மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதியில் விஜயகாந்த் சாமி தரிசனம்
- டெல்லியில் ஊழல் தலைவர்கள் பட்டியல் கெஜ்ரிவால் வெளியிட்டார்
- அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு எதிரான தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
- உத்தரகாண்ட் முதல் மந்திரி விஜய் பகுகுணா ராஜினாமா
- பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்
- தீவிரவாதி புல்லரை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு மாற்றாக மாநில கட்சிகளின் 'ஜனதா படை': பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் முயற்சி
- சட்டசபை நிராகரித்தாலும் தெலுங்கானா மாநிலம் 15 நாளில் உருவாகும்: சந்திரசேகரராவ் உறுதி
- இந்தியாவின் முதல் ‘மோனோ ரெயில்’ சேவை மும்பையில் நாளை தொடக்கம்
- 162 ஊழல் எம்.பி.க்களை எதிர்த்து ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
- 12 சிலிண்டர் வழங்கினால் அதிக விலைக்கு விற்பார்கள்: ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்கிறார்
- தேர்தலில் குதிப்பதற்காக பணியை ராஜினாமா செய்த மும்பை போலீஸ் கமிஷனர்
- ஒரே இடத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றலாம்: மத்திய அரசு புதிய விதிமுறை
- சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் காங்கிரசாருக்கு பங்கு உண்டு என்ற ராகுல் கருத்து: மோடிக்கு சாதகமாக கருதப்படுகிறது
- 250-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்: வைகோ பேட்டி
- ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே: உச்ச நீதிமன்றம் கருத்து
- மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார்
- தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளிடம் விவாதித்த ராகுல் காந்தி
- 225 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் உருவாகும் மூளை ஆராய்ச்சி மையம்
- மகாத்மா காந்தியின் சித்தாத்தங்களை பா.ஜனதா அழித்து வருகிறது: சோனியா குற்றச்சாட்டு
| திருப்பதியில் விஜயகாந்த் சாமி தரிசனம் Posted: 30 Jan 2014 11:59 PM PST திருப்பதியில் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவரது மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சுதீஷ் ஆகியோர் உடன் சென்றனர். தரிசனம் முடித்து வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:– இன்று எனது 25 வது திருமணநாள் விழா. இதனால் குடும்பத்துடன் சாமி |
| டெல்லியில் ஊழல் தலைவர்கள் பட்டியல் கெஜ்ரிவால் வெளியிட்டார் Posted: 30 Jan 2014 11:47 PM PST டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கட்சி தலைவரும் முதல்–மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''ஜன் லோக்பால் மசோதா என்பது ஊழலுக்கு எதிரான போர்'' |
| அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு எதிரான தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Posted: 30 Jan 2014 11:41 PM PST தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து இருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு சென்னை |
| உத்தரகாண்ட் முதல் மந்திரி விஜய் பகுகுணா ராஜினாமா Posted: 30 Jan 2014 11:29 PM PST உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல் மந்திரியாக விஜய் பகுகுணா இருந்து வந்தார். அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப்பதிலாக ஹரீஸ் ராவத், அல்லது பிரிதாம் சிங் அடுத்த முதல் மந்திரியாக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது. ராஜினாமா |
| Posted: 30 Jan 2014 11:14 PM PST ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான 'டெர்ரா மோட்டார்ஸ்' மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'கிவாமி' என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், 'லித்தியம் இயான்' பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை 'ரீ-சார்ஜ்' செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, |
| தீவிரவாதி புல்லரை தூக்கில் போட தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 30 Jan 2014 11:05 PM PST கடந்த 1993–ம் ஆண்டு டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கில் காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர்சிங் புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி தடா நீதிமன்றம் கடந்த 2001–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25–ந்தேதி இந்த தீர்ப்பை வழங்கியது. தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து 2003–ம் ஆண்டு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். |
| Posted: 30 Jan 2014 10:13 PM PST பீகார் முதல் –மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முன்பு பா.ஜனாவுடன் கூட்டணியில் இருந்தது. கடந்த ஆண்டு அந்த கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பா.ஜனதாவிடம் இருந்து ஐக்கிய ஜனதா தளம் பிரிந்தது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் சேர நிதிஷ் குமார் நினைத்தார். ஆனால் பீகாரில் லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு மாற்றாக |
