Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கோடீசுவர பெண்ணாகா வலம் வந்த சுனந்தாவுக்கு ரூ. 95 கோடியில் துபாயில் 12 சொகுசு வீடுகள்

Posted: 19 Jan 2014 11:15 PM PST

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012–13–ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில்

சுனந்தா மரணத்தில் மர்மம் நீடிப்பு: சசிதரூர் உள்பட 8 பேர் வாக்குமூலம்- பிரேத பரிசோதனை அறிக்கை இன்று தாக்கல்

Posted: 19 Jan 2014 10:49 PM PST

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா, கடந்த 17–ந் தேதி டெல்லியில் உள்ள லீலாபேலஸ் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசிதரூருக்கும் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினை சூடு பிடித்த நிலையில் சுனந்தாவின் திடீர் சாவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணா போராட்ட இடத்துக்கு செல்ல முயன்ற கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்: கைது செய்யப்படுவாரா?

Posted: 19 Jan 2014 10:29 PM PST

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட மந்திரி சோம்நாத் பார்திக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி

மன்மோகன்சிங்குடன் ராகுல்காந்தி சந்திப்பு

Posted: 19 Jan 2014 09:55 PM PST

பிரதமர் மன்கோகன் சிங்கை காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்கெனவே ஜெயின் இனத்தவர்களை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வேலைகளை

அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

Posted: 19 Jan 2014 09:04 PM PST

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட மந்திரி சோம்நாத் பார்திக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ராக்கி பிர்லாவுக்கும் இடையே

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் அவதி

Posted: 19 Jan 2014 07:56 PM PST

திருப்பதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ஏழுமலையானை தரிசிக்க 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். காலையில் திடீர் என மேக கூட்டம் திரண்டது. 11 மணி அளவில் பலத்த மழை பெய்தது. 12.30 மணிவரை வெளுத்து வாங்கியது. இதனால் தரிசனம்

சேவைக் குறைபாடு காரணமாக ரூ. 60 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிய ரஷ்ய விமான நிறுவனம்

Posted: 19 Jan 2014 07:23 PM PST

ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த பாய் தம்பதியர் ரஷ்ய விமான நிறுவனத்தின் மூலம் பிரான்சிற்கு மேற்கொண்ட விமானப்பயணம் சந்தோஷத்திற்கு பதிலாக அவர்களுக்கு பல இக்கட்டுகளை அளிப்பதாகவே அமைந்தது. இவர்கள் ரஷ்யாவின் ஏரோஃபிளாட் நிறுவனத்தின் மூலம் டெல்லியிலிருந்து மாஸ்கோ வழியாக பாரிசிற்கு செல்வதற்கும் பின்னர் லாத்வியாவிலிருந்து மாஸ்கோ வழியாக டெல்லி திரும்புவதற்கும் டிக்கெட் பதிவு செய்திருந்தனர். குறிப்பிட்டபடி மாஸ்கோ சென்ற அவர்கள்

அசாமில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ மொபைல் அறிவியல் ஆய்வகங்களை இயக்க அரசு திட்டம்

Posted: 19 Jan 2014 07:18 PM PST

அசாமில் செயல்பட்டுவரும் ராஷ்டிரிய மத்யமிக் சிக்ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட திட்டங்களில் உதவும் விதமாகவும், அத்தகைய பாடங்களை சுவாரஸ்யமானதாக மாற்றும் விதமாகவும் மொபைல் அறிவியல் ஆய்வகங்களை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டமாக காம்ரூப் மற்றும் ஜோர்ஹத் மாவட்டங்களில் இத்தகைய ஆய்வகங்கள் செயல்படத் துவங்கும் என்றும் அந்த அமைப்பு

கர்நாடகத்தில் அடுத்த மாத இறுதியில் விவசாய விலை ஆணையம் அமைக்கப்படும்: சித்தராமையா தகவல்

Posted: 19 Jan 2014 07:02 PM PST

பிஜாப்பூர் மாவட்டம் இண்டி தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்–மந்திரி சித்தராமையா பேசியதாவது:– விவசாயிகளுக்கு நீதி வழங்கும் முயற்சியில் எனது அரசு ஈடுபட்டு உள்ளது. இதன் ஒரு கட்டமாக கர்நாடகத்தில் அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியில் விவசாய விலை ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அன்ன பாக்யா திட்டம் திருப்திகரமான முறையில் செயல்படுகிறது. இதன் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டை

பா.ஜனதாவின் பிரதமர் கனவு பலிக்காது: மத்திய மந்திரி வீரப்பமொய்லி பேட்டி

Posted: 19 Jan 2014 06:57 PM PST

மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்ப மொய்லி மங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய அரசு ஒரு வீட்டிற்கு மானிய விலையில் 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் ஒரு குடும்பத்தினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அடுத்த வாரம் நடைபெறும் மந்திரி

மத்திய மந்திரி அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் இன்று தர்ணா: போலீஸ் திடீர் தடை

Posted: 19 Jan 2014 03:28 PM PST

ஆத் ஆத்மி கட்சி சார்பில் உள்துறை அமைச்சகம் முன் இன்று தர்ணா போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர். ஆனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

டெல்லியில் பெண் நிர்வாணப் படவிளம்பரத்திற்கு எதிராக பெண் பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

Posted: 19 Jan 2014 02:55 PM PST

டெல்லி ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிர்வாண நிலையில் உள்ள ஒரு பெண்ணின் படத்தின் உடல் உறுப்புகள் டேப்புகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி பெண் பத்திரிக்கையாளர்கள் நேற்று டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினருக்கு எதிராக போராட்டம்

உடலை மறைத்து ஆடை அணிவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னை நகரில் குறைவு

Posted: 19 Jan 2014 01:53 PM PST

மத்திய பிரதேச தலைநகர் போபாலுடன் ஒப்பிடும் போது, சென்னை நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் குறைவு என்று அந்த மாநில உள்துறை மந்திரி பாபுலால் கவுர் போபால் நகரில் தெரிவித்தார்.

தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டி: பிரசாந்த் பூஷன் பேட்டி

Posted: 19 Jan 2014 01:13 PM PST

ஊழல் குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்ட புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி டெல்லி அரியணையில் அமர்ந்துள்ளது. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள இக்கட்சி பாராளுமன்ற தேர்தலிலும் 100 தொகுதிகளை வெல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை

Posted: 19 Jan 2014 12:07 PM PST

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது மாணவி வீட்டின் மாடில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

300 நகரங்களின் ஓராயிரம் டீக்கடைக்காரர்களை ஊடகங்களுடன் தொடர்பு கொள்கிறார் மோடி

Posted: 19 Jan 2014 12:01 PM PST

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சிறுவயதில் தான் ரெயில் மற்றும் பிளாட்பாரங்களில் டீ விற்றதாக கூறினார். இதையடுத்து இவ்விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்போது மிகப்பரபரப்பாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மணிசங்கர அய்யரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல் மந்திரியுமான நரேந்திர மோடியால்

எனக்கு பாதுகாப்பு தேவை இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 19 Jan 2014 11:39 AM PST

தீவிரவாதிகள் கடத்தும் அச்சுறுத்தல் இருப்பதால், 'இசட்' பிரிவு பாதுகாப்பை ஏற்குமாறு டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டும், தனக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறி விட்டார்.

உ.பி.யில் கடும் குளிருக்கு 3 பேர் பலி: வட மாநிலங்களில் தொடரும் குளிரான வானிலை

Posted: 19 Jan 2014 08:27 AM PST

வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டிக்கொண்டிருந்த சூழலில் உ.பி.யில் மழையும் பெய்ததால் மூன்று பேர் பலியானார்கள். டெல்லியில் குளிரின் தாக்கம் சற்று குறைந்துள்ள போதிலும் அதன் பக்கத்து மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உ.பி.யில் கடுமையான

போலியோ அற்ற நாடு இந்தியா: சான்றிதழ் வழங்க உலக சுகாதார மையம் முடிவு

Posted: 19 Jan 2014 07:44 AM PST

இந்தியாவிற்கு போலியோ இல்லாத நாடு என்ற சான்றிதழை உலக சுகதார மையம் விரைவில் வழங்கும் என பஞ்சாப் அமைச்சர் சுர்ஜித் குமார் ஜயானி தெரிவித்துள்ளார்.

யாசின் பட்கலை விடுவிக்க கெஜ்ரிவாலை கடத்த திட்டம்: உளவுத்துறை தகவல்

Posted: 19 Jan 2014 04:42 AM PST

தீவிரவாதி யாசின் பட்கலை சிறையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் டெல்லி மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு கடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™