Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


புனே அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து ஜீப்புடன் மோதல்: 9 பேர் பலி

Posted: 13 Jan 2014 09:13 PM PST

மகாராஷ்டிர மாநிலம் புனே-சத்தாரா தேசிய நெடுஞ்சாலையில் கண்டாலா என்னுமிடத்தில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பின்னே வந்த ஒரு ஜீப் அந்த லாரியில் சிக்கிக்கொண்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப்பணிகளை மேற்கொண்டனர்.

நீதிபதி கங்குலி விவகாரம்: பெண் பயிற்சி வக்கீலுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 13 Jan 2014 06:47 PM PST

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.கே.கங்குலி மீது, பெண் பயிற்சி வக்கீல் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து நீதிபதிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, மேற்குவங்க

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 13 Jan 2014 03:29 PM PST

காஷ்மீர் மாநிலத்தின் வட மாவட்டமான பாரமுல்லாவில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்குள்ள டேஞ்சர்பூரா, சோபூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்

எல்லையில் அத்துமீறி தாக்கினால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம்: இந்திய ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை

Posted: 13 Jan 2014 12:14 PM PST

ராணுவதின ஆண்டு விழாவையொட்டி, இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு எந்த பதிலடியும் கொடுக்கவில்லையே? என்று, அவரிடம் கேட்கப்பட்டது

புதிய நீதிபதிகள் நியமனம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

Posted: 13 Jan 2014 10:57 AM PST

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 12 வக்கீல்களின் பெயரை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த பெயர் பட்டியலில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு

போலியோவை வென்ற இந்தியா: உலக அளவிலும் நோய்த்தடுப்பு முயற்சிகள் மேம்பாடு

Posted: 13 Jan 2014 09:01 AM PST

இந்தியா இன்றுடன் போலியோ நோயில்லாத மூன்று வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. எனவே விரைவில் இந்தியாவும் உலகளவில் போலியோ நோய் நீங்கிய நாடுகளின் பட்டியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை இந்தியாவின் பொது சுகாதார

2 ஆண்டுகளில் 59 பெண்கள் கற்பழிப்பு: சேலம் கும்பல் ஆந்திராவில் கைது

Posted: 13 Jan 2014 08:43 AM PST

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூரில் இந்த மாத தொடக்கத்தில் 9 பேர் கொண்ட ஒரு கற்பழிப்பு கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலத்தை சேர்ந்த இந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியல், சித்தூர் பகுதியில் தொடர்ந்து கற்பழிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 59 பெண்களை கற்பழித்துள்ளனர்.

அமேதி தொகுதிக்கு ஒதுக்கிய ஆயிரக்கணக்கான கோடி நிதி குறித்து ராகுல் விளக்கமளிக்க வேண்டும்: குமார் விஷ்வாஸ்

Posted: 13 Jan 2014 07:32 AM PST

ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைத்து டெல்லி அரசை பிடித்துள்ளது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் 100 தொகுதிகளை கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் போட்டி வேட்பாளராக குமார் விஷ்வாசை களமிறக்குவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

60 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடக்கவில்லை: சி.பி.ஐ. அறிக்கையில் தகவல்

Posted: 13 Jan 2014 06:54 AM PST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., சுரங்க ஒதுக்கீடுகளைப் பெற்ற தனியார் நிறுவனங்கள் மீது 16 வழக்குகளை பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்

பிரிவினைவாத சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

Posted: 13 Jan 2014 06:28 AM PST

கோவா பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, 'நாட்டில் ஒரே மதம் மட்டுமே உண்டு. அது இந்தியா. அதன் அரசியலமைப்பே எங்கள் தெய்வீக புத்தகம்' என்று கூறினார். இந்நிலையில் புதுடெல்லியில் நடந்த மாநில சிறுபான்மை கமிஷன் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு இன்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது பிரதமர் கூறியதாவது:-

வதேரா மீதான நிலபேர ஊழல் புகார் சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும்: ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை

Posted: 13 Jan 2014 04:44 AM PST

சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா, தனது செல்வாக்கை பயன்படுத்தி அரியானா மாநிலத்தில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் ஆதரவுடன் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. ராபர்ட் வதேரா, டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.65 கோடி வட்டியில்லாமல் கடன் வாங்கியதாகவும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்: விமானப்படை முன்னாள் தளபதியின் உறவினர்களிடம் மீண்டும் விசாரிக்கிறது சி.பி.ஐ.

Posted: 13 Jan 2014 04:21 AM PST

விவிஐபி ஹெலிகாப்டர் வாங்குவதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ரூ.3600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஒப்பந்தம் ரத்து

மின்கட்டண உயர்வைக் கண்டித்து மும்பையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

Posted: 13 Jan 2014 03:21 AM PST

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்களான சஞ்சய் நிருபம், பிரியா தத் ஆகியோர் திடீர் போராட்டம் நடத்தினர். தங்கள் தொகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் ரிலையன்ஸ் மின்உற்பத்தி

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சச்சின் பைலட் நியமனம்

Posted: 13 Jan 2014 02:21 AM PST

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மத்திய மந்திரி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் ’ஜனதா தர்பார்’ ரத்து: கெஜ்ரிவால் அதிர்ச்சி அறிவிப்பு

Posted: 13 Jan 2014 02:01 AM PST

'முதல்வன்' படத்தில் வரும் ஒருநாள் முதல் மந்திரி அர்ஜுன் பாணியில் டெல்லியின் முதல் மந்திரியாக பதவியேற்ற சில நாட்களுக்குள்ளாகவே மக்களால் எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தேசிய தலைப்பு செய்திகளில் நாள் தோறும் பேசப்படும் நபராக அரவிந்த் கெஜ்ரிவால் மாறி வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™