Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டதால் ரெயில் கட்டணம் உயர்கிறது

Posted: 20 Jan 2014 11:18 PM PST

ரெயில் கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக மிக அதிக அளவில் உயர்த்தப்படவில்லை. இதனால் ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. ரெயில்வேக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிகட்ட கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும்

கெஜ்ரிவால் விடிய, விடிய தர்ணா போராட்டம்: மத்திய அரசுக்கு எதிராக கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்

Posted: 20 Jan 2014 10:26 PM PST

டெல்லிக்கு இந்த மாத தொடக்கத்தில் சுற்றுலா வந்த டென்மார்க் பெண் 6 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்காக 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று டெல்லி மாநில முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய உள்துறை அதை நிராகரித்தது.

குடியரசு தினவிழா நடைபெறும் டெல்லி ராஜபாட்டையை தொண்டர்கள் கூட்டத்தால் நிரப்ப கெஜ்ரிவால் திட்டம்?

Posted: 20 Jan 2014 10:00 PM PST

மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பிரதேசத்தின் போலீஸ் நிர்வாக அதிகாரத்தை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி நகரம் பரபரப்படைந்துள்ளது.

வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted: 20 Jan 2014 09:58 PM PST

தமிழக–கர்நாடக எல்லையில் பாலாறு அருகே உள்ள சுரக்காய்மருவு என்ற இடத்தில் கடந்த 9.4.1993–ம் தேதி வீரப்பனும், கூட்டாளிகளும் வனத்துறை வாகனங்கள் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது வனத்துறை மற்றும் போலீசார் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில்

கொல்கத்தாவில் காரில் பெண் ஊழியர் கடத்தி கற்பழிப்பு: 4 பயணிகளுடன் சேர்ந்து டிரைவர் வெறிச்செயல்

Posted: 20 Jan 2014 09:45 PM PST

டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நள்ளிரவில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை டிரைவர் உள்ளிட்ட 5 பேர் கும்பல் கொடூரமாக கற்பழித்தது. இதில் அந்தப் பெண் பலியானார். இதை கண்டித்து நாடே கொந்தளித்தது. கற்பழிப்பில் ஈடுபட்ட கயவர்கள் தூக்கு கயிறை

திருப்பதி கோவிலில் 40 டன் வெளிநாட்டு நாணயம் தேக்கம்: ஏலம் விட தேவஸ்தானம் முடிவு

Posted: 20 Jan 2014 09:23 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல கட்டங்களில் முயற்சி செய்தது ஆனால் ரூபாய் மதிப்பை விட அதனை மாற்றுவதற்கான

கெஜ்ரிவால் போராட்டத்தால் அதிருப்தி: ஆதரவை வாபஸ் பெற காங்கிரஸ் ஆலோசனை

Posted: 20 Jan 2014 09:17 PM PST

டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. இதன் மூலம் மக்களின் எதிர்ப்பு அலையை குறைக்க முடியும் என்று காங்கிரஸ் நினைத்தது

கெஜ்ரிவால் போராட்டம் எதிரொலி: 2-வது நாளாக 4 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

Posted: 20 Jan 2014 07:48 PM PST

தெற்கு டெல்லியின் மாள்வியா நகரில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்ட மந்திரி சோம்நாத் பார்திக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்போல சகர்பூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கும், பெண்கள் மற்றும்

பாராளுமன்ற தேர்தலில் காங்.,பா.ஜ.க.,தனிமெஜாரிட்டியில் வென்றால் அரசியலை விட்டு விலகுகிறேன்: தேவேகவுடா சவால்

Posted: 20 Jan 2014 03:03 PM PST

பா.ஜனதாவை சேர்ந்த சிவானந்த நாயக், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்தார். முன்னாள் மந்திரியான அவர் தற்போது கர்நாடக ஜனதா கட்சியில் இருந்து விலகி உள்ளார். அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் நேற்று இணைந்தார். பெங்களூர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குமாரசாமி ஆகியோர் சிவானந்த் நாயக்கிடம் கட்சிக்கொடியை கொடுத்து கட்சியில் இணைத்துக் கொண்டனர். பின்னர் தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:– "வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவது நிச்சயம். பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமது சொந்த பலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறவில்லை. அவர் பிற கட்சிகளுட

பெங்களூரில் முதல்-மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்ட மணல் லாரி உரிமையாளர்கள்

Posted: 20 Jan 2014 01:38 PM PST

கர்நாடகத்தில் புதிய மணல் கொள்கையில் சில விதிமுறைகளை தளர்த்த வேண்டும், மணல் அள்ளுவதற்கு லாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 20–ந்தேதி நள்ளிரவு முதல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் மணல் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மணல் லாரி உரிமையாளர்களுடன் முதல்–மந்திரி சித்தராமையா, மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடிக்கிறது.

இத்தாலி கடற்படை வீரர்களின் மனுவை பிப்ரவரி 3ம் தேதிக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு

Posted: 20 Jan 2014 01:07 PM PST

கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலி வீரர்கள் இருவர் கைது

கெஜ்ரிவால் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன: காங்கிரஸ்

Posted: 20 Jan 2014 12:52 PM PST

மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி பிரதேசத்தின் போலீஸ் நிர்வாக அதிகாரத்தை டெல்லி அரசிடம் வழங்க வேண்டும் என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் 10 நாள் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் டெல்லி நகரம் பரபரப்படைந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கொடுத்தது தேவையில்லாத முடிவு: மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து

Posted: 20 Jan 2014 12:10 PM PST

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்த முடிவு தேவையில்லாதது என நான் நினைக்கிறேன். காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று 3-வது இடத்தை தான் பெறமுடிந்தது. அவ்வாறு இருக்க நாம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நெருக்கடி ஏதும் இல்லை. அக்கட்சி கேட்காமலே ஆதரவு அளித்தது தவறு என கருதுகிறேன். ஆட்சி அமைக்க போதுமான ஓட்டு நம்மிடம் இல்லை. இதனால் நாம் அமைதியாக இருந்திருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் டெல்லி

தெலுங்கானா உருவாக்கம் நக்சலிசத்தை தீவிரப்படுத்தாது: சரணடைந்த முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர் கருத்து

Posted: 20 Jan 2014 11:56 AM PST

ஆந்திரமாநிலத்தை இரண்டாக பிரித்து தனிமாநிலமாக தெலுங்கானாவை பிரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது. இதற்கு ஆந்திர மாநில முதல் அமைச்சர் கிரண் குமார் ரெட்டி முதல் அனைத்து சீமாந்திர பகுதி அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

டெல்லி போலீஸ் நிர்வாகத்தை மாநில அரசுக்கு வழங்க முடியாது: உள்துறை மந்திரி ஷிண்டே திட்டவட்டம்

Posted: 20 Jan 2014 11:50 AM PST

டெல்லியின் போலீஸ் நிர்வாகம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கடந்த வாரம் நடந்த 2 வெவ்வேறு சம்பவங்களில் மாநில மந்திரிகளுக்கும், டெல்லி போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்த சம்பவங்களில் தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி டெல்லியில் நேற்று தடையை மீறி தர்ணா போராட்டம் நடத்தினார்.

கெஜ்ரிவால் தொடர் போராட்ட எதிரொலி: பிரதமர்-ஷிண்டே சந்திப்பு

Posted: 20 Jan 2014 10:15 AM PST

நாட்டின் தலைமையகமான டெல்லியில் போலீஸ் துறை, மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் கடமையை செய்யாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும், போலீஸ் அதிகாரத்தை டெல்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும்

பெண்களே நாட்டின் முன்னேற்ற சக்தி: மகளிர் குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

Posted: 20 Jan 2014 08:10 AM PST

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'மகளிர் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்காக தங்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட உள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்காக எத்தகைய திட்டங்களை அத்தேர்தல்

டெல்லியை பின்பற்றி மகாராஷ்டிராவிலும் மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு

Posted: 20 Jan 2014 07:18 AM PST

மகாராஷ்டிரா மாநில அரசு அம்மாநிலத்தில் மும்பை நீங்கலாக உள்ள அனைத்து பகுதிகளுக்கும் மின்கட்டணத்தை 20 சதவிகிதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் மேற்கு கண்டிவாலியில் உள்ள அனில் அம்பானியின்

ஜெயின் சமூகத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 20 Jan 2014 07:14 AM PST

ஜெயின் சமூகத்தினர் அரசின் சலுகைகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூக நிர்வாகிகள் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்

இரவிலும் போராட்டத்தை தொடருகிறார் கெஜ்ரிவால்: விடுமுறையில் சென்ற போலீசார் பணிக்கு அழைப்பு

Posted: 20 Jan 2014 07:06 AM PST

டெல்லியில் கடமையை செய்யாத போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் இன்று ரெயில் பவன் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் மீது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™