Daily Thanthi |
- ஓடும் கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
- நாகராஜா கோவிலில் ஆராட்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
- முஸ்லிம் மதகுரு மரணம்: நரேந்திர மோடி, ராகுல்காந்தி இரங்கல்
- ஐ.நா. மனிதஉரிமை தீர்மானத்தை சந்திக்க தயார் இலங்கை மந்திரி மகிந்தா சமரசிங்கே
- மானிய விலை கியாஸ் சிலிண்டர்களை 12 ஆக உயர்த்தும் திட்டம் மத்திய மந்திரிசபையின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்
- எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? சென்னை பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
- மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ஆய்வு பேராசிரியர் தகவல்
- பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் முடிவு? எடியூரப்பாவுக்கு, தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி
- ஊழல் எதிர்ப்பு மாநாடு ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்று சக்தி தே.மு.தி.க. தான் விஜயகாந்த் அறிக்கை
- சினிமா டைரக்டர் கவுதம் மேனன் மீது மோசடி வழக்கு கைதாவாரா? போலீஸ் விசாரணை தீவிரம்
| ஓடும் கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் Posted: 18 Jan 2014 01:39 PM PST வில்லுக்குறி, வில்லுக்குறி அருகே ஓடும் கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த 3 பேர் அவசரமாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:– ஓடும் காரில் தீ பள்ளியாடியை சேர்ந்தவர் கிஷோர்(வயது 29). இவர் உண்ணாமலைகடை பேரூராட்சி அரசு காண்டிராக்டர் ஆவார். இவர் நேற்று மாலை ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான காரில் நாகர்கோவிலில் இருந்து பள்ளியாடி வந்து கொண்டிருந்தார். காரை கிஷோர் ஓட்டினார். காரில் ராஜமணி என்பவரும், ஒரு பெண்ணும் உடன் இருந்தனர். மாலை 6.30 மணி அளவில் கார், வில்லுக்குறி அருகே அம்பலத்தடிவிளை பகுதியில் வந்தது. அப்போது காரின் முன் பகுதி திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பிரேக் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும், காரை 100 அடி தூரம் தாண்டி நிறுத்திவிட்டு, 3 பேரும் கதவை திறந்து அவசரம், அவசரமாக இறங்கினர். எலும்பு கூடாகியது அதற்குள் கார் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அவர்களால் முடியவில்லை. உடனடியாக இதுகுறித்து தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பாலாஜி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. காரணம் என்ன? இந்த காரில் குளுகுளு வசதி(ஏ.சி.) செய்யப்பட்டுள்ளது. இதில் ஏ.சி. பழுது ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரில் இருந்த 3 பேரும் மின்னல் வேகத்தில் கதவை திறந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். சம்பவம் நடத்த பகுதி இரணியல் போலீஸ் நிலைய பகுதி ஆகும். உடனே இரணியல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. image: category: |
| நாகராஜா கோவிலில் ஆராட்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு Posted: 18 Jan 2014 01:30 PM PST நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா 10 நாட்கள் நடந்தது. 10–வது நாளான நேற்று ஆராட்டுவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து நேற்று மாலை சுவாமி ஊர்வலம் ஒழுகினசேரி பழையாற்றுக்கு புறப்பட்டது. பின்னர் அங்கு ஆராட்டு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆராட்டின்போது பழையாற்றில் குறைந்த அளவு தண்ணீரே பாய்ந்தது. இதனால் ஆராட்டு விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் வருத்தம் அடைந்தனர். வழக்கமாக ஆராட்டு நாளையொட்டி சபரிஅணையை அடைத்து பழையாற்றில் தண்ணீர் தேக்கப்படும் என தெரிகிறது. இதைப்போல இந்த ஆண்டும் தண்ணீர் தேக்க வலியுறுத்தி அ.தி.மு.க. பிரமுகர் சாய்பாபு உள்ளிட்டோர் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தண்ணீர் தேக்கப்படாததற்கு நகர இந்து முன்னணி தலைவர் ராஜா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். image: category: |
| முஸ்லிம் மதகுரு மரணம்: நரேந்திர மோடி, ராகுல்காந்தி இரங்கல் Posted: 18 Jan 2014 01:10 PM PST Flash News Text: முஸ்லிம் மதகுரு மரணம்: நரேந்திர மோடி, ராகுல்காந்தி இரங்கல் |
| ஐ.நா. மனிதஉரிமை தீர்மானத்தை சந்திக்க தயார் இலங்கை மந்திரி மகிந்தா சமரசிங்கே Posted: 18 Jan 2014 01:08 PM PST Flash News Text: ஐ.நா. மனிதஉரிமை தீர்மானத்தை சந்திக்க தயார் இலங்கை மந்திரி மகிந்தா சமரசிங்கே |
