Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான கொடியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் : சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கமுடியாது – வட மாகாண அமைச்சர்

Posted: 09 Dec 2013 11:06 PM PST

srilanka flg

srilanka flgஇலங்கையின் வடக்கே, மன்னாரில் பள்ளிக்கூட விழாவொன்றின்போது நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண அமைச்சர் ஒருவர், தம்மால் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிங்கக் கொடி சிங்கள மக்களின் அடையாளம் என்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான கொடியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தேசிய இனங்கள் எல்லாவற்றின் அம்சங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் தேசியக் கொடி அமைய வேண்டும் என்றும், வாளேந்திய சிங்கம் சிங்களவர்களை மட்டுமே குறிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான தேசியச் சூழல்கள் காணப்படுவதாகவும் அப்படி இரண்டு தேசியச் சூழல்களுக்கும் பொருந்தும் விதத்தில் அமையும் கொடியையே தான் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

'மாகாணசபைக் கொடிக்கு முக்கியத்துவம்'

சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கமுடியாது என்று வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தான் கூறிவந்ததாக ஐங்கரநேசன் கூறினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நல்லெண்ணத்தைக் காட்டவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், அதற்காக சிங்கக்கொடியை அப்புறப்படுத்திவிட்டு பொருத்தமானதை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின்படி சிங்கக் கொடியே நாட்டின் தேசியக் கொடி.

அரசியலமைப்பைப் போற்றிப் பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் அளித்தே, மாகாணசபை பதவியை நீங்கள் பொறுப்பேற்றீர்கள் என்று அமைச்சரிடம் தமிழோசை சுட்டிக்காட்டியது.

தான் 'தேசியக் கொடியை அவமதித்ததாகக் கொள்ளமுடியாது' என்றும் தனது மனதுக்கு ஒவ்வாதச் செயலை தான் செய்யவிரும்பவில்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடங்கள், திணைக்களங்கள் போன்ற அரச நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளின்போது மாகாணசபையின் கொடிக்கும் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜெனிவாவில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க , இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார்! – சரத் பொன்சேகா

Posted: 09 Dec 2013 09:46 PM PST

sarathfonseka

sarathfonsekaசுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவத்தினருக்காக குரல் கொடுத்து அவர்களை காப்பாற்ற தயார். எனினும் சில நபர்களை காப்பற்ற நான் தயாரில்லை. சட்ட ரீதியான இலங்கை அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் இலங்கைக்கும் பொருந்தும். இலங்கையில் போர் நடைபெற்ற போது தவறுகள் இடம்பெற்றனவா என்பதை அறிந்து கொள்ளும் தேவை எவருக்காகவது இருந்தால், இராணுவத்தின் சார்பில் ஆஜராகி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க நான் தயாராக இருக்கின்றேன். எனினும் சில நபர்கள் தவறு செய்திருந்தால் அவர்களை நான் காப்பற்ற போவதில்லை. இராணுவத்தினருக்காக பேசுவேன். சகல சட்டங்களையும் மதித்து மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுமாறு நான் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருந்தேன் என்றார்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றது

Posted: 09 Dec 2013 08:04 AM PST

d7f3ee69-4709-4986-bcc8-801b3c21beb8_S_secvpf

d7f3ee69-4709-4986-bcc8-801b3c21beb8_S_secvpfசென்னையில் இன்று நடைபெற்ற பிசிசிஐயின் மார்க்கெட்டிங் கமிட்டி கூட்டத்திற்குப்பின், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வருட ஸ்பான்சர்ஷிப் உரிமையை ஸ்டார் பிரைவேட் லிமிட்டெட் பெற்றது. இதன்படி, இருநாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிக்கு ரூ.1.92 கோடியும், ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளுக்கு தலா ரூ.61 லட்சமும் ஸ்டார் நிறுவனம் செலுத்தும். 

 
இந்த உரிமம் வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறும் அனைத்து பிசிசிஐ, ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகள், வர்த்தக ஒளி மற்றும் ஒலிபரப்புகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறினார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் என்று அழைக்கப்படும் உரிமை இவர்களுக்கு வழங்கப்படும். மேலும், சீனியர் ஆண்கள் அணி, ஆண்கள் ஏ-பிரிவு அணி, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அணி மற்றும் பெண்கள் அணியினருக்கான சீருடையில் இவர்கள் தங்களின் வர்த்தக முத்திரையை பதித்துக் கொள்ளலாம் என்றும் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.
 
இந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியிலிருந்து ஏலத்திற்கான டெண்டர்கள் பெறப்பட்டன. இன்று மதியம் மூன்று மணிக்கு டெண்டர்கள் பெறுவது நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்ட டெண்டர்கள் மதிப்பிடப்பட்டன.
நிர்வாகம் மொத்தமாகப் பெற்ற ஏழு டெண்டர்களில் இரண்டு இறுதிக்கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது. அவற்றில் ஒன்றான சஹாரா நிறுவனத்தினரின் டெண்டர் தகுதியற்றதாகத் தெரிவிக்கப்பட்டு ஸ்டார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இதுநாள்வரை இந்தியக் கிரிக்கெட் அணியின் வர்த்தக உரிமையாளர்களாக இருந்துவந்த சஹாரா நிறுவனம் ஐபிஎல் உரிமம் பெறுவது குறித்து நிர்வாகத்துடன் ஏற்பட்ட சர்ச்சையால் இந்த மாதம் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது.
இதனைக் காரணமாகக் கொண்டே தங்களுக்குப் புதிய உரிமம் வழங்கப்படவில்லை என்று அந்நிறுவனம் குறை கூறியுள்ளது. தகுதியில்லை என்று ஆரம்பக் கட்டத்திலேயே விலக்காமல் இறுதிக்கட்டத்தில் முடிவெடுத்தது குறித்தும் அந்நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
சஹாரா நிறுவனமே உயர்ந்தபட்ச ஏலத்தொகை கேட்டிருந்தது. அதாவது இருதரப்பு போட்டிகளுக்கு தலா ரூ.2.03 கோடியும், ஐ.சி.சி. போட்டிகளுக்கு தலா ரூ.91 லட்சமும் ஏலம் கேட்டிருந்தது. எனினும் அந்த ஏல விண்ணப்பம் தகுதியற்றதாக கூறி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த ஆண்டு சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடியது

Posted: 09 Dec 2013 07:52 AM PST

Sonia_Gandhi_1125682c

Sonia_Gandhi_1125682cகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலும், ஜன்பத் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று அவரது 68-வது பிறந்தநாள் களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லாததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி மத்திய அரசு 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதால், சோனியா காந்தி தனது பிறந்தநாளை கொண்டாடமாட்டார் என்று கட்சி தலைமை நேற்று அறிவித்திருந்தது. இதனால் எந்த கொண்டாட்டங்களும் நடைபெறவில்லை.  டெல்லியில் கட்சி அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வெளியில் பார்வையாளர்கள் மற்றும் தொண்டர்களைவிட பத்திரிகையாளர்களும் போலீஸ்காரர்களும்தான் அதிகம் காணப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால், சோனியாவின் வீட்டின் அருகில் இன்று காங்கிரஸ் கொடி, பேட்ஜ், ஸ்கார்ப், மப்ளர், டைரிகள், டைரக்டரிகள் விற்பனை ஆகவில்லை என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், கட்சி தோல்விக்கும் சோனியா பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அருவியாய் கொட்டும் கண்ணீர்….. இது எப்படி சாத்தியமாகும்!…

Posted: 09 Dec 2013 07:45 AM PST

man_cry_002.w245

man_cry_002.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா சொன்னாங்க…..

Posted: 09 Dec 2013 07:32 AM PST

fish_catch_001.w245 (2)

fish_catch_001.w245 (2)

This posting includes an audio/video/photo media file: Download Now

25-வது மாடியிலிருந்து வீசப்பட்ட குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Posted: 09 Dec 2013 07:26 AM PST

child_throw_001.w245

child_throw_001.w245

சீனாவின் சோங்கிங் நகரை சேர்ந்தவர் லீ ஷெங்சோங். இவரது ஒரு வயது மகன் யுவான். பெற்றோர் வேலைக்கு சென்ற பின் இந்த குழந்தையை அவனது பாட்டி கவனித்து வந்தார்.

இவர்களது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் லீ என்ற சிறுமி இந்த குழந்தையுடன் விளையாடுவதற்காக அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து செல்வாள்.

இந்நிலையில் சிறுமியினுடைய சக்கர நாற்காலியில் யுவானை உட்கார வைத்து அவனது பாட்டி விளையாட்டு காட்டி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சிறுமியிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

அதற்குள்ளாக குழந்தையின் மீது கொண்ட கோபத்தால் அவனை அடித்து உதைத்த சிறுமி அதன் பின் 25வது மாடியில் உள்ள தன் வீட்டு பால்கனியிலிருந்து குழந்தையை தள்ளி விட்டுள்ளாள்.

பின்னர் பாட்டி வந்து கேட்ட போது குழந்தையை ஒருவர் தூக்கி சென்றதாக கூறியுள்ளாள். இதற்கிடையே தரை தளத்திலிருந்த புதருக்கிடையே குழந்தை யுவான் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.

இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் குழந்தை உயிர்பிழைத்துள்ளது.

இந்நிலையில் குழந்தையை, சிறுமி தாக்கியது, தள்ளி விட்டது போன்ற காட்சிகள், அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் பொலிசில் புகார் செய்துள்ளனர்.

ஆனால் சிறுமிக்கு 10 வயதே ஆவதால் அவளை கைது செய்ய முடியாது. எனவே குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை அச்சிறுமியின் பெற்றோர் ஏற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓஹோ… இது தான் இரண்டு காலுள்ள பேயோ?….

Posted: 09 Dec 2013 07:08 AM PST

man_ghost_001.w245

man_ghost_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

13 வயதில் தந்தையான சிறுவன்…. அதிர்ச்சி தரும் உண்மை!

Posted: 09 Dec 2013 06:52 AM PST

child_father_001.w245 (1)

child_father_001.w245 (1)

லண்டனில் ஈஸ்ட்போர்ன் நகரைச் சேர்ந்த ஆல்பி என்ற சிறுவன் 13 வயதில் தந்தையாகியுள்ளார். சேர்ந்தலி என்ற 15 வயது சிறுமியுடன் இந்த 13 வயது சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டதால் அந்தச் சிறுமி பெண் குழந்தையொன்றை பெற்றுள்ளார்.

தற்போது குழந்தையின் தந்தையான இந்தச் சிறுவன் 4 அடி உயரமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க வேண்டாம்: இலங்கை மீனவர்களுக்கு அறிவுரை

Posted: 09 Dec 2013 06:04 AM PST

இந்திய கடல் எல்லையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு இலங்கை மீனவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதாகியுள்ளனர். அவர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சு கூறியுள்ளது. அதனால் இந்திய எல்லையில் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™