு பணத்தை வெளிக்கொண்டுவர அதிரடி
- நடிகை அஞ்சலி மீதான வழக்கு 10–ந் தேதிக்கு தள்ளிவைப்பு
- ஆம் ஆத்மி கட்சியால் பாரதீய ஜனதாவுக்கு அச்சுறுத்தல் இல்லை-அருண் ஜெட்லி
| Posted: 22 Jan 2014 10:59 AM PST Endru Image: ![]() |
| பிப்ரவரி 14–ல் காதலர் தினம் இந்த வார இறுதியில் ரோஜா ஏற்றுமதி தொடங்கும் Posted: 22 Jan 2014 10:17 AM PST உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதல் ஜோடிகள் ரோஜாப்பூக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம். காதலர் தினம் நெருங்கி வரும் நிலையில் ரோஜா ஏற்றுமதி விறுவிறுப்படைய உள்ளது. இதனால் ரோஜா பயிரிடுவோருக்கு நல்ல வருமானம் கிடைக்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக ஜனவரி 25 முதல் பிப்ரவரி 10–ந் தேதி வரை ரோஜா ஏற்றுமதி மும்முரமாக நடைபெறும். குறிப்பாக பூனா, பெங்களூர் ஆகிய நகரங்களிலிருந்து ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோடிக்கணக்கில் ரோஜா செண்டுகள் அனுப்பப்படுகின்றன. வேளாண் மற்றும் பதப்படுத்திய உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி ஆண்டுதோறும் பூக்கள் ஏற்றுமதி ஒட்டுமொத்த அளவில் 15 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சில சமயங்களில் ரோஜாக்களுக்கு பற்றாக்குறையும் ஏற்படுவதாக தெரிகிறது. தேவைப்பாடு அதிகம் உள்ளதால் ரோஜா விலையும் அதிகமாகவே இருந்து வருகிறது. 2013–ஆம் ஆண்டில் ரோஜா விலை குறையவே இல்லை. இதனால் ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. காதலர் தின வாரத்தில் மட்டும் ரோஜா விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு செண்டுக்கு ரூ.10 கிடைக்கிறது. ''நகரங்களில்தான் ரோஜாக்கள் விரும்பப்படுகின்றன என்று கூற இயலாது. சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் கூட திருமண காலங்களில் ரோஜாக்களுக்காக ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை செலவிட தயாராக உள்ளனர்'' என்று முன்னணி ஏற்றுமதியாளர் ஒருவர் கூறினார். image: category:Tagging: |
| Posted: 22 Jan 2014 10:02 AM PST |
| பள்ளத்திவிடுதியில் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்கள் எம்.எல்.ஏ. வழங்கினார் Posted: 22 Jan 2014 09:31 AM PST ஆலங்குடி, திருவரங்குளம் ஒன்றியம் பள்ளத்திவிடுதி மற்றும் கரும்பிரான்கோட்டை ஊராட்சியை சேர்ந்த 624 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா, பள்ளத்திவிடுதியில் நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தாசில்தார் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். விழாவில் கு.ப.கிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கி பேசினார். இதில் பள்ளத்திவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கசாமி, கரும்பிரான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் லெட்சுமி, மாவட்ட ஊராட்சி தலைவர் ராமையா, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி துணை தலைவர் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் முத்துவேல், அண்ணாச்சாமி, செல்லக்கண்ணு, ஒன்றிய அவைத்தலைவர் தமிழ்மணி, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிச்சாமி வரவேற்று பேசினார். image: category: |
| பேச்சுவார்த்தை நடந்தாலும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம் இலங்கை மந்திரி சொல்கிறார் Posted: 22 Jan 2014 08:52 AM PST கொழும்பு, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதே நேரத்தில், நேற்று25 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்து சென்றது பற்றி இலங்கை மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:– இந்தியா எங்களை நன்றாக கவனித்தது. சிறப்பான வசதிகளை அளித்தது. எங்கள் குழுவின் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டது. தமிழ்நாடு விவகாரத்தில் மத்திய அரசு சுதந்திரமாக செயல்படுகிறது. எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய அரசு எங்களிடம் சொன்னதே இல்லை. தமிழக மீனவர்களை கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய தரப்பில் இருந்து எங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு நான், 'எங்கள் கடல் எல்லையில் நுழைய யாருக்கும் உரிமை இல்லை, பேச்சுவார்த்தைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை, அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களை கைது செய்வதை நிறுத்த மாட்டோம்' என்று கூறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| கடந்த 30 வருடத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டுக்குதமிழக மீனவர்கள் 362 பலி Posted: 22 Jan 2014 08:41 AM PST தமிழக கடற்கரை பகுதியானது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் 1100 கிலோ மீட்டர் நீளமுடையது.இதில் ராமநாதபுரம்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,நாகப் பட்டினம்,காரைக்கால் ஆகிய 5 மாவட்டத்திலும் லட்சக் கணக்கான மீனவ குடும்பங்கள் மீன் பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றன. இந்த 5 மாவட்ட மீனவர்கள் தான் இலங் கடற்படையால் மீன் பிடி தொழில் செய்ய முடியாமல் அதிகளவில் பாதிக்கப் பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் மீன்பிடிதொழிலை நம்பி ராமேசுவரம்,பாம்பன்,மண்டபம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இலங்கை கடற்படை முதல் தாக்குதல் கடந்த 1983–ம் வருடம் ஜூலை மாதம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதுவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் நடத்திய முதல் தாக்குதல் சம்பவமாகும். அன்றில் இருந்து இன்று வரையிலும் கடந்த 30 வருடமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் பல்வேறு கட்ட தாக்குதல்களை நடத்தி மீனவர்களை மீன்பிடி தொழிலே செய்ய முடியாத நிலைமைக்கு மீனவர்கள் தள்ளப் பட்டுள்ளனர். அதன்பின்பு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்துவது நடுக்கடலில் வைத்து படகுகளில் ஏறி மீனவர் களை அடித்து சித்ரவதை செய்வது என பல்வேறு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்தன. கடந்த 1983– வது வருடம் ஜூலை மாதம் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் முனிய சாமி என்பவர் இலங்கை கடற் படையினரின் துப்பாக்கி சூட்டில் இறந்து போனார்.இறந்து போன மீனவர் உச்சிப் புளியை சோந்தவர்.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தான் முதல் சம்பவமாகும். கடந்த 30 வருடத்தில் மட்டும் இலங்கை கடற் படையினரின் துப்பாக்கி சூட்டில் சுமார் 362 பேர் இறந்தும்,700 பேர் காயமும்,90 பேர் காணாமல் போயும் உள்ளனர். தமிழக மீன் பிடி படகுகள் இது வரையிலும் 175 படகுகள் மூழ்கடிக்கப்பட்டும் காணாமலும் போயுள்ளன. இலங்கையில் போர் முடிவடைந்த பின்பு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படையி னரின் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று தமிழக மீனவர்கள் எண்ணி இருந்தனர்.ஆனால் இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்புதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அதிகமான தாக்குதலை நடத்திஉள்ளனர். தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண 2004,2010,2011 என 3 ஆண்டு களில் 2 முறை இலங்கை கொழும்பிலும்,ஒரு முறை தமிழகத்தின் சென்னையிலும் இலங்கை–தமிழக மீனவர்கள் சந்தித்து பேசிய கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. ஆனால் அதன்பின்பு இதுவரையிலும் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே மீன்பிடி தொழில் செய்வதற்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இரு நாட்டு அரசு களும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து மீனவர்களின் பிரச்சினை தீர்வுகாண முடியாதநிலை உள்ளது. image: category:Tagging:News Group Category: |
