ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!!
- கொழுப்பைக் குறைக்க...!
- பூண்டு மருத்துவம்
- ஈகரை apps windows போன்-க்கு கிடைக்குமா?
- இந்த வார சினிமா செய்திதிகள்...
- நான் எந்த கட்சியில் இருக்கிறேன்?
- ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் .
- தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – வரலாறு
- வலி இல்லாத பல் சிகிச்சை!
- மரியாதை,,,,,
- இறுதிப் பயணமாய் இந்த மரணம்
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- பாவம் காற்று
- ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து)
- நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!
- திரைப்படப் பாடல் வரிகள் - பிடித்தது
- ராகுல் சொல்வதென்ன??
- வாழைக்கன்று
- மானுடமே கேள்..!! கவிஞர்.தமிழ்க்காதலன்
- அந்த நாள் எம்ஜிஆர் படங்கள் -நினைவுகள்
- உதவி - நான்கு வேதங்களும் தமிழில் pdf கிடைக்குமா நண்பர்களே
- தங்க மனசுக்காரன்..! - கதை
- கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?......
- நடராஜரின் தூக்கிய திருவடி.. .
- பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது.....
- தேவாரம் என்பதன் பொருள்......
- திருமலையில் பிப்ரவரி 6-இல் ரதசப்தமி உற்சவம்
- சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு)
- ரமணியின் கவிதைகள்
| சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! Posted: 28 Jan 2014 10:49 AM PST உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து ... |
| Posted: 28 Jan 2014 10:17 AM PST 'என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?' என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் காரணம். கொலஸ்ட்ரால் என்றால் என்ன, அது ஆபத்தானதா, கண்டறிவது எப்படி என்று இதய நோய் சிகிச்சை நிபுணர் ஆர்.ரவிகுமாரிடம் கேட்டோம். 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்' என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ... |
| Posted: 28 Jan 2014 10:15 AM PST பூண்டைதினமும் சாப்பிட்டால் 1)நோய் எதிர்ப்புசக்தியை அதிகறிக்கிறது, 2)இரத்தத்தில் வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது, 3)உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது 4)இரத்தத்தை தூய்மை படுத்துகிறது, 5)மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது, 6)உடல் பருமன் குறைக்க உறுத்துணை புரிகிறது( HDL = LDL ), 7)உடலில் நல்ல கொலாஸ்டிரல் HDL உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. 8)இரத்த குழாய்களில் LDL கொழுப்பு படிந்து அடைக்காமல் தடுக்கும் 9)சிறுநீர் தாராளமாக ... |
| ஈகரை apps windows போன்-க்கு கிடைக்குமா? Posted: 28 Jan 2014 10:14 AM PST ஈகரை Apps windows phone ல் இன்ஸ்டால் பண்ண உதவி வேண்டும்... உதவுங்கள் உறவுகளே |
| இந்த வார சினிமா செய்திதிகள்... Posted: 28 Jan 2014 10:11 AM PST 25 கிலோவைக் குறைத்து சிக்கென்று மாறிய நமீதா! ஜனவரி 28, 2014 இல் 5:39 பிப (சினிமா) · தொகு - - இயற்கை உணவுகள் துணையுடன் 25 கிலோ எடை குறைத்து சிக்கென்று மாறியுள்ளார் நடிகை நமீதா. -இதனால் சினிமாவில் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளாராம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல் கட்டமாக மலையாளப் படமொன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் ரிலீசானதும் தமிழ், தெலுங்கில் நிறைய நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.– |
| நான் எந்த கட்சியில் இருக்கிறேன்? Posted: 28 Jan 2014 10:09 AM PST நடிகர் எஸ்.வி.சேகர் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி வேடங்களில் கலக்கியவர். தேசிய கொடியை பாக்கெட்டில் தைத்த சட்டையையே எப்போதும் அணிந்து வருபவர். முதலில் பாஜக, அதன் பின்னர் அதிமுக, காங்கிரஸ், மீண்டும் பாஜக என்று அடிக்கடி கட்சி மாறுவதும், அப்போதெல்லாம் அவர் உதிர்க்கும் கருத்துகளும், சினிமா நகைச்சுவையை போன்றதே. அப்படி ஒரு கருத்தை சமீபத்தில் அரக்கோணம் அருகே ஒரு கோயில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் வலிய வந்து உதிர்த்தது அவர்கள் மத்தியில் சிரிப்பையே வரவழைத்தது. அரக்கோணம் அடுத்த நெல்வாய் ... |
| ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் . Posted: 28 Jan 2014 10:04 AM PST ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் . அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் Fritz Leiber எழுதிய "A Pail of Air" என்ற புனைவின் தமிழாக்கமே 'ஒரு வாளி ஆக்சிஜன்'. பேரழிவில் இருந்து தப்பித்த தமது குடும்பம் மட்டுமே , புவியின் கடைசி என நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் , அக்குடும்பம் , தாம் சந்திக்க நேரிடும் அன்னியர்களிடம் இருந்து தப்பித்ததா !! கதிரவன் இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும் !!! என்பதை அறிவியலுடன் சேர்த்து அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். தமிழாக்கம் – வினையூக்கி ... |
| தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – வரலாறு Posted: 28 Jan 2014 09:54 AM PST தண்ணீர் விட்டா வளர்த்தோம்? – வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் புரிந்த தமிழ்நாட்டுத் தியாகிகளின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த நூலில் தமிழ்நாட்டுத் தியாகிகள் பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினருக்குத் தேசபக்தியூட்ட இந்த வரலாறுகள் உதவுமானால் அதுவே எமது நோக்கம் நிறைவேறுவதாகும். ஆசிரியர் : தஞ்சை வெ.கோபாலன் privarsh@gmail.com வலைத்தளம் : http://tamilnaduthyagigal.blogspot.in/ டவுன்லோட் லிங்க் ... |
| Posted: 28 Jan 2014 09:28 AM PST பல் வலிக்கு சிகிச்சை எடுத்து வந்தவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பேச முடியாமல்... சாப்பிட முடியாமல்... முகம் வீங்கிப்போய் வேதனையுடன் தடுமாறுவார்கள். இந்த வலி, வேதனைக்கு முடிவு வந்துவிட்டது. ஆம், பல் மற்றும் ஈறு பிரச்னைகளுக்கு வலி இல்லாமல் சிகிச்சை அளிக்கும் புதிய லேசர் கருவி வந்துவிட்டது. இது குறித்து சென்னை அடையாறு பரசு பல் மருத்துவமனையின் லேசர் மற்றும் காஸ்மெடிக் டெண்டிஸ்டிரி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமனிடம் பேசினோம். ''நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் முறையற்ற ... |
| Posted: 28 Jan 2014 09:23 AM PST ஒரு சர்வாதிகாரி தன் பிறந்த நாளில் தன் படம் பொறித்த தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார். ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை. தனது செயலாளரை அழைத்து காரணம் கேட்டார். அதற்க்கு செயலாளர் கூறினார், ''அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை. அதனால்தான் சரியான விற்பனை இல்லை,'' என்று, சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது. உடனே தபால் நிர்வாகியை அழைத்து, ''ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?' 'என்று கேட்டார். நிர்வாகி சொன்னார், ... |
| Posted: 28 Jan 2014 09:22 AM PST மரணப் படுக்கையின் இறுதி அந்த நேரங்கள் உயிர் பறி போகும் (பறிக்கும்) சிலநொடிகள் பச்சை புண்ணில் வேலிக் கம்பிகள் கிழிப்பதாய் பூவொன்றின் காம்பை பிள்ளைகள் முறிப்பதாய் வேதனையால் வாட்டசாட்டமான உடல் வாடும் உதவிக்காய் கண்கள் எல்லோரையும் தேடும் ஒன்றும் உதவாததாய் கைகள் தானாக வீழும் தண்ணீர் வேண்டி நாக்கு பெரிதாய் கொஞ்சம் நீளும் கத்தும் உறவுகளின் கண்ணீர் துடைக்க முடியாது மரணப் பிடியில் இருந்து தப்பிக்க இயலாது கண்கள் மேலேந்தி கடைசி தருணத்தைப் பார்த்தபடி தனது நற்செயலை மட்டும் தூக்கிச் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 28 Jan 2014 09:18 AM PST ![]() |
| Posted: 28 Jan 2014 08:59 AM PST "பூக்களைப் பறிக்காதே" என்கிறது எச்சரிக்கை பலகை! ஆனாலும் புல்தரை எங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றை கோபித்துக் கொள்ளாதீர் பாவம், அதற்குப் படிக்கத் தெரியாது! - ஒரு ஜப்பானிய கவிதை - |
| ரசித்த கவிதைகள் (குடும்ப மலர் இதழிலிருந்து) Posted: 28 Jan 2014 08:00 AM PST ரகசியம் ---------------------- - மனதுக்குள் உன் பெயரை ரகசியமாக உச்சரித்தாலும் அதை காட்டிக் கொடுத்து விடுகிறது என் புன்னகை…! - ——————– >ஜி.இனியா படம்: இணையம் |
| நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! Posted: 28 Jan 2014 07:55 AM PST நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..! தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு'விதி' அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா? முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ... |
| திரைப்படப் பாடல் வரிகள் - பிடித்தது Posted: 28 Jan 2014 05:56 AM PST திரைப்படம் : மூணு பாடல் : நீ பார்த்த விழிகள் வரிகள்: நிஜமடிப் பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இன்றி வதைக்கிறாய் என்னை மெதுவாக நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா கேட்காத வரமா நிழல் தரும் இவள் பார்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிர் நீ தான் என்றால் உடனே வருவேன் உயிர் சாகும் முன்னால் அனலின்றி குளிர் வீசும் இது எந்தன் சிறை வாசம் இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே |
| Posted: 28 Jan 2014 05:45 AM PST புதுடில்லி: 1984ல் நடைபெற்ற சீக்கிய கலவரத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; அப்போது நான் காங்கிரசில் தீவிரமாக இருக்கவும் இல்லை; எனவே அதற்காக நான வருத்தம் தெரிவிக்க தேவையில்லை, என காங்., துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு ராகுல் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்த சில முக்கிய தகவல்கள் வருமாறு: * எம்.பி., யாகி 10 ஆண்டுக்குப் பிறகு கொடுக்கும் முறையான பேட்டி இது; முதல் பேட்டி அல்ல * பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என எந்த சட்டமும் கூறவில்லை. * மோடியை ... |
| Posted: 28 Jan 2014 05:03 AM PST நீ பூப்பெய்து கரு சுமக்கும் முன்பே உன் காலடியில் கால்ஊன்றி நிமிர்ந்து வந்துவிடுகிறது உன் வாரிசு இந்த வாழைக்கன்று. |
| மானுடமே கேள்..!! கவிஞர்.தமிழ்க்காதலன் Posted: 28 Jan 2014 04:50 AM PST அண்டம் உடைந்த பூமியின் கண்டம் அடைந்து உயிரின் கருவாய் பிண்டம் உமிழ்ந்த தருவாய் பிறந்த மனிதன் - தமிழன் வாழ்ந்த தடம் பேசுகிறேன் வையகமே கேள் முற்றிய குரங்காய் நின்று நிமிர்ந்தவன் முடி உதிர்ந்த மனிதனாய் எங்கும் திரிந்தவன் கல் எடுத்து கல்லுரசி நெருப்பில் கல்வி கற்றவன் தமிழன் - பூமியில் சடை தரித்து உடை தரித்து - நீரின் நடை மறித்து மடை திறந்து - நிலம் திருத்தி பயிர் வளர்த்த கோமான் பருத்தியும் பட்டும் கண்ட சீமான் தமிழ் உடுத்தி தனை உயர்த்தி தரணிக்கு மொழி தந்தவன் தமிழன் தண்ணீரில் தன்நீர் ... |
| அந்த நாள் எம்ஜிஆர் படங்கள் -நினைவுகள் Posted: 28 Jan 2014 02:47 AM PST BANGALORE - LAKSHMI THEATER-1989 [/QUOTE] |
| உதவி - நான்கு வேதங்களும் தமிழில் pdf கிடைக்குமா நண்பர்களே Posted: 28 Jan 2014 12:18 AM PST ரிக் சாம அதர்வண யஜுர் நான்கு வேதங்களும் தமிழில் pdf நூல் வடிவில் கிடைக்குமா நண்பர்களே... அன்புடன் சோப்ளாங்கி |
| Posted: 27 Jan 2014 10:52 PM PST ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான். தூரத்தில் இரண்டு ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க, அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர். ''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன் அழைத்தான். இருவரும் தன மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்'' உங்களுக்குத் தங்கமான மனசு'' என அவர்கள் ... |
| கனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்?...... Posted: 27 Jan 2014 10:32 PM PST இந்தியா சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் முதல் 30 லட்சம் கோடி ரூபாய்வரை மதிப்புள்ள கச்சா பெட்ரோலிய எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, இரும்புத்தாது, செம்பு, நிலக்கரி, கால்சியம், பாஸ்பேட் மற்றும் பல கனிமங்களைப் பெறக்கூடிய இயற்கையான வளங்கள் நிரம்பியது. இந்தக் கனிமங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைப்பதுடன் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த முடியும். அத்துடன் 10 கோடி முதல் 15 கோடிப் பேர் வரை கூடுதலாக வேலைவாய்ப்பு பெறுவர். இந்த இயற்கை வளங்களைப் ... |
| Posted: 27 Jan 2014 10:29 PM PST - --- 1.சேக்கிழாரின் இயற்பெயர்..... - அருண்மொழித்தேவர் - ---------------------------------------- - 2. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்..... - வியாக்ரபாதர், பதஞ்சலி - ------------------------------------------ - 3. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்... - சிவபெருமான் - ------------------------------------------- - 4. கிருஷ்ணருக்கு சிவதீட்சை வழங்கியவர்..... - உபமன்யு - --------------------------------------------- - 5. நடராஜரின் தூக்கிய திருவடியை ... |
| பஞ்சசபைகளில் வெள்ளிசபையாக விளங்குவது..... Posted: 27 Jan 2014 10:27 PM PST - --- 1. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்....... - விரைந்து அருள்புரிபவர் - --------------------------------------------------- - 2. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்..... - லிங்கோத்பவர் - ----------------------------------------------------- - 3. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை? - 64 - ----------------------------------------------------- - 4.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்.... - சோமாஸ்கந்தர் - --------------------------------------------------- - 5. ... |
| Posted: 27 Jan 2014 10:26 PM PST - சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை..... - 14 - -------------------------------------------- - தேவாரம் என்பதன் பொருள்...... - தெய்வத்திற்கு சார்த்தும் மாலை - ------------------------------------------------- - சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடியவர்.... - சேந்தனார் - ------------------------------------------------- - பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் எத்தனை? - 18,350 - ------------------------------------------------------ - திருக்கார்த்திகை திருவிழா ... |
| திருமலையில் பிப்ரவரி 6-இல் ரதசப்தமி உற்சவம் Posted: 27 Jan 2014 10:25 PM PST - திருமலையில், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி, ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் தினத்துக்குப் பின் வரும் உற்சவமான ரதசப்தமி விழா, பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. - அன்றைய தினம் ஒரே நாளில் 7 வாகனங்களில், மலையப்பஸ்வாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வருவார். - இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவர் என்பதால் தேவஸ்தானம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அன்று காலை, 5.30 – 8 மணி வரை சூர்ய பிரபை வாகனம், ... |
| சோம்பலின் விளைவு (சில கவிஞர்களுக்கு) Posted: 27 Jan 2014 09:41 PM PST அழகான வார்த்தைகள் அறியாமலே மாட்டியது சிந்தையில் அதன் அழகினூடே பயணித்துக்கொண்டிருக்க புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தது இமைகள் மூடிய விழி இரண்டரை நிமிட பயணமது பின் இறுதியில் -அதை எழுதிட நினைக்க என்னை மறக்கடித்துவிட்டு என் மனதிடம் சொல்லிச்சென்றது சோம்பலின் விளைவு என்னவென்று. |
| Posted: 27 Jan 2014 05:48 PM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

[/QUOTE]