மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு: மணிசங்கர் அய்யர்
- டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் போட்டியி்ட ஆம் ஆத்மி கட்சி முடிவு
- டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு
- மண்டேலாவிற்கு இறுதிச் சடங்கு: பிரணாப் முகர்ஜி ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார்
- மோடி பிரதமரானால் அவருடன் இணைந்து அமெரிக்க செயலாற்றும்: காண்டலீசா ரைஸ்
- பெட்ரோல் விலை ஒரு ரூபாய் உயர்கிறது
- பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு
- சபரிமலையில் பக்தர்களுக்கு இரட்டை அடுக்கு நடைபாலம்: அடுத்த சீசனுக்குள் அமல்படுத்த உயர்மட்ட குழு பரிந்துரை
- ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
- 4 மாநில தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா ஆலோசனை
- சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு பயந்து ‘நோட்டோ’ ஓட்டுகள்
- 4 மாநில தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா ஆலோசனை
- டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க., ஆம்ஆத்மி கட்சிகள் தயக்கம்: கவர்னர் முடிவு என்ன?
- மதுரை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு
- கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு
- மும்பையில் சிறுமி மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
- தருண் தேஜ்பால் மீது கற்பழிப்பு வழக்கு: தெகல்கா ஆசிரியர் ஷோமா சவுத்ரி வாக்குமூலம்
- ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை தலைவராக கெஜ்ரிவால் தேர்வு
- ஜனநாயகத்தின் புதிய சக்தி ‘ஆம் ஆத்மி கட்சி’ : பா.ஜ.க. தலைவர் ஸ்மிரிதி இரானி புகழாரம்
- சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடியது
| மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது தவறு: மணிசங்கர் அய்யர் Posted: 09 Dec 2013 11:32 PM PST நான்கு மாநில சட்டப்பேரவை முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கட்சியில் மறு சீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று கூறி வருகின்றனர். இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் பேட்டியொன்றில், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரடியாக தாக்கியுள்ளார். 2009-ம் ஆண்டு பிரதமராக மன்மோகன் சிங் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதே தவறு. அதை இப்போதைய தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது. |
| டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திலும் போட்டியி்ட ஆம் ஆத்மி கட்சி முடிவு Posted: 09 Dec 2013 11:19 PM PST டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தனது பார்வையை, அடுத்து நடைபெறவுள்ள மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலிலும், நடைபெற உள்ள பொது தேர்தலிலும் கவனம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. ''தேசம் முழுவதும் நமதே! இன்று தில்லி... நாளை தேசம் முழுவதும்'' என்பதே தங்களது சுலோகமாக இருக்கும் என ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் மயங்க் காந்தி கூறும்போது, மும்பை நகரத்தில் உள்ள 36 சட்டப்பேரவை தேர்தலிலும் தாங்கள் போட்டியிட உள்ளதாகவும், அங்குள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்று இதுவரை முடிவுசெய்யவில்லை, |
| டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு Posted: 09 Dec 2013 10:34 PM PST 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன. 70 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள்தான் அதிகமான பேர் கிரிமினல் வழக்கில் உள்ளனர். 17 பேர் மீது கிரிமினல் வழக்கு இருக்கிறது. பாரதீய ஜனதா முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட 50 சதவீத எம்.எல்.ஏ. கிரிமினல் குற்றச்சாட்டை எதிர் |
| மண்டேலாவிற்கு இறுதிச் சடங்கு: பிரணாப் முகர்ஜி ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தார் Posted: 09 Dec 2013 10:32 PM PST குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜொகன்னஸ்பர்க்கிற்கு சென்றடைந்தார். நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா கடந்த 6-ந்தேதி மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரணாப் முகர்ஜி உள்பட 53 நாடுகளை சேர்ந்த பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா |
| மோடி பிரதமரானால் அவருடன் இணைந்து அமெரிக்க செயலாற்றும்: காண்டலீசா ரைஸ் Posted: 09 Dec 2013 09:51 PM PST நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மகிழச்சியில் திளைத்து வருகின்ற சூழலில் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் காண்டலீசா ரைஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குஜராத் கலவரம் குறித்த நிலை தற்போது மாறிவிட்டதாகவும் அது குறித்த யோசனை இனி மேலும் தேவையில்லை, மோடி பிரதமரானால் அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும் என்று கூறியது அவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது. தாங்கள் நடந்து என்ன என்று பார்ப்பதை தவிர்த்து, நடக்க போவது என்ன என்று பார்க்க விரும்புவதாகவும் எதிர்கால வளர்ச்சிக்கு |
| பெட்ரோல் விலை ஒரு ரூபாய் உயர்கிறது Posted: 09 Dec 2013 09:46 PM PST கச்சா எண்ணை விலை, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16–ந்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த மாதம் 16–ந்தேதி கச்சா எண்ணை மற்றும் ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை |
| பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 09 Dec 2013 09:44 PM PST டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்களில் தர்மேந்தர் கோலி என்ற எம்.எல்.ஏ.வும் ஒருவராவார். அவர் சீமாபுரி என்ற தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். தர்மேந்தர் கோலி மீது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர், ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். |
| Posted: 09 Dec 2013 09:44 PM PST கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. |
| ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல் Posted: 09 Dec 2013 09:37 PM PST டெல்லியில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார் என்று பா.ஜனதா தலைவர்கள் |
| 4 மாநில தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா ஆலோசனை Posted: 09 Dec 2013 09:36 PM PST 5 மாநில சட்டசபை தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. டெல்லியில் தோல்வியை எதிர்பார்த்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, கட்சி படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை. 4 மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் சோனியா கவலையும் விரக்தியும் அடைந்தார். நேற்று அவர் அவசரம், அவசரமாக காங்கிரஸ் மூத்த தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவிர மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, சுசில் |
| சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு பயந்து ‘நோட்டோ’ ஓட்டுகள் Posted: 09 Dec 2013 09:25 PM PST 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் ஏற்காடு இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்காளிக்க விரும்பாத 'நோட்டோ' முறை பயன்படுத்தப்பட்டது. வேட்பாளர்களை பிடிக்காமல், யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள் 'நோட்டோ' பொத்தானை பயன்படுத்தி வாக்களித்தனர். 4 மாநில தேர்தலில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நோட்டோவுக்கு வாக்களித்தனர். |
| 4 மாநில தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பொறுப்பாளர்களை நீக்க சோனியா ஆலோசனை Posted: 09 Dec 2013 09:21 PM PST 5 மாநில சட்டசபை தேர்தலில் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. டெல்லியில் தோல்வியை எதிர்பார்த்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, கட்சி படுதோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை |
| டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க., ஆம்ஆத்மி கட்சிகள் தயக்கம்: கவர்னர் முடிவு என்ன? Posted: 09 Dec 2013 08:41 PM PST டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 32 இடங்கள், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்கள், காங்கிரஸ் 8 இடங்கள், சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் |
| மதுரை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு Posted: 09 Dec 2013 04:34 PM PST மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை மூடுமாறு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு Posted: 09 Dec 2013 03:52 PM PST கூடங்குளத்தில் அணு உலைகள் இயங்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பூவுலகின் நண்பர்கள் என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் சென்னை ஐகோர்ட்டில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார். |
| மும்பையில் சிறுமி மானபங்கம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது Posted: 09 Dec 2013 02:50 PM PST மும்பை நாக்பாடா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அந்த பகுதியை சேர்ந்த பைசல் ஆஷிஸ் சேக் என்ற வாலிபர் தனது நண்பருடன் அங்கு வந்தார். |
| தருண் தேஜ்பால் மீது கற்பழிப்பு வழக்கு: தெகல்கா ஆசிரியர் ஷோமா சவுத்ரி வாக்குமூலம் Posted: 09 Dec 2013 01:52 PM PST தெகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண்தேஜ்பால் சக ஊழியரான பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். |
| ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை தலைவராக கெஜ்ரிவால் தேர்வு Posted: 09 Dec 2013 09:06 AM PST டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பெற்று இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அக்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒன்றுகூடி டெல்லி சட்டசபைக்கான அக்கட்சியின் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்தனர். |
| ஜனநாயகத்தின் புதிய சக்தி ‘ஆம் ஆத்மி கட்சி’ : பா.ஜ.க. தலைவர் ஸ்மிரிதி இரானி புகழாரம் Posted: 09 Dec 2013 07:37 AM PST நாட்டின் தலைநகரான டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை கைப்பற்றியது. இதனால் புதிய வரவான ஆம் ஆத்மி கட்சி ஒரு நட்சத்திர அறிமுகத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஸ்மிரிதி இரானி கூறியதாவது:- |
| சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடியது Posted: 09 Dec 2013 06:30 AM PST காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திலும், ஜன்பத் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |