Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


துணை ஜனாதிபதிக்கு வரவேற்பு **

Posted: 31 Jan 2014 01:55 PM PST

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விசுவநாதன், மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்ற போது எடுத்த படம்

1

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு கோர்ட்டு பிடிவாரண்டு வெளிநாடு செல்லவும் தடை

Posted: 31 Jan 2014 01:45 PM PST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் மீதான தேசதுரோக வழக்கை விசாரித்துவரும் கோர்ட்டு, அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவும் தடை விதித்தது.

முஷரப் மீது வழக்கு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது தேசதுரோக வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007–ம் ஆண்டு நடந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மீதான தாக்குதல் வழக்கு உள்பட 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முஷரப் மீது 2007–ம் ஆண்டு நெருக்கடி நிலையை கொண்டுவந்ததற்காக பாகிஸ்தான் அரசு தேசதுரோக வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு கோர்ட்டையும் அரசு அமைத்தது. சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கில் முஷரப் தரப்பு மற்றும் அரசு தரப்பு வக்கீல்களின் வாதம் முடிவடைந்தது.

பிடிவாரண்டு பிறப்பித்தது

இதைத்தொடர்ந்து கோர்ட்டு முஷரப்புக்கு ஜாமீன் வழங்கக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்தது. வருகிற 7–ந்தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் போலீஸ் அதிகாரி இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதோடு மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற முஷரப்பின் வேண்டுகோளையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

முஷரப் கைதாகிறார்

இந்த உத்தரவின்படி, போலீசார் முஷரப்பை கைது செய்ய வேண்டும் என்றாலும் அவர் சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. கைதான உடனே அவர் ரூ.25 லட்சம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். சட்டப்படி ஜாமீனில் இருக்கும் ஒருவர் கோர்ட்டு உத்தரவிடும் நாளில் கட்டாயம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.கோர்ட்டுக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய முஷரப்பின் வக்கீல் பைசல் சவுத்ரி, 'நாங்கள் தீர்ப்பை முழுவதுமாக ஆராய்ந்து பார்ப்போம். அதில் சட்டவிரோதமாக ஏதாவது இருந்தால் எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் இருந்து முஷரப் பெயரை நீக்க ஐகோர்ட்டுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது' என்றார்.

அமெரிக்காவில் சிகிச்சை

70 வயதான முஷரப், இருதய கோளாறு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆஞ்சியோகிராபி எடுக்க மறுத்துவிட்டதாகவும், அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற விரும்புவதாகவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முஷரப் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற விரும்பியதாக கூறப்படுகிறது.ஆனால் கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீல் அக்ரம் ஷேக் வாதாடும்போது, முஷரப் கோர்ட்டுக்கு வருவதை தவிர்ப்பதாக கூறி அந்த மருத்துவ அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

category:

News Group Category:

கள்ளக்காதலால் அவமானம் மரத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

Posted: 31 Jan 2014 01:22 PM PST

மணப்பாறை அருகே கள்ளக்காதலால் ஏற்பட்ட அவமானத்தால் வாலிபர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதல்

மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியை சேர்ந்தவர் தர்மர் (வயது 24). கொத்தனார். திருமணம் ஆகாத இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தர்மருடன் நட்பாக பழகி நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்மர், கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தர்மரை வீட்டின் உள்ளே வைத்து வெளிக்கதவை பூட்டினர்.

தூக்கில் தொங்கினார்

நீண்ட நேரத்திற்கு பின்னரே கதவு திறக்கப்பட்டது. கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்றதை ஊர் மக்கள் பார்த்ததால் தர்மர் அவமானம் தாங்க முடியாமல் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் தர்மரின் தாய் எழுந்து பார்த்த போது, தர்மர் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அவரது தேடி சென்ற போது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தர்மர் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவன்குமார், பரஞ்சோதி, கந்தசாமி, லாரன்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்மரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து புத்தானத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மரின் உடலை பிணவறைக்கு எடுத்து செல்ல ஊழியர் ஒருவர் மட்டுமே இருந்ததால் அவருக்கு உதவியாக போலீஸ்காரர் ஒருவரும் உடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. கவுன்சிலர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை வீசியதால் பரபரப்பு

Posted: 31 Jan 2014 12:45 PM PST

அனுப்பர்பாளையம்,

திருமுருகன்பூண்டி பேரூ ராட்சி மன்ற கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர் ரூ.5 ஆயிரம் லஞ்ச பணம் என்று கூறி வீசிய தால் பரபரப்பு ஏற்பட் டது.

பேரூராட்சி மன்ற கூட்டம்

திருப்பூர் அடுத்துள்ள திரு முருகன்பூண்டி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட் டம் நேற்று நடந்தது. கூட்டத் துக்கு திருமுருகன்பூண்டி பேரூராட்சி துணைத் தலை வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் நந்தகோபால் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தர்ணா போராட்டம்

கார்த்திகேயன் (அ.தி.முக.):- பேரூராட்சியில் மக்கள் பிரச்சினைக்காக ஒரு வேலை செய்ய 6 மாதமாக அலைய வேண்டி உள்ளது. குடிநீர் குழாய் உடைப்புகளுக்கு ஏன் உப கரணங்கள் வாங்கி தருவ தில்லை. கடந்த 1½ வருடங் களாக எனது வார்டுக்கு குப்பை வண்டி தரவில்லை. வயக்காடு பகுதியில் ஆழ் குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை.

சண்முகம் (தி.மு.க.):- தேவ ராயம்பாளையம் எஸ்.சி.எம். ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருட மாகிறது. அந்த இடத்தில் அரசு பள்ளி, பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளது. அங்கு சாக்கடை தேங்குவதால் துர் நாற்றம் வீசுகிறது. தேவராயம் பாளையம் பைபாஸ் அருகில் ஏ.டி. காலனியில் தெரு விளக்கு, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதை கண் டித்து தர்ணா செய்வதாக கூறி கூட்ட அரங்கின் மையத்தின் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட் டார்.

சமுதாய நலக்கூடம்

பொன்னுசாமி (இ.கம்யூ):- சுகம் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாக்கடை கால்வாய் கட்ட ரூ.3.90 லட் சம் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களின் பங் களிப்பாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரைவோலையாக (டி.டி) கொடுத்து 6 மாதமாகி றது. எம்.ஜி.ஆர் நகரில் உள்ள கழிப்பிடம் விரிவுப்படுத்தக் கோரி, டெண்டர் விட்டும் வேலை ஆரம்பிக்க வில்லை.

ராஜேந்திரன் (அ.தி.மு.க.):- பாலாஜி நகரில் உள்ள சமு தாய நலக் கூடத்துக்கு மின் இணைப்பு வழங்காததால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் வேறு இடத்தில் விழா நடத்த மக்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. எனவே நாளைக்கு (இன்று) அப்பகுதி மக்கள் தர்ணா செய்ய உள்ளதாக கூறி உள்ள னர்.

பாரதி(தி.மு.க.):- இந்த சமுதாய நலக்கூடம் தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டது. அதனால் தான் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்காமல் உள்ளீர்களா? கோபால்டு மில் பகுதியில் சர்வீஸ் பஸ்கள் நிற்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

அய்யப்பன்:- புதிதாக கட் டப்பட்டு குடியிருப்பு பகுதிக ளுக்கு புதிய குடிநீர் இணைப்பு தர வேண்டும். குப்பைகள் அள்ளுவதில்லை. துப்புரவு பணியாளர்களை அதிகப் படுத்த வேண்டும்.

நாய்கள் தொல்லை

நடராஜ் (அ.தி.மு.க.):- நாய் களின் நடமாட்டத்தை கட் டுப்படுத்த வேண்டும்.

செந்தில் (தி.மு.க.):-எனது வார்டில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. ஆனால் கொசு மருந்து அடிப் பதில்லை. 1-வது வார்டில் தனியார் பள்ளி கட்டிடத்திற்கு ரூ.14 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பொது மக்கள் கூறுகிறார் கள். 11-வது வார்டில் ராக்கியா பாளையத்தில் 9 ஆயிரம் அடி விஸ்தரிக்கப்பட்ட சாலையை பேரூராட்சிக்கு ஒப்படைப் பதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார்களா?.

அதற்கு செயல் அலுவலர் இல்லை என்றார்.

உடனே கவுன்சிலர் செந்தில், '11-வது வார்டில் நடந்த பிரச் சினைக்கு எனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார்கள், என்று கூறி மன்றத்தின் மைய பகுதிக்கு வந்து தனது பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை எடுத்து, 'இதுதான் அந்த லஞ்ச பணம்' என்று கூறி பணத்தை தூக்கி எறிந்தார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த கொசு வலையை தன் மேல் போர்த்திக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டார்.

17 தீர்மானங்கள்

அவரை செயல் அலுவலர் மற்றும் கவுன்சிலர்கள் சமாதா னப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் கூட்டம் முடியும் வரை போராட்டம் செய்தார். மன்ற கூட்டத்தில், 8-வது தீர்மானம் தவிர 17 தீர் மானங் கள் நிறைவேற்றப்பட் டன. மன்ற கூட்டத்தில் லஞ்சப்பணம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனியில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Posted: 31 Jan 2014 12:12 PM PST

தேனி,

மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவருடைய மகள் லாவண்யா (வயது 19). இவர்கள் திருப்பூர் மாவட்டம், அனுப்பப் பாளையம் பெரியார் நகரில் வசித்து வந்தனர். 10–ம் வகுப்பு வரை படித்துள்ள லாவண்யா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் மூலம், திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள திருக்குவளையை சேர்ந்த பிச்சக்கண் என்பவருடைய மகன் அம்பேத்கார் (21) என்பவர் செல்போன் வழியாக அறிமுகம் ஆனார். அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்த அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அம்பேத்கார் தொழிற்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலிவேலை செய்து வந்தார். முகத்தை பார்க்காமலேயே செல்போன் மூலம் காதலித்த இந்த ஜோடி யினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நேரில் பார்த் துள்ளனர். இதற்கிடையே காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்தது. இதனால் காத லர்கள் வீட்டை விட்டு வெளி யேறி தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட னர். பின்னர் இவர்கள் பெரிய குளத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு இருதரப்பு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

category:

தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தக்கோரி தனியார் செவிலியர் பயிற்சி மாணவிகள் கலெக்டரிடம் மனு

Posted: 31 Jan 2014 11:56 AM PST

ஈரோடு,

தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்தக்கோரி தனியார் செவிலியர் பயிற்சி மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வின் அடிப்படையில் தனியார் கல்லூரியில் பயிற்சி பெற்ற செவிலியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டும் தனியார் செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் பணி நியமனம் குறித்த உத்தரவினை உறுதி செய்தது.

இதற்கு அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி செவிலியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக சென்னையில் 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் நேற்று ஈரோடு கலெக்டர் வி.கே.சண்முகத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

இதுபற்றி செவிலியர் பயிற்சி மாணவிகள் கூறியதாவது:–

செயல்படுத்த வேண்டும்

அரசு ஆஸ்பத்திரிகளில் தனியார் கல்லூரிகளில் படித்த மாணவிகளுக்கும் தகுதியின் அடிப்படையில்தான் பணி நியமனம் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இது எங்களைப்போன்ற மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ஆனால் அதை தடுக்கும் வகையில் அரசு கல்லூரியில் பயிற்சி பெறும் செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தகுதி தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் என்னும் தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மாணவிகள் கூறினார்கள்.

ஈரோடு வேளாளர் செவிலியர் பயிற்சி கல்லூரி, நந்தா செவிலியர் கல்லூரி, தன்வந்திரி செவிலியர் கல்லூரி, சி.எஸ்.ஐ. செவிலியர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

category:

டெலிவிஷன் விருந்து

Posted: 31 Jan 2014 11:40 AM PST

Image Upload: 

ஈரோட்டில் ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணம் கொலை செய்யப்பட்டாரா?

Posted: 31 Jan 2014 11:40 AM PST

ஈரோட்டில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூலித்தொழிலாளி

ஈரோடு சென்னிமலை ரோடு காசிபாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஆவின் மாட்டுத்தீவன தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 29-ந் தேதி பகல் 11 மணிக்கு ராமச்சந்திரன் வீட்டில் இருந்து புறப்பட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வரவில்லை. வழக்கமாக வீடு திரும்பும் நேரம் கடந்தும் அவர் வராததால் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். உறவினர்கள் வீடுகளிலும் விசாரித்தனர். ஆனால், அவர் எங்கே போனார் என்பது தெரியவில்லை.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று காலை ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகம் எதிரில் உள்ள முள்காடு பகுதியில் ராமச்சந்திரன் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோரும், உறவினர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த ராமச்சந்திரன் உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர். ராமச்சந்திரனின் கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. ராமச்சந்திரன் பிணமாக கிடப்பது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீஸ் விசாரணை

ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ராமச்சந்திரன் பிணமாக கிடந்த இடத்துக்கும், அவருடைய வீட்டுக்கும் சிறிது தூரம்தான் உள்ளது. 29-ந் தேதி மற்றும் 30-ந் தேதி உறவினர்கள் தேடிய போது கண்டுபிடிக்கவில்லை. அவருடைய உடலில் காயங்கள் இருப்பதால் யாராவது அவரை கொலை செய்து வீசினார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் நடவடிக்கை தி.மு.க.வினர் கூண்டோடு வெளியேற்றம் கவர்னர் உரையை கிழித்த எம்.எல்.ஏ. தற்காலிக நீக்கம்

Posted: 31 Jan 2014 11:38 AM PST

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சு

விவாதத்தை, விளாத்திகுளம் கு.வ.மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசும்போது, "முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டிவிட்டு, ''தி.மு.க.தலைவர் கருணாநிதி காலை 6 மணிக்கு தன் வீட்டுக்கு வந்த மகன் அழகிரி கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்து நாடகம் நடத்தி உள்ளார். தீயசக்தி கருணாநிதி போலீசில் புகார் செய்திருந்தால் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து இருப்பார்'' என்று கூறினார்.

தி.மு.க.வினர் எதிர்ப்பு

மார்க்கண்டேயன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய பேச்சுக்கு எ.வ.வேலு, சக்கரபாணி, ஜெ.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன், கோவி.செழியன், எஸ்.எஸ்.சிவசங்கர், மொய்தீன்கான், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மார்க்கண்டேயன் பேசியவற்றை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆவேசமாக குரல் எழுப்பியவாறு, அனைவரும் சபாநாயகர் ப.தனபால் இருக்கையை நோக்கி சென்றனர்.சபாநாயகரை நோக்கி கைநீட்டி கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரிடம் தொடர்ந்து முறையிட்டார்.

சபாநாயகர் உத்தரவு

உடனே சபாநாயகர், ''உங்கள் கட்சி துணைத் தலைவர் துரைமுருகனை பேச அனுமதித்து உள்ளேன். அவர் பதில் சொல்லட்டும், எந்த ஒரு உறுப்பினர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று என்னை நிர்பந்திக்க முடியாது. அது முறையும் அல்ல. ஜெ.அன்பழகன் உங்களை கண்டிக்கிறேன். முதலில் இருக்கையில் போய் அமருங்கள், சபை மரபுப்படி நடந்துகொள்ளுங்கள்'' என்றார்.ஆனாலும் ஜெ.அன்பழகன் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.இதையடுத்து சபாநாயகர், "ஜெ.அன்பழகன் தொடர்ந்து சபை நடவடிக்கையை மீறும் வகையிலும், சபாநாயகரை அவமதிக்கும் வகையிலும் நடந்துகொள்கிறார். அவரை சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறேன்" என்றார்.இதைத்தொடர்ந்து சபை காவலர்கள் ஜெ.அன்பழகனை சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள்.

மிரட்டுவது நியாயமா?

சபாநாயகர் தனபால்:– தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் நின்று பேசுவது, மிரட்டுவது நியாயமா? ஜெ.அன்பழகன் உள்ளிட்ட தி.மு.க.உறுப்பினர்கள் நடந்து கொண்டது சரியான முறை அல்ல.

துரைமுருகன்:– கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தேவையின்றி எங்கள் கட்சி தலைவரின் பெயரை இழுத்தது சரியல்ல. அ.தி.மு.க. உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

சபாநாயகர் ப.தனபால்:– அவருடைய பேச்சை முழுவதும் படித்து பார்த்து விட்டு சொல்கிறேன். (தி.மு.க.உறுப்பினர்கள் மீண்டும் கூச்சல்)

சபை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:– மார்க்கண்டேயன் தவறாக எந்த வார்த்தைகளையும் பேசவில்லை. உங்கள் தலைவர் (கருணாநிதி) சொன்னதைத் தான் இங்கு குறிப்பிட்டார். அதற்காக நீங்கள் வந்து மிரட்டும் தொனியில் பேசியது ஏற்கக் கூடியதா? இவர்கள் மீது சபாநாயகர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சபை குறிப்பில் இருந்து நீக்கம்

சபாநாயகர் ப.தனபால்:– மாற்று கருத்து இருந்தால் துரைமுருகன் பதில் சொல்லட்டும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி:– எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபத்துடன் ஆவேசமாக இங்கே கருத்துக்களை சொல்கிறார்கள். அவர்களுடைய தலைவர் பேசியவை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் உலகம் முழுவதும் வெளிவந்து மக்கள் மனதில் ஆழமாக பதிந்த கருத்தை தான் இங்கே பேசினார்.

துரைமுருகன்:– சபை முன்னவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. கவர்னர் உரைக்கும், உங்கள் (அ.தி.மு.க.) உறுப்பினர் பேசியதற்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் (தி.மு.க.) திரும்பி பேச ஆரம்பித்தால்... என்று ஒரு வார்த்தையை சொன்னார்.

(துரைமுருகன் பேசியவற்றுக்கு அமைச்சர்களும், அ.தி.மு.க.உறுப்பினர்களும் கடும் கொந்தளிப்புடன் எதிர்ப்பு தெரிவித்தனர். துரைமுருகன் குறிப்பிட்ட வாசகத்தை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.)

சபாநாயகர்:– துரைமுருகன் பேசிய வாசகம் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.

கவர்னர் உரை கிழிப்பு

இதையடுத்து தி.மு.க.உறுப்பினர்கள் மீண்டும் ஆவேசத்துடன் சபாநாயகர் ப.தனபால் இருக்கை அருகே சென்று கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அமளி ஏற்பட்டது. அப்போது குன்னம் தொகுதி (பெரம்பலூர் மாவட்டம்) தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் கவர்னர் உரை புத்தகத்தை சபாநாயகர் முன்பே கிழித்தார்.

உடனே 'தி.மு.க.உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.

 கூண்டோடு வெளியேற்றம்

இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்களை சபை காவலர்கள் வெளியேற்றினார்கள்.

சட்டசபையில் காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பரபரப்பான பிரச்சினை 11.56 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு சபை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

கண்ணியத்தை குறைக்கும் செயல்

இன்றைய தினம் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், பேரவை தலைவரின் இருக்கைக்கு அருகில் வந்து நடந்து கொண்ட விதத்தை இங்கு அமர்ந்துள்ள உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் நன்கு அறிவார்கள். அவை மரபுகளுக்கு மாறாக, அவை விதிகளை துச்சமாக மதித்து பேரவையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில், எஸ்.எஸ்.சிவசங்கரின் நடவடிக்கை தரம் தாழ்ந்து இருந்தது.

ஒரு ஆளுங்கட்சி உறுப்பினர் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல இயலாத காரணத்தால், ஆத்திரத்தில், பேரவை தலைவரை மிரட்டும் வகையில், பேரவை தலைவரின் எதிரில், ஆளுநர் உரை பிரதிகளை கிழித்தெறிந்து இருப்பது அவையில் இதுகாறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும், உரிமைகளையும் இழிவுபடுத்தும் வகையில் செய்யப்பட்ட ஒரு செயலாகும்.

தண்டிக்கப்படவேண்டியது

இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படாவிட்டால், ஜனநாயகத்தின் முக்கிய தூணாக விளங்கும் சட்டமன்றத்தின் தரம் பொதுமக்கள் மத்தியில் தாழ்ந்துவிடும். இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படவேண்டியதும், தண்டிக்கப்படவேண்டியதும் ஆகும்.

எனவே, பேரவை அலுவல்களை நடைபெறவிடாமல் இடைமறித்து, பேரவை விதிகளுக்கு மாறாக, அவைக்கு இழுக்கு விளைவிக்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனது உரிமையை தவறாகப்பயன்படுத்தி இன்று பேரவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அவை விதிகளுக்கு மாறாக நடந்துகொண்ட உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், சட்டமன்ற பேரவை விதி 121 உள் விதி (2)–ன் கீழ், இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் பேரவை பணிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படவேண்டும் என்ற தீர்மானத்தை மொழிகிறேன்.இவ்வாறு சபை முன்னவர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தற்காலிக நீக்கம்

இதையடுத்து, ''எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் பேரவைப்பணிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்'' என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

News Category:

Hot Topic Icon : 

News Group Category:

வெளிநாட்டு மண்ணில் சோகம் தொடருகிறது: கடைசி ஆட்டத்திலும் இந்தியா படுதோல்வி தொடரை 4–0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது

Posted: 31 Jan 2014 11:37 AM PST

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டு, ஷிகர் தவான் திரும்பினார். நியூசிலாந்து அணியில் டிம் சவுதி, ஹமிஷ் பென்னட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, மெக்லெனஹான், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்ரி சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து 5–வது முறையாக டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி நியூசிலாந்தை பேட் செய்ய பணித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள், முகமது ஷமி, புவனேஸ்வர்குமார் ஆகியோரின் வேகப்பந்து வீச்சில் ஆரம்பத்தில் தடுமாறினர். முதல் 5 ஓவர்களில் பவுண்டரி ஏதுமின்றி வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஜெஸ்சி ரைடர் 17 ரன்னிலும் ( 26 பந்து) மார்ட்டின் கப்தில் 16 ரன்னிலும் (35 பந்து) கேட்ச் ஆனார்கள்.

வில்லியம்சன்–டெய்லர்

இதன் பின்னர் கனே வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து அணியை கம்பீரமாக தூக்கி நிறுத்தினர். படிப்படியாக அணியின் ரன்ரேட் விகிதம் உயர்ந்து கொண்டே போனது. தொடர்ந்து 5–வது அரைசதம் விளாசிய வில்லியம்சன் 88 ரன்களில் (91 பந்து,8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் தனது பங்குக்கு 23 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், முந்தைய ஆட்டத்தை போன்றே மீண்டும் சதம் அடித்தார். அவர் 102 ரன்களில் (106 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார். இறுதி கட்டத்தில் ஜேம்ஸ் நீஷமின் அதிரடியால் நியூசிலாந்து 300 ரன்களை தாண்டியது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி  5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. ஜேம்ஸ் நீஷம் 34 ரன்களுடன் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து 42 ரன்களை திரட்டியது.

சொதப்பலான தொடக்கம்

அடுத்து கடின இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் நியூசிலாந்தின் ஆக்ரோஷமான பந்து வீச்சில் மிரண்டு ஓடினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா (4 ரன், 13 பந்து), ஷிகர் தவான் (9 ரன், 28 பந்து), இவர்களுக்கு பிறகு வந்த ரஹானே (2 ரன், 10 பந்து) ஆகியோர் பந்துகளை விரயம் செய்தது மட்டுமே மிச்சம். அணியை பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டு நடையை கட்டினர். 30 ரன்னுக்குள் (13.2 ஓவர்) 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தள்ளாடியது. இதன் பின்னர் விராட் கோலியும், அம்பத்தி ராயுடுவும் அணியை மீட்க நிதானம் காட்டினர். ஸ்கோர் 78 ரன்களை எட்டிய போது ராயுடுவும் (20 ரன், 40 பந்து) வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து விராட் கோலியும், கேப்டன் டோனியும் ஜோடி சேர்ந்தனர். 30–வது ஓவரில் தான் இந்திய      அணி  100 ரன்களையே தொட்டது. ரன் வறட்சிக்கு மத்தியில் விராட் கோலி மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில்   விளையாடினார். ஆனால் எந்த ஒரு தருணத்திலும் நமது வீரர்கள் வெற்றியை குறி வைத்து விளையாடவேயில்லை. ஏதோ தாக்குப்பிடித்து ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் ஆடியது போன்றே தெரிந்தது.

இந்தியா தோல்வி

அணியின் ஸ்கோர் 145 ரன்களாக உயர்ந்த போது கோலி 82 ரன்களில் (78 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். கேப்டன் டோனி 47 ரன்களில் (72 பந்து, 3 பவுண்டரி) வில்லியம்சனின் பந்து வீச்சில் அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. நியூசிலாந்து அறிமுக பவுலர் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சதம் விளாசிய டெய்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 4–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3–வது ஒரு நாள் போட்டி மட்டும் சமனில் முடிந்தது. 5 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் தொடரை நியூசிலாந்து தோல்வியே சந்திக்காமல் வாகை சூடுவது இது 3–வது முறையாகும்.

பாடம் கற்குமா?

அன்னிய மண்ணில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றி என்பது அரிதாகவே வாய்க்கிறது. கடைசியாக விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. இதில் டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்க மண்ணில் நடந்த 3 ஆட்டங்களில் 2–ல் தோற்றதும் (ஒன்றில் முடிவில்லை) அடங்கும்.

கடந்த முறை (2009) இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒரு நாள் தொடரை 3–1 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது. அப்போது தெண்டுல்கர், ஷேவாக், கம்பீர், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட அனுபவ சூரர்கள் இடம் பிடித்திருந்தனர். ஆனால் இளம் படையை கொண்டு சாதித்து விடலாம் என்று கணக்கு போட்டு கொண்டு வந்த டோனியின் பாச்சா இந்த முறை புஷ்வாணமாகி போய் விட்டது. இது போன்ற கடினமான தொடர்களில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.

அடுத்து இந்தியா–நியூசிலாந்து இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதலாவது டெஸ்ட் வருகிற 6–ந்தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

நியூசிலாந்து

கப்தில் (சி) ஷமி(பி) வருண்    16

ரைடர் (சி) ரஹானே (பி)

    புவனேஸ்வர்  17

வில்லியம்சன் (சி) ரஹானே

    (பி) வருண் 88

டெய்லர்(சி)தவான்(பி)ஷமி 102

பிரன்டன் மெக்கல்லம்

    (சி) ரோகித் (பி) கோலி  23

நீஷம் (நாட்–அவுட்)    34

லுக் ரோஞ்சி (நாட்–அவுட்)    11

எக்ஸ்டிரா    12

மொத்தம் (50 ஓவர்களில்

    5 விக்கெட்டுக்கு) 303

விக்கெட் வீழ்ச்சி: 1–22, 2–41, 3–193, 4–243, 5–274

பந்து வீச்சு விவரம்

முகமது ஷமி    10–3–61–1

புவனேஸ்வர்குமார்    8–0–48–1

வருண் ஆரோன்    10–0–60–2

அஸ்வின்    6–0–37–0

ஜடேஜா    9–0–54–0

கோலி    7–0–36–1

இந்தியா

ரோகித் ஷர்மா (சி) டெய்லர்

    (பி) மில்ஸ்  4

தவான் (பி) நாதன் (பி)

    ஹென்ரி  9

கோலி(சி)சப்(யங்–ஹஸ்பன்ட்)

    (பி) நாதன் 82

ரஹானே எல்.பி.டபிள்யூ

    (பி) ஹென்ரி  2

ராயுடு (சி) வில்லியம்சன்

    (பி) ஹென்ரி 20

டோனி (சி) நீஷம்(பி)

    வில்லியம்சன்  47

அஸ்வின் (பி) வில்லியம்சன்    7

ஜடேஜா (சி) கப்தில் (பி)

    மில்ஸ்  5

புவனேஸ்வர் (சி) ரோஞ்சி

    (பி) ஹென்ரி  20

முகமது ஷமி (நாட்–அவுட்)    14

வருண் ஆரோன் (பி) நீஷம்    0

எக்ஸ்டிரா    6

மொத்தம் (49.4 ஓவர்களில்

    ஆல்–அவுட்) 216

விக்கெட் வீழ்ச்சி: 1–8, 2–20, 3–30, 4–78, 5–145, 6–167, 7–174, 8–181, 9–215

பந்து வீச்சு விவரம்

மில்ஸ்    10–1–35–2

மெக்லெனஹான்    10–0–45–0

ஹென்ரி    10–1–38–4

நீஷம்    5.4–0–45–1

நாதன் மெக்கல்லம்    10–1–33–1

கனே வில்லியம்சன்    4–0–19–2

'இது புதிய தொடக்கம்'

ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, நான் பங்கேற்ற போட்டிகளில் மிகவும் திருப்திகரமான தொடர் இது தான். இந்தியா உலகின் 'நம்பர் ஒன்' அணியாக இங்கு வந்தது. நாங்கள் அவர்களை 'ஒயிட்வாஷ்' ஆக்கி விட்டதை விடுங்கள். அவர்களின் சவாலுக்கு நாங்கள் ஈடுகொடுத்து விளையாடுவோம் என்று ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் விளையாடிய விதம் குறிப்பாக டெய்லர், வில்லியம்சனிடம் இருந்து வெளிப்பட்ட நேர்த்தியான ஆட்டமும், பந்து வீச்சாளர்களின் தீவிர தாக்குதலும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்தத்தில் இது எங்களுக்கு புதிய தொடக்கம் ஆகும். இந்திய அணியை அவர்களின் திறமைக்கு ஏற்ப விளையாட நாங்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சிறந்த அணி தான்.

–நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம்

மிடில்வரிசையில் சொதப்பி விட்டோம்

எல்லா தோல்விகளுமே மோசமானது தான். அதில் எது மிகவும் ஏமாற்றத்திற்குரியது என்பதை அளவிட முடியாது. எங்களிடம் அனுபவம் இல்லை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் நிறைய ஒரு நாள் போட்டிகளில்ஆடியிருக்கிறார்கள். ஆனால் நியூசிலாந்து அணி தங்களது வியூகங்களை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தியது. எங்களது முயற்சிகளில் சேசிங் ஆகட்டும், முதல் பேட்டிங் ஆகட்டும் எதுவும் கைகூடவில்லை.

இந்த தொடர் முழுவதும் நியூசிலாந்து நன்றாக ஆடியது. அனைத்து ஆட்டங்களிலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வாய்ப்பை எங்களிடம் இருந்து பறித்துவிட்டனர். இரு அணிக்கு இடையே பெரிய வித்தியாசமே மிடில் வரிசை பேட்டிங் தான். மிடில் வரிசையில் அவர்கள் தொய்வின்றி ரன் எடுத்தனர். இதனால் விக்கெட்டுகளை தக்க வைத்துக் கொண்டு இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினர். தொடர் முழுவதும் இது தான் நிகழ்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவில் மாற்றிக் கொண்டு, அதற்கு ஏற்ப வியூகங்களை வகுக்க வேண்டியது முக்கியம். அதை நாங்கள் செய்ய தவறி விட்டோம்.

–இந்திய கேப்டன் டோனி

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™