| சட்டசபை நிராகரித்தாலும் தெலுங்கானா மாநிலம் 15 நாளில் உருவாகும்: சந்திரசேகரராவ் உறுதி Posted: 30 Jan 2014 09:55 PM PST தெலுங்கானா மசோதாவை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியது தொடர்பாக முதல்–மந்திரி கிரண் குமார் ரெட்டி கொண்டு வந்த தீர்மாணம் குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. இதையடுத்து சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து முதல்–மந்தரி கிரண்குமார் கருத்து கூறும் போது, ''இந்த மசோதா குப்பை தொட்டிக்கு போக வேண்டியதுதான். தேர்தலுக்காக மத்திய அரசு |
| இந்தியாவின் முதல் ‘மோனோ ரெயில்’ சேவை மும்பையில் நாளை தொடக்கம் Posted: 30 Jan 2014 09:43 PM PST இந்தியாவின் முதல் 'மோனோ ரெயில்' சேவையை மகாராஷ்டிர முதல் மந்திரி பிரிதிவிராஜ் சவான் மும்பை அருகேயுள்ள செம்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார். 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 கட்டங்களாக நடைபெற்று வந்த 'மோனோ ரெயில்' சேவைக்கான முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் 8.9 கிலோ மீட்டர் தூரமுள்ள வதாலா-செம்பூர் நிலையங்களுக்கு இடையிலான சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. |
| 162 ஊழல் எம்.பி.க்களை எதிர்த்து ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் Posted: 30 Jan 2014 09:19 PM PST பாராளுமன்ற தேர்தலில் 350–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே சில பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் |
| 12 சிலிண்டர் வழங்கினால் அதிக விலைக்கு விற்பார்கள்: ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்கிறார் Posted: 30 Jan 2014 08:37 PM PST ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு தனியார் தொலை காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மானிய விலை சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தியது தவறான வழிமுறையாகும். வெளியில் விற்க வாய்ப்பு உள்ளது. நமது அரசு நடைமுறையில் இது போன்ற மானியங்களை விரிவுபடுத்துவது |
| தேர்தலில் குதிப்பதற்காக பணியை ராஜினாமா செய்த மும்பை போலீஸ் கமிஷனர் Posted: 30 Jan 2014 08:05 PM PST நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்ய விரும்புவதாக கூறி மும்பை மாநகர போலீஸ் கமிஷனர் தனது பணியை ராஜினாமா செய்துள்ள தகவல் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1980-ம் ஆண்டு பிரிவின் ஐ.பி.எஸ். அதிகாரியான சத்யபால் சிங்(58) ஆம் ஆத்மி அல்லது பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் |
| Posted: 30 Jan 2014 07:41 PM PST ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.ஓ.எஸ் எனப்படும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் அரசியல்வாதிகளால் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இந்த அரசியல் தலையீட்டில் இருந்து அதிகாரிகளை பாதுகாப்பதற்காக, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இவை சுற்றறிக்கையாகவும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த புதிய விதிமுறைகளில் |
| Posted: 30 Jan 2014 04:38 PM PST 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாக ராகுல் காந்தி கடந்த சில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் கூறியிருந்தார். அவரின் இந்த பேட்டி காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவாகவும், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடிக்கு சாதகமாகவும் |
| 250-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும்: வைகோ பேட்டி Posted: 30 Jan 2014 04:05 PM PST வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் |
| ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே: உச்ச நீதிமன்றம் கருத்து Posted: 30 Jan 2014 03:49 PM PST ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவர் மீதான தூக்கு தண்டனையை குறைக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. தங்களது கருணை மனு |
| மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கினார் Posted: 30 Jan 2014 02:00 PM PST மேற்கு வங்காளத்தின் பிர்பம் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்த இளம்பெண்ணை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கற்பழித்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது |
| தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளிடம் விவாதித்த ராகுல் காந்தி Posted: 30 Jan 2014 01:46 PM PST நாட்டில் பொது தேர்தல் நடத்தப்பட 3 மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிளும் தங்களை இந்த அதிகாரத்திற்கான போட்டிக்கு தயார் செய்துவருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகள் |
| 225 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் உருவாகும் மூளை ஆராய்ச்சி மையம் Posted: 30 Jan 2014 11:30 AM PST கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்திய அறிவியல் நிறுவனமும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி சுதாவும் இணைந்து மூளை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் |
| மகாத்மா காந்தியின் சித்தாத்தங்களை பா.ஜனதா அழித்து வருகிறது: சோனியா குற்றச்சாட்டு Posted: 30 Jan 2014 11:16 AM PST பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள கிசன்கஞ்ச் பகுதியில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வரான நிதிஷ்குமாரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் நேற்று ஒரே மேடையில் உறையாற்றினார்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |