Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களையும் சேர்த்து தற்போது கைதான 25 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

Posted: 21 Jan 2014 02:45 PM PST

சென்னை,

இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களையும், தற்போது கைதான 25 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர் பேச்சுவார்த்தை

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள பிரச்சினைகளை நீக்குவதற்காக, தமிழக மீனவர்களின் உணர்வு மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் சென்னையில் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

20–ந் தேதி நடக்க இருந்த பேச்சு வார்த்தையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு மூலம் இலங்கை அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து 27–ந் தேதிக்கு இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளது.

மீனவர்கள் பரஸ்பரம் விடுவிப்பு

தமிழக சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை, நான் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க தமிழக அரசு தொடங்கியது. அதுபோல் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 275 மீனவர்களையும் அவர்களின் 84 படகுகளையும் அங்கிருந்து பரஸ்பரம் விடுவிப்பதற்கு எனது தலைமையிலான தமிழக அரசு வற்புறுத்தியது.

இரண்டு நாட்டு மீனவர் சங்கங்களிடையே சுமுகமான பேச்சு வார்த்தை நடப்பதற்கு இந்த நடவடிக்கைகளை நல்லெண்ணத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டோம்.

மிகுந்த அதிர்ச்சி

தமிழக சிறையில் உள்ள 130 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 7 படகுகளையும் விடுவித்து, நேர்மறையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அப்பாவி தமிழக மீனவர்களை பிடித்து கைது செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை மீண்டும் இறங்கி இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் 21–ந் தேதி (நேற்று) அதிகாலையில் 6 எந்திர படகுகள் மூலம் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென்று அவர்களை இலங்கை கடற்படை தாக்கி கைது செய்த மற்றொரு சம்பவம், என்னை திகைப்படையச் செய்துள்ளது.

துரதிருஷ்டவசமானது

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டபோது அந்த மீனவர்கள், பாக் ஜலசந்தியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடக்க இருக்கும் நிலையில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது.

இலங்கை கடற்படையில் இந்த சண்டையிடும் போக்கு, இங்குள்ள மீனவர்கள் மத்தியில் மிகுந்த கவலையையும், கடுமையான எதிர்ப்புணர்வுவையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனவர்களிடையே காணப்படும் இறுக்கமான சூழ்நிலையை மாற்றுவதற்காகவும், சுமுகமாக பேச்சு வார்த்தையை நடத்தி முடித்து, அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும், தமிழக அரசு சிரத்தையுடனும், உறுதியுடனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அரசின் இந்த செயல்பாடு, தமிழக மீனவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

89 மீனவர்களை விடுவிக்க வேண்டும்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 64 தமிழக மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர் என்பதை உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன். எங்கள் மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 69 மீன்பிடி படகுகளும் இன்னும் இலங்கை அரசின் வசத்தில் உள்ளன. இது, அந்த படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

தற்போது நடந்துள்ள சம்பத்தில் நீங்கள் தனிப்பட்ட முறையில் அவசியம் தலையிட வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களும் இலங்கை கோர்ட்டுகளில் ரிமாண்டு செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படாமல், உடனடியாக இந்தியா திரும்புவதற்கு உறுதியான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, அங்கிருந்து விடுவிக்கப்பட வேண்டிய 64 தமிழக மீனவர்கள் மற்றும் 69 மீன்பிடி படகுகளும் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த தருணத்தில் எடுக்கப்பட வேண்டிய உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கைகள்தான், இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை சுமுகமாக நடக்க வழிவகை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

category:

News Group Category:

நடிகை சமீரா ரெட்டி திருமணம்: மும்பை தொழில் அதிபரை மணந்தார்

Posted: 21 Jan 2014 02:40 PM PST

மும்பை,

நடிகை சமீரா ரெட்டிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபருக்கும் நேற்று மும்பையில் திருமணம் நடைபெற்றது.

நடிகை சமீரா ரெட்டி

தமிழில் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படத்தில் அவர் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் நடிகர் விஷாலுடன் வெடி மற்றும் நடிகர் மாதவனுடன் வேட்டை ஆகிய படங்களிலும் நடித்தார்.

இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30–க்கும் மேற்பட்ட படங்களில் சமீரா ரெட்டி நடித்து உள்ளார். அங்கும் அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

தொழில் அதிபருடன் காதல்

நடிகை சமீரா ரெட்டிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2½ ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர்.

கடந்த மாதம் (டிசம்பர்) 14–ந் தேதி இருவரும் மோதிரம் மாற்றி ரகசியமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மேலும், அவர்களது திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியது.

மும்பையில் திருமணம்

இந்த நிலையில், நடிகை சமீரா ரெட்டி–தொழில் அதிபர் அக்ஷய் வர்தே திருமணம் மும்பை பாந்திராவில் உள்ள சமீரா ரெட்டி பங்களாவில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்க இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் தவிர கர்நாடக தொழில் அதிபர் விஜய மல்லையா கலந்து கொண்டார்.

சமீரா ரெட்டி திருமண தகவல் வெளியானதை தொடர்ந்து அவரது பங்களா முன்பு ஏராளமான பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் குவிந்தனர். அவர்கள் யாரும் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பங்களா வாசலில் காத்திருந்தனர்.

திருமணம் முடிந்து இரவு 8 மணிக்கு மேல் சமீரா ரெட்டி தனது காதல் கணவர் அக்ஷய் வர்தேயுடன் வெளியே வந்தார். பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கு சிறிது நேரம் போஸ் கொடுத்தார். போட்டோ கிராபர்கள் சரமாரியாக கிளிக் செய்தனர். பின்னர் மணமக்கள் வீட்டிற்குள் சென்று விட்டனர்.

News Group Category:

ஓசூர் சுற்று வட்டாரத்தில் 2 ஆண்டுகளில் துப்பு துலங்காத 8 கொலை வழக்குகள்

Posted: 21 Jan 2014 02:34 PM PST

ஓசூர் சுற்று வட்டாரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 8 கொலைகள் கண்டு பிடிக்கப்படாமல் போய் விட்டன.

8 கொலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்கள் மாநில எல்லை யில் அமைந்துள்ளன. இந்த பகுதியில் அடிக்கடி குற்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஓசூர் சுற்று வட்டாரத்தில் 70-க்கும் மேற் பட்ட கொலைகள் நடந் துள்ளன. இதில் 8 கொலைகள் இன்னும் துப்பு துலங்கப்பட வில்லை.

கடந்த 2012-ல் சிப்காட் போலீஸ் நிலைய எல்லையான பாகூர்கேட் டில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட் டார். அதே ஆண்டு செப்டம் பர் மாதம் ஈரோடு அரசு பஸ் டிரைவர் சுந்தர்ராஜன் உத்தனப்பள்ளியில் லாரியை ஏற்றிக் கொலை செய்யப்பட் டார். 2012-ம் ஆண்டு அக் டோபர் மாதம் கோபசந்தி ரத்தைச் சேர்ந்த சென்னம்மா என்ற பெண் அட்கோ போலீஸ் எல்லைக்குட்பட்ட பேரண்டப் பள்ளி காட்டில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இரட்டைக்கொலை

அதே மாதம் தளி போலீஸ் எல்லை பேலாளத்தில் யானை தடுப்பு பள்ளத்தில் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஓசூர் டவுன் எல்லை ராமநாயக்கன் ஏரியில் பிரான்சிஸ் சேவியர் (32) என்ற கட்டிட மேஸ்திரி வெட்டி கொல்லப்பட்டு கிடந் தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கெலமங்கலம் அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதே ஆண்டு அக் டோபர் மாதம் ஓசூர் டவுன் முனீஸ்வர் நகரில் பாட்டி ஜெயம்மாள், பேரன் விஸ் வதேஜா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.ஓசூர் உட்கோட்டத்தில் 5 கொலைகளிலும், தேன்கனிக் கோட்டை உட்கோட்டத்தில் 3 கொலைகளிலும் போலீசார் இன்னும் துப்பு துலங்க வில்லை.

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு

பாகலூர் அருகே உள்ளது ஆலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ரவி, திம்மராயப்பா. கடந்த அக்டோபர் மாதம் காரில் சென்ற இவர்களை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இந்த சம்பவத்திலும் இதுவரை குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை.

இதைத் தவிர ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில் திருட்டு, நேதாஜி சாலையில் உள்ள துணிக்கடையில் திருட்டு, தாலுகா அலுவலக சாலையில் எலக்ட்ரிக்கல் கடையில் திருட்டு, செல்போன் கடையில் திருட்டு என கடந்த ஆண்டு பல திருட்டு வழக்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

கத்தி முனையில் கொள்ளை

இந்த ஆண்டும் ஓசூர் சிப்காட் ஹவுசிங் காலனியில் ராம்குமாரி என்ற பெண்ணை 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகை பறித்தது, வாசவி நகரில் 2 கடையில் கொள்ளை முயற்சி, நேதாஜி சாலையில் 2 கடையில் கொள்ளை முயற்சி, கவுன்சிலர் சக்திவேல் வீட்டில் ரூ.50 ஆயிரம் நகைகள் கொள்ளை, பாகலூர் சாலையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி, பிருந்தாவன் நகரில் பாலு என்பவரின் வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை என பல கொள்ளை வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட வில்லை.

கூடுதல் போலீசார் தேவை

மாநகருக்கு இணையாக மக்கள் தொகை உள்ள ஓசூரில் போலீசார் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதன் காரணமாக குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

இதன் காரணமாக பல கொலை, கொள்ளை வழக்குகள் கிடப்பில் கிடக்கின்றன. போலீஸ் உயர் அதிகாரிகள் இதை கவனித்து, கூடுதல் போலீசாரை ஓசூருக்கு ஒதுக்கிட வேண்டும். மேலும் துப்பு துலங்கப்படாமல் உள்ள கொலை, கொள்ளை வழக்குகளை விசாரிப்பதற் காக தனி போலீஸ்குழுவை அமைத்திட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத் துள்ளனர்.
 

நாசிக்கில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்து ஹெல்ப்லைன் எண்ணில் தெரிவிக்கலாம்; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

Posted: 21 Jan 2014 02:30 PM PST

நாசிக்,

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்தே புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மராட்டியத்திலும் அதன் பிரதிபலிப்பு இருக்கிறது. இந்நிலையில் நேற்று நாசிக்கில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஹெல்ப்லைன் எண்ணை ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஜிதேந்திர பாவே அறிமுகம் செய்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஹெல்ப்லைன் எண்ணில் வரும் அழைப்புகளை தொடர்ந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வக்கீல்கள், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 60 பேர் கொண்ட பறக்கும் படை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு ரேசன் கார்டு வழங்குவது உள்ளிட்ட அரசு சார்ந்த நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக 9823026131 மற்றும் 9823209131 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டாலே போதும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

category:

News Group Category:

கடத்திய யானை தந்தம், காட்டெருமை கொம்புகள் மீட்பு விழுப்புரம் பட்டதாரி ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

Posted: 21 Jan 2014 02:26 PM PST

பாப்பாரப்பட்டி,

பெங்களூருக்கு மோட் டார் சைக்கிளில் கடத் திய யானை தந்தம், காட் டெருமை கொம்புகள் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியது. இதுதொடர்பாக விழுப் புரம் மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசி ரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட னர்.

வாகன தணிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு யானை தந்தம், காட்டெருமை கொம்புகள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கர்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு அவர் உத்தர விட்டார். அதன்படி இன்ஸ் பெக்டர் ரத்தினகுமார் தலை மையில் தனிப்படை போலீ சார் நேற்று பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் திரு மல்வாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த னர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பையுடன் சென்று கொண்டு இருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி தனிப்படை போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இத னால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் சுமார் 14½ கிலோ எடை கொண்ட ஒரு யானை தந்தமும், மற்றொரு பையில் 2 காட்டெருமை கொம்புகளும் இருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

அதனை தொடர்ந்து அவர் களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த செவத்தான் மகன் குமார்(வயது28), சுப்புரமணி மகன் மஞ்சு(22) என்பதும் தெரியவந்தது. இதில் குமார் அங்குள்ள தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் விழுப்புரம் மாவட்டம் தரிசுகாடு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்துக்கு யானை தந்தம் மற்றும் காட்டெருமை கொம்புகளை வாங்கியது தெரியவந்தது.

இதனை பெங்களூரை சேர்ந்த அசோக் என்பவருக்கு விற்பனை செய்ய பஸ்சில் எடுத்து வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து குமார் மற்றும் மஞ்சு ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து யானை தந்தம், காட்டெருமை கொம்பு, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தம், காட்டெருமை கொம்பு ஆகியவற்றை விற் பனை செய்த ராமலிங்கம், பெங்களூரை சேர்ந்த வியா பாரி அசோக் ஆகிய 2 பேரை யும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்பாரப்பட்டி பகுதி யில் ஐம்பொன் சாமி சிலையை மர்ம ஆசாமிகள் கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது யானை தந்தம், காட்டெருமை கொம்புகள் ஆகியவை பிடிபட்டுள்ளது. கடத்தலில் ஈடுபடுபவர்கள் தர்மபுரியில் இருந்து பாப் பாரப்பட்டி, பாலக்கோடு வழியை பயன்படுத்தி வரு வது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு தொடர்பாக 12 வழிகாட்டுதல்கள் சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை

Posted: 21 Jan 2014 02:22 PM PST

புதுடெல்லி,

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு மற்றும் சிறை நடவடிக்கைகள் குறித்து 12 வழிகாட்டுதல்களை சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.

வழிகாட்டுதல்கள்

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனு மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதை காரணம் காட்டி சுப்ரீம் கோர்ட்டு அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்தது.

தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்புடன் பல்வேறு மாநில சிறைகளில் உள்ள கருணை மனு மீதான நடைமுறைகள் மற்றும் தண்டனையை நிறைவேற்றுதல் போன்றவைகளை பார்த்து இதுதொடர்பாக சில வழிகாட்டுதல்களையும் அறிவிக்கிறோம்.

குறித்த காலத்தில் பரிந்துரை

ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்போது தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒரே நேரத்தில் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.

விவரங்கள் அனைத்தும் கிடைத்ததும் குறிப்பிட்ட காலத்துக்குள் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு தனது பரிந்துரையை அனுப்ப வேண்டும்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து தக்க பதில் வரவில்லை என்றால் குறித்த கால இடைவெளியில் நினைவூட்டல் செய்ய வேண்டும்.

எழுத்துமூலம் தெரிவிக்க

கருணை மனு ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டால் சிறைவாசிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எழுத்து மூலம் சிறை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல கவர்னரின் கருணை மனு நிராகரிப்பும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட வேண்டும். ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த நகல்களும் கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

14 நாட்கள் அவகாசம்

கருணை மனு நிராகரிக்கப்பட்ட நாளுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கும் இடையே கைதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு போதிய அவகாசம் கொடுக்காவிட்டால், கைதி தனது குடும்பத்தினரை இறுதியாக சந்திக்க வாய்ப்பு கேட்டு கோர்ட்டை அணுகலாம்.

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் கைதி தனது குடும்பத்தினரை இறுதியாக சந்திக்க மனிதாபிமான அடிப்படையிலும், நீதியின் படியும் சிறை நிர்வாகம் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும்.

சிறை நிர்வாகம்

நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தூக்கு தண்டனை கைதிகளுக்கு தேவையான தொடர் மனநல சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் கைதியின் மன நலம், உடல்நலம் பற்றிய அரசு டாக்டர்களின் மருத்துவ அறிக்கைகளை சிறை சூப்பிரண்டு பெற வேண்டும்.

ஏழை கைதிகளாக இருக்கும் பட்சத்தில் கருணை மனு அனுப்புவதற்கு தேவையான ஆவணங்களை நகல் எடுக்கவும், கருணை மனு தயாரிக்கவும் சிறை நிர்வாகம் உதவ வேண்டும்.

பிரேத பரிசோதனை

தூக்கிலிடப்பட்ட கைதிகள் அவர்களுக்கு உரிய நடவடிக்கைகளின்படி தான் தூக்கு போடப்பட்டதா என்பதை அறிய தண்டனை நிறைவேற்றிய பின்னர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

image: 

category:

News Group Category:

எழும்பூரில், வாகன சோதனை செய்த சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை உதடு கிழிந்து காயம்

Posted: 21 Jan 2014 02:16 PM PST

சென்னை,

சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் சந்திப்பில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சப்–இன்ஸ்பெக்டர் கிளிக்கண்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிளிக்கண்ணன் தாக்கப்பட்டார். அதில் அவரது உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஸ்கூட்டரில் வந்த நபர், சப்–இன்ஸ்பெக்டர், தன்னை தரக்குறைவாக பேசியதாக புகார் கூறினார்.

News Group Category:

மத்தூரில் பஸ்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்; 2 விவசாயிகள் உடல் நசுங்கி சாவு

Posted: 21 Jan 2014 02:06 PM PST

மத்தூரில் மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயிகள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விவசாயிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன்(40). இவரது நண்பர் இதே ஊரை சேர்ந்த முருகே சன்(43). முருகன் அவரது வயலில் கத்தரி பயிரிட்டுள் ளார். இதற்கு பூச்சி மருந்து வாங்குவதற்காக நேற்று அவரது நண்பர் முருகேசனு டன் மோட்டார் சைக்கிளில் மத்தூருக்கு வந்தனர்.

பூச்சி மருந்து வாங்கி கொண்டு மீண்டும் வாழைத் தோட்டம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்தூர்-போச்சம் பள்ளி பிரிவு ரோட்டருகே சென்ற போது, எதிரே கள்ளக் குறிச்சியில் இருந்து பெங்க ளூருக்கு சென்று கொண்டி ருந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவித மாக நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

2 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன்பகுதியில் சிக்கி சுமார் 30 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத் தில் முருகனும், மோட்டார் சைக்கிளை ஓட்டிய முருகேச னும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்ற பலியான விவசாயிகள் இருவர் உடலையும் மீட்ட னர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மத் தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்தில் பலியான முருக னுக்கு மாதம்மாள் என்ற மனைவியும், 1 மகன் மற்றும் மகளும் உள்ளனர். முருகே சனுக்கு மாதம்மாள் என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். விபத்தில் பலியான இருவரது உடலை யும் பார்த்து அவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந் தது.

தொடர் விபத்து

விபத்து நடந்த மத்தூர்-போச் சம்பள்ளி பிரிவு ரோட்டில் உள்ள வளைவு மிகவும் ஆபத் தான வளைவாக உள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று 10-க் கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். எனவே இந்த பகுதியில் ரவுண்டானா மற்றும் வேகத்தடைகள் அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Posted: 21 Jan 2014 01:53 PM PST

சென்னை,

திருச்சியில் நடைபெற உள்ள 10–வது தி.மு.க. மாநாட்டினை முன்னிட்டு, அந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுப்பதற்காக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்திற்கு நேற்று சென்றார்.

அங்கு கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லலா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, துணை தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, துணைப் பொதுச் செயலாளர் இ.உமர் ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்தித்து, தி.மு.க. மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

News Group Category:

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் ஜோகோவிச்சை வெளியேற்றினார், வாவ்ரிங்கா கனடா வீராங்கனை பவுச்சார்டு சாதனை

Posted: 21 Jan 2014 01:38 PM PST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, 4 முறை சாம்பியனான செர்பியாவின் ஜோகோவிச்சை கால்இறுதியுடன் விரட்டியடித்தார்.

ஜோகோவிச் அவுட்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் திருவிழா முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியனும், 2–ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், 8–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவும் நேற்று கோதாவில் இறங்கினர். ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நீண்டு கொண்டே போன இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்டுகளில் இருவரும் தலா 2 வீதம் தனதாக்கினர். இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் சூடு பறந்தது. இதில் இருவரும் பெரும்பாலும் தங்களது சர்வீஸ்களில் மட்டும் புள்ளிகளை சேர்த்தபடி வந்ததால் 7–7 என்று வரை சமநிலையே வந்து கொண்டிருந்தது.

இதன் பின்னர் 16–வது கேமில் ஜோகோவிச்சின் சர்வீசை வாவ்ரிங்கா முறியடித்து, அவரது சவாலுக்கு முடிவு கட்டினார். 3 மணி 54 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் வாவ்ரிங்கா 2–6, 6–4, 6–2, 3–6, 9–7 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை சாய்த்தார். அதிகபட்சமாக மணிக்கு 219 கிலோ மீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டு மிரட்டிய வாவ்ரிங்கா, எதிராளி திருப்ப முடியாத அளவுக்கு 17 ஏஸ் சர்வீஸ்களை வீசினார். இது தான் அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

 2008, 2011, 2012, 2013–ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வென்றவரான ஜோகோவிச்சுக்கே இந்த ஆண்டிலும் வெற்றி வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்ட நிலையில், கால்இறுதியுடன் அவரது கதை முடிந்து போய் விட்டது. சென்னை ஓபன் சாம்பியனான 28 வயதான வாவ்ரிங்கா ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதிக்கு அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறை.

பெரரும் வெளியேற்றம்

மற்றொரு கால்இறுதியில் உலகின் 3–ம் நிலை வீரர் ஸ்பெயினின் டேவிட் பெரரும், 7–ம் நிலை வீரர் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். 3 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் 28 வயதான தாமஸ் பெர்டிச் 6–1, 6–4, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் பெரரை வீழ்த்தினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து கால்இறுதியுடன் மூட்டை முடிச்சை கட்டி வந்த பெர்டிச் இப்போது அந்த தடையை வெற்றிகரமாக கடந்து ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக அரைஇறுதி படிகட்டில் ஏறியிருக்கிறார்.

'இந்த ஒரு ஆடுகளத்தில் மட்டுமே (ராட் லாவர் ஆடுகளம்) நான் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்று எனது பயிற்சியாளர் தாமஸ் கிருபா எனக்கு துரிதமாக நினைவுப்படுத்தினார். அது என்னை சாதிக்க கூடுதல் உத்வேகம் அளித்தது' என்று பெர்டிச் குறிப்பிட்டார். பெர்டிச் அரைஇறுதியில் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் பலம் வாய்ந்த சீன வீராங்கனை லீ நா 6–2, 6–2 என்ற நேர் செட்டில் இத்தாலியின் பிளவியா பென்னட்டாவை சுலபமாக தோற்கடித்து 4–வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். வெறும் 66 நிமிடத்தில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.

புதுமுக வீராங்கனை அசத்தல்

உலகின் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்த 14–ம் நிலை வீராங்கனை செர்பியாவின் அனா இவானோவிச், கால்இறுதியில் 31–ம் நிலை வீராங்கனை கனடாவின் யுஜின் பவுச்சார்டை எதிர்கொண்டார். இருவரும் சரிசம பலத்துடன் களத்தில் மோதிக் கொண்டனர். இருப்பினும் இவானோவிச்சை விட ஆக்ரோஷமாக ஷாட்களை அடித்து நொறுக்கிய பவுச்சார்டின் கையே கடைசியில் ஓங்கியது. 2 மணி 24 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பவுச்சார்டு 5–7, 7–5, 6–2 என்ற செட் கணக்கில் இவானோவிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்த ஆஸ்திரேலிய ஓபனில் மொத்தம் 13 'டீன் ஏஜ்' மங்கைகள் களத்தில் குதித்தனர். இதில் குறைத்து மதிப்பிடப்பட்ட 19 வயதான பவுச்சார்டு, பிரமிக்க தக்க வகையில் விளையாடி அரைஇறுதி வரை வந்து விட்டார். அதுவும் ஆஸ்திரேலிய ஓபனில் பிரதான சுற்றில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே இவ்வளவு தூரம் முன்னேறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டி ஒன்றில் கனடா நாட்டவர் ஒருவர் அரைஇறுதியை எட்டுவது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1984–ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் கனடா வீராங்கனை கார்லிங் பாஸ்செட் செகுசோ அரைஇறுதிசுற்று வரை முன்னேறி இருந்தார். ஆனால் எந்த கனடா நாட்டவரும் இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றை எட்டியதாக வரலாறு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பவுச்சார்டு அரைஇறுதியில் 4–ம் நிலை வீராங்கனை லீ நாவை எதிர்கொள்கிறார்.

சானியா ஜோடி தோல்வி

பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா– ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி போராடி தோற்றது. இவர்களை நம்பர் ஒன் கூட்டணியான இத்தாலியின் சாரா எர்ரானி, ராபர்ட்டா வின்சி 6–2, 3–6, 6–4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™