Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


K.A.தங்கவேலுவின் நகைச்சுவை !

Posted: 22 Jan 2014 09:31 AM PST

தமிழ் திரைப்பட வரலாற்றில் அன்று முதல் இன்று வரை கதாநாயகனுக்கு நண்பனாக ஒரு நகைச்சுவை நடிகர் தான் நடிக்கிறார் .ஏன்? தெரியவில்லை . கதாநாயகனை ஒப்பந்தம் செய்தவுடன் நகைச்சுவை நடிகரைத் தான் ஒப்பந்தம் செய்கிறார்கள் .ஜெமினி கணேசனின் நண்பனாக பல படங்களில் தங்கவேலு நடித்துள்ளார். அம்பிகாபதி -தங்கவேலு , நகைச்சுவை நடிகர் கருணாநிதியுடன் ( வெங்காய புலவர் ) இணைந்து நாய் வாலை நிமிர்த்த முயற்சி செய்யும் நகைச்சுவை அசரடிக்கும்.முழுப் படத்தையும் பார்க்க. கல்யாண பரிசு - " மன்னார் அன் கம்பெனி " யை மறக்க முடியுமா ...

.வேலன்:-பிடிஎப் பைல்களை விரும்பியவாறு சுருக்கிட

Posted: 22 Jan 2014 08:50 AM PST

நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை நாம் விரும்பியவாறு குறைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்  ஆகும்.  இதில நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை Low Quality(e-Book).High Quality (Printer),High Quality(Prepress) & Default Quality என நான்கு ஆப்ஷன்களில் எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.  நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள ஆப்ஷனை ...

மலர் புகைப்படங்கள்

Posted: 22 Jan 2014 08:37 AM PST

அழகான மலர் புகைப்படங்கள் பார்வைக்கு
http://moondravathukan.blogspot.in/2014/01/blog-post.html

இயற்கையின் அழகு புகைப்படங்களாய்

Posted: 22 Jan 2014 08:32 AM PST

இயற்கையின் அழகு புகைப்படங்களாய்
http://moondravathukan.blogspot.in/2014/01/blog-post_19.html

நானும் ஒரு தாய்

Posted: 22 Jan 2014 07:19 AM PST

நானும் ஒரு தாய் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு தாய் பூரிப்படைகிறேன். நானும் ஒரு தாய் துள்ளிக்குதிக்கிறேன். நானும் ஒரு தாய் என்னிலை உயர்கிறேன். உலகில் யாவருக்கும் தெரியும் தாய்மை உன்னதமென்று. உலகில் யாவருக்கும் தெரியும் தாயே செல்வமிக்கவளென்று. நானும் ஒரு தாய் மகிழ்ச்சியடைகிறேன் நாளைய சமுதாயத்தின் உன்னதமான மனிதஉயிரை வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு. அனைவரும் உறுதிமொழியெடுப்போம் குழந்தைகளை வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும் கல்விமுறையிலிருந்து மீட்டெடுப்போமென்று. இயற்கையை ...

இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை

Posted: 22 Jan 2014 07:14 AM PST

திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உள்ள மலைவாசஸ்தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ளது. சிறுமலை,திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புக் களில் ஒன்று. மலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. புராணத்தில் சிறுமலை: புராண காலத்தில் இருந்தே இந்த மலைக்கு என ஒரு தனி மகிமை உண்டு. அனுமன், மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை தூக்கிச்சென்றபோது அதில் இருந்து ஒரு சிறு துண்டு திண்டுக்கல் பகுதியில் விழுந்தது. அது தான் சிறுமலை என்று அழைக்கப்படுகிறது, என புராணங்கள் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (203)

Posted: 22 Jan 2014 07:00 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பூக்களின் அணிவகுப்பு

Posted: 22 Jan 2014 06:47 AM PST

உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்

Posted: 22 Jan 2014 06:41 AM PST

சனிக்கிழமை, 31, டிசம்பர் 2011 (15:11 IST) கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் "நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்" என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ...

அகில உலக முருக-பக்தி மாநாடு!

Posted: 22 Jan 2014 06:34 AM PST

சுவிட்சர்லாந்தில் முருக-பக்தி மாநாடு நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் முருகன் கோவில் அமைத்து, அதன் தலைவராக உள்ள முருக பக்தர் ஸ்ரீகணேஷ் குமார் தமிழகம் வந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் 2014ல் மிகப் பெரிய அளவில் முருகப் பெருமான் பக்தர்கள் கலந்து கொள்ளும் முருக பக்தி மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் கணேஷ் குமார். இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் பணிகளைப் பாராட்டி, சென்னையில் இருந்து வெளிவரும் திருப்பீடம் ...

விஜய் ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாழ்ப்பாணத்தில்

Posted: 22 Jan 2014 04:35 AM PST

சமீபத்தில் திரைக்கு வந்த "ஜில்லா" என்ற திரைப்படம் பற்றி, யாழ்ப்பாணத்து பத்திரிக்கை ஒன்றில் ஒரு விமர்சனம் எழுதப்பட்டதாம். இந்த விமர்சனத்தை எதிர்த்து நடிகர் விஜய் ரசிகர்கள் என சொல்லப்படும் இளைஞர்கள் சிலர், நேற்றைய தினம் (21/01/14) இந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முன் முன்னால் நின்றபடி பாதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். இது நடந்திருப்பது தமிழகத்தில் அல்ல, யாழ்ப்பாணத்தில். வட மாகாணசபை அமைச்சர் ஐங்கர நேசன், விஜய் ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 22 Jan 2014 04:17 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

அபூர்வ கானங்கள்

Posted: 22 Jan 2014 04:15 AM PST

பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ...

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Posted: 22 Jan 2014 04:06 AM PST

நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, ...

(ஹைக்கூ

Posted: 22 Jan 2014 04:04 AM PST

கிணற்றில் குதித்தது சுருக்குப் போட்டு நீர்மொள்ளும் குடம். அடிவாங்கவே பிறந்த அற்பப் பிறவி சலவைக் கல். மண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிறது மனித வாழ்க்கை. முகத்தில் உற்சாகம், மகிழ்ச்சி மறைந்திருக்கிறது உள்ளுக்குள் ஆழ்ந்த சோகம். தன்னைத் தான் அறியுமா? காக்கையின் நிழல்கூட கருப்பு நிறம். காத்திருக்கிறாள் கவலையோடு கைப்பிடி அரிசிக்கு வறுமையில் வயதானப் பாட்டி.

ஏ.நாகசுவரராவ் காலமானார்

Posted: 22 Jan 2014 04:02 AM PST

பழம்பெரும் நடிகை நாகேஸ்வரராவ் காலமானார்

ஹதராபாத், ஜனவரி 22- தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கிய பழம்பெரும் நடிகர் ராகேஸ்வரராவ் காலமானார். அவருக்கு 90 வயதாகிறது.
நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையான இவருடைய இயற்பெயர் அக்கினேனி நாகேஸ்வரராவ் ஆகும்.

1923-ஆம் ஆண்டு பிறந்த இவர் சமீபத்தில் தான் தமது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

பாடுபொருள் நீயெனக்கு....!

Posted: 22 Jan 2014 02:39 AM PST

பனிமலை காஷ்மீரும் பகலவனை அதிகாலை பணிவாக வணங்கும் தென்குமரி தேவியும் கனிவளமும் நதிவளமும் முக்கடல் வளமும் கனிமங்கள் வளமும் கொண்ட தாயே, கொஞ்சும்எழில் தாஜ்மகலும் சாய்ந்த கோபுரமும் கொட்டும் மழை சிரபுஞ்சி அதிசய அழகே, தஞ்சையில் மணிநெல்லும் பஞ்சாபில் கோதுமையும் தன்னிறையாய் விளைவிக்கும் தாயே போற்றி ! விவசாயப் புரட்சியும் விண்கலன் எழுச்சியும் வேதாந்த சிந்தனையும் கண்டு தெளிந்து நவநவமாய் புதுமைகள் புனைந்து உலக நாடுகள் வியந்திட முன்னேறும் என்னாடே, பன்மொழிகள் சமயங்கள் சாதிகள் வேறெனினும் பண்பால் ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 21 Jan 2014 10:39 PM PST

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 21 Jan 2014 10:36 PM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

(ஹைக்கூ

Posted: 21 Jan 2014 09:42 PM PST

கிணற்றில் குதித்தது சுருக்குப் போட்டு நீர்மொள்ளும் குடம். அடிவாங்கவே பிறந்த அற்பப் பிறவி சலவைக் கல். மண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிறது மனித வாழ்க்கை. முகத்தில் உற்சாகம், மகிழ்ச்சி மறைந்திருக்கிறது உள்ளுக்குள் ஆழ்ந்த சோகம். தன்னைத் தான் அறியுமா? காக்கையின் நிழல்கூட கருப்பு நிறம். காத்திருக்கிறாள் கவலையோடு கைப்பிடி அரிசிக்கு வறுமையில் வயதானப் பாட்டி.

விலகல் விதி

Posted: 21 Jan 2014 08:47 PM PST

விலகல் விதி வெட்ட வெளியில் பறந்துத் திரியும் தும்பிகள் முகத்தருகே வந்து யாரோடும் பேசாமல் விலகி விலகிப் போகிறது தொலைவாய், தன் காதலைச் சொல்லவோ ஓரு முத்தம் பெறவோ மலர்களை நெருங்கியும் விலகியும் மீண்டும் நெருங்கியும் பறக்கிறது வண்ணத்துப் பூச்சிகள் எந்நேரமும், அண்மித்துப் பேசிக் களித்திருந்தக் காதல் கிளிகள் அருகே வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து விட்டு வெட்கிப் பறந்தன இன்னொரு மரந்தேடி, மறைவிலிருந்தப் பூனைகள் ஏதோவொரு சத்தங்கள் கேட்டு பயந்துப் பதுங்கி விலகியோடின வேறொரு மறைவிடந்தேடி, பூங்காவிற்குள் இவ்வளவு ...

எம்ஜிஆரை நெகிழ வைத்த நடிகர் திலகம்

Posted: 21 Jan 2014 08:03 PM PST




பாம் பாம் பாம் பெண்ணே - பிரியாணி

Posted: 21 Jan 2014 03:42 PM PST

: -- படம்: பிரியாணி இசை: யுவன் ஷஙகர் ராஜா பாடல்: மதன் கார்க்கிபடம் பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரம்யா NSK -- நெஞ்சைத் தாக்கிடும் இசையே நில்லடி உனக்காய் தீட்டிய வரியோ நானடி கேட்காத பாடல் ஆவோம் கை ர்க்க வா கசப்பை நீக்கியே காற்றில் தித்திப்போம் வா! பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை தண்டித்தால் இவன் உயிரை எடுப்பானே! பாம் பாம் பாம் பெண்ணே பொய்க் கோபப் பெண்ணே நீ இவனை மன்னித்தால் இவன் பாட்டை முடிபபானே! என்ன விட்டு வேற ஒன்ன தேடிப் போன எந்த மூஞ்ச வெச்சுகிட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™