Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எந்தக் கிழமைகளில் என்ன செய்யலாம்?

Posted: 17 Jan 2014 10:10 AM PST

பொதுவாகவே எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் ஏதாவது ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியம் நிச்சயம் இருக்கும். அதேசமயம் எந்த தினத்தில் எதைச் செய்யலாம் என்பதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்தினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள்! எந்தக் கிழமை, என்ன செய்யலாம்? இதோ... ஞாயிற்றுக்கிழமை: சுபகாரியத் தொடக்கம், ஹோமங்கள், யாத்திரை புறப்படுதல், பதவி ஏற்றல், சிகிச்சை மேற்கொள்ளல், விதை விதைத்தல் கிரகப்ரவேசம், வாகனங்கள் வாங்குதல், சூரியன் அல்லது அனுமன் வழிபாடு செய்து தானமளித்தல் செய்யலாம். திங்கட்கிழமை: ...

என் தாய் - மனைவி - குழந்தை

Posted: 17 Jan 2014 09:51 AM PST

என் தாய் - மனைவி - குழந்தை என் அம்மா, என்னுடைய இறந்த காலம்! என் அம்மா, என்னுடைய இறந்த காலம்! சுமந்தாள் என்னை, கருவாய்! என் மனைவி என்னுடைய இப்பொழுது! என் மனைவி என்னுடைய இப்பொழுது! சுமக்கிறாள் என்னை, என் கருவை! என் பிள்ளை! என் பிள்ளை!  எனது நாளை! சுமப்பான்!  நம்புகிறேன்! நம்புகிறேன்! சுமப்பான் என்னை, எனது உடலை! நீங்கள் விரும்பினால், சொல்லுங்கள் கருத்துக்களை! நன்றி! நல்ல நாளாக அமையட்டும்! செந்தில் மூக்கன்.

வேலன்:-அறிவுபூர்வமான அறிவியல் கேள்வி பதில்கள்.

Posted: 17 Jan 2014 09:34 AM PST

குழந்தைகளின் கேள்விகள் வித்தியாசமாக இருக்கும். கடல் நீர் ஏன் உப்பாக இருக்கின்றது? வானம் ஏன் நீல நிறமாக உள்ளது? இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது?மழை எப்படி பெய்கின்றது? என கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.அவ்வாறு அறிவியல் பூர்வமாக 250 கேள்விகளையும் அதற்கான விடைகளையும் கொடுத்துள்ளார்கள்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து ஒப்பன்செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். விதவிதமான கேள்விகள்கொடுத்துள்ளார்கள் அதற்கான விரிவான ...

ப்ளாஸ்டிக்

Posted: 17 Jan 2014 09:15 AM PST

எவர் கைப்பக்குவமும்
ருசிக்கவில்லை
ப்ளாஸ்டிக் வாழைஇலை..!!

செல்லப்பிள்ளையை வணங்குவோமா?

Posted: 17 Jan 2014 09:08 AM PST

செல்லப்பிள்ளையை வணங்குவோமா: இன்று தைப்பூசம் ! போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான், பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். இவர் சிவபார்வதிக்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் செல்லப்பிள்ளையாக விளங்குகிறார். இந்நாளில், இவரை இருந்த இடத்தில் இருந்தே சிந்தித்தாலே போதும். இப்பிறவிக்கு வேண்டிய பொருளும், மறுபிறவி இல்லாமலும் செய்து விடுவார். சித்தர்களுக்கெல்லாம் தலைமைச் சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால் இத்தலத்திற்கு "சித்தன்வாழ்வு' என்றும் பெயருண்டு. ...

என்னை பற்றி

Posted: 17 Jan 2014 09:05 AM PST

பெயர்:செந்தில். மூ
சொந்த ஊர்: களக்காடு
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுல்
பொழுதுபோக்கு:நேரம் இல்லை
தொழில்:மென்பொருள் பொறியாளர்
மேலும் என்னைப் பற்றி:நல்ல நண்பன்.
ஈகரை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

அவள் அவ்வளவு முக்கியமல்ல

Posted: 17 Jan 2014 09:04 AM PST

அவள் அவ்வளவு முக்கியமல்ல... கிழவிதான் பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை பறையனின் மனைவி பிள்ளைகள் பெறாததால் மலடி... என் குடும்பம் அவளை ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதித்ததில்லை புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள் எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை.. மழையானாலும் வெயிலானாலும் அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்... அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை முதலாளி என்றே அழைத்தாள்.. அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை.. தீண்டதகாதவளென்று..!! அது மழைக்காலம் அடைமழை விட்டிருந்த அடுத்த ...

ஆர்பரிக்கும் குழந்தை

Posted: 17 Jan 2014 08:43 AM PST

அழுது ஆர்பாட்டம் செய்யும் குழந்தைகளை எப்படியாவது அடக்கிவிட ஏதேனும் ஒன்று இருக்கிறது பெரும்பான்மை அம்மாக்களின் ஆயுதமாகும் பூச்சிக்காரன் கொஞ்சம் பேருக்கு பூனையாய் இருக்கலாம் இன்னும் சிலருக்கு நாய்களின் உதவி பூனையையும் நாயையையும் துணை கொள்பவர்கள் தாங்களே அவைகளாய் குரல் எழுப்பி அதுவாகிறார்கள் இவையில்லாமல் வெகுசிலருக்கு யானை வேறு சிலரோ குரங்கினைக் காட்டுகிறார்கள் பேருந்து பயணத்தில் ஆர்பாட்டப் பிள்ளைகட்கு இதோபார் அந்த சொல்லி முடிக்குமுன்பே முண்டியடித்து கண்கள் உருட்டி மீசை ...

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்(ஜனவரி 17 - 1- 1917)

Posted: 17 Jan 2014 08:17 AM PST

                                         

பூ

Posted: 17 Jan 2014 08:13 AM PST





பற்களின்றி
உதடுகளால்
மட்டும்
சிரிக்கும்
புன்னகை
இளவரசி

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை

Posted: 17 Jan 2014 08:13 AM PST

திருச்சாழல் - சிவபெருமானுடைய கருணை - மாணிக்கவாசகர் அருளியது சாழல் என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டின் போது பெண்கள் இரண்டு கட்சியினராய்ப் பிரிந்து நின்று பாடுவர். ஒருத்தி கேட்பதும், அதற்கு மற்றொருத்தி விடை கூறுவதுமாக இப்பாட்டு நிகழும். இவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடலே சாழல் என்பதாகும். ஆருயிர்கள் ஒழுகி உய்தற்பொருட்டுச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய் உணர்விற்கு உணர்வாய் அகத்தே நின்று இயங்குகிறான். அது போன்றே அருள் உருவாய்க் கோலம் கொண்டு புறத்தே வழிகாட்டியும் இயக்குகின்றான். ...

கூகுள் அக்கவுண்ட்

Posted: 17 Jan 2014 08:11 AM PST

கூகுள் அக்கவுண்ட்


"இருந்தாலும் உங்க நண்பருக்கு ரொம்ப திமிரா ?  இல்ல தெரியாத தனமா னு தெரியல "


"ஏன் ?"

"எந்த பேங்க் லயும் பணம் எடுக்க முடியலயாம் அதனால அவசரமா 'கூகுள் அக்கவுண்ட்' ல இருந்து ஒரு பத்தாயிரம் ரூபா எடுக்க முடியுமா அப்படினு கேட்கிறார்


நன்றி தமிழ்மணம்
ரமணியன்

சுட்டி ரோபோ- தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ்.

Posted: 17 Jan 2014 07:33 AM PST

சுட்டி ரோபோ- தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ். டிஸ்னி காமிக்ஸ் -சுட்டி ரோபோ தமிழ் மொழி பெயர்ப்பு செய்த காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . இணையத்தில் முதன் முறையாக மிகவும் சுலப டவுன்லோட் லிங்கில் http://www.mediafire.com/download/gyf8at8iv6nv689/Sutty+Robo%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf (OR) http://www3.zippyshare.com/v/16852850/file.html

நயவஞ்சகனாகிறான்

Posted: 17 Jan 2014 03:42 AM PST

நாசமாய்ப் போகிறோம் இந்த நாற்றம்பிடித்த நயவஞ்சக உலகில் நாலு நாழிகைகள் கூட நயமாய்க் கழிவதாயில்லை!!! நாடித்துடிப்பும் அடிக்க மறுக்கிறது வெடிக்க முனைகிறது!!! இறைவன் படைத்தான் உலகை அழகாய் மனிதனைப் படைத்தே இறைவன் நயவஞ்சகனானான் இயற்கையையும் அவன் தானே படைத்தான் காயங்கள் இரத்தங்கள் அநீதிகள் அட்டூழியம் அட்டகாசம் ஏமாற்று ...இவற்றையா இயற்கை பிறப்பித்தது ? மனிதன் மனம் படைத்தவன் -நல்ல குணம் படைத்தவன் என்றெண்ணிய இறைவன் ஏமாந்தான் ! மாறு செய்யப் ...

தைப்பூசம் - வள்ளலார் அருட்பெருஞ்சோதியில் கலந்த நாள்!

Posted: 17 Jan 2014 03:37 AM PST

சிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் இராமையாப் பிள்ளை – சின்னம்மை தம்பதியினருக்கு 5-10-1823ல் மகவாகத் தோன்றியவர் ராமலிங்க அடிகள். எல்லாவுயிரையும் தம் உயிராய்க் கருதி வாழ்ந்த மகான். "அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்" என்று உலக உயிர்களுக்காக இரங்கிய உத்தமர். மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் ...

நேந்துக்குறேன்

Posted: 17 Jan 2014 03:18 AM PST

பள்ளிக்கூடம் போன பய பகல் முடிஞ்சும் திரும்பலையே! வெளக்குக் கூட வச்சாச்சு வீடு வந்து சேரலையே! பள்ளிக்கூடம் பூட்டிக்கெடக்கு! பெரிய பூட்டு மாட்டியிருக்கு! பேரன் இவனக் காணாம பேதலிச்சு இவன் பாட்டியிருக்கு! கொல்லப் பக்கம் போனாக்கூட சொல்லாமப் போனதில்ல! புள்ள வந்து சேராம என் உசுரு என்னதில்ல! ஆடு மேய்க்கப் போன கூட்டம் அத்தனையும் வந்துருச்சே! காட,காக்கா,குருவியெல்லாம் கூடு வந்து சேந்துருச்சே! ஏழு மணி தாண்டிருச்சே! எல்லாப் பக்கமும் இருட்டிருச்சே! எட்டு வயசுச் ...

சமத்துவ மஞ்சம்

Posted: 17 Jan 2014 03:10 AM PST

- - மகுடம் தாங்கிடும் மல்லுடல் மன்னரும் மாங்கனி தேன்குடம் ஏந்திடும் பெண்டிரும் திகழும் செழுங்கவி முழங்கிடும் புலவரும் தேக்கினில் மாளிகை ஆக்கிடும் சிற்பியும் - புகழும் பெருமையும் ஈட்டிடும் அறிஞரும் புத்தியில்லாததொரு நித்திய மடையரும் சகலமும் தமதெனப் பதுக்கிடும் மனிதரும் சம்போ சிவமெனச் சாற்றிடும் முனிவரும் - அகிலம்மும் தனதென ஆண்டிடும் தலைவரும் அவரை நம்பிடும் பாமரத் தொண்டரும் சுடலையில் சமமாய் உறங்கிட நேர்ந்திடும் இதை உணர்ந்தால் வாழ்க்கை உன்னதம் ஆயிடும்..! - ------------------------------ >இயகோகா ...

ஹைக்கூ கவிதைகள்

Posted: 17 Jan 2014 01:10 AM PST

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஹைக்கூ கவிதைகள்


பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
- நா.முத்துக்குமார்


வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்க் குழந்தையின்
கிறுக்கல்கள்
- சீனு. தமிழ்மணி


சோளக்கொல்லை பொம்மைக்கும்
உடையுண்டு
எங்களுக்கு!
- சீனு. தமிழ்மணி

கண்ணீர்..

Posted: 17 Jan 2014 12:56 AM PST

- ........ ...மனித உடலிலிருந்து கொட்டும் நீர் - கண்ணீர்..! - இந்த நீர் ஆண்டவனையும் மிரட்டும் ஆள்பவனையும் விரட்டும் கொண்டவனைக் குதறும் கொஞ்சலிலே சிதறும் ஆனந்தத்தில் ஒளிரும் சோகத்தில் அழும் காவியங்களைப் படைக்கும் கல்நெஞ்சையும் உடைக்கும் - கடவுளுக்குச் செய்யும் எத்தனையோ அபிஷேகம் அவற்றில் கசிந்துருகி மல்கும் கண்ணீர் விசேஷம் - பூவுலகில் மூன்றில் இரண்டு பாகம் தண்ணீர் அதை உப்பாக்கியது - மானுடம் சிந்தி கண்ணீர் - ------------------------------------ >இயகோகா சுப்பிரமணியம் மழைவாசம் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -85)

Posted: 17 Jan 2014 12:31 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

ஒப்பனைகள் கலைவதற்கே' நாவல்

Posted: 16 Jan 2014 09:28 PM PST

2005 களில் எழுத்தாளர் சுஜாதாவை மயிலாப்பூர் சரவண பவனில் சில முறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. என் குடும்பத்தில் எவரும் புத்தக விரும்பிகள் இல்லை. பாடப் புத்தகங்கள் தவிர்த்து, எங்கள் புத்தக அலமாறியில் இடம்பெற்ற ஒரே புத்தகம் டெலிபோன் டைரக்டரி தான். (அப்போது எங்கள் வீட்டில் லேன்ட்லைன் இருந்தது) 2009 ல் நான் கவிதைகள் எழுதத் துவங்கியபோது, சொல்லித்தர எவரும் இருக்கவில்லை. நானாக விரும்பி சென்று கேட்ட இடங்களில் உதாசீனம்,ஏளனம், அலட்சியம் போன்ற வார்த்தைகளின் முழு அர்த்தங்களை உணர வைத்தார்கள். ஒரு ...

Civil Engineering

Posted: 16 Jan 2014 07:53 PM PST

Civil Engineering சம்பந்தமான புத்தகங்கள் தேவை.
Subjects - Advanced Surveying , Building Construction , Solid mechanics, Structural Analysis

வேலன்:-வேலைகளை குறிப்பெடுத்துக்கொள்ள

Posted: 16 Jan 2014 07:10 PM PST

அலுவலகமாகட்டும் வீடாகட்டும் நாம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து முடித்த்தால்தான் நாம் நல்லபெயர் வாங்க முடியும். அதுபோல ஓரு இடத்திற்கு நாம் செல்வதானால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நாம் சென்றுவிடவேண்டும். அப்போதுதான் நமக்கு நல்லபெயர் கிடைக்கும். வேலை நேரத்தில் பலர் மறந்துவிட்டு பின்னர் அவதிப்படுவர். இந்த சின்ன சின்ன குறையை போக்கஇந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ...

தான் தோன்றி சித்தர் பற்றிய வரலாறு வேண்டும்

Posted: 16 Jan 2014 06:56 PM PST

தான் தோன்றி சித்தர் பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் இதில் பதிவிடவும், மற்றும் எங்கள் ஊர் சிவன் கோவில் கோபுரம் யானையின் பின்புறம் போல் உள்ளது இது எந்த மன்னரின் காலத்தை சேர்ந்தது இதையும் கூறவும்...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™