| Posted: 18 Jan 2014 12:53 PM PST பெங்களூர், மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபையின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று, பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்தார். 12 கியாஸ் சிலிண்டர்கள் தற்போது வீடுகளுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 9 கியாஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தேவைப்படும் வாடிக்கையாளர்கள் கூடுதல் விலை கொடுத்து வெளி மார்க்கெட்டில்தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும். இந்த நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 12 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி வீரப்ப மொய்லி, ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று உடனடியாக அறிவித்தார். அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் இதற்கிடையில் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீரப்ப மொய்லி, அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் குறித்து விரைவில் பரிந்துரைக்கப்பட்டு மத்திய மந்திரிசபையின் அடுத்த கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:– ஆதார் அட்டை கட்டாயமா? நாடு முழுவதும் உள்ள 15 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளில், 10 கோடி மட்டுமே உண்மையானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் மானியத்தால் அரசுக்கு 15 ஆயிரம் கோடி செலவாகிறது. எனவே போலி இணைப்புகளை தடுப்பதற்காக, சமையல் கியாஸ் மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் 80 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை பெற்றிருப்பதுடன், குறைந்தபட்சம் 65 சதவீதம் வாடிக்கையாளர்களாவது ஆதார் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். எனவே இத்திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியமாகும். ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 18 Jan 2014 12:01 PM PST சென்னை, எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்று ஒரே இடத்தில் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் கராத்தே பயிற்சி செய்தனர். கராத்தே பயிற்சி சென்னை திருவல்லிகேணியில் உள்ள என்.கே.டி. உயர்நிலைப்பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்து கடந்த 6 மாதங்களாக 'பொபுக்காய்' கராத்தே பள்ளி ஆசிரியர் சுந்தர் இலவச பயிற்சி கொடுத்தார். 6 மாத கால பயிற்சியை முடித்த 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை நேற்று செய்து காண்பித்து அசத்தினர். மனதைரியம் இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு போக்குவரத்து துறை போலீஸ் துணை கமிஷனர் எஸ்.லட்சுமி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த தற்காப்பு பயிற்சி மூலம் அவர்களுக்குள் இருக்கும் மனதைரியத்தை வெளிக்கொண்டு வர முடியும். இதே போல் அனைத்து பள்ளிகளிலும் செய்தால் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை வளரும்' என்றார். கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவி லட்சுமி கூறும்போது, 'எங்களுக்கு கடந்த 6 மாதங்களாக இந்த பயிற்சியை கொடுத்தனர். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்குள் புதைந்து கிடைந்த தைரியம் இப்போது வெளியே தெரிகிறது' என்றார். இதில் என்.கே.டி. உயர்நிலைப்பள்ளி செயலாளர் மனோ பக்தவச்சலம், தலைமை ஆசிரியர் ஏ.வி.கிருஷ்ணகுமாரி மற்றும் ஆசிரியர்கள் உள்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
image: category:News Group Category: |
| மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க ஆய்வு பேராசிரியர் தகவல் Posted: 18 Jan 2014 12:01 PM PST மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் அடைப்பு மற்றும் கழிவுநீர் விடப்பட்டுள்ளது. அங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று பேராசிரியர் தெரிவித்துள்ளார். பொற்றாமரைக்குளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சுற்றியே இறைவன் சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் பெரும்பாலானவை நடந்துள்ளதாக அறியப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக சிவபெருமானால் சாபத்திற்குள்ளான இந்திரன், மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள, கடம்பவனத்திற்கு வந்தான். அங்கு இருந்து சிவபெருமானை பூஜை செய்ய பொன் தாமரைகள் கொண்ட தடாகம் (குளம்) ஒன்றை அமைத்தான். அதுவே பொற்றாமரைக்குளம் ஆகும். இந்த குளத்தில் நாரைக்கு முக்தி கொடுத்தது. வெள்ளை யானை சாபம் நீங்கியது, தடாதகை பிராட்டியார் திருஅவதாரம், சங்க பலகை மிதந்த இடம் என பல்வேறு சிறப்புகள் அரங்கேறின. இது 165 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்டதாகும். பெருமையும் சிறப்பும் கொண்ட பொற்றாமரைக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இன்றி காணப்பட்டது. இதில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். பேராசிரியர்கள் ஆய்வு அதன்படி கோவில் நிர்வாகம் சென்னை ஐ.ஐ.டி. மண்ணியல் பேராசிரியர் ரவீந்திரகட் தலைமையில் 3 பேராசிரியர்கள், 3 என்ஜினீயர்கள் தெப்பக்குளத்தை ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி முதலில் தெப்பக்குளத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட பட்டிய கற்கள் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளங்கள் முற்றிலும் அகற்றப்பட்டன. பின்னர் மதுரை மாவட்டத்தில் சுற்றியுள்ள 10 கண்மாய்களின் மண் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் மழை தண்ணீரை சேகரித்தும், எப்போதும் ஈரப்பதமாக வைத்து கொள்ளும் தன்மை கொண்டதாக இருப்பது கீழமாத்தூர் கண்மாய் களிமண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 அடி அளவிற்கு களிமண் நிரப்பப்பட்டது. தண்ணீர் வெளியே செல்லாத வகையில் சுற்றிலும் சிமெண்டால் ஆன கான்கிரீட் செங்கற்கள் பயன்படுத்தி சுற்றுசுவர் கட்டப்பட்டது. அதன்பின் மழை பெய்தபோது 4 அடி மட்டத்துக்கு தண்ணீர் தேங்கியது. பொற்றாமரைக் குளத்தில் தண்ணீர் தேங்கி 16 மாதங்கள் ஆகியும், குளத்தில் தண்ணீர் எப்போதும் போல் உள்ளது. இதற்காக சென்னை பேராசிரியர் ரவீந்திரகட்டை, மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஜெயராமன் பாராட்டி, பரிசுகளை வழங்கினர். வாய்ப்பு இல்லை பின்னர் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறும் போது, 'பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கியது ஒரு சாதனை தான். இதேபோன்று 17 ஏக்கர் கொண்ட மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெப்பக்குளத்துக்கு அனைத்து பகுதியில் இருந்தும் தண்ணீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மழைநீர் உடனே குளத்திற்கு வந்து விடும். குளத்தின் அளவும் சுமார் 100 அடி தான். இதனால் இங்கு தண்ணீர் தேக்குவது சாத்தியமானது. ஆனால் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. குளத்தின் அளவும் 1200 அடிக்கு மேல் உள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும்படியாக கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் இந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான வழிகளை ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். அதலபாதாளத்தில் நிலத்தடி நீர் ஐ.ஐ.டி. பேராசிரியர் நிருபர்களிடம் கூறும் போது, 'பல இடங்களில் தண்ணீர் தேக்கி உள்ளோம். பொற்றாமரைக்குளத்தில் தண்ணீர் தேக்கியது நல்ல விஷயம். கோவிலை சுற்றிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடிநீர் அதலபாதாளத்துக்கு போய் விட்டது. இங்கு தண்ணீர் தேக்கியது போல் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும். குளத்தின் நீளம், அகலம் பெரிதாக உள்ளது. குளத்தில் தண்ணீர் இருந்தால் 5 முதல் 7 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் நீராவியாக செல்வதால், நீரின் அளவு வேகமாக குறைந்து விடும். நீர்வரத்துக் கால்வாய்களில் அடைப்பு உள்ளது. அதை கழிவுநீர் செல்லும் வழியாகவும் மாற்றி விட்டனர். இதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டுள்ளோம். அப்படி மாற்றப்பட்டால் ஆய்வு செய்யப்பட்டு நிரத்தரமாக தண்ணீர் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்படும்' என்றார். image: category: |
| பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் முடிவு? எடியூரப்பாவுக்கு, தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி Posted: 18 Jan 2014 11:59 AM PST பெங்களூர், டெல்லியில் நடந்த பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் எடியூரப்பாவுக்கு தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய செயற்குழு பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து கட்சியின் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்–மந்திரிகள் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்–மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 2–வது நாளாக நேற்று நடந்த கூட்டத்தில், கர்நாடகத்தில் கட்சியின் நிலை, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுப்பது என்பவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தனியாக ஆலோசிக்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவந்து உள்ளது. தேர்தல் பிரசார குழு தலைவர் கர்நாடக ஜனதா கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு மீண்டும் வந்துள்ள எடியூரப்பாவுக்கு தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் பெயர் அடங்கிய முதல்கட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், கூட்டம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. கர்நாடக ஜனதா கட்சியில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்துள்ள தலைவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவது, பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள பேரணி தேதி முடிவு, எடியூரப்பாவின் அரசியல் ரீதியான பலத்தை நிரூபிக்கும் வகையில் சிமோகாவில் பிரமாண்ட மாநாடு நடத்துவது, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழுவை புனரமைப்பதுடன் அதில் எடியூரப்பாவுக்கு இடம் அளிப்பது, மீதமுள்ள கர்நாடக ஜனதா கட்சி தலைவர்களையும் பா.ஜனதாவுக்கு அழைத்து வருவது, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகங்கள் வகுப்பது போன்றவை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவந்து உள்ளது. எடியூரப்பா பேட்டி இதற்கிடையே, எடியூரப்பாவிடம் டெல்லியில் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எடியூரப்பா பதிலளித்து கூறியதாவது:– பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. வருகிற நாட்களில் கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை மேலும் பலப்படுத்துவேன். என் மீது கட்சியின் மூத்த தலைவர் அத்வானிக்கு சில விஷயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. விரைவில் நான் அவரை சந்தித்து அதுதொடர்பாக எல்லா விவரங்களையும் தெரிவிப்பேன். கடந்த காலத்தில் நடந்தவற்றை எல்லாம் மறந்து விட்டேன். தற்போது பா.ஜனதாவின் கட்டுப்பாடான வீரனாக உள்ளேன். அத்வானி பழுத்த அரசியல் தலைவர். அவரை குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 18 Jan 2014 11:53 AM PST சென்னை, தமிழ்நாட்டுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்ற வகையில் தே.மு.தி.க. ஊழல் எதிர்ப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்று சக்தி தே.மு.தி.க.தான் என்று விஜயகாந்த் கூறி உள்ளார். இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மாற்று சக்தி தே.மு.தி.க. தொடங்கிய சில மாதங்களிலேயே தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு பல லட்சம் வாக்குகளை பெற்றோம். அதை கண்டு மாற்றாரும் வியந்தனர். தே.மு.தி.க. தொடங்கியதில் இருந்து 2011–ம் ஆண்டு வரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் நாம் தனித்தே போட்டியிட்டோம். தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் மாற்றாக தமிழகத்தின் மாற்று சக்தி தே.மு.தி.க.தான் என்று நிரூபித்துள்ளோம். ஆட்சி மாற்றம் 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில், எனக்கு விருப்பமில்லை என்றாலும் கூட, உங்கள் அனைவரது விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற நோக்கில் நான் தலைகுனிந்தாலும் குனிவேனே தவிர உங்களை யாரிடமும் தலை குனிய விடமாட்டேன் என்ற உணர்வோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். தே.மு.தி.க. கூட்டணி அமைத்ததன் விளைவாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நம்மால் உருவானது. ஆனால் தமிழக மக்கள் எதிர்பார்த்த ஆட்சியா தமிழகத்தில் நடைபெறுகிறது? தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல் எதிர்ப்பு மாநாடு இந்திய நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும், விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் ஒழிப்போம் என்ற சூளுரையோடும், சாதி, மதம், இனம் என எந்த வித வேறுபாடும் பார்க்காமல் நாம் அனைவரும் ஒரே சாதி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் நடந்திட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்குடன் வருகிற 2014–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எறஞ்சியில் தே.மு.தி.க. சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திட பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு வர வேண்டும் நன்றியை மறந்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் நடைபெற உள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை நீங்கள் ஏற்கனவே ஈடுபட்டுள்ளீர்கள் என்ற செய்தியினை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் மட்டும் மாநாட்டிற்கு வந்தால் போதாது. தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், தாய்மார்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களோடும், நண்பர்களோடும் குடும்பம், குடும்பமாக கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார். image: category:Tagging:News Group Category: |
| சினிமா டைரக்டர் கவுதம் மேனன் மீது மோசடி வழக்கு கைதாவாரா? போலீஸ் விசாரணை தீவிரம் Posted: 18 Jan 2014 11:45 AM PST சென்னை, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சினிமா டைரக்டர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசடி புகார் விண்ணைதாண்டி வருவாயா என்ற சினிமா படத்தை டைரக்டு செய்த கவுதம் மேனன் மீது, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், விண்ணைத்தாண்டிவருவாயா படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட, தனக்கு ரூ.99 லட்சம் ராயல்டி தொகை கேட்டதாகவும், அதை தராமல், டைரக்டர் கவுதம்மேனன் ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் ஜான்அருமைராஜ் மேற்பார்வையில், நேற்று டைரக்டர் கவுதம்மேனன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதாவாரா? இந்த புகார் மனு அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார்,ஏற்கனவே கவுதம்மேனனிடம் விசாரணை மேற்கொண்டனர். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், கவுதம்மேனன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இந்த வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |