Daily Thanthi |
- தி.மு.க.வில் இருந்து, தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தற்காலிக நீக்கம் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம்
- புதுவை சட்டசபை வளாகம்
- 16 அடி உயரத்தில் ராட்சத தேசிய கொடி
- இன்று நாள் எப்படி?
- ஆன்மீக சிந்தனை (25-01-2014)
- ஆண்டியார் (25-01-2014)
- சாணக்கியன் சொல் (25-01-2014)
- கன்னித்தீவு (25-01-2014)
- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேட்டி
| Posted: 24 Jan 2014 11:44 AM PST சென்னை, பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதற் கான முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படத்தில் மு.க.அழகிரியையும் இணைத்து, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்தனர். இது தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. பேனர் வைத்தவர்களை தி.மு.க. தலைமை கழகம் இடை நீக்கம் செய்தது. தே.மு.தி.க. பற்றி கருத்து இதற்கிடையில், ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மு.க.அழகிரி, தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று கூறி இருந்தார். தே.மு.தி.க. பற்றி அவர் மேலும் சில கருத்துகளையும் கூறினார். இது கூட்டணி பேச்சுவார்த்தையை குலைக்கும் செயல் என்று தி.மு.க. தலைமை கருதியது. பேனர் விளம்பர விவகாரம் தொடர்பாக மதுரை தி.மு.க. அமைப்பு கூண்டோடு கலைக் கப்பட்டு, புதிய பொறுப்புக்குழுவும் அறிவிக்கப்பட்டது. தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் மு.க. அழகிரி வருத்தமடைந்தார். அழகிரி ஆதரவாளர்கள் நீக்கம் தனது குடும்பத்துடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு வந்த அழகிரி, கருணாநிதியை சந்திக்காமல் தனது தாயார் தயாளு அம்மாளை மட்டும் சந்தித்து உடல்நலம் விசாரித்து சென்றார். ஓரிரு நாட்களில் மீண்டும் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் அழகிரியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் மதுரை மாவட்ட துணைச்செயலாளர் எம்.எல்.ராஜ், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் துரை.ராஜேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.வெள்ளையன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் பி.அசோக்குமார், மேலூர் ஒன்றிய ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் ஏ.முத்துவேல் ஆகியோரை தி.மு.க. தலைமை கட்சியில் இருந்து தற்காலிகநீக்கம் செய்தது. கருணாநிதியுடன் வாக்குவாதம் நேற்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய மு.க. அழகிரி இதனை கேள்விப்பட்டதும், காலை 7.30 மணி அளவில் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாநிதியை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் இருவரும் பேசினர். அப்போது மு.க.அழகிரி, கருணாநிதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அழகிரி கோபமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னர் கருணாநிதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மு.க.அழகிரிதற்காலிக நீக்கம் இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைமைக்கழகம் அழகிரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தது. இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராய பேதங்கள், கோப தாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக்கழகத்தில் இருக்கின்றன. கூட்டணியை குலைக்க முயற்சி இந்த நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதை குலைக்க முயற்சித்தும்-திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச்சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணைபோகிற துரோகச்செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முறையற்றவிவாதங்கள் இவ்வாறு துரோக செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச்செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி இனியும் தொடர்ந்து தி.மு.க.வில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும்-அது தி.மு.க.வின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்துவிடும் என்பதாலும்- அவர், தி.மு.க.வின் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார். தி.மு.க.வின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்த கருத்தினை, கட்சியினர் அனைவரும் ஏற்று, ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும் தி.மு.க. நடப்பதற்கு கட்சியினர் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் அன்பழகன் கூறி இருக்கிறார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்த சில மணி நேரத்திலேயே மு.க.அழகிரி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது அரசியல்வட்டாரத்திலும், தி.மு.க. வினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| Posted: 24 Jan 2014 11:07 AM PST |
| Posted: 24 Jan 2014 11:03 AM PST |
| 16 அடி உயரத்தில் ராட்சத தேசிய கொடி Posted: 24 Jan 2014 10:59 AM PST |
| Posted: 24 Jan 2014 10:27 AM PST Endru Image: ![]() |
| Posted: 24 Jan 2014 10:22 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Anmikasinthanai: ![]() |
| Posted: 24 Jan 2014 10:20 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special Andiyar: ![]() |
| Posted: 24 Jan 2014 10:19 AM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special chanakkiyan: ![]() |
| Posted: 24 Jan 2014 10:18 AM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேட்டி Posted: 24 Jan 2014 09:39 AM PST திருச்சி, பாராளுமன்ற தேர்தலுக்காக அமைய உள்ள தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? என்ற கேள்விக்கு திருச்சியில் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். திருச்சியில் ஸ்டாலின் திருச்சியில் அடுத்த(பிப்ரவரி) மாதம் 15 மற்றும் 16–ந்தேதிகளில் தி.மு.க.வின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி–திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் அருகில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள திடலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக திருச்சி வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:– திருப்புமுனை ஏற்படுத்தும் கேள்வி:– தி.மு.க. மாநாட்டு பணிகள் எந்த அளவில் நடைபெற்று உள்ளன? பதில்:–திருச்சியில் நடைபெற உள்ள தி.மு.க.வின் 10–வது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்திட மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் மாவட்ட செயலாளர் கே.என்.நேரு மற்றும் குழுவினர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு தலைவர் கருணாநிதியின் எண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற உள்ளதால் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையாக அமைந்திடவேண்டும் என்று தலைவர் முரசொலியில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இந்த மாநாட்டின் வெற்றி அமைய போகிறது. கூட்டணி அறிவிப்பு எப்போது? கேள்வி:– பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றி திருச்சி மாநில மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்படுமா? பதில்:– தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே சில கட்சிகள் உள்ளன. இவை முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடரும், வேறு கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அதுபற்றி தலைவர் கருணாநிதி முறையாக அறிவிப்பார். தொடருமா? கேள்வி:– ராஜ்ய சபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பதாக சில கட்சிகள் அறிவித்து உள்ளன. இந்த கூட்டணி மக்களவை தேர்தலிலும் அப்படியே தொடருமா? பதில்:– மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வை ஆதரிப்பதாக புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. தலைவரை சந்தித்தும் ஆதரவு தெரிவித்து சென்று விட்டு இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் மக்களவை தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இந்த கூட்டணி தொடரும். பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேள்வி:– சேலத்தில் நீங்கள் பேச இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறதே? பதில்:– இன்று (நேற்று) மதியம் வரை அனுமதி கிடைக்கவில்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுமதி தரவில்லை என்றால் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் கூட்டத்தை போலீஸ் தடையை மீறி தலைவரின் அனுமதி பெற்று நடத்துவோம் என கூறும்படி மாவட்ட செயலாளரிடம் கேட்டுக்கொண்டேன். இதுபற்றி அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டதாக என்னிடம் சற்று முன் கூறினார். ஆதரவாளர் மீது வழக்கு? கேள்வி:–மதுரை தி.மு.க.வில் உங்களது ஆதவாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதே? பதில்:– எனது ஆதரவாளர் என்று தனியாக யாரும் கிடையாது. தி.மு.க.வில் உள்ள எல்லோரும் தலைவர் கருணாநிதியின் ஆதரவாளர்கள் தான். கேள்வி:–தி.மு.க மாநில மாநாட்டையொட்டி திருச்சியில் வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ் பேனர்களை அதிகாரிகள் அகற்றி இருக்கிறார்களே? பதில்:–இப்போது புதிதாக ஒரு சட்டம் போடப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி மாநாட்டிற்கான பேனர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உரிய தொகை கட்டப்பட்ட பின்னர் தான் வைக்கப்பட்டன. இந்த முறையை தான் தி.மு.க.வினர் பின்பற்றி இருக்கிறார்கள். இதே சட்டம் ஆளும் கட்சிக்கும் பொருந்துமா? முதல் அமைச்சர் பிறந்த நாளையொட்டி அவரது கட்சியினர் உரிய அனுமதி பெற்று தான் எழுதி இருக்கிறார்களா? என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பிரசார யுக்தி கேள்வி:– பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பிரசார யுக்தி பற்றி என்ன சொல்கிறீர்கள்? பதில்;– இதுபற்றி தலைவர் கருணாநிதி ஏற்கனவே விரிவாக கூறி இருக்கிறார். மத்தியில் மதசார்பற்ற நிலையான ஆட்சி அமைய வேண்டும். அது மட்டும் அல்ல மத்தியில் அமையும் அரசு தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைய வேண்டும் என கூறி இருக்கிறார். கேள்வி:– நீங்கள் (மு.க ஸ்டாலின்) பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விருப்ப மனு கொடுத்து இருக்கிறார்களே? பதில்:– தேர்தலில் நான் போட்டியிட வேண்டும், என்றும் தலைவர் கருணாநிதி போட்டியிட வேண்டும் என்றும் ஏராளமானவர்கள் விருப்ப மனு கொடுத்து இருக்கிறார்கள். அது அவர்களது விருப்பம். சிவாஜி சிலை கேள்வி:– சென்னையில் வைக்கப்பட்டு உள்ள சிவாஜி சிலையை அகற்றவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதே? பதில்:– தி.மு.க ஆட்சியில் தலைவர் கருணாநிதியின் சீரிய முயற்சியினால் அந்த சிலை வைக்கப்பட்டது. ஆளும் கட்சி அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பணியை நிறைவேற்றி இருக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வார்கள் என நம்புகிறேன். தே.மு.தி.க வருமா? கேள்வி:– தி.மு.க கூட்டணிக்கு வரும்படி தே.மு.தி.க.விற்கு முறைப்படி அழைப்பு விடுத்தும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்னும் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறாரே? பதில்:– நேற்று கூட தலைவர் கருணாநிதி இதுபற்றி கூறி இருக்கிறார். பொறுத்து இருந்து பாருங்கள். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