| ஊட்டி அருகே 3 பேரை அடித்துக்கொன்ற புலி சுட்டுக்கொல்லப்பட்டது Posted: 22 Jan 2014 08:19 AM PST ஊட்டி, ஊட்டி அருகே 3 பேரை அடித்துக்கொன்ற புலி இன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இதனால் 18 நாட்கள் பொதுமக்கள் மத்தியில் நீடித்த பீதி நீங்கி, நிம்மதி அடைந்துள்ளனர். 3 பேரை கொன்ற புலி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி சோலாடா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் கவிதா என்பவரை ஒரு புலி அடித்து கொன்றது. பின்னர் 6–ந் தேதி ஊட்டி அருகே உள்ள அட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னப்பன் என்பவரையும், 8–ந் தேதி குந்தசப்பை கிராமத்தில் தோட்டத்தில் காய்கறிகளை பறித்து கொண்டு இருந்த முத்துலட்சுமி என்பவரையும் புலி அடித்துக் கொன்றது. 3 பேரை புலி அடித்துக்கொன்றதால் ஊட்டி, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவியது. பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. 48 தானியங்கி கேமிராக்கள் இதனைதொடர்ந்து வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் அடங்கிய கூட்டுப்படை அமைக்கப்பட்டு புலியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. புலியின் நடமாட்டத்தை கண்டறிய 48 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் 'இன்பெரா ரெட்' எனப்படும் அதி நவீன கேமிராவும் பொருத்தப்பட்டது. இதுதவிர 6 இடங்களில் பரண்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்ததுடன், புலியை இரவு, பகலாக கடந்த 18 நாட்களாக கூட்டுப்படையினர் தேடி வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் அதிரடிப்படையினரின் கண்களில் பட்ட அந்த புலி தப்பி ஓடிவிட்டது. கிராம மக்கள் பீதி இந்தநிலையில், இன்று காலை கப்பச்சி வனப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் புலியின் உருவம் ஏதேனும் பதிந்து உள்ளதா? என்பதை கண்டறிய வனத்துறையினர் சென்றனர். அப்போது புலியின் உறுமல் சத்தம் கேட்டது. இதனைதொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புலியை அடித்து கொல்வதற்காக கத்தி, அரிவாள், தடி, இரும்பு போன்றவற்றை கொண்டு வந்தனர். பின்னர் கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அலறியடித்து ஓட்டம் அப்போது புதர் மறைவில் மறைந்திருந்த புலி, ரவி என்பவருடைய தலையை தாண்டி பாய்ந்து சென்றது. புலியை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது புலி அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படையினர் புலியை பிடிப்பதற்காக வனப்பகுதி முழுவதும் தேடி அலைந்தனர். பின்னர் கப்பச்சி வனப்பகுதியில் உள்ள பாழடைந்த 2 வீடுகளின் கதவுகளை அதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினர் உடைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதேபோல் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் புலியை பிடிக்க முடியவில்லை. பின்னர் தேடுதல் வேட்டையை நிறுத்திய அதிரடிப்படையினர் பிற்பகல் 2 மணியளவில் கிராமத்திற்குள் வந்தனர். பசுமாட்டை அடித்து கொன்றது இந்த நிலையில் மாலை 6 மணியளவில் கப்பச்சி கிராமம் அருகேயுள்ள வனப்பகுதியில் 3 பசுமாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. இதில், ஒரு பசுமாட்டை புலி அடித்துக் கொன்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.அந்த புலியை கொல்வதற்காக கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வனப்பகுதிக்கு மீண்டும் ஆவேசமாக சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அதிரடிப்படையினர் தீப்பந்தங்கள் மற்றும் சக்தி வாய்ந்த டார்ச்லைட் உதவியுடன் இரவு 7–30 மணியளவில் புலியை தேடினார்கள். புலி சுட்டுக் கொல்லப்பட்டது அப்போது கப்பச்சி வனப்பகுதியில் ஒரு இடத்தில் புலி படுத்துக்கிடப்பதை அதிரடிப்படையினர் பார்த்தனர். தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் புலியை சுற்றி வளைத்து சுட்டார்கள். இதனால் ஆக்ரோஷம் அடைந்த புலி அதிரடிப்படையினரை தாக்க முயற்சித்தது. இதில் சுதாரித்துக் கொண்ட அதிரடிப்படையினர் 15 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 5–க்கும் மேற்பட்ட குண்டுகள் புலியின் உடலில் பாய்ந்தன. படுகாயம் அடைந்த புலி அங்கிருந்து தப்பி ஓடி அருகே இருந்த தேயிலை தோட்டத்தில் மறைந்து கொண்டது. இதையடுத்து, அதிரடிப்படையினர் ரத்தம் வழிந்த இடத்தின் வழியே நடந்து சென்றார்கள். அப்போது துப்பாக்கி குண்டு பாய்ந்த புலி, ஒரு தேயிலை தோட்டத்தில் மறைந்துகொண்டு ரத்தவெள்ளத்தில் உறுமியபடி கிடந்தது. பயங்கர ஆவேசத்துடன் இருந்த அந்த புலியை அதிரடிப்படையினர் துப்பாக்கியால் மேலும் சுட்டார்கள். இதில், புலி ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தது. பொதுமக்கள் மகிழ்ச்சி இதனைதொடர்ந்து அதிரடிப்படையினர் துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடி வனப்பகுதியில் இருந்து புலியின் உடலை தூக்கி வந்தார்கள். புலி இறந்ததை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டியில் கடந்த 18 நாட்களாக அட்டகாசம் செய்து வந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மனிதவேட்டையாடி அட்டகாசம் செய்து வந்த புலியை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றதற்காக பொதுமக்கள் கூட்டு படையினருக்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு நன்றி தெரிவித்தனர். மேலும் புலியிடம் இருந்து மக்களை பாதுகாக்க கூட்டுப்படை அமைத்து நடவடிக்கை எடுத்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஊட்டி பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். image: category:News Group Category: |
| 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுகிறது ஆர்.பி.ஐ.; கறுப்பு பணத்தை வெளிக்கொண்டுவர அதிரடி Posted: 22 Jan 2014 08:13 AM PST புதுடெல்லி, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கி அறிவித்துள்ளது. மேலும் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடி ஆகும் என்றும் இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏப்ரல் 1–ந்தேதி முதல் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இது தொடர்பாக மறுஉத்தரவு வரும்வரை இந்த பணியில் அனைத்து வங்கிகளும் ஈடுபட வேண்டும் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. ஜூலை 1–ந்தேதிக்கு பத்துக்கும் மேற்பட்ட 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளையோ மாற்றுபவர்கள் அவர்களின் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி நிபந்தனை விதித்துள்ளது. கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும், கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| நடிகை அஞ்சலி மீதான வழக்கு 10–ந் தேதிக்கு தள்ளிவைப்பு Posted: 22 Jan 2014 08:12 AM PST சென்னை 'அங்காடித்தெரு', 'எங்கேயும் எப்போதும்' உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறி இருந்தார். இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி டைரக்டர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17–வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17–வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உமாராணி முன்பு வந்தது. அப்போது இந்த வழக்கை வருகிற 10–ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். image: category:Tagging:News Group Category: |
| ஆம் ஆத்மி கட்சியால் பாரதீய ஜனதாவுக்கு அச்சுறுத்தல் இல்லை-அருண் ஜெட்லி Posted: 22 Jan 2014 07:57 AM PST புது டெல்லி ராஜ்ய சபா எதிர்கட்சி தலைவரும், பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது:- பாரதீய ஜனதாவால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து ஒரு பார்வையாளராக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்ற தன்மை மற்றும் காங்கிரஸ் சராணாகதி மூலம் எவ்வாறு ஸ்திரமான அரசை வழங்க முடியும். கடந்த சில ஆண்டுகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்திறன் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது . அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் நரேந்திர மோடி 2014 பொது தேர்தலில் செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார் என்றும் . மற்ற தலைவர்கள் அவருக்கு பின்னால் உள்ளனர் என்றும் கூறுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து விட்டது. தமிழ்நாடு, ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போதைய கருத்து கணிப்புக்கள் படி பாரதீய ஜனதா கட்சி பலம் குறைவாக உள்ளது வரும் தேர்தலில் பாரதீய ஜனதா குறிப்பிடதக்க வகையில் ஓட்டுக்களை பெறும். அரசியல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி உள் பட எந்த புதிய வரவுகளாலும் பாரதீயஜனதாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

